Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parvaiyile Sevaganai..!
Parvaiyile Sevaganai..!
Parvaiyile Sevaganai..!
Ebook275 pages1 hour

Parvaiyile Sevaganai..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803374
Parvaiyile Sevaganai..!

Read more from Maharishi

Related to Parvaiyile Sevaganai..!

Related ebooks

Reviews for Parvaiyile Sevaganai..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parvaiyile Sevaganai..! - Maharishi

    http://www.pustaka.co.in

    பார்வையிலே சேவகனாய்..!

    Parvaiyile Sevaganai..!

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உங்களுடன் சில நிமிஷங்கள்

    1.இருள்

    2. எவன்எங்கும் பற்றிலனாய்

    3. ஒருபாலம்

    4. அந்தரங்கம் ஆழமானது!

    5. நமக்குள் நாம்

    6. ஒலிபெருக்கிகள்ஓய்ந்து விட்டன

    7. ஒரேநீதி

    8.ஒருபகுதி

    9. பார்வையிலே சேவகனாய்

    10. ஜூவாலை

    11. கதவு திறந்திருந்தது

    12. இரும்புமனம்

    13. எனவே இந்தக் காயம்...

    14. அது ஒரு தொடர் கதை...

    15. பிரமை

    உங்களுடன் சில நிமிஷங்கள்

    இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள எல்லாச் சிறுகதைகளும் கல்கி வார இதழ் மற்றும் கல்கி தீபாவளி மலர் ஆகியவைகளில் வெளியானவை. கிட்டத் தட்ட ஒரு எட்டு ஒன்பது முழுமையான நாவல்களை எழுதி அவை மீனாக்ஷி புத்தக நிலையம் மதுரை, தமிழ் புத்தகாலயம் சென்னை, போன்ற பிரபலமான பதிப்பகங்கள் மூலமாக வெளிவந்த பின்புதான் நான் பிரபலமான பத்திரிகைகள் பக்கம் வர நேர்ந்தது. 1962களில் நாரதர் ஸ்ரீனிவாசராவ் அவர்கள் நடத்திவந்த மாதமிருமுறை இதழான 'நாரதர்' என்ற பத்திரிகையில் சில சிறுகதைகள் வந்த போதிலும் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள் தொடங்கிய நல்ல இலக்கிய மாத இதழான தீபம் இதழில் எனது சிறுகதைகள் தொடர்ந்து பிரசுரமாக ஆரம்பித்தன. சிறுகதைகளின் பேரில் ஒரு காலகட்டம் வரையிலேயே ஈடுபாடு கொண்டிருந்த எனக்குப் பின்பு நாவல்களின் பேரில் ஆர்வம் திரும்பிவிட்டது.

    நாரதர், பிறகு தீபம், கல்கி, போன்ற இதழ்களில் நான் எழுதிய சிறுகதைகள் பெயரளவிற்கு அவை சிறுகதைகள் என்றாலும்கூட அதன் அடர்த்தியான உள்ளடக்கத்தால் அவை ஒவ்வொன்றும் ஒரு குறுநாவல்களே என்பது எனக்கும் தெரியும். பின்பு அதே சிறுகதைகளை குறு நாவல்களாகவும் நாவல்களாகவும் கூட நான் எழுதியிருக்கிறேன். அவை இங்கே முக்கியமில்லை. சிறுகதைக்கு வருவோம்.

    இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு நோக்கிலே வெவ்வேறானவை. சில சிறுகதைகள் அதன் எல்லைகளை உடைத்துக்கொண்டு ஓடியுமிருக்கின்றன. பொதுவாக ஒரு படைப்புக்கு இவ்வளவுதான் எல்லையென்று நான் எப்பொழுதுமே நிர்ணயித்துக் கொண்டதேயில்லை. அதனதன் வீச்சில் அவை விரிந்தும் சுருங்கியும் அமையவேண்டும். படைப்பாளிக்கு அவன் படைப்புக்கு எல்லையென்பதை அவன் நிர்ணயித்துக் கொள்வதாகவே இருக்கவேண்டும்.

    தற்காலச் சிறுகதை இலக்கியம் எட்கார் ஆலன் போவுடன் தொடங்குகிறது என்று மேலை நாட்டு விமர்சகர்கள் கூறுவதுண்டு. ஆனால் அதற்கு முன்பிருந்தே அதாவது ஆலன் போவுக்கு முன்பிருந்தே நம்மிடம் இச் சிறுகதையின் வடிவம் இருந்தது என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.

    நமது இதிகாச குட்டிக் கதைகள். பஞ்ச தந்திரக் கதைகள். ஈசாப் குட்டிக் கதைகள். கர்ணபரம்பரையாக நம் சிறார்களுக்கு நமதுபாட்டிகள் சொன்ன கதை.

    இதுதான் சிறுகதை பரிணாம வளர்ச்சி. நாவலாகட்டும், சிறுகதையாகட்டும் இதுதான் எல்லை, இதுதான் வடிவம் என்று நிச்சயமாக சொல்லப்படாமலே ஒவ்வொருவருடைய பாணியையும் நாம் பல்வேறு காலகட்டங்களில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கிறோமே அந்த அங்கீகார பெருந்தன்மைதான் நமது வளர்ச்சியாக விலாசப்பட்டிருக்கிறது.

    சிறுகதையின் வளர்ச்சி அதன் போக்கில் காலத்திற்குக் காலம் மாறுபட்டு செழித்து, சுருங்கி, விரிந்து, வளர்ந்து வந்திருக்கிறது.

    சிறுகதையைப்பற்றி நினைவு கூறும்போது நாம் பலசிற்பிகளை நினைவு கூர்ந்தே ஆகவேண்டும். அடித்தள மில்லாமல் எதுவுமேயில்லை. மெளனி, புதுமைப்பித்தன், நா. பிச்சமூர்த்தி, கு பா. ராஜகோபால், த. நா. குமாரசாமி, ஷண்முகசுந்தரம், கு. அழகிரிசாமி - இவர்களுடன் இன்று நம்மிடையே இருக்கும் லா. ச. ராமாமிருதம், சி.சு செல்லப்பா, ஆர். சூடாமணி. இப்படி இன்னும் பலரை நாம் நினைவில் கொள்ள வேண்டியது சமர்ப்பண சம்பிரதாயமாகும்.

    இவர்களுக்கு முன்பும், இவர்களுடனும் இவர்களுக்குப் பின்பும் பல தரமான சிறுகதைகளை பலர் அவ்வப்பொழுது தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை, ஒரு சுப்பிரமணிய ராஜுவும், ஒரு ஜெயகாந்தனும் இப்படி இன்னும் சிலரைச் சேர்க்கலாம்.

    சிறுகதையின் நுணுக்கங்கள் இவர்களால் கூர்மை அடைந்திருக்கிறது.

    மையக் கருவும் அதை எடுத்துச் சொல்ல இவர்கள் கையாண்ட உத்தியும் மொழியின் லாவகமும் அற்புதமானவை.

    சிறுகதை என்பது ஒரு படைப்பாளி தன் திறமையைக் காட்ட சரியான களமாக அமைய முடியும். நாவலுக்கு சிறு கதையைக் கையாளத் தேவைப்படுகிற திறமை தேவைப்படாது. நீண்ட நெடும்போக்கில் ஒரு பரிபூரணமான வாழ்க்கையோட்டத்தைப் பார்க்கிறது. பார்த்து எழுதுகிற சாமர்த்தியமும் சகிப்புத் தன்மையும் இருந்தால் போதும். ஆனால் சிறுகதையிடம் இந்த ஜம்பம் சாயாது. அறுந்தபல்லிவால் போல் (இது என் கருத்தல்ல. எங்கோ படித்த ஞாபகம்) நான்கைந்து பக்கங்களில் ஓர் உயிர்த் துடிப்பைக் காட்டி விட்டு நிறுத்திக் கொள்வது சிறுகதை. நம்மிடையே ஏராளமான சிறுகதை எழுத்தாளர்கள் இருந்தும் இவ்வித சாதனையாளர்கள் மிகச் சொற்பமே. ஒரு பத்து நிமிஷம் அல்லது இருபது நிமிஷத்தில் அப்படியே வாசகனுடைய மனதில் வியாபித்து விடவேண்டும். பாதித்தும் விட வேண்டும். இது தான் ஒரு நல்ல சிறுகதையின் குணம் என்று கூடச் சொல்லலாம் போலத் தோன்றுகிறது.

    கதைக்கான கருவைத் தேர்வு செய்வதில் படைப்பாளியின் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. எந்தப் படைப்பாளி இதில் தெளிவாக இருக்கிறானோ அதுவேஅவன் வெற்றியாகவும் மாறிவிடுகிறது.

    கரு நுட்பமாகவும் இருக்கலாம், பளிச்சென வெளியே தெரிகிற மாதிரியும் இருக்கலாம். மூடுமந்திரமாக இருக்க வேண்டுமென்பதும் கட்டாயமில்லை.

    பளிச்சென எல்லோருக்கும் புரிகிற மாதிரி ஒரு கருப்பொருளை எடுத்துக்கொண்டு எழுதுவது ஒரு வகையில் சிறப்பானதே என்கிறார் REALITIES OF FICTION என்ற நூலின் ஆசிரியர் விமர்சகர் நேன்சி ஹேல்.

    எனக்கு இக்கருத்தில் முழுமையாக உடன்பாடு உண்டு. எனது எழுத்தின் பாணிகூட இதுதான். இதில் பூடகத்திற்கு இடமில்லை. வரிகளுக்கிடையே இருப்பதைச் சொல்லித்தர மூன்றாவது மனிதன் அதாவது எழுத்தாளன் வாசகன் ஆகியோருக்கு நடுவே ஒரு விமர்சகன் தேவைப்பட மாட்டான். எனவே இந்தப் பாணி பலரைப் போலவே எனக்கும் கைவந்த கலையாகி விட்டது.

    நான் இயல்பில் கொஞ்சமல்ல அதிகமாகவே 'சமூகம் சார்ந்தவன்' அதன் ஈடுபாட்டிலிருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. எனவேதான் எனது சிறுகதைகள் எல்லாமே ஓரளவு வெவ்வேறு கோணங்களில் ஒரு சமூகப் பாதிப்பின் வெளிப்பாடாகவும் அமைந்திருக்கிறது...

    அன்புடன்

    மகரிஷி

    15, ராஜா எக்ஸ்டன்ஷன்,

    சேலம் 636007.

    1. இருள்

    இந்தப் பூவைக் கொஞ்சம் தலையில் வச்சு விடுங்களேன் - நாற்காலியில் உட்கார்ந்திருந்த கணவன் சாரங்கனிடம் அந்த மல்லிகைச் சரத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பிய நிலையில் மண்டியிட்டு அமர்ந்தாள் வனஜா.

    வெறுப்புத் தோய்ந்த விழிகளிடையே மனைவியின் தலையைப் பார்த்தான். பிறகு சுவாதீனமுள்ள வலது கையின் சுண்டுவிரலால் விரல் அளவு மயிரிழையை இழுத்து அதனிடையே அவள் கொடுத்த பூச்சரத்தைச் சூட்டினான் சாரங்கன்.

    கீழ்த் தாடையில் கையைக் கொடுத்துத் திருப்பி ஆசை தீர அந்த முகத்தைச் சில நிமிஷங்கள் பார்த்துப் பூரித்த நாட்களும் உண்டு. அது இப்பொழுது அல்ல. முன்பு அந்தப் பெருமையின் பூரிப்பு இன்று இருவரிடமும் இல்லை அந்த நேசக்கரம் இன்று விரல் அளவு மயிரிழையைத்,தொடுவதோடு நின்று விட்டது!

    ஆபீசுக்குக் கிளம்பியாச்சா?

    ஆமாம்.

    இவ்வளவு சீக்கிரமா?

    மானேஜர் இன்னிக்குச் சாயங்காலம் வெளியூர் போகிறார். அதற்குள். அவருக்குத் தேவையான 'பைல்'களை யெல்லாம் தயார் செய்து கொடுத்தாக வேண்டும்.

    பற்றுதல் இல்லாத கேள்வி, பதிலும் ஏறத்தாழ அதே நிலையில் இருந்தது.

    உங்களுக்கு மத்தியானச் சாப்பாடெல்லாம் அதோ வந் கூடத்தில் எடுத்து வச்சுட்டேன். தண்ணீர், தட்டு, மோர்...எல்லாம் இருக்கு. வெந்நீர் எடுத்து விளாவி வச்சுட்டேன். டவல், சோப்பெல்லாம் இருக்கு. நீங்கள் எதையும் தோய்க்கவேண்டாம். குளித்துவிட்டுக் குளியலறையிலேயே போட்டு விடுங்கள். சாயங்காலம் நான் வந்து தோய்த்து விடுகிறேன். இன்னிக்குக் கொஞ்சம் அவசரமாக ஆபீஸ் போக வேண்டியிருக்கு...

    பூவைத் தலையில் வைத்துக் கொண்ட வனஜா எழுந்து சுவர் ஓரமாக முன் வராந்தாவில் கிடந்த செருப்பைக் காலில் மாட்டிக் கொண்டே பேசினாள்.

    அவள் பேசுவதை அவன்தான் கேட்டாக வேண்டும். காதில்படாதவன் போல் இருக்க முடியாது. ஏனென்றால், சிறியதான அந்தத் தனி வீட்டில் அவள் பேசுவதைக் கேட்க வேறு யாரும் இல்லை. மனத்தில் இருக்கின்ற வெறுப்புக்காக அவள் வார்த்தைகளை உதாசீனப்படுத்த அவனளவில் அவன் திராணியற்றவன்.

    என்றுமே எதற்குமே அவனிடம் இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் பதில் வராது. இது அவளுக்கும் தெரியும். தூர நின்றோ,அல்லது நடுக் கூடத்தில் அமர்ந்திருக்கும் அவனுக்குப் பின்புறமாக நின்றோ அவனைச் சற்று நேரம் கண்கலங்கப் பார்ப்பாள்.

    நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்தில் இப்படி மறைவாக அவனுக்குள்ளே கண்ணீர் சிந்தக் கூடியதொரு நிரந்தரமான இருள் அவள் வாழ்வில் வந்தாகி விட்டது. இனி அந்த இருளில் அவள் ஒருத்தியாக மட்டுமே நடந்தாக வேண்டும். இந்த ஐந்தாண்டுகளில் வராத துணையா இனிமேல் வரப்போகிறது? இந்த ஐந்தாண்டுகளில் கூடவந்தவர்களைவிட விட்டுச் சென்றவர்கள்தான் அதிகம்.ஆதரவு காட்டியவர்களைக் காணோம். அனுதாபத்தோடுவிடை பெற்ற வழிப்போக்கர்கள்தான் ஏராளம்.

    ஒதுக்குப்புறமான வீடு. கிணறு. பேச்சுத் துணைக்குக்கூட அருகில் நெருங்கி வர அஞ்சி ஓடுகிற அந்நியோந்நியம்! இந்த ஐந்தாண்டுகளில் எல்லாம் அவளுக்குப்புளித்து விட்டன; வெறுத்தும் விட்டன. வெறுத்தது இவைமட்டும்தானா? வாழ்வும் கூடத்தான்.

    தலையில் கணவன் வைத்துவிட்ட பூவைத் தொட்டுச் சரி செய்து கொண்டே வீட்டை விட்டு அலுவலகம் புறப்பட்டாள் வனஜா.

    அலுவலகத்தில் அவள் நினைவெல்லாம் வீட்டைச் சுற்றியே இருந்தது. எப்பொழுதும் உள்ளதுதான் இது.

    வாழ்க்கையில் வெறுப்பையும் வேதனையையும் அதிகரிக்கும் கணவன் மேல் இப்படியொரு பாசத்தின் தவிப்பு.

    மத்தியானம் சரியாகச் சாப்பிட்டீர்களா? -அலுவலகத்திலிருந்து வந்துவிட்ட வனஜா அறைக் கதவைச்சாத்திக் கொண்டு உடை மாற்றிய வண்ணம் உள்ளிருந்தபடியே கேட்டாள்.

    படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைத் தாழ்த்தி, தன் கவனத்தை வெறுப்புடன் அவள் மறைந்து கொண்டிருந்த அறைப்பக்கம் திரும்பினான்.

    என்னவோ சாப்பிட்டேன் என்றான். கண்களில் உள்ள பாவத்தைப் போலவே பதிலிலும் வெறுப்பு.

    சமையல் நன்றாக இருந்ததா? காலையில் ஆபீஸ் போகிற அவசரம். பதிலுக்குக் காத்திராமல் பரபர வென்று பின்கட்டுக்குப் போய்விட்டாள்.

    ஆபீசுக்குப் போகிற அவசரமா உனக்கு? ஆபீஸுக்குப் போகிற திமிர் என்று எண்ணிக் கொண்டே கையிலிருந்த புத்தகத்தைக் கீழே போட்டான் சாரங்கன்.

    இரவு மணி பத்து இருக்கும்.

    வனஜா! என்று அழைத்துக் கொண்டு பகலில் இல்லாத குழைவோடு அருகில் வந்து நின்றான் சாரங்கன்.

    எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் உடல்கள் தூர விலகி, ஒரே கூட்டினுள் இருந்து வாழ்ந்த போதிலும் இசைவுகளும், எண்ணங்களோடு இணைந்த மனங்களும் துருவங்களாக விலகிப் போய்க்கூட அநேக ஆண்டுகள் ஆகிவிட்டன.

    தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். நான் என்னைத் தத்தம் செய்யத் தயாராக இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் வாழ்வும் தாழ்வும் உங்களையே சார்ந்து நிற்கின்றன. ஆனால் இந்த நம் 'உறவு' நீடிப்பதன் முடிவைத்தான் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

    எப்பொழுதும் புலம்புகிற உன் பழைய பிரலாபம் தான் - சாரங்கன் ஆத்திரப்பட்டான்.

    ஆத்திரப்படாதீர்கள். பழக்கம் என்பதைச் சுலபத்தில் அறுத்துக் கொள்ள முடியும் என்று நான் சொல்ல வில்லை. ஆனால் சிரமப்பட்டாலும் சில பழக்கங்களைத் துண்டித்துக் கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட பின் சபலத்துக்கு அடிமைப்பட்டுத் தவிப்பதை நான் வெறுக்கிறேன். இந்த ஜன்மத்து ஊழ்வினை நம்முடனேயே மாய்ந்து விடட்டும். நம் வம்சம் ஒன்று ஏற்பட்டு அதில் இது விட்ட குறையாகத் தொடர வேண்டாம்.

    - வனஜா தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போய் உட்பக்கம் தாழ் போட்டுக் கொண்டு விட்டாள்.

    வழக்கமாகக் கணவன் கையால் வைத்துக் கொள்ள வேண்டிய பூச்சரத்தை வைத்துக் கொண்டு எழுந்தாள் வனஜா.

    நான் போய் வரட்டுமா?

    சாரங்கன் பதிலொன்றும் பேசவில்லை. இரவு நிகழ்ச்சியின் சாயல் அவன் மனத்தை விட்டு அகலாத நேரம் அது.

    ஏன் இந்தப் போலி அன்பெல்லாம் என்னிடம் காட்டுகிறாய்? இப்படி என்னை வதைப்பதில் உனக்கொரு தனி ஆனந்தம். இல்லையா? சாரங்கன் ஏளனமாக நகைத்துக்கொண்டே கேட்டான்.

    போலி அன்பா? என்று கேட்ட வனஜா குமுறும் துயரத்தோடு அழுதுவிட்டாள்.நான் காட்டுவது போலி அன்பா? எங்கே என்னைப் பார்த்துப் பேசுங்கள். அன்புக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? அன்பில் போலிக்கும் நிஜத்துக்கும் இருக்கிற வேறுபாடு எனக்குத் தெரியாது. ஆனால் உண்மையான அன்பென்றால் என்ன என்பது எனக்குத் தெரியும் என்றவள் அழுது கொண்டே தான் பேசினாள். இடையிடையே உள்நெஞ்சத்துக் குமுறல் சிரிப்பாக வெளிப்பட்டது.

    சரி, சரி. உங்களுடன் தர்க்கிக்க எனக்கு அவகாசமில்லை என்று சொன்னவள் கண்ணீரிடையே கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே மறுமொழி பேசாமல் புறப்பட்டு விட்டாள்.

    இப்படி ஏற்படுகிற சந்தர்ப்பங்களில் எல்லாம் அவள் தன்னை அடக்கிக்கொண்டே பழக்கப்பட்டு விட்டாள். இப்படிப்பட்ட பழக்கம் இருப்பதால்தான் இன்றைய பரி தாபகரமான அவளது வாழ்வை ஓரளவு சீர்கெடாமல் காக்க முடிகிறது.

    குமுற வேண்டிய இடங்களில் குமுறி, அடங்க வேண்டிய இடங்களில் அடங்கி, சிரித்து, சினந்து, குழைந்து குழைந்து சமாளிக்க வேண்டியவைகளைச் சமாளிக்க வில்லையென்றால் சாரங்கனோடு அவள் நடத்துகிற வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்று விடுவாள். சாரங்கனுடன் நடத்துகிற வாழ்க்கைப் போராட்டத்தில் அவள் தோற்றாள் என்றால் அத்தோல்வி அவளுக்கு மட்டுமல்ல; அவனுக்கும் அது தோல்விதான்.

    இறந்த காலம் என்பது இருவருக்குமே ஒரு வெறும் இன்ப நினைவுதான்.

    நிகழ் காலம் என்பது அவளைப் பொறுத்த வரையில் அமைதியின்மை.

    எதிர்காலம் என்பது அவர்கள் இருவரைப் பொறுத்த வரையில் சூனியம்.

    உண்மை அன்பாமே, உண்மை அன்பு. யாரிடம் கதைக்கிறாள்... குரூரமான நினைவுகளில் அதன் செயலும் சேர்ந்தது. மேஜை மேல் அவள் கொண்டு வந்து வைத்திருந்த தண்ணீர்ச் செம்பை ஆத்திரத்துடன் தள்ளி விட்டான். தண்ணீரை நான்கு பக்கமும் சிதற அடித்துக் கொண்டு அது முற்றத்தில் போய் உருண்டு கிடந்தது. வில் வடிவத்தில் சிதறி இருந்த அந்த நீர்த்தாரை முற்றத்தில் விழுமுன் ஒரு சுழிப்புடன் முடிவடைந்திருந்தது.அதற்குள் தண்ணீர் தீர்ந்து விட்டதால் அதற்குப்பின் நீர்க்கோடு இல்லை.

    அவள் தன்னை உதாசீனப்படுத்துவதாகச் சாரங்கன் நினைத்தான். இத்தவறான அநுமானத்தின் மேல் அவன் எழுப்பிக் கொண்டிருக்கிறகிலேசம் தோல்வி மனப்பான்மையின் முனைப்பில் ஜனித்ததுதான்.

    . அவளுடைய மெளனத்துக்கும், அவளுடைய அந்தரிகமான சோகத்துக்கும் ஆறுதல் வேண்டி அலைந்த காலங்களில் அவள் கண்ட தோல்விதான் அவளுடைய சோக மெளனத்துக்குக் காரணம்.

    மனத்தில் மெதுவாக வந்து கவிழும் இருளை விலக்கி விட்டுக் கொண்டு வெளிச்சத்துக்கு வர முயன்றபோதெல்லாம் அவளது கரத்தைப் பிடித்து அழைத்து வர ஓர் இணையின்றித் தவித்துச் சோர்ந்து அயர்ந்தபின் உண்டான விரக்திதான் இதற்கெல்லாம் காரணம். உற்சாகமின்றித் தவிப்பதற்கும் அதுதான் காரணம். உறவின் நெருக்கத்தைவிடத் துயரின் நெருக்கம்தான் அவளுக்கு அதிகம். இதைச் சாரங்கன் உணர்ந்தவனாகத் தெரியவில்லை.

    ஏன், என்னமோ போல இருக்கே? - அவளோடு வேலை செய்யும் அவள் சிநேகிதி சகுந்தலா கேட்டாள்.

    மனசு சரியில்லை என்று இரண்டு வார்த்தைகளில் பதில் வந்த போது இரண்டு கண்களும் மனத்தின் சோக கனம் தாங்காமல் துடித்தன.

    வனஜா, சொல்லேன், என்ன விஷயம்? உன் கணவர் ஏதேனும் சொன்னாரா?

    அலுவலகத்தில் பிற்பகல் இடைவேளை. மனம் சோர்ந்துபோய் அமர்ந்திருந்தபோது சிநேகிதை சகுந்தலாவின் வார்த்தைகள் அவளுடைய நைந்த உள்ளத்துக்கு அருகில் வருகிற மாதிரி தோன்றியது.

    ஆமாம் என்றாள் வனஜா.

    உன்னைப் பொறுத்தவரையில் சுகம், துக்கம் என்ப தெல்லாம் நீயாகப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான். விழுந்தாலும் எழுந்தாலும் திரும்பிப் பார்க்கக் கூட நாதியில்லை. என்ன செய்வது? உன் சுழி இப்படி.

    "சகுந்தலா! நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன், தெரியுமா?

    Enjoying the preview?
    Page 1 of 1