Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idi Minnal Indira
Idi Minnal Indira
Idi Minnal Indira
Ebook142 pages37 minutes

Idi Minnal Indira

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Idi Minnal Indira

Read more from Rajeshkumar

Related to Idi Minnal Indira

Related ebooks

Related categories

Reviews for Idi Minnal Indira

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idi Minnal Indira - Rajeshkumar

    19

    1

    உலகிலேயே அதிவேகமான கம்ப்யூட்டர் நாஸாவின் சூப்பர் கம்ப்யூட்டர் என்று சென்ற மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டரின் மதிப்பு 225 கோடி ரூபாய். இந்த கம்ப்யூட்டரை அமெரிக்க நிறுவனமான சிலிக்கான் கிராஃபிக்ஸ் உருவாக்கியுள்ளது.

    இந்த கம்ப்யூட்டரின் வேகத்துக்கு எந்த ஒரு நிபுணரும் ஈடு கொடுக்க முடியாது. ஒரு நொடி நேரத்தில் 42 டிரில்லியன் கணக்குகளை முடித்துவிட்டு எஸ் பாஸ்... எனக்கு அடுத்த வேலையைக் கொடுங்கள் என்று கேட்கக் கூடியது. இந்தக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன தெரியுமோ..? தெரிந்தவர்கள் நாவலைப் படிக்க ஆரம்பித்து விடலாம். தெரியாதவர்கள்... இரண்டாவது அத்தியாயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    "ஜெயந்த்...! ம்... எனக்கு பயம்மாயிருக்கு... எதுக்கு பயம்...? டாக்டர் என்ன சொல்வாரோன்னுதான்... இதோ பார் மித்ரா... ரிசல்ட் எப்படியிருந்தாலும் அதை நாம ஸ்போர்ட்டீவா ஏத்துக்கணும்... தைரியமாயிரு...

    இல்ல ஜெயந்த்.. எனக்கு கன்ஃபர்மா தெரியுது. இது கர்ப்பம்தான்... பதினஞ்சு நாள் தள்ளிப் போயிருக்கு. காலையில் எந்திரிச்சதுமே மார்னிங் சிக்.. வாமிட் வருது... தலையைச் சுத்துது. தாளிக்கிற வாசனை லேசா மூக்குக்குள்ளே போனாலே போதும்- சிறுகுடலே வெளியே வர்ற மாதிரி வாந்தி. வேலைக்காரி தங்கம்மா என்னோட நாடியைப் பிடிச்சுப் பார்த்துட்டு என்ன சொன்னா தெரியுமா?

    என்ன சொன்னா...?

    எனக்கு ஆண் குழந்தைதான் பிறக்குமாம்...

    பரவாயில்லையே... நம்ம வீட்டு வேலைக்காரி தங்கம்மா ‘கைனகாலஜிஸ்ட்’ன்னு ஒரு போர்டை மாட்டிகிட்டு டாக்டர் தொழிலைக் கூட பார்க்கலாம்... போலிருக்கே..?

    என்னங்க...! உங்களுக்கு பையன் வேணுமா பொண்ணு வேணுமா..?

    இதோ பார் மித்ரா...! மொதல்ல டாக்டர் உன்னை செக் பண்ணி கன்ஃபர்ம்மா நீ கன்சீவ் ஆயிருக்கேன்னு சொல்லட்டும். அப்புறமா பொண்ணா பையனான்னு பேசிக்கலாம்.

    ஏன்... இன்னமும் உங்களுக்கு சந்தேகமா? எனக்கு சந்தேகமே கிடையாது. இன்னும் பத்து மாசம் கழிச்சு ஒரு குழந்தைக்கு நான் அம்மா. நீங்க அப்பா... பிறக்கப் போறது ஆண் குழந்தைதான்... நான் பேர்கூட வெச்சுட்டேன்... பேர் என்ன தெரியுமா?

    சொல்லு...

    சம்யுக்ராஜ்.

    பொண்ணாப் பொறந்துட்டா..?

    அது பையன்தான்...

    அதென்ன சம்யுக்ராஜ்..? பேர் ஏதோ புராண கால டைப்ல இருக்கு...

    ஜெயந்த் மேற்கொண்டு பேசும் முன்பு நர்ஸ் டாக்டரின் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். குரல் கொடுத்தாள்.

    மிஸஸ் மித்ரா.

    ஜெயந்த், மித்ரா இருவரும் எழுந்தார்கள். நர்ஸ் புன்னகைத்தாள். ஸார்... நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க... உங்க மனைவி மட்டும் வரட்டும்...

    ஜெயந்த், மறுபடியும் பாலிவினைல் நாற்காலிக்கு சாய- மித்ரா டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள்.

    அவள் உள்ளே போகும் வரை காத்திருந்த ஜெயந்த் தன்னுடைய செல்போனை எடுத்து சில எண்களைத் தட்டிவிட்டு காதுக்கு ஒற்றினான். மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டு ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

    ஹலோ... சூர்யா நர்ஸிங்ஹோம்.

    டாக்டர் சூர்யநாராயணன் இருக்காரா?

    இருக்கார்... நீங்க..?

    நான் ஜெய்ந்த்... அவரோட நண்பர். அவர்கிட்டே கொஞ்சம் பேசணும்...

    ஒரு நிமிஷம்...

    ஜெயந்த் காத்திருக்க அடுத்த சில விநாடிகளில் டாக்டர் சூர்யநாராயணனின் குரல் கேட்டது.

    சொல்லுங்க ஜெயந்த்... என்ன விஷயம்?

    டாக்டர்...! நானும் என்னோட மனைவி மித்ராவும் இப்போ ஹெலன் ஹாஸ்பிட்டலில் இருக்கோம்.

    உங்க மனைவி மித்ராவை டாக்டர் ரோகிணி செக் - அப் பண்ணிப் பார்த்துட்டாங்களா..?

    இல்ல டாக்டர்... இப்பத்தான் டாக்டரின் அறைக்குள்ளே போயிருக்கா... இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசல்ட் தெரிஞ்சுடும்.

    மறுமுனையில் டாக்டர் சிரித்தார்.

    இதோ பாருங்க ஜெயந்த்... நீங்க மனசைப் போட்டுக் குழப்பிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் கிடையாது. உங்களாலே எப்போதைக்குமே உங்க மனைவியைத் தாயாக்க முடியாது. இது ஒரு நூறு சதவீத உண்மை. உங்க மனைவி நிச்சயமா கன்சீவ் ஆகியிருக்க மாட்டாங்க...

    பதினஞ்சு நாள் தள்ளிப் போயிருக்கே டாக்டர்?

    அதுக்குக் காரணம் உங்க மனைவியின் உடம்போட பயலாஜிகல் க்ளாக்தான். உடம்பு அனீமிக்கா இருந்தாலும் இப்படி நாள் தள்ளிப் போகலாம்...

    டாக்டர்...! அவளுக்கு மார்னிங் சிக்னஸ் இருக்கு. தாளிக்கிற வாசம் பட்டா வாமிட் பண்றா. தலையைச் சுத்துது; மயக்கமாய் இருக்குன்னு சோர்ந்து சோர்ந்து படுத்துக்கறா... அதுவுமில்லாமே...

    வெயிட்... வெயிட் மிஸ்டர் ஜெயந்த்... ஒரு பெண் ‘கன்சீவ்’ ஆனால்தான் இப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கும்ன்னு சொல்லப்படுவது சரியில்லை... வயிற்றில் பித்த நீர் அதிகமாய் சுரந்தாலும் இது மாதிரியான கோளாறுகள் வரும்.

    அப்படீன்னா மித்ரா கன்சீவ் கிடையாது?

    கண்டிப்பாய் இல்லை... இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் ரோகிணி உங்களைக் கூப்பிட்டு ‘ஸாரி மிஸ்டர் ஜெயந்த்! உங்க மனைவிக்கு நீங்க நினைக்கிற மாதிரி கர்ப்பம் கிடையாது. அவங்க அனீமிக்கா இருக்காங்க... உடம்புல போதுமான சத்து கிடையாது. ஒரு டானிக்கிற்கும் வைட்டமின் மாத்திரைகளுக்கும் எழுதித் தர்றேன். ரெகுலரா சாப்ட்டுட்டு வரச் சொல்லுங்க’ன்னு சொல்லப் போறாங்க.

    டாக்டர்...! ஒரு சந்தேகம்...

    என்ன..?

    "ஆறு மாசத்துக்கு முந்தி நடந்த ஒரு ஸ்கூட்டர் விபத்துல எனக்கு இடுப்புல அடிபட்டதின் காரணமாய் நான் தாம்பத்யத்துல ஈடுபட்டாலும்

    Enjoying the preview?
    Page 1 of 1