Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanneer Thuliyil Kadalosai
Kanneer Thuliyil Kadalosai
Kanneer Thuliyil Kadalosai
Ebook123 pages49 minutes

Kanneer Thuliyil Kadalosai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803257
Kanneer Thuliyil Kadalosai

Read more from Maharishi

Related to Kanneer Thuliyil Kadalosai

Related ebooks

Reviews for Kanneer Thuliyil Kadalosai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanneer Thuliyil Kadalosai - Maharishi

    http://www.pustaka.co.in

    கண்ணீர் துளியில் கடலோசை

    Kanneer Thuliyil kadalosai

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை நைன் டு நைன் ஷெட்யூல் ஆணி அடித்தாற் போல படப்பிடிப்பு நேரத்தையும் நாட்களையும் குறித்துக் கொண்டு ஒத்துழைக்கும் நடிகர் சிவகுமார் காலையிலிருந்தே பிஸி.

    டைரக்டர் முத்துராமனின் செட் என்றாலே கலகலப்புக்கு கேட்கவே வேண்டாம்.

    காமிராவில் மாயா ஜாலம் செய்யும் பாபு.

    சுறுசுறுப்புடன் உதவிபுரியும் ஜி. ரங்கராஜன், முத்து...

    ஷூட்டிங் நேரத்தில், ஷாட் ரெடி. என்றவுடன் உண்டாகும் ஒழுக்கக் கட்டுப்பாடு.

    ஒரு ராணுவ ஒழுங்குதான்.

    பிற்பகல் மூன்று மணி வரை சிவகுமாருக்கும் மற்றொரு நடிகருக்கும் தான் வேலை.

    பிற்பகல் மூன்று மணிக்குத்தான் ஜெயகுமாருடன் வேலை.

    அதற்குள் எடுக்கவேண்டிய இரண்டு மூன்று சீக்வன்ஸ்களை எடுத்துவிட வேண்டும். அதன்பின், ஜெயகுமாருடன் ஒன்பது மணி வரை வேலை.

    அந்த வாரத்தில் ஜெயகுமாரின் கால்ஷீட் கிடைத்த நேரம் இந்த ஆறு மணி நேரம் தான்.

    அவ்வளவு பிஸி அவன்.

    அவன் நடித்து வெளிவந்த படங்கள் இதுவரை ஐந்து.

    எல்லாம் கலர்.

    அத்தனையும் ஹிட்.

    பாக்ஸ் ஆபீஸை திறந்த பெட்டி மூடவிடாமல் செய்த பண மழை பெய்த படங்கள்.

    முதல் படம் வெளியான போது ஏற்பட்ட பரபரப்பு போல இதுவரை வேறு எந்த படத்திற்கும் ஏற்படவில்லை.

    முதல் படம் வெளியான மூன்றாவது காட்சியின்போது ஏற்பட்ட நாடு தழுவிய அனுபவங்கள்.

    விநோதமானவை யாருக்கும் இதுவரை நிகழாதவை. ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆகி சரித்திரம் படைத்த மகராஜன் அவன்.

    பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷன் சார்ட் ஒவ்வொரு ஏரியாவிலிருந்தும் வரும்.

    சேலம் தர்மபுரி ஹவுஸ்புல். கூட்ட நெரிசலில் ஒருவர் மரணம் நான்கு பேர் நிலைமைக் கவலைக்கிடம்.

    கோயமுத்தூர் தியேட்டர் வாசலில் அடிதடி... கண்ணீர்ப்புகை... ரிஸர்வ் போலீஸ் வருகை.

    திருச்சி தியேட்டர் முன் வைத்திருந்த பேனர்கள் சூறை.

    கட்டுக்கடங்காத கூட்டம் அதை அடக்கச் சென்ற போலீஸ் ஜீப் தீக்கரை.

    ஐம்பதாவது நாளை தாண்டும் போதும் அதே நிலை நீடித்தது.

    எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் ஒரு நாள் போவது ஒரு யுகமாக இருந்தது.

    ஜெயகுமார்

    இளம் உள்ளத்து இளவரசன். இளைய தலைமுறையின் ஓர் இணையற்ற இலக்கணம்.

    காதல் பேரரசன். திரை உலகின் புதிய துருவ நட்சத்திரம்.

    டைமண்ட் ஸ்டார். பிளாட்டினம் டோல்.

    பத்திரிகைகள் ஏகமாகப் பாராட்டின.

    இத்தனைக்கும் அவன் முதல் படம் ஒரு அஃபீட் படம்தான்.

    முழு மசாலாவாக இல்லாமல் முழு செண்டிமெண்டுமில்லாமல் எல்லா அம்சங்களையும் விகிதாசாரத்தில் கலந்து கொடுத்திருந்தார். அதன் திரைக்கதை வசனம் டைரக்க்ஷன் ஆகிய பொறுப்பினை ஏற்றிருந்த பழம்பெரும் டைரக்டர் சோமா சர்மா.

    அந்த படத்தில் சோம சர்மாவிற்கும் ஓஹோவென்ற பெயர்.

    இந்த வயதான டைரக்டரால் இவ்வளவு இளமையானதொரு படத்தை எப்படி எடுக்க முடிந்தது.

    இந்த சண்டமாருதத்திடம் இவரால் இவ்வளவு வேலை எப்படி வாங்க முடிந்தது.

    இவ்வளவு துடிப்புள்ள வாலிபனை இவர் எப்படி எங்கிருந்து கண்டுபிடித்தார்.

    பம்பாய் படஉலகில் சஞ்சய்டட்டும், குமார் கவுரவ்வும் எட்டாத ஒரு அந்தஸ்தை ஜெயகுமார் அவன் படம் வெளியான ஒரே வாரத்தில் எட்டிவிட்டான்.

    பாபி வெளியான பின்பு ரிஷிகபூருக்குக் கூட அப்படிப்பட்ட ரசிக பட்டாளம் உருவாகவில்லை.

    இங்கே ஜெயகுமாருக்கு உருவாகிவிட்டது.

    முகச் சாயலில் சின்ன அமிதாப்பச்சன். உணர்வுகளை வெளிக்காட்டுவது சிவா ஜிகணேசன். துடிப்பில் ரஜினிகாந்த். பாத்திரங்களை உணர்ந்து நடிப்பதில் பாவ பூர்வமான கமல்.

    அவனிடம் எல்லாருமே ஒளிந்து கொண்டிருந்தார்கள்.

    ஒரு படம்

    இரண்டாவது படம்

    முதல் பட அளவு அதே ஹிட்.

    பாக்ஸ் ஆபீஸை அதே அளவு பராமரித்தது.

    அவனை தங்கள் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய. அலையாக அலைந்தனர்.

    தொடர்ந்து அவன் பல படங்களுக்கு ஒப்பந்தமானான்.

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நேர்த்தி.

    பட அதிபர்களின் செல்லக் குழந்தை போல அவன் மாறிவிட்டான்.

    அவன் படம் வெளியாகிறது என்றாலே மற்றவர்கள் தங்கள் படங்களை வெளியிடவே பயந்தார்கள்.

    அவனுடைய புயல்வேக வருகை படவுலகை மிகப் பெரிய அளவில் பாதித்தது.

    தன்னுடன் நடிக்கும் ஜோடி நடிகையை அவன்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பட இளம் நடிகைகளின் ஆக்கிரமிப்புக்கு நடுவே அவன் கோகுலகிருஷ்ணனாக. இருந்தான்,

    அவனுக்காக எதையும் தர தயாராக இருந்தார்கள். அவனுடன் ஒரு படத்தில் நடித்தால் போதும், தன் படவுலக லட்சியமே முடிந்தமாதிரி என்று எண்ணத் தொடங்கினார்கள்.

    அவன் தன்னுடன் நடிக்கும் கதாநாயகியை தேர்ந்தெடுத்துவிட்டான் என்கிற செய்தி வெளியான அடுத்த ஒரு வாரத்தில் அந்த நடிகை ஒரு ஹீரோயின் அந்தஸ்தை சுலபமாக எட்டிவிடுவாள்.

    சினிமா பத்திரிகைகள் அந்த நடிகையை ஏராளமான ப்ளோஅப்கள் போட பட அதிபர்களின் கார்கள் அந்த நடிகையின் வீட்டை சூழ, வீடு மிக விரைவில் பங்களாவாக மாறிய அதிசயமும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.

    உங்களிடம் எங்கள் பத்திரிக்கைக்காக ஒரு பேட்டி எடுக்க வேண்டுமே!

    டெலிபோனில் பேசினால்

    என் பேட்டியா, பேட்டி அளிக்கக் கூடிய அளவுக்கு நான் வளரவில்லை. நான் எப்போது பூரணமாக வளர்ந்துவிட்டதாக உணர்கிறோனோ அப்பொழுதுதான் பேட்டி...ஓகே-

    மிக நயமான தொனியில் பதிலும் நான் டெலிபோனை மூட உங்கள் அனுமதி கிடைக்குமா... என்கிற பணிவான வேண்டுகோளுடன் டெலிபோன் தன் யதாஸ்தானத்தில் உட்கார்ந்து விடும்...

    "ஸார் ஒரு ப்ளோ அப்...

    என்று பெரிய ப்ளாஷ் கேமராவுடன் திறமையான செல்லப்பா எதிர்படுவார்...

    நோ...ப்ளீஸ்... உள்ளே நீச்சல் உடையில் டாப்லஸிடன் படுகவர்ச்சியாக மாதவி நிக்கறாங்க...போங்க அப்படியே உங்க காமராவிலே அள்ளிப் போட்டுக்கங்க......

    ஜெய்குமார் காரில் ஏறிக்கொண்டுவிடுவான்...

    அவனைப் பேட்டிகாண சென்ற பத்திரிகை நிருபர்கள் ஏமாந்து போய் ஓரம் கட்டி நின்றனர்.

    அதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டவர்கள் அவனுடைய முழுமையான திறமையை வெளிக் கொண்டு வர அவனை வழி மறிக்காமல் நின்றனர்.

    ஆனால்...

    அவனுடைய இம்மாதிரி மனோபாவத்தைப் பெறாதவர்கள் அவனைப்பற்றி வீண் வதந்திகளை எல்லா நிலைகளிலும் பரப்பினர்...பரப்ப முயன்றனர். அவைகளை அவன் லட்சியம் செய்யவில்லை.

    அவனை ரொம்பவும் தரக்குறைவாக விமர்சித்தவர்களை அவன் ரொம்பவும் துணிச்சலுடன் நேரிடையாகவே சந்தித்தான்

    அப்படியொரு பரபரப்பான நேரிடை மோதல் ஒன்று நடந்தது. அது ஃப்ளேரப் ஆகும் நிலையில் அவனைப் பற்றி அவதூறு எழுதிய பத்திரிகை அச் செய்தியைக் கொடுத்த நிருபரை வெளியேற்றி ஜெயகுமாரின் போஷகரிடம் மன்னிப்பு கேட்டபின்புதான் அவன் நடிக்கிற படத்தின் செட்டுக்குள் அப்பத்திரிகையின் வேறு பிரதி நிதிக்கு அனுமதி தரப்பட்டது.

    இப்படி தராசின் முள் போல அவன் மிக நிதானமாக தன்னையும் தன் செயல்களையும் வைத்துக்கொண்டான்.

    எனவே அவனை எல்லாருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1