Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayathil Ezhuthathey!
Idhayathil Ezhuthathey!
Idhayathil Ezhuthathey!
Ebook103 pages49 minutes

Idhayathil Ezhuthathey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124103240
Idhayathil Ezhuthathey!

Read more from Ja. Ra. Sundaresan

Related to Idhayathil Ezhuthathey!

Related ebooks

Reviews for Idhayathil Ezhuthathey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayathil Ezhuthathey! - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    இதயத்தில் எழுதாதே!

    Idhayathil Ezhuthathey!

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    கஸ்தூரி படித்து முடித்தாள்!

    தொடரும்

    ஆட்டுக்கல்லில் மாவரைத்தபடியே சுவாரஸ்யமாகக் கதை கேட்டுக் கொண்டிருந்த பார்வதி அம்மாளின் காதில் 'தொடரும்' விழாததால், ஊம்... என்று மேற்கொண்டு ஊக்கினான்..

    அவ்வளவுதான் மாமி. அவள் விழிகள் கையகலம் விரிந்தன. அவளைப்...பார்த்துத்... தொடரும்" கஸ்தூரி மீண்டும் கடைசிப் பாராவைப் படித்துக் காட்டினாள்.

    தலையணை ஒன்றை முதுகுக்குக் கொடுத்து ஜம்மென்று குழாயோரமாகச் சாய்ந்து கொண்டிருந்த இன்னோர் அம்மாள் அரைத் தூக்கத்தில் இருந்தாள். வேப்பங்காற்று வெகு சுகமாக அடித்துக் கொண்டிருந்தது. பார்வதி அம்மாள் அளவுக்குச் சிறிது அதிகமாக உளுத்தம் பருப்புப் போட்டுவிட்டதால் கொட கொடவென்று கல் அதிக சப்தம் போட்டது. அதுவே தூக்கத்திலிருந்த அம்மாளுக்குத் தாலாட்டாயிற்று.

    சுந்தர விநாயகர் தெருவில் அந்த வீட்டைக் கண்டு பிடிக்க கோபால நிலையம் எது என்று கேட்டால் நிச்சயம் எவருக்கும் தெரியாது, கொத்தவால் சாவடி என்ற பெயரே அந்த வீட்டுக்கு எல்லாராலும் சூட்டப்பட்டு முழு மனத்துடன் ஆமோதிக்கப்பட்ட பெயர்.

    அந்த வீட்டுக் கதவு எண் ஒன்று தான். குடித்தனங்கள் மட்டும் எட்டு. மாடிப் பகுதியில் இரண்டும் கீழே ஆறு குடித்தனங்களும் இருந்தன. வீடு சதா சலசலவென்று கொத்தவால் சாவடி போலக் காட்சி அளிக்கும்.

    பல அசௌகரியங்கள் அந்த வீட்டில் இருந்தாலும் குடித்தனக்காரர்களுக்கு வீட்டின் பின்பக்கமிருந்த குழாயடியும், வேப்ப மரத்து நிழலும் குளு குளுவென்று நெஞ் சைக் குளிர வைத்தன. ஊரை வெயில் பொசுக்கும் மத்தியான நேரத்தில் வீட்டுப் பெண்கள் அந்தக் 'கொடைக்கானலில் கூடி அரட்டைக் கச்சேரி, கதை வாசித்தல், பல்லாங்குழி, ஊர் வம்பு, சினிமா விமரிசனம் முதலியன நடத்துவார்கள். வழுவழுவென்று போட்டிருந்த சிமெண்டுத் தளத்துக்காக வீட்டுக் காரருக்கு அவர்கள் நன்றி செலுத்துவார்கள். இந்த ஒரு செளகரியமாவது வீட்டில் இருக் கிறதே என்று.

    ஊம்... என்ற இரண்டாவது குரல் தூங்கிக் கொண்டிருந்த அம்மாளிடமிருந்து இப்போது வந்தது. தன் தூக்கத்துக்கு ஏதோ இடைஞ்சல் ஏற்பட்டதுபோல. கஸ்தூரி திரும்பி நோக்கினாள். அரைத் தூக்கத்திலிருந்த அம்மாளின் சற்றே திறந்த உதடுகளில் குறி பார்த்து ஓர் உலர்ந்த வேப்பிலை காற்றிலடித்து விழுந்து சிக்கிக் கொண்டிருந்தது! பார்வதியம்மா.... பார்வதியம்மா! ஃப்ளட் பிரஷர்' மாமியைப் பாருங்களேன். என்று கஸ்தூரியினால் உற்சாகத்தோடு கூவாமலிருக்க முடிய வில்லை.

    பார்வதி அம்மாள் பார்த்துவிட்டு இடி இடியென்று ஒரு பெருஞ்சுரிப்புச் சிரித்தாள். விலுக்கென்று தூக்கிவாரிப் போடத் தலையணையைத் தூக்கியபடி தூங்கிக் கொண் டிருந்த அம்மாள் எழுந்து கஸ்தூரியைப் போலிக் கோபத்துடன் நோக்கினாள்.

    கஸ்தூரி கேலியாகக் கூறினாள்:

    'எல்லோருமாக என்னைக் கதைப் படிக்கச் சொல்லி விட்டு, அவரவர்கள் தங்கள் ஜோலியைப் பார்க்கிறார்கள் சுகமாய்.

    நான் நன்றாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியிலே தான் கண் கொஞ்சம் செருகிவிட்டது. வேப்பங்காற்றடியம்மா! வேப்பங்காற்று! செல்லக் கண்ணல்லவா, மறுபடியும் கடைசியை மட்டும் படித்துவிடு. 'பிளட் பிரஷர்' அம்மாள் தன் பெரிய கிரணிப்பழ உடம்புடன் கெஞ்சுவது போல் கஸ்தூரியைக் கேட்டது மாவரைத்துக் கொண்டிருந்த அம்மாளின் மனத்தைப் பிசைந்தது.

    என்ன கடைசியிலே! இந்தப் பிள்ளை ரூம் வேண்டுமென்று மாடிப்படி ஏறுகிறான். ஒரு பெண் தட தடவென்று ஓடி வந்து 'ணங்' கென்று மோதிக்கொள்கிறாள். அவனைப் பார்த்ததும் அவள் விழிகள் கையகலமோ, தலையகலமோ விரிந்தனவாம். அப்புறம் தொடரும்... ஏன்மீனாட்சி, எங்காவது விழிகள் கையகலம் விரியுமா! அது எவனைத்தான் பார்க்கட்டுமே. நல்ல கூத்து இந்தக் கதை எழுதுகிற வர்களிடம்! என்னமாவது அசட்டுப்பிசட்டென்று எழுதுவது?

    ஜன்னலுக்கு அந்தப் புறமிருந்து இன்னோர் ஒல்லியான நடுத்தர வயது அம்மாளின் குரல் வந்தது. துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தவர் சூட்டுக்காகக் காத்திருந்தாள். எப்படியோ நாமும் படிக்கிறோமே அதைச் சொல்லுங்கள். இதிலே நறுக் நறுக் கென்று நல்ல இடத்திலே கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. அப்போதுதானே அடுத்த வாரம் வாங்குவோம். அடுத்த வாரம் என்ன வரப்போகிறது? அந்தப் பிள்ளை அவளுடைய காதலன் என்பான்

    கஸ்தூரிக்கு அந்த அம்மாளின் பேச்சைக் கேட்க நாணமாயிருந்தது.

    ஆனாலும் தான் நினைத்ததைக் கூறாமலிருக்க முடிய வில்லை. கதை அப்பொழுதுதானே சுவாரஸ்யமாக ஒடும்? முழுவதையும் ஒரே தடவை சொல்லிவிட்டால் அது தொடர்கதையா? சிறு கதை.

    "எனக்கென்னவோடியம்மா.... எல்லாக் கதையிலும் இந்தக் காதல் காதல் என்கிறதைப் போட்டு எழுதுவதைக் கண்டாலே பிடிப்பதில்லை. உலகத்திலே எத்தனை விஷயம் இல்லை? ஒரு பக்தி.... ஒரு பாசம்.... ஒரு தாயார் தகப்ப னாருக்குப் பிள்ளைகள் செய்ய வேண்டியது என்ன... இது மாதிரி எழுத மாட்டார்களோ? நடக்கமுடியாதது, நடக்காதது இதைத்தானே அதிகம் எழுதுகிறார்கள்? '

    எழுத்தாளர்களின் தலை உரலில் போட்டு ஆட்டப் பட்டது.

    நாமும்தான் பார்க்கிறோமே. இரண்டுபேர் மோதிக் கொண்டால் ஒருத்தரையொருத்தர் - திட்டிக்கொண்டு மண்டைவலிக்கு மருந்து போட்டுக் கொள்ளக் கிளம்பினார்கள் என்றால் பொருத்தமாயிருக்கும். காதல் எங்கே வந்து குதிக்கிறது.? அந்த இந்தக்கதையிலேகூட எவனோ எழுதியிருந்தானேடியம்மா நன்றாக... நெஞ்சிலேயிருக்கிறது. வாயிலே வரமாட்டேனென்கிறது... பார்வதி அம்மாள் திணறினாள், மூளைக்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1