Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Nadhi Pola Odikondiru...
Nee Nadhi Pola Odikondiru...
Nee Nadhi Pola Odikondiru...
Ebook129 pages1 hour

Nee Nadhi Pola Odikondiru...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

'நீ நதி போல ஓடிக்கொண்டிரு...' தொடர் வந்த காலங்களில் எனக்கு எத்தனையோ தரிசனங்கள்... 'எங்க ஆபீஸ் லன்ச் ரூம்ல பேசினது உங்களுக்கு எப்படித் தெரியும்?', 'என் பொண்ணு இதேதான் சொல்லுவா', 'என் மருமகளைப் பத்தி சரியா எழுதிட்டீங்க, இன்னும் கூட கொஞ்சம் புத்தி சொல்லியிருக்கலாம்...' என்று ஏகப்பட்ட பெண்கள் என்னோடு பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதுமட்டுமல்ல, கட்டுரை எழுத எனக்கு களம் அமைத்துக் கொடுத்தவர்களே பெண்கள்தானே. மாற்றுத் திறனாளி, வங்கிக்கு வந்த வாடிக்கையாளர், சக ஊழியர், பள்ளி/கல்லூரித் தோழியர்... மொத்தத்தில், தெவிட்டாத தரிசனங்கள்தான்! தொடரின் பயணத்தில் நான் அறிந்து கொண்ட விஷயம், 'பெண் என்பவள் பிரமாண்டமானவள்' என்பதைத்தான். காலமே, ஒரு நதி போல அவளின் காலடியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நதியாகவும், அதில் மிதக்கும் சருகாகவும், ஆங்காங்கே துள்ளும் மீனாகவும், அதில் கல்லெறியும் கரையோரத்துச் சுட்டியாகவும்... அனைத்துமாக வியாபித்து நிற்பவள் அவளே. என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது!

- பாரதி பாஸ்கர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109103379
Nee Nadhi Pola Odikondiru...

Read more from Bharathi Baskar

Related to Nee Nadhi Pola Odikondiru...

Related ebooks

Reviews for Nee Nadhi Pola Odikondiru...

Rating: 4.4 out of 5 stars
4.5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Nadhi Pola Odikondiru... - Bharathi Baskar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ நதி போல ஒடிக்கொண்டிரு...

    Nee Nadhi Pola Odikondiru...

    Author:

    பாரதி பாஸ்கர்

    Bharathi Baskar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bharathi-baskar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1 வீடு பாராட்டாவிட்டாலும், நேசிக்கிறது!

    2. கயமை

    3. மெளன வாழ்த்து!

    4. ‘ஷட் அப் அண்ட்

    மூவ் ஆன்’

    5. இளமையெனும் கூழாங்கல்லே, கூல்… கூல்!

    6. அழகு… எது?

    7. ‘அநித்ராக்களை பலி கொள்ளாமல் இருப்பாயாக!’

    8. விதைக்க வேண்டியது வெறியல்ல… வெற்றி!

    9. அக்னி மூலையின் அறை…பெண்களுக்கெல்லாம் சிறை!

    10. கமலாம்மாவும் கடன் அட்டையும்!

    11. வீசப்பட வேண்டியது… எதிர்பார்ப்பு… விரும்பப்பட வேண்டியது… விவேகம்!

    12. ‘வலி’ நிரம்பிய இழப்புகள்… வராமல் இருக்கக் கடவோம்!

    13. மோதி மிதிக்க… முகத்தில் உமிழ…

    14. பிரியாத நட்பென்னும் பெரு வரம் வாய்க்குமோ?

    15. ஓர் இனிய மைல் கல்!

    16. பயணம் செய்ய விரும்பு!

    17. பெண்ணுக்கு எதிரி பெண்ணேதானா?

    18. அச்சம் தவீர்!

    19. போராட்டமே பெண்ணின்

    20. நேரில் நின்று…

    பேசும் தெய்வம்

    இதயத்திலிருந்து ஒரு சொல்!

    என்னுடைய பேச்சுத் திறனுக்கு, அம்மாதான் பிள்ளையார் சுழி போட்டாள். சிறுவயதில், பள்ளிப் பேச்சுப்போட்டி என்றால் அம்மாவிடம் போய் நிற்பேன். வேலையெல்லாம் முடித்துவிட்டு, இரவின் அமைதியில் அம்மா எழுதுவாள். அடுத்த நாள் காலையில் நான் பேசவேண்டியவை, வெள்ளைத்தாளில் நீலப்பூக்களாக மலர்ந்து எனக்காகக் காத்திருக்கும். அப்படியே படித்து, ஒப்பித்து, சிலசமயம் பரிசும் வாங்கி வரும்போது, அம்மாவின் கண்களில் ஒரு மின்னல் தோன்றும். பின்பு சின்னதாகச் சிரிப்பாள். அதுகூட அவளைப் போல் மென்மையானதே.

    அப்படி ஆரம்பித்தவள், அம்மாவின் ஆசிகளால், வாழ்த்துகளால் வளர்ந்து ‘அவள் விகடன்’ இதழில் எழுதும் வரை வந்துவிட்டேன்.

    கட்டுரை வரையத் தொடங்கி பல வாரங்கள் கடந்தபின், அவள் விகடனில் இருந்து ஓர் அழைப்பு. தொடர், அடுத்த இதழோடு முடியப் போகிறது. தொடரின் இறுதிக் கட்டுரை மிகுந்த நுணுக்கமாகவும் அழுத்தமாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்… என்றனர். அழைப்பு வந்த நாளிலிருந்து அலை மோதினேன், எதை எழுத நினைத்தாலும், இடுப்பை விட்டு இறங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிடிவாதக் குழந்தை மாதிரி, பேனாவை விட்டு வார்த்தைகள் வர மறுத்தன.

    2010-ன் தீபாவளி. உடல் நலமின்றி இருந்த அம்மாவைப் பார்த்து வந்தேன். அன்று இரவு, எழுத உட்கார்ந்தவுடன் நெஞ்சமெல்லாம் அம்மாவைப் பற்றிய நினைவுகளே நிறைந்து வழிந்தன. எழுத உட்கார்ந்ததுதான் எனக்குத் தெரியும். வழக்கமான காலதாமதங்கள், ‘நாளை பார்க்கலாம்’ என்று தள்ளிப்போடும் குட்டிச் சோம்பல்கள், வார்த்தைகளுடன் குஸ்திச் சண்டை எதுவுமின்றி கட்டுரை களைகட்டத் தொடங்கியது.

    ‘ஓர் எழுத்தாளனின் எழுத்தனுபவம் எத்தனை மகத்தானது’ என்று அன்றுதான் உணர்ந்தேன். கட்டுரை தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். மனதின் ஏதோ ஒரு மூலையில் திறக்கப்படாத அறையைத் திறந்தது போல், அம்மா பற்றிய செய்திகளும் நினைவுகளும் கொட்டின, கட்டுரை வடிவில். அச்சுக்கு உடனே கொடுத்துவிட்டேன். ஆனால், அடுத்த இரண்டு நாட்களில், என் அம்மா உலக வாழ்க்கைப் பயணத்திலிருந்து விடை பெற்றுக் கொண்டாள்.

    நான் அம்மாவுக்குச் சொன்ன நன்றியாக ஆகிவிட்டது அந்தக் கட்டுரை. ‘நேரில் நின்று… பேசும் தெய்வம்’ என்று ‘அவள் விகடன்’ இதழ் கொடுத்த கட்டுரைத் தலைப்பு, காலங்களைத் தாண்டி என் நினைவில் உறைந்து நின்றுவிட்டது; அம்மாவின் ஞாபகங்கள் போலவே…

    ‘நீ நதி போல ஓடிக்கொண்டிரு…’ தொடர் வந்த காலங்களில் எனக்கு எத்தனையோ தரிசனங்கள்… ‘எங்க ஆபீஸ் லன்ச் ரூம்ல பேசினது உங்களுக்கு எப்படித் தெரியும்?’, ‘என் பொண்ணு இதேதான் சொல்லுவா’, ‘என் மருமகளைப் பத்தி சரியா எழுதிட்டீங்க, இன்னும் கூட கொஞ்சம் புத்தி சொல்லியிருக்கலாம்…’ என்று ஏகப்பட்ட பெண்கள் என்னோடு பேசிக்கொண்டே இருந்தார்கள்.

    அதுமட்டுமல்ல, கட்டுரை எழுத எனக்கு களம் அமைத்துக் கொடுத்தவர்களே பெண்கள்தானே. மாற்றுத் திறனாளி, வங்கிக்கு வந்த வாடிக்கையாளர், சக ஊழியர், பள்ளி/கல்லூரித் தோழியர்… மொத்தத்தில், தெவிட்டாத தரிசனங்கள்தான்! தொடரின் பயணத்தில் நான் அறிந்து கொண்ட விஷயம், ‘பெண் என்பவள் பிரமாண்டமானவள்’ என்பதைத்தான். காலமே, ஒரு நதி போல அவளின் காலடியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நதியாகவும், அதில் மிதக்கும் சருகாகவும், ஆங்காங்கே துள்ளும் மீனாகவும், அதில் கல்லெறியும் கரையோரத்துச் சுட்டியாகவும்… அனைத்துமாக வியாபித்து நிற்பவள் அவளே. என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது!

    - பாரதி பாஸ்கர்

    1 வீடு பாராட்டாவிட்டாலும், நேசிக்கிறது!

    சரோ என் பள்ளித் தோழி. ஒரு மாலை வேளையில் சென்னை, மவுன்ட் ரோட்டில் அவளைச் சந்தித்தபோது, அந்த

    சந்தோஷத்துக்கு இன்னும் கொஞ்சம் ஆயுள் கொடுப்பதற்காக, ‘சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே’ என்று இருவரும் ஸ்பென்சர் பிளாசாவுக்குள் நுழைந்தோம். போன இடத்தில் என் அலுவலக மேலதிகாரி ஒருவரைச் சந்தித்தோம்.

    அமெரிக்கரான அவர், என்னைப் பார்த்து ‘ஹாய் சொல்ல… பதிலுக்கு நானும் சொல்லிவிட்டு, என் தோழியை அறிமுகப்படுத்தினேன்.’

    உடனே அவர், உங்கள் உடை மிக அழகாக உள்ளது என்றார் சரோவைப் பார்த்து. மெஜந்தா நிறத்தில் கறுப்பு பார்டர் போட்ட பட்டுப் புடவை கட்டியிருந்தாள் சரோ. புடவை நிஜமாகவே நன்றாக இருந்தது என்பதும், எதையும் பாராட்டுகிற அமெரிக்கர்களின் வழக்கமும் மட்டுமே நடந்த சம்பவத்துக்குக் காரணம்.

    ஆனால், மேலதிகாரி போய் வெகுநேரம் ஆன பின்பும் சரோ சகஜமாகவில்லை. பேச்சிலும் கலகலப்பு இல்லை. என்ன ஆச்சு சரோ..? என்று துளைத்த பிறகு சொன்னாள்.

    உன் பாஸ் பாராட்டினப்போ ஒரு தேங்க்ஸ்’கூட சொல்ல முடியல என்னால…

    ஆமா, கவனிச்சேன். ‘தேங்க்ஸ் சொல்லியிருக்கலாம்ல…

    இல்ல… யாரும் பாராட்டியே பழக்கமில்லையா… அதான் என்ன சொல்றதுனே தெரியல… என்றாள் சரோ.

    அன்று இரவு எனக்குத் தூக்கம் வர ரொம்ப நேரம் ஆனது. ‘யாரும் பாராட்டியே பழக்கமில்லையா…’ என்று சொன்னது ‘ஒரு’ சரோதானா..? அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஆயிரம் சரோக்கள், கமலாக்கள், ஃபாத்திமாக்கள், ஸ்டெல்லாக்கள்… நம்முடன் கலந்திருக்கிறார்கள்.

    அங்கீகாரத்துக்கான ஏக்கம் ஆண்களின் குரோமோசோம்களை விட, பெண்களின் குரோமோசோம்களில் அதிகம் என்று விஞ்ஞானம் சொல்கிறதாம். உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

    ஏங்க… புதுப் புடவை எப்படியிருக்கு?

    புதுசா… சூப்பர்!

    கணவர் கண்களால் புடவையைப் பார்த்துச் சொன்னாரா, இல்லை இந்த உரையாடலை இதைவிடச் சீக்கிரம் முடிக்க வேறு வழியில்லை என்று சொன்னாரா என்பது… கடவுளுக்கே வெளிச்சம்!

    இன்னிக்கு ரசத்துல ஒரு சேஞ்ச் இருக்கே… தெரியலையா?

    அப்படியா… எனக்கு எப்பவும் போலத்தான் இருந்தது…

    தோழி சொன்ன புதுவித ரெசிபிப்படி பருப்பு வேகப் போடும்போதே தக்காளியையும் பூண்டையும் கூட வேக வைத்து, மொத்தமாக மசித்து, புளித் தண்ணீரில் கொதிக்க வைத்து, சீரகம், மிளகுப்பொடி போட்டு, கடுகு தாளித்து… ‘எப்பவும் போல இருந்தது’க்காகத்தானா இத்தனை பாடு..!

    எப்போதோ நேரம் கிடைத்து பியூட்டி பார்லரில் போய் செய்து கொண்ட கூந்தல் சீரமைப்பு, ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1