Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisi Ethiri
Kadaisi Ethiri
Kadaisi Ethiri
Ebook211 pages59 minutes

Kadaisi Ethiri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kadaisi Ethiri

Read more from Rajeshkumar

Related to Kadaisi Ethiri

Related ebooks

Related categories

Reviews for Kadaisi Ethiri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisi Ethiri - Rajeshkumar

    43

    1

    நேஷனல் டிஃபன்ஸ் ஃபோர்ஸின் பிரதானக் கட்டிடம். ஆங்கிலேய காலத்து காவி நிறம். கட்டிடத்தின் மையப் பரப்பில் நின்ற உயரமான கம்பத்தில் தேசியக் கொடி லேசாய் சாயம் போய் டெல்லியின் குளிர்காற்றில் சுறுசுறுப்பாய் பறந்து கொண்டிருந்தது. நேரம் சாயந்தர ஆறுமணி.

    கட்டிடத்தின் முன்பக்கம் பரவியிருந்த செம்மண் மைதானத்தில் அழுக்கு பச்சை நிறத்தில் டெரி டோரியல் ஆர்மியின் ஆர்டிலரி, சிக்னல்ஸ் இன்பேண்ட்ரி மெடிக்கல் கார், பஸ், ஜீப்புகள் ஒருவித ஒழுங்கு வகையில் நின்றிருந்தன. உள்ளே சம்பந்தப்பட்ட டிரைவர்கள் திருட்டுத்தனமாய் தூங்கிக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டும் தெரிந்தார்கள். அவ்வப்பொழுது இந்தியில் சின்னச் சின்னதாய் சில்மிஷ உரையாடல்கள்.

    லால்

    என்ன?

    நாளைக்கு எனக்கும் ஓய்வு நாள்... என்ன பண்ணலாம்?

    நீயே சொல்லு

    காலையில பத்து மணிக்கெல்லாம் ஹாஸ்டலை விட்டு கிளம்பி ‘ரீகல்’ல ஒரு காலைக்காட்சி பார்க்கலாமா?

    என்ன படம்?

    ஜீனத் அமனோட பழைய படம்... ஹீரா பண்ணா... ரெண்டு டான்ஸ் வேறே

    போயிடுவோம்

    சினிமா முடிஞ்சதும் கன்னாட் ப்ளேஸுக்கு போய் மெட்ராஸ்வாலா ஹோட்டல்ல... மூர்வி பிரியாணி... மட்டன் குழம்போடு சப்பாத்தி

    சரி... அப்புறம்?

    சாப்பிட்டு முடிஞ்சதும் நேரா டாக்ஸி பிடிச்சு உல்லாஸ்பூர் போயிடலாம்... காமினிகிட்டே வர்றதா சொல்லியிருக்கேன்.

    அவ வேண்டாம். காசு அதிகமா கேப்பா.

    உனக்கும் எனக்கும் அவகிட்டே ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உண்டு. நீ பயப்படாமே வா... நான் பார்த்துக்கிறேன்.

    வேண்டாம்... அவ பஜாரி... ராட்சஸி... வேற இடம் பார்ப்போம்.

    சைரன் திடும்மென்று ஒலிக்க - பேச்சுக்குரல் நின்றது. டிரைவர்கள் விழிப்புக்கு வந்து, அட்டென்ஷனில் உட்கார்ந்தார்கள்.

    பிரதான காம்பௌண்ட் கேட்டில் இரண்டு பைக்குகள் படபடத்து உள்ளே நுழைய, செக்யூரிடி ஜீப் சைரன் ஓலமிட்டபடி பின்னால் தெரிந்தது. பேச்சுக் குரல் பயமாய் கிசுகிசுத்தது.

    இந்நேரத்துக்கு யார் வர்றாங்க?

    தெரியலையே!

    லெப்டினென்ட் கலோனிவாக இருக்குமோ?

    அவர்தான் ஊரிலேயே இல்லையே?

    சைரன் எழுப்பியபடி வந்த ஜீப்புக்குப் பின்னால் அந்த பாசிநிறக் கார் தெரிய பேச்சுக்குரல் ஆச்சர்யப்பட்டது.

    அடே! பிரிகேடியர்

    கார் லேசாய் செம்மண் புழுதியை கிளப்பிக் கொண்டு மைதானத்தில் ஓடி பிரதான கட்டிடத்திற்கு முன்பாய் விலகி நின்றது.

    பிரிகேடியர் பானர்ஜி உயரமாய் பளபளப்பான யூனிஃபார்மில் இறங்கினார். பானர்ஜிக்கு நாற்பது வயது இருக்கலாம். தொப்பையில்லாத உடம்புவாகு. உருவிவிட்ட சாட்டை மாதிரி இருந்தார். சட்டை பாக்கெட்டில் மெடல்கள் மின்னின. காதோரம் நரை கிருதா துல்லியமாய் கத்தரிக்கப்பட்டிருக்க, கண்களில் அபார தீட்சண்யம்.

    மேஜர் சால்வேயும், கேப்டன் தாக்கூரும் கட்டிடத்தின் ஏதோ ஒரு அறையிலிருந்து வேகமாய் வெளிப்பட்டு ஓடி வந்தார்கள்.

    ‘ப்ப்ளீர்’ சல்யூட்கள்.

    திரும்ப சல்யூட் செய்த பானர்ஜி நடந்து கொண்டே கேட்டார்.

    ஆர்மி டாக்டர் வந்துவிட்டாரா?

    வந்து விட்டார்.

    எந்த அறையில் இருக்கிறார்?

    க்ளெட் நெம்பர் நைன்!

    குட்.

    ரெட் ஆக்ஸைட் பூசியிருந்த பளபளப்பான வராந்தாவில் பானர்ஜி நடக்க, சால்வேயும் தாக்கூரும் தொடர்ந்தார்கள். ஒரு நிமிஷ நீளமான நடைக்குப்பின் இரண்டு காரேஜ்களுக்கு நடுவில் இருந்த க்ளெட் நெம்பர் 9 என்று எழுதப்பட்ட அறைக்குள் நுழைந்தார்கள்.

    கதவு பின்பக்கமாய் சாத்திக் கொள்ள காத்திருந்த ஆர்மி டாக்டர் சாங்க்மா விறைத்து சல்யூட் போட்டார். பானர்ஜி புன்னகைத்தார்.

    ஹௌ ஆர்...யூ...சாங்க்மா?

    வெரி ஃபைன் ஸார்... அறைக்கு நடுவே இருந்த அரைவட்ட மேஜைக்கு வந்தார் பானர்ஜி. இருக்கையில் சாய்ந்து கொண்டு மற்றவர்களுக்கு எதிரே இருந்த இருக்கைகளைக் காட்டினார்.

    உட்கார்ந்தார்கள்.

    அரை நிமிஷ நேர நிசப்தத்திற்கு பிறகு, பானர்ஜி தன் தடிமனான மீசைக்கு கீழே உதடுகளை அசைத்தார். மிஸ்டர் சாங்க்மா.... இந்த அவசர அழைப்பு எதற்காக என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கும். இந்திய ராணுவம் உங்களிடம் ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப் போகிறது. ராணுவத்தின் மெடிக்கல் கார்ப்ஸில் உள்ள அனைத்து டாக்டர்களைக் காட்டிலும் நீங்கள் திறமையானவர், விசுவாசம்மிக்கவர் என்ற காரணங்களுக்காக உங்களை ராணுவத்தின் கண்காணிப்பு பிரிவு தேர்ந்தெடுத்திருக்கிறது.

    அயாம்... ஹானர்ட்... நன்றி பிரிகேடியர் அவர்களே...! நீங்கள் ஒப்படைக்கப் போகிற பணி எவ்வளவு சிரமமானதாய் இருந்தாலும், அதை சிரமேற்கொண்டு செய்யக் காத்திருக்கிறேன்.

    பானர்ஜி தன் யூனிபார்மின் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து அந்த சிறிய பாக்கெட்டை எடுத்தார். பிரித்தார்.

    உள்ளே-

    மிளகு சைஸ் அளவுக்கு அந்த பளபளப்பான வஸ்து தெரிந்தது. பானர்ஜி அதை புன்னகையோடு, டாக்டருக்கு காட்டினார்.

    இது என்னவென்று தெரிகிறதா... சாங்க்மா?

    சாங்க்மா உற்றுப் பார்த்துவிட்டு தலையாட்டினார்.

    மன்னிக்கவும்... தெரியவில்லை.

    இது எலக்ட்ரோ மைக்ரோ டேப். இதை டேப் ரிக்கார்டரில் போட்டால் ரெண்டரை மணி நேரம் சுழலும்... நம் ராணுவம் எந்த நிமிஷத்திலும், பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஒருவேளை தாக்குதல் தொடர்ந்தால் இந்திய ராணுவம் எடுக்க வேண்டிய பதில் நடவடிக்கைகள், அதிரடி தாக்குதல்கள் பற்றிய விபரங்கள் இந்த எலக்ட்ரோ மைக்ரோ டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த டேப் காஷ்மீர் எல்லையில் உள்ள பார்டர் செக்யூரிடி ஃபோர்ஸுக்கு ரகசியமாய் போய்ச் சேர வேண்டும். டேப்பில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் அந்தரங்கமானவை. அதில் சொல்லப்பட்டிருக்கிற செயல்பாடுகள் திறன்மிக்கவை.

    டாக்டர் சாங்க்மா உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருக்க பிரிகேடியர் தொடர்ந்தார். டேப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிற விஷயங்களை வயர்லெஸ் மூலமாக காஷ்மீர் பார்டரில் இருக்கும் செக்யூரிடி ஃபோர்ஸுக்கு தெரியப்படுத்தக் கூடாதா என்று நீங்கள் கேட்கலாம்... அது இப்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியம் இல்லை. ஏனென்றால் பஞ்சாப் பார்டர் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் தீவிரவாதிகள், உயரமான மலைகளில் ரகசியமாய் வயர்லெஸ் ஸ்டேஷன்களை நிறுவி, இந்திய ராணுவத்தின் வயர்லெஸ் செய்திகளை கிரகித்துக் கொள்கிறார்கள். எந்த ‘ப்ரீக்வென்ஸி’யில் நாம் வயர்லெஸ் சாதனங்களை இயக்கினாலும் சரி... அவர்கள் அந்த ப்ரீக்வென்ஸியை தமது வயர்லெஸ்ஸால் வழிமறித்து அந்தரங்கமான செய்திகளை ரிஸீவ் செய்து கொள்கிறார்கள். இதனால் நம் ராணுவத்தின் திட்டங்கள், தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதில்லை. எனவே இந்த எலக்ட்ரோ மைக்ரோ டேப் மூலமாக செக்யூரிடி போர்ஸுக்கு செய்திகள் பத்திரமாய் போய்ச் சேர வேண்டும். இதற்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்.

    சொல்லுங்கள்... காத்திருக்கிறேன்...

    பானர்ஜி மைக்ரோ டேப்பை மறுபடி காட்டினார். "இவ்வளவு சிறிய டேப்பை உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் மறைத்து வைத்துக் கொண்டு லெப்டினென்ட் ரண்தீர், இன்று இரவு பத்து மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்படுகிறார். அவரோடு செண்ட்ரியாக செகண்ட் லெப்டினென்ட் தரம்சந்த் புறப்படுகிறார். ரண்தீரும், தரம்சந்தும் இந்திய ராணுவத்தில் பத்தாண்டு காலமாய் இருப்பவர்கள். விசுவாசமிக்கவர்கள். இந்திய எல்லைக்கோட்டை தாண்ட முயன்ற ஜே.கே.எல்.எஃப் என்ற தீவிரவாதிகளை நூற்றுக்கணக்கில் சுட்டுத் தள்ளி பிணமாக்கியவர்கள். காஷ்மீர் எல்லையில் பார்டர் செக்யூரிடி ஃபோர்ஸில் போர் ஏற்பாடுகளை கவனிப்பதற்காக முகாமிட்டிருக்கின்ற மேஜர் ஜெனரலிடம் மைக்ரோ டேப்பை ரகசியமாய் கொண்டு போய் கொடுக்க வேண்டும். ரண்தீரும், தரம்சந்தும் நமது ராணுவத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் பார்டர் செக்யூரிடி போர்ஸின் பிரதான நுழைவாயிலுக்குள் நுழைந்து மேஜர் ஜெனரலை சந்திப்பதற்குள் நான்கைந்து முக்கியமான செக் பாயிண்ட்களில் சோதனை செய்யப்படும் போது, உடம்பில்

    Enjoying the preview?
    Page 1 of 1