Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirakkatha Jannalgal
Thirakkatha Jannalgal
Thirakkatha Jannalgal
Ebook93 pages41 minutes

Thirakkatha Jannalgal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403249
Thirakkatha Jannalgal

Read more from Rajesh Kumar

Related to Thirakkatha Jannalgal

Related ebooks

Related categories

Reviews for Thirakkatha Jannalgal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirakkatha Jannalgal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    திறக்காத ஜன்னல்கள்

    Thirakkatha Jannalgal

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    விசாலாட்சி இந்தக் கதை ஆரம்பிக்கும் சாயந்தர நேர ஏழு மணிக்கு மெல்லிய பதட்டத்தோடு இருந்தாள்.

    அவளுக்கு வயது ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் யாரும் அவ்வளவு சுலபத்தில் நம்ப மாட்டார்கள். எப்போதும் நெற்றி மையத்தில் அழுத்தமான குங்குமப் பொட்டுடன் காட்சியளிக்கிற-பெரும் பாலும் காட்டன் சில்க் புடவைகளை விரும்பி அணிகிறஅவளைப் பார்த்தால் நாற்பத்தைந்து தான் மதிக்க முடியும்.

    இந்த நிமிஷம் பதட்டத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை புடவைத் தலைப்பால் அகற்றிக் கொண்டே, டெலிபோன் எண்களை விரல் நடுங்க அழுத்திக் கொண்டிருந்தாள்.

    பீய்ய்ப்...

    பீய்ய்ப்...

    பீய்ய்ப்...

    எங்கேஜ்ட் டோன்.

    மறுபடி மறுபடி முயன்றாள்.

    இந்த தடத்தில் உள்ள இணைப்பு கள் அனைத்தும் உபயோகத்தில் உள்ளன. தயவு செய்து சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும். "The root dialed by you is now buy. Please try after some time.'

    பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் தேன் தடவிய டெசிபலில் வெளிப்பட்டது.

    சற்றே சலிப்போடு ரிசீவரை வைத்த விசாலாட்சிமீண்டும் அதைக் கையில் எடுத்துக்கொண்டு இன்னொரு நம்பருக்கு முயற்சி செய்தாள்.

    இரண்டாவது டயலில் லைன் கிடைத்தது.

    ப்ரணேஷ்... நான் தான் பேசறேன்...

    மறுமுனை ப்ரணேஷ் அந்த நேரத்தில் அவளுடைய டெலிபோன் அழைப்பை விரும்பாத மாதிரித் தொனியில் குரலை வெளியிட்டான்,

    சொல்லும்மா...

    இவ்வளவு நேரமா உன்னோட அப்பாவுக்கு போன் பண் ணிப் பார்த்தேன்...லைன் கிடைக்கவே இல்லை...அதான் உன்னைக் கூப்பிட்டேன்...

    என்ன விஷயம்னு சொல்லு...? நான் ஒரு முக்கியமான போர்டு மீட்டிங்கில் இருக்கேன்...

    தாமினி இன்னும் காலேஜிலிருந்து வீட்டுக்கு வரலைடா...

    மணி ஏழுதானேம்மா ஆகிறது...

    வழக்கமா அவ அஞ்சு மணிக்கெல்லாம் வீடு திரும்பிடுவா ப்ரணேஷ்...

    ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸ் இருந்திருக்கலாம்...

    அப்படி இருந்தா, அவ காலையிலயே சொல்லிட்டுப் போயிருப்பா...

    திடீர்னு ஏதாவது ப்ரொக்ராம் ஃபிக்ஸ் ஆகி இருந்திருக்கலாமா...

    ப்ரணேஷ்... அவ தகவல் குடுக்காம எங்கேயும் போகமாட்டாடா...

    தாமினி சின்னப் பொண்ணு இல்லை... நீ ரொம்ப கவலைப்படறே... ஒரு நாள் அசந்தர்ப்பமா லேட் ஆகறது சகஜம் தான். நீ கண்டதையும் கற்பனை பண் ணி டென்ஷன் ஆக வேண்டாம்... போர்டு மீட்டிங்கில் முக்கியமான டிஸ்கஷன் போயிட்டிருக்கு... எதுக்கும் நீ எட்டு மணி வரைக்கும் பார்த்துட்டு அப்புறம் போன் பண்ணு.... அல்லது மீட்டிங் முடிஞ்சதும் நானே உனக்கு போன் பண்றேன்...

    சொல்லிவிட்டு விசாலாட்சி மேற்கொண்டு பேச வழியில்லாமல் அவனே தொடர்பைத் துண்டித்து விட் டான்.

    அவளுடைய மனசுக்குள் சிறகடிக்கத் துவங்கியிருந்த பதட்டப் பறவைகள் அவ்வளவு சுலபத்தில் ஓய்வெடுக்க மறுத்தன.

    டெலிபோன் டயரியைப் பரபரவென்று புரட்டி தாமினியுடைய வகுப்புத் தோழி ஒருத்தியின் எண்ணைத் தேடிப் பிடித்தாள்.

    ஹலோ... நான் தாமினியோட அம்மா பேசறன்...

    சொல்லுங்கம்மா... எப்படி இருக்கீங்க..?

    நல்லாருக்கேன் மா...

    என்ன விசேஷம் திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க..?

    அது.. வந்து... தாமினி இன்னும் வீட்டுக்கு வரலை...

    அந்தத் தோழி குரல் நிறைய ஆச்சரியத்தைக் கொட்டியபடி கேட்டாள்.

    என்ன து... தாமினி இன்னும் வீட்டுக்கு வரலையா...?

    ஆமாம்மா... அவளுக்கு ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கா...

    செமஸ்டர் இப்பதான் ஆரம்பிச்சிருக்கு…இப்போ ஏது ஸ்பெஷல் க்ளாஸ்...? அதெல்லாம் எதுவும் இல்லையே...

    காலேஜிலிருந்து கிளம்பறப்போ அவளை நீ பார்த்தியா..?

    பார்த்தேன்...

    வேற எங்காவது போகப் போறதா உன் கிட்டே ஏதாவது சொன்னாளா...?

    "இல்லைம்மா... பஸ் ஸ்டாப்புக்கு என்னோடதான் நடந்து வந்தா. நான் போக

    Enjoying the preview?
    Page 1 of 1