Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusamiyum Hipnotisa Poonaiyum
Appusamiyum Hipnotisa Poonaiyum
Appusamiyum Hipnotisa Poonaiyum
Ebook139 pages55 minutes

Appusamiyum Hipnotisa Poonaiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Veerappan Kaattil Appusami, Bakkiyam Ramasamy, Tamil, Humour, Novel
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303237
Appusamiyum Hipnotisa Poonaiyum

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Appusamiyum Hipnotisa Poonaiyum

Related ebooks

Related categories

Reviews for Appusamiyum Hipnotisa Poonaiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusamiyum Hipnotisa Poonaiyum - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமியும் ஹிப்னாடிஸப் பூனையும்

    Appusamiyum Hipnotisa Poonaiyum

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    முன்னுரை

    ஒரு மனிதர் நம்மைக் காரணமாகவோ, அகாரணமாகவோ முறைத்துப் பார்க்கிறாரென்றால் அவரைத் திருப்பிக்கூட முறைக்கலாம். சண்டை வந்தால்கூட ஓரளவே வரும்.

    ஆனால் ஒரு பூனை உங்களை முறைத்துப் பார்த்தால் அதைப் பதிலுக்கு முறைக்காதீர்கள்.

    ‘பூனையின் கண்களுக்கு ஒரு மெஸ்மரிஸ சக்தி உண்டு’ என்று ஏதோ ஒரு ஸயன்ஸ் மாகஸினில் நான் படிக்க நேர்ந்தது.

    என் வீட்டுப் புறக்கடைப் பக்கம் ஒரு பூனை இருந்தது. பீரியாடிகலாக ஒரு கொழுத்த கடுவன் பூனை தன் அந்தப்புர மாமிகளைத் திருப்திப்படுத்த அடிக்கடி வரும். உறவுகளைப் பிரிப்பது பாபமானாலும் அதை விரட்டாவிட்டால் அந்தக் குடும்பம் போடும் சத்தம் சகிக்காது.

    குழந்தை பெறுவதற்கு முன்னேயே குழந்தை மாதிரி கத்துங்கள். ‘அவர் என்னுடையவர். நீ போடி அந்தண்டை, உருண்டை மூஞ்சி சிறுக்கி! அது இது என்று அவற்றின் பாஷையில் சத்தம் போடும். (எனக்கும் கொஞ்சம் பூனை பாஷை தெரியும். ஹி! ஹி!)

    கடுவன் பூனையை நான் விரட்டும் சமயமெல்லாம் அது துளியும் நகராமல், ஸ்திரமாக உட்கார்ந்த நிலையிலேயே என்னை முறைக்கும் பாருங்கள். பயந்தே போவேன். அப்புறம் இருக்கவே இருக்கு, மிஸைல்ஸ், பூனையைத் துரத்தி வெற்றி கண்டாலும் - அதைப்பற்றிய பயம் எப்போதும் இருக்கும்.

    நம்ம ஆளு அப்புசாமி மேலே அந்தப் பயத்தைப் போட்டு இந்த நாவலை எழுதியிருக்கிறேன்.

    - பாக்கியம் ராமசாமி.

    அப்புசாமியும் ஹிப்னாடிஸப் பூனையும்

    அப்புசாமியின் உதடுகளைப் பழுப்பு நிறத் திரவம் உரசியது. ஆனால் அவர் தன் உறிஞ்சலைப் பிரயோகிக்காமல் சிந்தனை வசப்பட்டுவிட்டார்.

    ‘இதன் பெயர் காப்பியா? ஆறிச் செத்துப்போய், மேக மூட்டங்களுடன் இருக்கும் மழைநாளைய மாலை நேரத்து வானம்போல ஒருவிதக் குழப்ப நிறத்துடன், சக்தியோ, பலமோ, உறுதியோ, அழகோ எதுவுமில்லாததால் டம்ளரின் ஓரங்களின் எந்தப் பகுதியிலும் ஒட்டுதலின்றி, குடும்பத்திலிருந்து கொண்டே துறவு வாழ்க்கையை மேற்கொண்ட துவராடைப் பேர்வழிபோல், பட்டினியால் நலிந்த பிச்சைக்காரியின் கண்கள் போல் உள்ளே ஆழத்தில் ஒரு ஐந்து செ. மீட்டர் உயரத்துக்கு இரண்டரை செ. மீட்டர் ஆரத்தில் போட்ட சிறிய வட்டம் போல, யாரோ ஓங்கி அறைவிட்டதனால் கன்றிக் கரு ரத்தம் கட்டி விட்ட நிலா போல, சகதியில் விழுந்து கிடக்கும் கிரஷ் பாட்டில் மூடி போன்று, வோல்டேஜ் ட்ராப்ஆன இருபத்தைந்து வாட் பல்ப் நிறத்தில் புள்ளிப் புள்ளியாய் எண்ணெய் மிதக்கும் அடையாளத்துடன் ஐப்பசி மாத அடைமழை காலத்துத் துணிகளிலிருந்து கிளம்பும் ஒருவகை நாசிக்குப் பிடிக்காத ‘கப்பு’ வாடையுடன் கூடிய அந்த அவலட்சணத் திரவத்தைக் குடித்துத்தான் ஆக வேண்டுமா? உயிரா? மானமா? நாக்கா? காப்பியா?

    ஒரு புருஷனுக்கு இத்தகைய ஆறிய நீரைக் காப்பி என்று கொண்டு வந்து வைத்து விட்டுப் போகிறவளுக்குப் பெயர் மனைவியா? சண்டாளியா? கர்வக்காரியா? அலட்சியக்காரியா? ஆணவத்தின் மறுபிறப்பா? வள்ளுவருக்கு வாசுகி இந்த மாதிரி காப்பி தந்திருப்பாளா? நளாயினி ஒருதரமாவது இத்தகைய நாலாந்தரப் பானத்தைக் கணவனுக்கு நல்கியிருப்பாளா? சீதாப்பிராட்டி காட்டுக்குப் போயிருக்கும் சமயத்தில் வசதியில்லாத நிலைமையிலும் இத்தகைய நீரைக் காப்பி என்று கலந்து ராமனுக்குத் தந்திருப்பாளா? பாரத நாட்டுப் பத்தினிகளெல்லாம் செய்ய அஞ்சிய ஒரு காரியத்தை நாள் தோறும் செய்து வரும் இந்த நாசக்காரியின் முகத்திலேயே இதை வீசியடித்தால் என்ன என்று கற்பனை செய்யலாமா, வேண்டாமா என்று யோசித்தார். அதற்குத் தெம்பு ஏற்படுத்தக் கூட அசல் காப்பி கொஞ்சம் வேண்டுமாயிருந்தது. கையில் உள்ளது போன்ற காப்பியைக் குடித்துக் குடித்துத்தான் அவர் நாக்கிருந்தும் பேச முடியாத நாக்குப் பூச்சியாகிவிட்டார். மூக்கிருந்தும் மூச்சுவிட முடியாத மூளியாகிவிட்டார்.

    ‘எத்தகைய உணவை ஒருவன் உட்கொள்கிறானோ, அத்தகைய லட்சணமே அவனுக்கு ஏற்படும்’ என்று ஏதோ ஒரு காலட்சேபக்காரர் குங்குமப்பூ ஏலக்காய் பிஸ்தா எல்லாம் போட்டுக் கெட்டியாகக் காய்ச்சிய பாலைக் குடித்து முடித்துச் சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. அவருக்கு அத்தகைய காலட்சேப சக்தி எங்கிருந்து வந்தது? அந்தப் பாலிலிருந்துதான் என்பது அப்புசாமியின் கணிப்பு. நெகுநெகுவென்று முனீஸ்வரனுக்குச் சந்தனகாப்புப் போட்ட மாதிரி, எப்பேர்ப்பட்ட உடம்பு! தன் உடம்பை ஒப்பிட்டுக் கொண்டார். கடையில் தொங்கும் கடைசி வாழைப்பழம் போல நைந்து, நொந்து, நொள நொளத்து, தளர்ந்து, சோர்ந்து, மெலிந்து…

    மனைவியை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கித் தூக்கிக் கரங்கள் காய்ப்புக் காய்ச்சிப் போயிற்றே தவிர, கண்டாரா வெற்றியை? அடுக்கடுக்காய்ப் போராட்டங்கள் அறிவித்தாரே கண்டி அகப்பட்டதா, அரியாசனம்? அரியாசனம் - அவர் அறியா ஆசனம். பலவீனமான திரவத்தை ஒருத்தன் வருடக் கணக்கில் குடித்தால், எப்படி அவனால் போராட முடியும்? வெற்றி பெற முடியும்.

    சீதேக் கிழவி மட்டும் போர்ன்விடாவும் ஹார்லிக்ஸும், காம்ப்ளானுமாகக் கலந்து குடிக்கிறாளே; எனக்கு மட்டும் ஏன் இந்தக் கற்காலக் கஷாயம்? ஏன், ஏன், ஏன்? சீதே ஏன் இதைச் சிருஷ்டிக்கிறாள்? சிருஷ்டி ரகசியம் என்கிறார்களே அது இதுதானா?

    இதை அங்கீகரித்தாலே அடிமைச் சாசனம் எழுதியாகிவிட்டது என்று அர்த்தம். வேலைக்காரி இதைக் குடித்து அவர் கண்டதில்லை. எத்தனையோ தரம் அவரது கண்ணெதிரிலேயே ரன்னிங் காமெண்ட்ரியுடன் (இத்தை எந்தக் கஸ்மாலம் குடிக்கும். காப்பியா இது? கயுநீர்!) என்று சாக்கடையில் கொட்டியிருக்கிறாள்.

    வசதி இருந்திருந்தால் அந்தக் காட்சியை வீடியோ ஆடியோ ரேடியோ பாடியோ என்று எந்த முறையிலாவது புதுப்பித்துப் பெண்சாதிக்குப் போட்டுக் காட்டியிருப்பார்.

    வேலைக்காரி சாக்கடையில் எதைக் கொட்டுகிறாளோ அதை வயிற்றில், தான் கொட்டிக் கொள்வதாவது!

    அவர் உள்ளம் –

    கொட்டு முரசே!

    நீயும் கொட்டு முரசே

    என்று சுதந்திரம் கீதம் இசைத்தது.

    ஆனால் மனத்தின் இன்னொரு அணி வேறு பாட்டுப் பாடியது.

    துட்டு முரசே

    உனக்கு ஏது

    துட்டு முரசே?

    ஆகவே கையிலிருந்த காப்பியை மடக் என்று ஒரு மிடறு குடித்தார்.

    வாட் த ஹெல் ஆர் யூ டூயிங்? என்று சீதாப்பாட்டியின் குரல் அவரை அதட்டியது.

    காய்கறி வாங்க அவர் மார்க்கெட் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    காப்பியை இன்னொரு வாய் குடித்தார்.

    மிய்யாவ்! என்று குரல் கேட்டது.

    காப்பியில் ஏதாவது எறும்பு, துரும்பு, கடுகு, சீரகம் பால் கவரின் கத்தரித்த முனைப் பகுதி இதுமாதிரி ஏதாவது இருப்பதுதான் வழக்கம். ஒரு பூனையே இருக்கிறதா?

    காப்பி டம்ளரே மூன்றரை அங்குல உயரம். அதற்குள் ஒரு பூனை எப்படித் தவறி விழுந்திருக்கும். அப்படியே தவறி விழுந்திருந்தாலும் மூச்சுத் திணறிப் பாதாளச் சாக்கடைத் தொழிலாளர் சிலர் பரிதாபமாக இறந்தது போல இறந்தல்லவா போயிருக்கும்?

    ஆகவே இந்தச் சத்தம் காப்பி டம்ளருக்குள்ளிலிருந்து வந்திருக்க முடியாது என்ற ஊகத்துடன் சுற்று முற்றும் பார்த்தார். குட்டையான காம்பவுண்டுச் சுவரின் மீது சோடாக் கண்ணாடிச் சில்லுகள் பதித்திருந்தும் அலட்சியமாக ஒரு பூனை அமர்ந்து அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

    அண்ணலும் நோக்கினான்; அதுவும் நோக்கியது.

    பூனையா, கரடிக் குட்டியா?

    கரடியும் - பூனையும் செய்து கொண்ட கலப்பு கல்யாணத்தில் பிறந்த ஒரு ஜீவனா?

    காட்டுப் பூனையா? நாட்டுப் பூனையா? காட் - நாட் பூனையா?

    பார்த்தாலே பயில்வான் மாதிரி கரடு முரடாகக் கொழுக் மொழுக்கென்று இருந்தது. அதன் மூஞ்சி, முகரக்கட்டை, நிறம், உயரம், பருமன், குரல், அது முறைத்த விதம், உட்கார்ந்திருந்த ஆணவப் போஸ் எதுவும் அவருக்குத் துளியும் பிடிக்கவில்லை.

    அது மட்டும் ஒரு கல்யாணத்துக்கு நிற்கும் பெண்ணாயிருந்து, இவர் மட்டும் பெண் பார்க்கப் போன வாலிபனாயிருந்தால் அந்த வீட்டில் சொஜ்ஜி பஜ்ஜியைத் தொட்டுக் கூட இருக்க மாட்டர்.

    உஸ்ஸ்! என குரல் கொடுத்து அருவருப்பான அதை விரட்டினார்.

    ஃபெவிகால் போட்டு ஓட்டினாற் போல் அது அப்படியே உறுதியாக ஆடாமல் அசையாமலிருந்தது.

    மிய்யோவ் என்று யோவ் போட்டு அப்புசாமியை நோக்கி முறைத்தது.

    அப்புசாமிக்குக் கோபம்

    Enjoying the preview?
    Page 1 of 1