Vidathey Vivek! Vidathey
By Rajeshkumar
4.5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vidathey Vivek! Vidathey
Related ebooks
Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vivek Never Out Rating: 5 out of 5 stars5/5Paainthu Vaa Vivek Rating: 0 out of 5 stars0 ratingsPooja, PuthuDelhi, Boogambam Rating: 5 out of 5 stars5/5Poruthathu Pothum Vivek! Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Nooru Degree Thendral Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Thodarnthu Vaa Thottu Vidathea Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Netru Naragam Indru Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Welldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsKuttrangal Kuraivathillai Rating: 4 out of 5 stars4/5Poovey… Poovey! Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Arivu Rating: 2 out of 5 stars2/5Vivek Vidivatharkul Vaa Rating: 5 out of 5 stars5/5Nadunishi Thendral Rating: 5 out of 5 stars5/57 - vathu Arivu Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Vivekin Viswaroobam Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Meendum Vivekin Visparoopam Rating: 3 out of 5 stars3/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Evan Avan and Poovil Seitha Aayutham! Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Kaatru Urangum Neram... Rating: 5 out of 5 stars5/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vidathey Vivek! Vidathey
3 ratings0 reviews
Book preview
Vidathey Vivek! Vidathey - Rajeshkumar
20
1
உலகின் அத்யாவசிய பொருளாக மாறிவிட்ட மொபைல் போன் எந்த நாட்டில் அதிகமாய் உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா? ஜப்பான் என்று சொல்வீர்கள். அது தவறு. சரியான பதில் சீனா. கடந்த ஆண்டு மட்டும் 24 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்துள்ளது. இதில் 14 கோடி போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ரூபலா விஷ்ணுவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். இந்த உலகத்துல ஏழு கடல், 2500 பெரிய நதி, 5000 சிறிய நதி, பத்தாயிரம் ஏரி, ஐம்பதாயிரம் குளம், பத்துலட்சம் கிணறு இருக்கு. அப்புறம் நீ மட்டும் ஏண்டா குளிக்க மாட்டேங்கிறே...?
மேடம்! இது கிரேட் இன் ஸல்ட்... நான் குளிக்கலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்...?
முன்னாடியெல்லாம் நீ வீட்டுக்குள்ளே வரும்போது செண்ட் வாசனை வராது. இப்போ நீ உள்ளே வந்தாலே மாங்காட்டு மைனர் ரேஞ்சுக்கு செண்ட் வாசனை தூக்குதே...? சரி... போட்டதுதான் போட்டே... கொஞ்சம் நல்ல செண்ட்டா போடக்கூடாதா...? நீ காம்பௌண்ட் கேட்டைத் திறந்துகிட்டு உள்ளே வரும்போதே என் வயித்துக்குள்ளே குஜராத் கலவரம் ஆரம்பமாயிடுதே...?
மேடம்! இந்த செண்ட்டைப் பத்தி கேவலமாய் பேசாதீங்க... ஐஸ்வர்யா ராயும், சானியா மிர்ஸாவும் கோடிக்கணக்கான ரூபாயை சம்பளமாய் வாங்கிகிட்டு இந்த செண்ட் விளம்பரத்துல நடிச்சிருக்காங்க. இதனோட விலை எவ்வளவு தெரியுமா மேடம்?
எவ்வளவு?
பத்து மில்லி செண்ட் - ரெண்டாயிரம் ரூபாய்.
அதுதான் இந்த நாறு நாறுது...
மேடம்...
விஷ்ணு கோபமாய்ப் பற்களைக் கடித்துக் கொண்டிருக்கும்போதே விவேக் உடைமாற்றிக் கொண்டு தன்னுடைய அறையிலிருந்து வெளிப்பட்டான்.
என்னடா... சண்டை...?
பாருங்க பாஸ்... மேடம்... நான் ஸ்பிரே பண்ணியிருக்கிற செண்ட்டைப் பத்தி மோசமா கமெண்ட் பண்றாங்க...
விவேக் சிரித்தான். ஆமா... நான்கூட கேட்கணும்ன்னு நினைச்சேன்... எப்பயிருந்துடா உனக்கு இந்த செண்ட் பழக்கம்?
போன மாசம் பத்தாம் தேதியிலிருந்து பாஸ்.
அன்னியிலிருந்து என்னடா விசேஷம்...?
அன்னிக்குத்தானே சிங்காரச் சென்னையில் தேசிய நதி பாய்கிற சிந்தாதிரிப்பேட்டைக்கு குடிபோனேன்... இருபத்தி நாலு மணி நேரமும் ஷிஃப்ட் போட்டுகிட்டு கூவம் மணக்குது பாஸ்! ஒவ்வொரு ஷிஃப்ட்டுக்கும் ஒவ்வொரு பிரத்யேக மணம். செண்ட்டை ஸ்பிரே பண்ணிக்காமே தூங்க முடியாது பாஸ்...
நீ மொதல்ல வீடு மாறுடா...! நீ ஸ்பிரே பண்ணியிருக்கிற செண்ட்டுக்கு அந்த கூவமே பரவாயில்லை போலிருக்கு! இது செண்ட் இல்லை. பூச்சிக் கொல்லி மருந்து!
- விவேக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் ‘ஜாரே ஜகான்ஜி அச்சா’ என்ற ட்யூனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். வியப்பில் புருவங்கள் உயர்ந்தன். செல்லின் டிஸ்ப்ளேயில் ‘டாக்டர் ஆனந்தகிருஷ்ணன்’ என்ற பெயர் தெரிந்தது. செல் காதுக்குப் போயிற்று. ஹல்லோ டாக்டர்...! குட்மார்னிங்!
விவேக் குரல் கொடுக்க, டாக்டர் பதட்டப்பட்டார்.
விவேக்...! நீங்க இப்போ ஃப்ரீயா இருக்கீங்களா...?
ஹண்ட்ரண்ட் பர்சன்ட் ஃப்ரீ... என்ன விஷயம் டாக்டர்...?
ஒரு பத்து நிமிஷம்... என்னோட நர்ஸிங்ஹோம் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா...?
எனிதிங்க் இம்பார்ட்டண்ட் டாக்டர்...?
வெரி வெரி இம்பார்ட்டண்ட்... ப்ளீஸ் கம்...
இதோ புறப்பட்டேன்...
விவேக் செல்போனை அணைத்து சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டே ரூபலாவை ஏறிட்டான்.
போன் பண்ணியது டாக்டர் ஆனந்தகிருஷ்ணன். உடனடியாய் அவருடைய நர்சிங்ஹோமுக்கு வரச் சொல்றார். நான் போய்ட்டு வந்துடறேன்... ரூபி...
என்ன விஷயம்...? கேட்டீங்களா...?
ம்... கேட்டேன்...! ‘விஷயம் வெரி வெரி இம்பார்ட்டண்ட். நேர்ல வாங்க’ன்னு சொல்லிட்டார்... போனாத்தான் தெரியும்...
பாஸ்...! நீங்க கன்னி ராசிதானே...?
ஆமா...
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம்! டாக்டர் ஆனந்தகிருஷ்ணனின் நர்ஸிங்ஹோம்... தெற்கு திசையில் இருக்கு. வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்னிக்கு தெற்கு சூலம். எல்லாத்துக்கும் மேலாய் இன்னிக்கு கரி நாள். ராகு காலம் வேற. சாயந்தரம் அஞ்சு மணி வரைக்கும் நீங்க வெளியே போகக் கூடாது பாஸ். போனால்...
போனா... என்னாகும்...?
ஏதாவது ஒரு பிரச்னையில் மாட்டிக்குவீங்க பாஸ்... அதிலும் உங்க கன்னி ராசிக்கு அதிபதி புதன். அந்த புதன் இப்போ பகை வீட்டில் இருக்கிறதால உங்க தொழில் ஸ்தானத்தில் உட்கார்ந்திருக்கிற குருபகவான் வக்ர கதியடைஞ்சு கோச்சாரத்தில் இருக்கிறதால...
டேய்...! போய் காம்பௌண்ட் கேட்டைத் திறந்து வெச்சுட்டு கார்ல உட்கார்டா...
சொன்னா கேட்கமாட்டீங்க பாஸ்...!
சலித்துக் கொண்ட விஷ்ணு ரூபலாவிடம் திரும்பினான்.
மேடம்...! ஒரு ஸ்பூன் தயிரும் ஒரு சின்ன வெல்லக் கட்டியும் கொண்டு வாங்க...
எதுக்குடா...?
பரிகாரம் மேடம்...! ஒரு ஸ்பூன் தயிரையும் ஒரு சின்ன வெல்லக்கட்டியையும் பாஸ் சாப்டுட்டு கிளம்பினா மோசமான இந்த நாளும் நல்ல நாளாயிடும்...
எங்கிருந்துடா இதையெல்லாம் கத்துகிட்டே...?
பாஸ்! இப்ப பார்ட் டைமா ஜோஸ்யம் பழகிட்டு இருக்கேன்... புளுகு மலை ஜோஸ்யர்தான் என்னோட குரு. நான் போலீஸ் டிபார்ட்மெண்ட்டிலிருந்து ரிடையரானதும் விஷ்ணுதாசன்னு பேரை மாத்திகிட்டு ஊர் ஊராய் போய் லாட்ஜ்ல தங்கி வி.ஐ.பி.களுக்கு மட்டும் ஜோசியம் சொல்லப் போறேன். சினிமா நடிகைகளுக்கு மட்டும் ஃப்ரீ... அம்மா வேஷம் போடும் நடிகைகளுக்கு பாதி ரேட்... அப்புறம்...
டேய்...!
ஸாரி பாஸ்...! நீங்க பொறாமைப் படுவீங்கன்னு எனக்குத் தெரியும்... இருந்தாலும் என்கிட்டே இருக்கிற எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்டிவிடியைப் பற்றி சொல்லியாகணுமே... இந்த ஜோஸ்யம் மட்டும் இல்லை பாஸ்...! ஜன வசியம், பண வசியம், காதல் வசியம், சத்ரு வசியம், புத்திர பேறு வசியம், திருமண வசியம், நவக்ரஹ வசியம், இதுதவிர மஹாமேரு ஸ்ரீ சக்கரம் மற்றும் சுதர்சன கணபதி, வாஸ்து, நவக்ரஹ மஹாலட்சுமி, குபேர, பிரத்தியங்கரா, பைரவ, சடாட்சர, தன்வந்திரி, இரசமணி யந்திரங்களும்...
"டேய்...! நீ பேசி முடிச்சுட்டு ஆபீஸ் போய் சேரு. நான் டாக்டர் ஆனந்த கிருஷ்ணனைப் பார்த்துட்டு ஆபீஸ் வந்துடறேன். நான் டாக்டரைப் பார்த்துட்டு வர்றதுக்குள்ளே நீ அந்த