Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indian Enbathu En Peru
Indian Enbathu En Peru
Indian Enbathu En Peru
Ebook148 pages43 minutes

Indian Enbathu En Peru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Indian Enbathu En Peru

Read more from Rajeshkumar

Related to Indian Enbathu En Peru

Related ebooks

Related categories

Reviews for Indian Enbathu En Peru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indian Enbathu En Peru - Rajeshkumar

    20

    வாசகர்கள் கவனத்திற்கு:

    இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெற்றுள்ள ஆங்கில சொற்றொடரின் தமிழாக்கம் நாவலின் கடைசி பக்கங்களில் இடம்பெற்றுள்ளது.

    1

    THE WAY TO BE HAPPY IS

    TO MAKE OTHERS HAPPY.

    ஹாங்காங்.

    ஹைடாக் ஏர்போர்ட் விடிகாலையின் வைகறை இருட்டில் இருக்க சி.எக்ஸ் 702 விமானம் ரன்வேயில் இறங்கி ஒரு ஐஸ் துண்டமாய் இரண்டு நிமிஷ நேரம் வழுக்கி பின் நின்றது.

    பயணிகள் பெல்ட்டை தங்களின் இடுப்புகளிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்க விமானத்தின் உள்ளேயிருந்த ஒலிபெருக்கியில் ஒரு பெண்ணின் குரல் சீனமொழியிலும், ஆங்கிலமொழியிலும் மாறி மாறி கொஞ்சியது.

    ஹாங்காங் என்னும் இந்த அழகிய தீவுக்கு வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். நீங்கள் வியாபார விஷயமாக வந்திருந்தாலும் சரி, இங்கே உள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி பயில வந்திருந்தாலும் சரி, அல்லது உங்கள் நண்பர்களோடும், வாழ்க்கைத் துணையோடும் பொழுதை இனிமையான முறையில் கழிக்க வந்திருந்தாலும் சரி - உங்கள் ஹாங்காங் பயணம் வெற்றிகரமாய் அமைய எங்கள் வாழ்த்துக்கள். உலகத்திலேயே குற்றங்கள் குறைவாக நடக்கும் முதல் பத்து இடங்களில் ஹாங்காங்கிற்கு இரண்டாவது இடம். இருப்பினும் சமூக விரோதிகளால் உங்களுக்கு ஏதாவது தொல்லை நேர்வதாக இருந்தால் போலீஸ் உதவியை நாடுங்கள். அவசர போலீஸ் உதவிக்கு ’0’ எண்ணை ஒருமுறை சுழற்றினால் போதும். நல்ல ஹோட்டல்களில் தங்க ஏர்போர்ட் ஆபீஸரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அவர் உங்களுக்கு உதவுவார். மறுபடியும் உங்களை வரவேற்பதில் மகிழ்கிறோம்.

    விமானத்தின் இடுப்போடு ஒட்டிக்கொண்ட ‘ஸ்டேர்ஸ்’ வழியாக பயணிகள் இறங்கிக் கொண்டிருக்க அட்சதா ஏர்வேஸ் பேக்கை தோளில் ஏற்றிக்கொண்டு எழுந்தாள். அந்த ஏர்ஹோஸ்டஸ் பளீரென்ற சிரிப்போடு பக்கத்தில் வந்தாள். சீனப்பெண். துடைத்து வைத்த கண்ணாடி பாத்திரம் போன்ற முகம். நல்ல ஆங்கிலத்தில் பேசினாள்.

    நீங்கள் இந்தியா...?

    ஆமாம்...

    பயண நேரத்தில் உங்களை தொல்லைப்படுத்தக்கூடாது என்பதற்காக நான் பேசவில்லை. இப்போது உங்களோடு ஒரு பத்து நிமிட நேரம் பேசிக் கொண்டு வரலாமா...?

    அட்சதா புன்னகைத்தாள்.

    தாராளமாய்.

    இருவரும் ஸ்டேர்ஸில் கடைசியாய் இறங்கினார்கள். ஏர்ஹோஸ்டஸ் சொன்னாள்: என்னோட பெயர் மெலன்-லீ.

    நான் அட்சதா...

    நீங்கள் ரொம்பவும் அழகாய் இருக்கிறீர்கள்.

    நன்றி.

    பொதுவாய் இந்தியப் பெண்கள் அழகுதான். எனக்கு இந்தியாவை பிடிக்கும்.

    நீங்களும் அழகுதான் மெலன்-லீ. ஒரு பீங்கான் சிலைக்கு கவுன் மாட்டிவிட்டதைப் போல் அமர்க்களம் பண்ணுகிறீர்கள்.

    அப்படியா...?

    அதில் என்ன சந்தேகம்...?

    இருந்தாலும் ஒரு இந்தியப் பெண்ணோடு என்னால் போட்டியிட முடியாது.

    இருவரும் சிரித்துக் கொண்டே ஏர்போர்ட்டில் லௌன்ஞ்சை நோக்கி நடந்தார்கள். ஏர்போர்ட் அந்த அதிகாலைவேளையில் ஒரு தீபாவளியின் உற்சாகத்தோடு இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஈஸ்ட்மென் நிறத்தில் நியான் விளக்குகள். வெளிச்சமான விசாரணை கௌன்டர்களுக்கு முன்னால் நீளமான க்யூ. க்யூவில் பெரும்பாலும் சீன முகங்கள். போனால் போகிறதென்று சில வேற்று முகங்கள். ‘எங்கள் விமானங்களில் ஒரு இளவரசனைப் போல் ஒரு இளவரசியைப் போல் பயணம் செய்யுங்கள். வானத்தில் வாழ்க்கையை அனுபவியுங்கள்’ - என்று ஆசை காட்டி அழைக்கும் ஹாங்காங் ஏர்வேஸின் விளம்பர வாசகங்கள் ஏர்போர்ட் கூரையில் வைக்கப்பட்டிருந்த மெகா சைஸ் கம்ப்யூட்டர் திரையில் கலர் கலராய் ஓடிக் கொண்டிருந்தன.

    இருவரும் லௌன்ஞ்சுக்குள் நுழைந்தார்கள். மெலன்-லீ கேட்டாள். ஹாங்காங்கிற்கு இதுதான் முதல் தடவையா... இல்லை இதற்கு முன் வந்திருக்கிறீர்களா...?

    இது ஏழாவது தடவை.

    உண்மையாகவா...? உங்களை எப்படி பார்க்காமல்விட்டேன்...?

    இந்த விமான ஏர்வேஸில் நான் வருவது இதுதான் முதல்தடவை. பொதுவாக கோல்ட் லைன் ஏர்வேஸில் வந்துவிடுவேன்.

    பர்ப்பஸ் ஆப் விசிட்...?

    இங்கே என்னுடைய அண்ணன் இருக்கிறார். ஹாங்காங் சவுத் வெஸ்ட் பீச்சில் ஒரு ரெஸ்டாரெண்ட் வைத்து நடத்தி வருகிறார். நான் வருஷத்துக்கு ஒரு தடவை அண்ணனைப் பார்க்க ஹாங்காங் வருவேன். இரண்டுவார காலம் தங்கியிருந்துவிட்டு இந்தியா புறப்பட்டுப் போய்விடுவேன்.

    உங்களுடைய அண்ணன் வைத்து இருக்கிற ரெஸ்டாரெண்டுக்கு என்ன பெயர்...?

    டேஸ்டி ரெஸ்...

    மெலன்-லீ தன் சிறிய பளபளப்பான கண்களை விரித்தாள். நண்டுக் கறிக்கும் இந்திய உணவு வகைகளுக்கும் பெயர் பெற்ற ரெஸ்டாரெண்டாயிற்றே அது... நானும் என்னுடைய காதலரும் அடிக்கடி அங்கே சாப்பிட போய்விடுவோம். உங்களுடைய அண்ணன் பெயர் என்ன?

    தருண்...

    அடுத்த தடவை பார்க்கும்போது பார்த்து பேச வேண்டும்... பை த பை... உங்களுக்கு கல்யாணம்?

    இன்னமும் இல்லை...

    கஸ்டம்ஸ் நெருங்கியது. மெலன்-லீ சொன்னாள்.

    மிஸ் அட்சதா! நீங்கள் கஸ்டம்ஸை முடித்துக் கொண்டு வாருங்கள். இரண்டு பேரும் சேர்ந்து கபேடேரியாவில் காப்பி சாப்பிடுவோம்.

    வேண்டாம்...

    ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்...?

    அண்ணன் எனக்காக காத்துக் கொண்டிருப்பார்.

    ஒரு காப்பி சாப்பிடுவதால் என்ன நேரமாகிவிடப் போகிறது.

    அது... வந்து...

    ப்ளீஸ்...! எனக்கு இந்தியப் பெண்களைப் பிடிக்கும். அதிலும் உங்களைப் போன்ற அழகான பெண்களோடு பேசுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னுடைய சந்தோஷத்துக்காக ஒரு ஐந்து நிமிஷம் கழித்து காப்பி சாப்பிட வரக்கூடாதா...?

    சரி... வருகிறேன்... சொன்ன அட்சதா மார்புப் பகுதிக்குள் கையை நுழைத்து அந்தச் சிறிய செல்போனை எடுத்து சில எண்களைத் தட்டிவிட்டு பேசினாள்.

    "அண்ணா... நான்

    Enjoying the preview?
    Page 1 of 1