Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veerappan Kaattil Appusami!
Veerappan Kaattil Appusami!
Veerappan Kaattil Appusami!
Ebook148 pages55 minutes

Veerappan Kaattil Appusami!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Veerappan Kaattil Appusami, Bakkiyam Ramasamy, Tamil, Humour, Novel
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303236
Veerappan Kaattil Appusami!

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Veerappan Kaattil Appusami!

Related ebooks

Related categories

Reviews for Veerappan Kaattil Appusami!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veerappan Kaattil Appusami! - Bakkiyam Ramasamy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    வீரப்பன் காட்டில் அப்புசாமி!

    Veerappan Kaattil Appusami!

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    முன்னுரை

    கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்கள் ஒரு நகைச்சுவைத் தொடர் எழுத - அதுவும் அப்புசாமித் தொடர் - உத்தரவிட்டதும் அப்புசாமியை எந்த இடத்துக்கு அனுப்பி, எந்த விதத்தில் அவரைச் சி(ரி)த்திரவதை செய்யலாம் என்று யோசித்தேன்.

    சந்தனக் கடத்தல் வீரப்பன்தான் செய்தித்தாள்களின் கதாநாயகனாக அப்போது இருந்து வந்தான். அவனை அப்புசாமி சந்தித்தாலென்ன என்று தோன்றியது? முடிந்தால் அவனைக் கைது செய்ய போலீசுக்கு அவர் உதவினால்கூட அவருக்குப் புகழ்தானே என்ற எண்ணம் எழுந்தது.

    ‘அப்புசாமி எப்படி வீரப்பனிடமிருந்து தப்பப் போகிறார்? அவனைக் கைது செய்ய அவர் எப்படி உதவப் போகிறார்! கதாசிரியர் என்ன ஐடியா வைத்திருக்கிறார்?’ சில போலீஸ் அதிகாரிகளேகூட அக்கறையுடன் விசாரித்ததாக எனது நெருங்கிய நண்பரும் ரசிகருமான ஈரோடு இ.என்.டி டாக்டர் திரு. ராமமூர்த்தி அவர்கள் கூறினார்கள்.

    நான் பிடிப்பதற்குள் அவசரப்பட்டு போலீஸ் வீரப்பனைச் சுட்டுவிட்டது! எனக்குச் சேர வேண்டிய புகழும் பணமும் போச்சு! என்று அங்கலாய்க்கிறார் அப்புசாமி.

    சீதாப்பாட்டியின் உதவி இல்லாதிருந்தால் அப்புசாமி வீரப்பனிடமிருந்து பிழைத்தே இருக்க முடியாது! அது தெரியாதா அப்புசாமிக்கு? தெரிந்தால் ஏன் அவர் அப்புசாமியாக இருக்கிறார்!

    பாக்கியம் ராமசாமி

    1

    அப்புசாமி ஒரு சாத்துக்குடிப் பழத்தை வைத்துக் கடித்தார் - கடிக்க முயன்றார். முடியவில்லை.

    வாய் மட்டும் வாஜ்பாய் மாதிரி இருக்குது! ஒரு சாத்துக்குடியைக் கடிக்க முடியலையே! என்று டைரக்டர் ரசகுண்டு அவர் வாயிலிருந்த சாத்துக்குடியை வெடுக்கென்று பறித்து வீசி எறிந்தான்.

    டேய் டேய்! நல்ல பழத்தை வீசிப் போட்டுட்டியே, பல் செட்டை கொஞ்சம் மாற்றணும் வாய்க்கு எட்டியதைக் கைக்கு எட்டினார்.

    உங்களையே மாத்தணும்! சரி ஒரு எலுமிச்சம் பழத்தையாவது கடித்துத் தொலையுங்கோ! என்று பெரிய சைஸ் எலுமிச்சம் பழத்தை அவர் வாயில் ஆத்திரத்துடன் திணித்தான். அப்புசாமி சமாதானப்படுத்தினார்.

    கோபப்படாதடா ரசக் கண்ணா! நான் என்ன பிறக்கறப்பவேயா வீரப்பனாப் பொறந்தேன்? வீரப்பன்னா விளாம்பழத்தைக்கூடக் கடிச்சிக்கிட்டு போஸ் தருவான்.

    தாத்தா! இப்படி நீங்க எதிர்த்து எதிர்த்துப் பேசறதாயிருந்தா எனக்குச் சரிப்படாது! என் பொண்டாட்டி தாலியை அடகு வெச்சு நான் இந்த நாடகத்தை நடத்தறேன். கொஞ்சம் தெரிஞ்சுக்குங்க! ரசகுண்டு அவரை ஒரு வெறுப்புடன் முறைத்துவிட்டு, இந்த எலுமிச்சம் பழத்தையாவது கடிச்சிக்கிட்டு போஸ் குடுங்க என்று ஒரு எலுமிச்சம்பழத்தை அவர் பக்கம் வீசினான்.

    அப்புசாமி கேட்ச் பிடித்து ரோஷத்துடன் அதைப் பல்லுக்கு நடுவில் செலுத்திக் கடிக்கப் பார்த்தார்.

    விதி வலியது, அவர் பல்செட் பழையது.

    பல்செட் எந்தத் தாத்தா காலத்தியதோ… ‘படக்’ என்று பிளந்துவிட்டது!

    இரண்டு துண்டாகிவிட்ட பல்செட்டைக் கையில் துப்பி, கடிகடின்னியே கடங்காரா? ஆயிரம் ரூபா பல்செட் அநியாயமாகப் போச்சுடா உன்னாலே… மரியாதையாப் புதுப் பல்செட் நீதான் வாங்கிக் குடுத்தாகணும்! என்று கத்தினார். டேய் பீமா! சொல்லுடா நியாயத்தை!

    பீமா நாஷ்டா சாப்பிட்டு முடித்த இலையைக் காகிதத்தோடு சுற்றி எடுத்தவாறே தாத்தாவின் அருகில் வந்து அவரது உடைந்த பல் செட்டைப் பார்த்தான்.

    தாத்தா ஹேளுவது நியாயம்தான். ஸிம்ப்பல் விஷயமில்லா இது. ஹல்லுஸெட் ஒடதோயித்தே. தாத்தா ஏனுமாடுவார்? பாட்டிக்கு ஏனு பதில் ஹேளுவா? தொட்டு விஷயமப்பா…

    டேய் ஊத்துக்குளி கோவிந்தா! வாயை மூடிக்கிட்டு உன் வசனத்தைப் படிச்சு மனப்பாடம் பண்ணு. உன் பேச்சைக் கேட்டுகிட்டு இவரை வீரப்பனாப் போட்டேன் பார்! என் புத்தியை லோக்கல் செருப்பாலே அடிக்கணும்டா…… நாடக ஒத்திகையின் போதே அபசகுனம் மாதிரி பல்செட்டை வுடைச்சிகிட்டு நிற்கிறாரு!

    ஏனப்பா! ரசா! கோப் பேடா! பீமா சமாதானப்படுத்தினான். ஹல்லு ஸெட்டு ஓடதோயிட்டதுக்கு தாத்தா ஏனு மாடுவார்? டிராமா செலவோட ஹல்லுஸெட் செலவையும் சேத் கொண்டுபிடி! ஹேவ்! ஏனு, காப்பி இன்னும் பரலுவா?

    ஆளு ஏமாந்தா சவபெட்டிச் செலவைக்கூட டிராமா செலவுலே ஏத்தச் சொல்லுவே… என் பொண்டாட்டியோட நகைங்களை, தாலி உட்பட அடகு வெச்சு வட்டிக்கு வாங்கின பணம்டா!

    அப்புசாமி கொஞ்சம் எச்சலைத் தொட்டு, பல்செட்டை ஒட்ட வைக்கப் பார்த்தார். குண்டு போட்ட ஆப்கானிஸ்தான் மாதிரி வாய் வெரீச்சென்று மேடும் பள்ளமுமாய் பரிதாபமாகக் காட்சி தந்தது.

    ஃபாமா ஷேஃப் ஃபுன்னாரி வென் பஃப் ஷெவ்வவ்வாகும்… என்றார் ரசகுண்டுவை முறைத்து.

    இன்னா இழவுடா சொல்றார்?

    பீமா ஆயுசில் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தான். அருகிலிருந்த பேனாவையும் டிராமா நோட்டையும் அப்புசாமியிடம் எடுத்துத் தந்தான்.

    தாத்தா இ நோட்டுலே பரியுங்கோ.

    இவரையே பரி பண்ணணும்டா…

    அப்புசாமி எழுதிக் காட்டினார். ‘டிராமா ஸெட் போடறதுக்கு மின்னே என் பல்செட் வந்தாகணும்’ இப்படிக்கு, ரொம்பக் கோபத்துடன் ‘அப்புசாமித் தாத்தா.’

    ரசகுண்டு நோட்டிலிருந்து அந்தப் பக்கத்தைப் பரக்கென்று கிழித்து, அதை மேலும் கிழித்து, மெம்மேலும் கிழித்து கிழியோ கிழி கிழித்து விசிறி எறிந்தான்.

    அவை பறந்து அடங்கின.

    ரசகுண்டுவின் பெருமூச்சு மட்டும் அடங்கவில்லை. கதாநாயகனின் பல்செட் உடைந்து போனது பெரிய விஷயம். மனுஷன் பல்செட் இல்லாமல் பேசினால் பொரிமாவைத் தின்னுட்டுப் புகைவிடறா மாதிரியல்லவா இருக்கும். வீரப்பன் பாத்திரத்துக்கு முக்கியமானது வசனமாச்சே. வளவளன்னு நிறைய அவன் பேசணுமே! பல்லுசெட் புதுசா வாங்கி மாட்டணும்னா ஆயிரம், ரெண்டாயிரம் ஆகுமே…

    அவனுக்கு ஏற்பட்டது கவலையா எரிச்சலா என்று பட்டிமன்றத்தினர் விவாதித்து, ‘எரிச்சலே’ என்று நடுவர் தீர்ப்பளித்ததும் ரசகுண்டு எரிச்சலுடன், ஒத்திகையும் வேணாம், மண்ணாங் கட்டியும் வேணாம்! நான் அரைபிளேடையே வீரப்பனாப் போட்டுக்கிறேன்… என்று திடீர் அறிக்கைவிட்டான்.

    பன்னீர் செல்வத்துக்கு அடித்த அதிருஷ்டம் மாதிரி ஒரு நொடியில் அரைபிளேடுக்குக் கதாநாயகப் பட்டமா?

    அப்புசாமி அவசர அவசரமாக நோட்டில் கிறுக்கிக் காட்டினார். ‘டேய் ரசம்! பல்லு செட்டு செலவுக்கு நான் பணம் குடுத்துடறேன். நாடகத்துலே நடிக்கிறதுக்காக நீ எனக்கு எதுனா ரூபாய் குடுப்பியோ இல்லையோ… அதுலே கொஞ்சம் கொஞ்சமாக் கழிச்சுக்கோ… அதாவது என் சம்பளத்திலே நீ புடிச்சுக்கோ… நான் சொல்றது பிரியுதாடா பையா? நீ பில்லத்தனமா அரைபிளேடை வீரப்பனாப் போடறேங்கிறியே? இந்த அக்குறும்பு ஆகுமா? நீ நல்ல கெதிக்குப் போவியா!’

    ‘நீ ஒன் பொண்சாதி தாலியை அறுத்துச் செலவு பண்றேன்னியே… எனக்கும் ஒரு பொண்டாட்டி இருக்கிறது. அவள் கால்லே கைலே வுழுந்து ஒன் கடனை எப்படியாச்சும் ஆயுசுக்குள்ற அடைச்சுடறேன். மத்தப்படி மவனே நீ அரைபிளேடைப் போட்டியானா, அவன் பாதியிலே ஜெயிலுக்குப் போயிட்டான்னா உன் ஆட்டம் குளோசு… அதையும் நல்லா ரோசி. அறிவு கெட்ட முண்டம் கணக்கா எதுனா பேசாதே… நாளை மின்னே நாம பாத்துக்கணும். ஒரு நல்லது பொல்லாததுக்குக் கூடிக்கணும்… பிரியுதா… தண்ணி அடிச்சி தண்ணி வெலகாது… கோழி மெறிச்சி குஞ்சு சாவாது. குஞ்சு மெறிச்சி கோழியும் சாவாது.’

    ‘நாம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, ஒழக்குலே என்னாத்துக்குப்பா கெழக்கு மேற்கு பார்க்கறே… நீயே கெட்டிக்காரன்னு நான் ஒப்புக்கிறேன். நமக்கும் மேலே ஈஸ்பரன்னு ஒருத்தன் இருக்கான். அவன் மேலே சத்தியமாச் சொல்றேன். நீ போடற நாடகம் ஆயிரம் நாளு ஓடும்.’

    ‘நம்புடா! நம்புனவனுக்கு நடராசா, நம்பாதவனுக்கு யமராசா… பிரியுதாடா மவனே…’

    நேரமாகிவிட்டதும் பரீட்சைப் பேப்பரை சூப்பர்வைசர் பறிப்பதுபோல

    Enjoying the preview?
    Page 1 of 1