Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanampadi
Vaanampadi
Vaanampadi
Ebook172 pages1 hour

Vaanampadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003367
Vaanampadi

Read more from Kulashekar T

Related to Vaanampadi

Related ebooks

Reviews for Vaanampadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanampadi - Kulashekar T

    http://www.pustaka.co.in

    வானம்பாடி

    Vaanampadi

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு ஃபீனிக்ஸ் பறவையின் குரல்

    2. வானம்பாடி

    3. பூக்கள் மணப்பதற்கே...

    4.மனதில் ஒரு பிரார்த்தனை

    5.சொல்லத் தெரியாத தவிப்பு

    6. வானதேவதை

    7. நேசத்தின் நிரூபணம்

    8. இடி

    9. பறக்கும் மீன்

    10. ஆழ்கடலில் ஒரு அலை

    11. அந்த நொடியில்...

    12. பிரேமையே பிரபஞ்சமாய்

    13. காணாமல் போன ஆடு

    1. ஒரு ஃபீனிக்ஸ் பறவையின் குரல்

    எழுத்தாளர்கள் ரொம்பரொம்பக் கையாலாகாதவர்கள் அதனால்தான் தங்களின் தாகத்தை எழுதித்தணிக்கிறார்கள் என்பது ஒரு வகையில் உண்மைதான் அதே சமயம் கையாலாகாத நிலையிலிருந்த மார்க் அந்தோனியின் கலைநேர்த்தியான ஒரே பேச்சு ஜூலியஸ் சீசருக்கு எதிரான அரசையே கவிழ்த்திருக்கிறது. எழுத்தை வைத்துக்கொண்டு மல்யுத்தமெல்லாம் போட முடியாதுதான். ஆனாலும் அது ஒரு கூர்மையான ஆயுதம். உள் முகத் தூண்டுதல்.

    வயது, ஞாபகம் வைத்துக்கொள்ளமுடியாத வயது. அப்பாவின் அப்பா சொன்ன விக்கிரமாதித்தன் கதைகள் லேசுலேசாய் நினைவுகளில் மின்னல் அடிக்கின்றன. என்னுள் விழுந்த முதல் விதை அது.

    பள்ளிவிடுமுறைச் சமயங்களில் மாமா பெண்ணிடம் சுண்டைக்காய் உருண்டு உருண்டு திருடனைச் சாமர்த்தியமாய்ப் பிடித்த கதை கேட்டிருக்கிறேன். தண்ணீர்க் குடம்பட்டு நசுங்கிப்போகிறகதைதான் அதில் ரொம்ப உருக்கம்.

    ட்ராயிங்மாஸ்டர் குருசாமி வாத்தியார் ஜிம்கார்பட்டின் வீரதீரக்கதைகளைச் சொன்னபோதெல்லாம் காட்டுலாகா அதிகாரியாகவே ஆகியிருக்கிறேன். அவர் சுமார் ஒரு வருடம் ஒரு கதையைச் சொல்வார். வகுப்பிற்கு இரண்டு வரிக்குமேல் நகராது. எனினும் வகுப்பு முடிந்து விட்டதேயேன வருத்தப்படவைத்த ஒரே ஆசிரியர். கதை சொல்கிறமுறையில் மனுசன் எக்கச்சக்கமாய் வித்தைகள் காட்டுவார். ஜிம்கார்பட் புலிக்குப் பின்னாடி சப்தமின்றிப்போய் நின்றார் என்கிறபோது கிசுகிசுப்பான குரலில் புலிக்குக் கேட்டுவிடாதபடி சொல்வார்.

    ரத்னா அத்தை சொன்ன கதைகளில் ஃபேன்டஸி இருக்கும். மந்திரவாதி, ஏழுகடல் தாண்டி ஒருகுகை, அங்கேயுள்ள கிளியின் இறகில் அவன் உயிர், உரசினால் கேட்டதைக் கொடுக்கும் பதுமைகள், குள்ளர்கள் எல்லாம் வந்து அசத்தியிருக்கிறார்கள்.

    கதையின் கதையான சிநேகிதங்கள். அழவே அறிந்திராத என்னைச் சொடுக்குகிற பொழுதில் அழவைத்தவர்கள். மகிழ்ச்சியினாலோ, துக்கத்தினாலோ என்பதல்ல பிரதானம். அந்தக் கலக்கம்யாவுமே அர்த்தமுள்ளவை. கவிஞர் மீரா அவர்கள் என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘ஒரு சிநேகிதிக்காக’ முன்னுரையில் குலசேகருக்கு ஒரு சிநேகிதியல்ல.. ஏறத்தாழ ஒன்பது சிநேகிதிகள் என்று அந்தத் தொகுப்பிலுள்ள கதாபாத்திங்களைக் குறிப்பிட்டிருந்தார். முதல் சிநேகம்மட்டுமாவது இங்கே சொல்லலாமென நினைக்கிறேன்.

    பள்ளித்தோழி இந்துமதி. எனக்கு குட்மார்னிங் சொல்லித்தந்தவள். சிநேகத்தின் மீதான ரசனையை எத்தனையோ ரூபங்களில் உணர்த்தியவள். ஆங்கில இலக்க்கணத்தை, புன்னகையின் வலிமையை இன்னும் எவ்வளவோ கற்றுத் தந்திருக்கிறாள். இரவில் டியூசன் முடிந்து போகும் போது ‘குட்நைட்’ சொல்லி கை குலுக்கி விட்டுச் செல்ல வேண்டுமென்பது இந்துவின் இன்ஸ்ட்ரக்ஷன். மறந்துவிட்டால்... ம். அந்தக் கோபமெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது. இந்து இப்போது உயிரோடு இல்லையாம். நான் அப்படி நினைக்கவில்லை.

    குணசீலன், அன்புச் செழியன் சகா; பள்ளியில் கல்லூரியில் என தொடர்ச்சியாய் ஓட்டி வளர்ந்தவர்கள். அப்போதெல்லாம் கிணற்றுக்குப்போய்க் குளித்து விட்டு பசியோடு திரும்பி வருகிற வழியில், உறவினர் வீட்டில் பதார்த்தங்கள் சாப்பிட்ட கதைகளை ஃபிளாஷ் பேக்கிற்குப் போய் நான் சொல்ல ஆரம்பித்தால் குளிக்கவந்த நண்பர்கள் எல்லோருக்கும் வந்து சேருவதற்குள் பசி தீர்ந்து போய்விடும்.

    ஸ்பிக் நிறுவனத்தில் சேர்ந்தபிறகு பழக்கமானவன் ரவி. என் உணர்வுகளோடு அடிக்கடி உறவாடுபவன். அவனது காதுகள் எனது கதா-காலட்சேபத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவை. கிட்டத்தட்ட எல்லாக்கதைகளுமே அவனிடம் சொல்லி அப்ரூவலான பிறகுதான் அரங்கேறும். எழுதத்தொடங்கி ஏழு ஆண்டுகள்தான் ஆகிறதென்றாலும், கடந்த பதினான்கு ஆண்டுகளாகவே என்னிடம் கதைகேட்டுக் கொண்டிருப்பவன்.

    ராஜசுந்தரராஜன், தனுஷ்கோடிராமசாமி, சுப்ரமணிய பாரதி, சுப புன்னைவனராசன், பாஸ்கர், பிரபாகரன் போன்ற எழுத்தாள நண்பர்கள் கவசமாயிருந்து ஆற்றல் வளர்க்கும் விமர்சகர்கள், புத்தகம் போடலாம் என்கிற எண்ணத்தின் சிருஷ்டிகர்ததா நண்பர் நரேந்திரன். அவர் பெயர் கின்னஸில் பொறிக்கக்கடவுவதாக.

    1987 வாக்கில் எனக்கு தலைப்பிரசவம் பார்த்தது ஆனந்தவிகடன். பொக்கைவாய் மலர்த்திப்பிறந்த குழந்தை ‘நெஞ்சு’. விடுதி வாழ்க்கையின் தொடக்கப் பருவத்தில் எனக்கும், ரூம்மேட்டிற்குமிடையே நிகழ்ந்த விநோதமானவொரு ஊடலை மையம் கொண்டு எழுதப்பட்ட கதை, 1989ல் தினமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் ‘நினைவில் நின்றவை’ சிறுகதைக்கு மூன்றாவது பரிசு. 1990ல் ‘பெண்கோலம்’ கதைக்கு முதல்பரிசு, சின்னச்சின்ன அடையாளங்கள். நம்பிக்கைக்குள் சுரப்பித்த ஊற்றுகள்.

    ஜனனக்குகைக்குள்ளிருந்த பொழுதே வண்ணத்துப் பூச்சியின் மெல்ல்ல்லிய சிறகுகள் மனதில். திசைதேடி உச்சுபறக்க இப்போது ஆயத்தம். எத்தனை முறை றெக்கை வெட்டப்பட்டு கூண்டுக்குள் கட்டாயப்பாடம்? கேட்கிறதாயென்ன?? வெட்டவெட்ட முண்டிக்கொண்டு புதிதுபுதிதாய்...

    வாழ்நிலைக்கான தேடலே இலக்கியம் மீதான எனது அருகதை. முரண்பாடுகளோடு இயற்கையுணர்வுகள் உராய்கிறபொழுதெல்லாம் என்னோடு எனக்கு யுத்தந்தான், சிநேகங்களின் துள்ளலில் வானத்தின் சிரசு, கையாலாகாது போகும்போது பாதாளம். ரத்தம், சதை. நரம்பு ததும்பும் கனாக்களின்போது உயரே... மேலும் உயரே. வேதனையில் விழிக்குத் துலங்காத கண்ணீர், அழுத்தங்களில் அக்னிக்குஞ்சு. வீழ்த்தலின்போது இன்னுமின்னும் வேகத்தோடு நிமிர்வு. உழைப்பின் போது அலைகள். பேச்சில் நிர்வாணம். ரசிப்பில் மலரில் வண்டு. வழுக்கும்போது மேலும் கருணை. வாழ்நிலைகளில் வானம்பாடிப்பறவைகள். இவைகள் தூரில்லாத கனாக்களின் கைவசப்பட்டகருவின் ஜனனப்பீடங்கள்.

    செத்துப்போயும் எப்படியிருக்கிறோம்?? வாழாதவர்கள், வாழவிடப் படாதவர்கள், அரித்துப் போனவர்கள்.. மரத்துப்போனவர்கள் எத்தனை...கள்...கள். தேங்கிப் போன குட்டை நுரைத்து, நொதித்து, பாக்டீரியாக்களின் போஜனமாகிக்கொண்டிருக்கிற ஜடமாய் இங்கே கலாச்சக்கை. அந்த பாக்டீரியாக்களின் ஜீரணத்தில் விஷ ஏப்பங்களாய் வெடிக்கும் நச்சுக்கலைகள். அதன் சீதனம் பச்சை மொழுகின முழி, செத்துக்கொண்டிருக்கும் சிசு மனம்.

    நாசிக் தாள்களின் மதிப்பீடு பெற்றுத்தந்த உறவுப்பவனி அங்கீகரிக்கப்பட்ட சோரகலப்படம். கோட்டுபோர்த்திய தொழுநோய், பாதாளம் ஆகாயம் என்று நாசிக்தாள்கள் முனுப்பாய்ச்சல். அதன் சொத்தைப் பற்களுக்கடியில் அகிலம் அலைக்கழிப்பு. முன்னெப்பின்னே .பார்த்தேயிராத மனங்கள். தாள்கத்தைகளால் மனசின் பார்வை பொத்தி, ஒவ்வுமோ ஒவ்வாதோ என்கிற கேள்வியின் கழுத்தில் ஏறிக்குதித்து இருட்டறையில் கண்ணாமூச்சி. அசத்திற்கு மட்டுமே கேட்கும் செவிட்டு இரைச்சல்.

    காதல்... நட்பின் இன்னொரு பரிணாமம். மெய்யான காதல் என்பது ஒரு உயர்ந்த நாகரிகத்திற்கான வழிமுறை. சயநலபாவத்திலிருந்து விட்டுக்கொடுக்கிற ஆசான். சாதிமதவெறி, வரதட்சணையாவற்றையும் வழியனுப்பி வைக்கவல்ல மகாசக்தி, காமத்திற்கு நாகரிகம் கற்றுத் தரும் வேகம். வக்கிரம் வற்றிப்போன வீரிய ஒட்டுச் சோக்கை, மகிழ்வைப் பகிர்ந்து ரெட்டிப்பாக்குவது. துயரத்தைப் பகிர்ந்து இல்லாமலாக்குவது. மனிதம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கான உலகச்சிந்தனை.

    ஜீவிதம் தொடங்கிய நாளிலிருந்து இதற்காகத் தான் எத்தனை கதைகள்? இளவரசி பட்டம் துறந்த கதை, உலக அதிசயம் உருவாக்கிய கதை. மதத்தை வென்ற கதை... உயிர் காவு கொடுத்து ‘இதற்கு’ உயிரளித்த கதை.. கட்டியம் கூறும் அழியா சாசனங்கள். இவை அனுதாபத்தினால் உதிப்பதல்ல.. நிர்ப்பந்தத்தினால் ஜனிப்பதுமல்ல.. கட்டாயத்தினால் கனிவதுமல்ல.. கெஞ்சிப்பெறுகிற யாசகமுமல்ல... எதிர்பார்க்க வைக்கும் வியாபார ஒப்பந்தமுமல்ல... தென்றலின் சிலிர்ப்பில் ஒளியின் துடிப்பில் மழைத்துளியின் முத்தத்தில் உயிர்மலரும் மொட்டு.

    பரிசுத்தமான பிரியங்களில் தோய்த்தெடுத்த சஞ்சீவினி. மனசின் பதினாறுவகை வேர்கள் இயைந்து உருவான மாமருந்து. மனசில் குமைச்சலா, புளித்த ஏக்கமா, விரட்டியடிக்கும் விரக்தியா, விட்டுவிட்டு கபகபவென எரிக்கும் நம்பிக்கையின்மையா, உணர்வுகளில் பூகம்பமா, வெறிபிடித்தாட்டும் பேதங்களால் ரத்தப்போக்கா, சுயநல சுற்றுச்சுவரின் சிறையடைப்பா, நொடியில் விடுபட சர்வலோக நிவாரணி. இதோ.. விலை கிடையாது. விலைமதிப்பில்லாததும், விற்பனைக்கு ஆட்படுத்த முடியாததுமான சமூக உறவின் பிணிதீர்க்கும் மந்திரம்.

    எக்ஸ்வொய் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று இயைந்து நிற்பதே. ஆண்பெண் மீதும், பெண் ஆண்மீதும் சிநேகம் கொள்கிற போது நம்பிக்கை. நம்பிக்கைகொள்கிற போது எழுவது பொறுப்புணர்ச்சி; அன்பின் பரிமாணத்தில் புத்தெழுச்சி.

    ஆண்பெண் சிநேகம் குறித்த ஆரோக்யமான எண்ணங்கள் அனுமதிக்கப்படா விட்டால் ரெண்டு பக்கமும் மனசுகள் ஊனப்பட்டுச் சூம்பிப்போகும். கொல்லைப்புறம் தலைவாசலாய்ப் புழங்கும். தலையெங்கும் சதா காமம்குறித்த சிந்தனைகள் கனத்துப்போகும். அதீத தடைகள் தடைகளை மீறுவது குறித்த சிந்தனையாய் நிறம்மாறும்.

    எக்ஸ்களை ஒய்களிடமிருந்து நிர்த்தாட்சண்யமின்றி பிய்த்தெறிவதென்பது இயற்கைக்குக்காவு. சுற்றுப்புறச் சூழல் நமக்கு ‘உள்ளும்’ உண்டு. எக்சும்வொய்யும் தூரம் நிறுத்த நிறுத்த மோதிக்கொள்ளும் துடிப்பு கோரமாய் அதிகரிக்கு மென்கிறது பௌதீகம்.

    தாமரையே.. யார் உன்னை இப்படித் தலைகுனிந்து நடமாடவைத்தது? தலை குனியுமளவு நீ என்ன குறைந்துபோனாய்? ‘முதுகில் அழுத்தும் மதமாயத்தின் மரபுப் பாரத்தை நொறுக்கித்தள்ளு. அவை உன்மேல் வஞ்சனையாய் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் அவ நம்பிக்கைப்பொதி.

    தூரத்திலிருந்தே வொய்களில் அலை எழுப்பிப்பது மட்டுமாய் ஆக்கி வைத்திருப்பதுங்கூ.ட பழமையின் சதியே. தோண்டிப்பார்த்தால் கிடைக்கும் மண்டை யோடுகள் புலம்பும்

    Enjoying the preview?
    Page 1 of 1