Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Mattum Azhagu
Nee Mattum Azhagu
Nee Mattum Azhagu
Ebook80 pages26 minutes

Nee Mattum Azhagu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603382
Nee Mattum Azhagu

Read more from Devibala

Related to Nee Mattum Azhagu

Related ebooks

Reviews for Nee Mattum Azhagu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Mattum Azhagu - Devibala

    http://www.pustaka.co.in

    நீ மட்டும் அழகு

    Nee Mattum Azhagu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் மீனா.

    அம்மா! டிபன்பாக்ஸ்!

    கொண்டு வந்துட்டேன் மீனா அம்மா சாப்பாட்டுப் பாத்திரத்தைக் கொண்டு வந்தாள்.

    அப்பா எங்கே?

    வழக்கம் போல தரகரைப் பார்க்கப் போயிருக்கார்!

    மீனா பதில் பேசவில்லை.

    நான் போயிட்டு வர்றேம்மா! சாயங்காலம் வர நேரமாகும்!

    டி.வி. செய்தியா?

    ஆமாம்மா!

    மீனா படியிறங்கி விட்டாள்.

    தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே, பகுதிநேர செய்தி வாசிப்பாளராக தொலைகாட்சியில் வேலை.

    மீனாவின் அழகை மற்றவர்கள் சொன்னால் கூட ஒரு மாற்று குறைந்துதான் இருக்கும். நேரில் பார்க்க வேண்டும்.

    பிரம்மன் பார்த்துப் பார்த்து படைத்த பெண். செதுக்கி வைத்த சிற்பம் போல இருப்பாள்.

    பேருந்து நிலையத்துக்கு அவள் வந்து விட்டால், வாலிப, வயோதிக அன்பர்கள் அத்தனை பேரும் ‘ஜொள்’ ஆறாகிப் பெருக, அலைபாய்ந்து நிற்பார்கள்.

    ஆபீசில், டி.வி. நிலையத்தில் அவளைக் காதலிக்காத ஆண்களை விரலை விட்டு எண்ணி விடலாம்.

    கண்ணியமான காதலர்களிலிருந்து கண்ணடித்து ‘வர்றியா?’ என்று கேட்கும் ரகம் வரை ஒரு நீண்ட பட்டியல் உண்டு.

    வயது இருபத்திநாலு!

    அப்பாவுக்கு இன்னும் ஒரு வருஷம்தான் சர்வீஸ்.

    அதற்குள் மீனாவை உரிய இடத்தில் ஒப்படைத்து விட அப்பாவுக்கு ஆசை. அலைபாய்கிறார்.

    மீனா வாசலைத் தாண்ட, அந்தப் படகுக் கார் வந்து நின்றது.

    மீனா தயங்கி நின்றாள்.

    வேட்டி, கதர் சட்டையோடு ஒரு இளைஞன் இறங்கி வந்து கை கூப்பினான்.

    நீங்க யாரு? மீனாதான் கேட்டாள்.

    என் பேரு சுரேஷ்! உள்ளே வரலாமா?

    மீனா படியேறி வந்தாள்.

    சொல்லுங்க!

    கார்ல வந்திருக்கறது விளையாட்டுத் துறை அமைச்சர். நான் அவரோட பி.ஏ.

    அம்மா ஒரு நொடி நடுங்கி விட்டாள்.

    அவரை உள்ளே கூட்டிட்டு வரலாமா?

    வாங்க!

    அவன் காருக்கு ஓடினான்.

    மீனாவின் முகத்தை அம்மா பார்த்தாள்.

    அதற்குள் வேட்டி, சட்டை சகிதம் வெளேரென அந்த மனிதன் உள்ளே வந்தான்.

    நல்ல உயரம் நிறம் கறுப்புதான்.

    நல்ல உயரம். நிறம் கறுப்புதான்.

    பார்க்க லட்சணமாக இருந்தான்.

    சென்ட் வாசனை, தோளில் பச்சை நிறத் துண்டு, சுருட்டைத் தலை, பார்வையில் பதவியின் கனம்…

    வாங்க சார்!

    மீனா வரவேற்றாள்.

    உட்காருங்க!

    அவன் உட்கார்ந்தான்.

    ஆவுடையப்பன்னு கேள்விப்பட்டதுண்டா?

    ம்! தெரியும். பத்திரிகைல படிச்சிருக்கோம்!

    அப்பா உள்ளே நுழைந்தார். வாசலில் காரைப் பார்த்து பிரமிப்பு.

    மீனா விவரம் சொன்னதும் அப்பாவுக்கு லேசாக மயக்கமே வந்துவிட்டது.

    தோள் துண்டு இடுப்புக்கு வந்து விட்டது.

    உட்காரக்கூட அச்சம்.

    உட்காருங்க சார்! சுரேஷ்! அந்தப் பழங்கள், ஸ்வீட்ஸ் எல்லாம் எடுத்து வை!

    சரி சார்!

    Enjoying the preview?
    Page 1 of 1