Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal!
25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal!
25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal!
Ebook340 pages1 hour

25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal!

Read more from Rajeshkumar

Related to 25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal!

Related ebooks

Related categories

Reviews for 25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal! - Rajeshkumar

    23

    படித்தேன்... வியந்தேன்:

    இந்த உலகிற்கு முதன் முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் ஒரு மகா ரிஷி. அவர் பெயர் சுஸ்ருதர். கி.மு. 600 காலத்தைச் சேர்ந்தவர். இவர் ரிஷி விஸ்வாமித்திரர்க்குப் பிறந்தவர். உலகின் முதல் அறுவை கலைக் களஞ்சியமான சுஸ்ருத சம்ஹிதையை மனித சமுதாயத்துக்காக வழங்கியவர். மயக்க மருந்து மற்றும், பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்றப்படுபவர். 125 வகையான அறுவை சிகிச்சைகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர்கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், மேலும் சில மருத்துவக் கருவிகள் - விலங்கு மற்றும் பறவைகளின் தாடை எலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டவை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு போடப்படும் தையல் நூல்களுக்கு குதிரையின் முடி, பிராணிகளின் நரம்புகள், வெகு அரிதான மரப்பட்டை இழைகளையும் சுஸ்ருதர் பயன்படுத்தியுள்ளார். இந்த பிரபஞ்சத்தின் ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் சர்ஜன் இவர்தான்.

    1

    தியான மண்டபத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் சம்மணமிட்டு, நிசப்தம் காத்து உட்கார்ந்திருக்க மஹாயோகி சர்வஜித் சுவாமிகள் மேடையில் மையமாய் தெரிந்தார்.

    எழுபது வயது நிரம்பிய சர்வஜித் சுவாமிகள் அந்த வயதுக்குரிய தளர்ச்சியில்லாமல் ஓர் இளைஞனைப் போல் நிமிர்ந்து மைக்குக்கு முன்பாய் உட்கார்ந்திருந்தார். இளம் நீலவண்ண ஆடை உடம்பை போர்த்தியிருக்க அரையடி நீள வெண்ணிற தாடி சாளரம் வழியே வீசிய காற்றுக்கு மெதுவாய் அசைந்து கொண்டிருந்தது. அவருடைய கணீரென்ற குரல் தொண்டையினின்றும் வெளிப்பட்டு காற்றில் கலந்து கொண்டிருந்தது.

    "இந்த சமூகத்தில் நாம் மதிக்கப்பட வேண்டுமென்றால் நாம் முதலில் மற்றவரை மதிக்க வேண்டும். மரியாதை என்பது நம்மை ஒருவரை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது. நம்மை விட பெரியவர்களை நாம் மதிக்கவும், நம்மைவிட சிறியவர்களை நேசிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். மனிதர்கள் பெரும்பாலோர் வெறும் இயந்திரங்களாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அன்பு அனுசரணை என்பது சொந்தத்தில் கூட பார்ப்பது அரிதாகிவிட்டது. யார்க்காகவும் சிறிது கூட சிரமப்பட யாரும் தயாராக இல்லை. மக்களின் மனதில் இப்போது சுயநலம் மிகுந்து அது ஒரு குப்பை மேடாக மாறிவிட்டது. இப்படி தன்னலமே பெரிதென நினைப்பவர்கள் நாளடைவில் தனிமை என்னும் இருளுக்குள் தள்ளப்படுவார்கள்.

    சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனம் கொண்டவர்கள்தான் சமூகத்தால் நேசிக்கப்படும் மனிதர்களாக இருப்பார்கள். யார் ஒருவர் மகத்தான மனிதராக மாற விரும்பினாலும் சரி, அவர்களிடம் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். தமக்குப் பிடிக்காத செயல்களை மற்றவர்கள் செய்யும்போது அதை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். தனக்குப் பிடிக்காத ஒன்றை அடுத்தவர் சாப்பிடும்போது அதைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது. அடுத்தவரின் செய்கை, மொழி, வாழ்க்கை முறை, பழக்கவழக்கம் போன்றவற்றை கேலி செய்யவோ விமர்சிக்கவோ கூடாது.

    அதே நேரத்தில் இன்னொரு உண்மையையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றி உங்களுடைய வாழ்க்கைத் துணையைத் தவிர வேறு எவருமே நாட்டம் கொள்வது இல்லை. உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் உங்களுக்கு உதவி செய்ய மற்றவர்கள் ஓடி வருவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். கடவுளிடம் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுங்கள். உங்களுக்கு கடவுள் துணை இருந்தால் உலகமெல்லாம் எதிர்த்தாலும் நீங்கள் வெற்றி அடைவீர்கள். கடவுளின் நட்பைப் பெறுங்கள். அதுவே மிகச் சிறந்த செல்வம். கடவுள் என்றால் அவர் உங்களைப் போன்ற ஒரு நபர் அல்ல. உங்களிடம் உள்ள அதிசயமான வாழ்க்கைத் தத்துவத்தின் மற்றொரு பெயரே கடவுள். அதை வாழ்க்கை என்று அழைத்தாலும் தப்பு இல்லை. உங்களிடம் இருக்கும் கடவுளுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சிந்தியுங்கள். பேசுங்கள். நடங்கள்...!"

    யோகி சர்வஜித் சுவாமிகள் தன் பிரசங்கத்தை முடித்து விட்டு சில நிமிடங்கள் கண் மூடி தியானத்தில் இருந்து விட்டு எழுந்தார்.

    ஹாலில் உட்கார்ந்திருந்த ஒட்டுமொத்த பேர்களும் எழுந்து நின்று கை கூப்ப சுவாமிகள் எல்லோரையும் ஒரு புன்னகையால் நனைத்தபடி பக்கத்து அறைக்குள் நுழைந்தார். அங்கே பவ்யமாய் கை கட்டி காத்திருந்த பிரதம சீடர் வேதகிரி சுவாமிகளைப் பார்த்ததும் கும்பிட்டார்.

    ஸ்வாமி.

    வேதகிரி...! இன்னிக்கு பக்தர்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமாய் இருக்கு போலிருக்கு. எல்லார்க்கும் அன்னதானம் வருமா?

    வரும் ஸ்வாமி...

    பார்த்துக்குங்க.. யாரும் பசிக்கிற வயிறோடு இங்கிருந்து போகக்கூடாது..! சொல்லிவிட்டு சர்வஜித் சுவாமிகள் நகர முயன்ற விநாடி சீடர் வேதகிரி குறுக்கிட்டார்.

    ஸ்வாமி...!

    என்ன..?

    உங்களைப் பார்த்துப் பேச ஓய்வு பெற்ற நீதிபதி கஜபதிராவ் கடந்த அரைமணி நேரமாய் வரவேற்பறையில் காத்திருக்கிறார்.

    என்ன விஷயம்ன்னு கேட்டீங்களா?

    கேட்டேன்.

    என்ன சொன்னார்?

    ஏதோ மனக் குழப்பம்ன்னு சொன்னார். சுவாமிகள்கிட்டே ஒரு பத்து நிமிஷம் பேசிட்டுப் போனா எல்லாம் சரியாயிடும்ன்னு சொன்னார்.

    அவர்கூட வேற யாராவது வந்து இருக்காங்களா?

    இல்ல ஸ்வாமி.. அவர் மட்டும்தான்.

    சரி.. நான் பார்த்து பேசிக்கிறேன்... நீங்க போய் அன்னதான வேலைகளை கவனிங்க...

    வேதகிரி பவ்யமாய் கும்பிட்டு தலையாட்டி விட்டு நகர்ந்து பக்கவாட்டு கதவு வழியாக வெளியேறினார்.

    சர்வஜித் சுவாமிகள் நேராய் உள்ளே போய் வலதுபக்கமாய் திரும்ப - வரவேற்பறை வந்தது. அங்கிருந்த சோபா ஒன்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஓய்வு பெற்ற நீதிபதி கஜபதிராவ் சற்றே பதட்டத்தோடு எழுந்து நின்று இரு கைகளையும் குவித்தார்.

    வணக்கம் ஸ்வாமி! சொல்லிக் கொண்டே தனது கால்களில் விழ முயன்றவரை தடுத்தார் சர்வஜித் சுவாமிகள். சற்றே கோபம் கலந்த குரலில் சொன்னார், பெத்தவங்களைத் தவிர மத்தவங்க யாரோட காலிலும் விழக்கூடாதுன்னு பலதடவை உங்களுக்குச் சொல்லியிருக்கேன்...

    மன்னிக்கணும் ஸ்வாமி.... உங்களைப் பார்க்கிற ஒவ்வொரு தடவையும் அதை மறந்துடறேன்...

    சுவாமிகள் சிரித்தார்.

    ஒவ்வொரு தடவையும் இதையேதான் சொல்றீங்க... மொதல்ல உட்கார்ங்க... நீங்க நீதிபதியாய் இருந்து பலர்க்கு தீர்ப்பு சொன்னவங்க. நேர்மையான நீதிபதின்னு பேர் எடுத்தவங்க...

    அந்த நேர்மைதான் ஸ்வாமி இப்ப எனக்கு எதிரியாய் மாறி ஒரு விஷப்பாம்பு மாதிரி படமெடுத்து ஆடிட்டிருக்கு!

    மொதல்ல உட்கார்ங்க...!

    கஜபதிராவ் படபடப்பு தணியாமல் சோபாவின் நுனியில் உட்கார, சுவாமிகள் தன்னுடைய ஆசனமான மர நாற்காலிக்கு மெள்ளச் சாய்ந்து உட்கார்ந்தார்.

    சொல்லுங்க.. என்ன பிரச்னை?

    கஜபதிராவின் குரல் கம்மியது.

    ஸ்வாமி... ஹைகோர்ட் நீதிபதியாய் நான் பதவி வகித்து ரிடையர்டானதும் ரெண்டு வருஷம் வீட்ல நிம்மதியாய் இருந்தேன். பேரக் குழந்தைகளோடு சந்தோஷமாய் பொழுது போய்கிட்டு இருந்தது. ஆறுமாசத்துக்கு முன்னாடி முதலமைச்சரோட அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு லெட்டர் வந்தது. அந்த லெட்டர்ல ‘ஒரு கல் க்வாரி சம்பந்தமான ஊழல் புகாரை விசாரிக்க உங்களை தனி நீதிபதியாய் நியமிக்க இந்த அரசு விரும்புகிறது. இதில் உங்கள் விருப்பம் என்ன என்பதை தெரியப்படுத்தினால் மேற்கொண்டு அது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க வசதியாய் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். நான் மொதல்ல வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனா முதலமைச்சரோட சீஃப் செக்ரட்ரி எனக்கு போன் பண்ணி உங்களை மாதிரியான ஒரு நேர்மையான நீதிபதிதான் அந்த ‘ஊழல் கல் க்வாரி’ விசாரணையை நடத்தி அறிக்கையைத் தரணும்னு முதலமைச்சர் பிரியப்படறார்ன்னு சொன்னார்.

    சுவாமிகள் புன்னகைத்தார்.

    நீங்களும் ஒத்துகிட்டீங்க...?

    "ஆமா ஸ்வாமி... முதலமைச்சரே விருப்பப்பட்டதால் நான் அந்த கல் க்வாரி ஊழலைப் பத்தி விசாரிக்க ஒத்துகிட்டேன். கடந்த மூணு மாச காலமாய் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி ஊழலோட உண்மைத் தன்மையைப் பற்றி ஓர் அறிக்கையை தயார் பண்ற வேலையிலும் மும்முரமாய் ஈடுபட்டு இருந்தேன். இந்த நேரத்துலதான் ஒரு பிரச்னை எட்டிப் பார்த்தது.

    என்ன பிரச்னை...?

    முதலமைச்சரோட சீஃப் செக்ரட்ரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட வீட்டுக்கு வந்து ஒரு ஃபைலைக் கொடுத்தார். ‘இது என்ன ஃபைல்?’ன்னு கேட்டேன். அதுக்கு அவர்... ‘அந்த கல்க்வாரி ஊழலைப் பற்றி நீங்க விசாரணை நடத்தி அரசாங்கத்துக்கு கொடுக்கப் போகிற அறிக்கை’ன்னு சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. நான் கொஞ்சம் கோபத்தோடு ‘அப்படீன்னா நான் மூணுமாச காலமாய் சின்சியராய் விசாரணை பண்ணி பிரிப்பேர் செஞ்சு வெச்சிருக்கிற இந்த அறிக்கையை என்ன பண்றது?’ன்னு கேட்டேன்.

    சரியான கேள்வியைத்தான் கேட்டு இருக்கீங்க... இந்தக் கேள்விக்கான அவருடைய பதில் என்ன?

    நீங்க தயார் பண்ணின அறிக்கையைக் குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கிப் போட்டுட்டு இந்த ரிப்போர்ட்டை பிரஸ்ஸுக்கு கொடுங்க-ன்னு சொல்லிட்டு அவர் போயிட்டார்.

    சுவாமிகள் புன்னகை பூத்தார்.

    உங்க நேர்மைக்கு இப்போ சோதனை?

    ஆமா ஸ்வாமி!

    என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?

    என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியாமத்தான் உங்ககிட்டே வந்திருக்கேன் ஸ்வாமி!

    ரிப்போர்ட்டை எப்போ தாக்கல் பண்ணனும்?

    இந்த மாசம் பதினஞ்சாம் தேதி.

    சர்வஜித் சுவாமிகள் சில விநாடிகள் மௌனமாய் இருந்து விட்டு பிறகு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

    இன்னிக்குத் தேதி அஞ்சு. அறிக்கை தாக்கல் பண்ண இன்னும் பத்து நாள் இருக்கு.. உங்க ஜென்ம நட்சத்திரம் என்ன?

    ரோகிணி...!

    நீங்க கடைசியாய் கும்பகோணத்துக்கு எப்ப போனீங்க?

    நாலைஞ்சு வருஷம் இருக்கும்...

    கும்பகோணத்தைச் சுற்றிலும் இருக்கிற நவக்கிரக ஸ்தலங்களுக்குப் போய் தரிசனம் பண்ணீங்களா?

    இல்லை...

    இப்ப போய்ட்டு வாங்க.. இன்னிக்கு வந்த பிரச்னை, இனிமேல் வரப் போகிற பிரச்னை எல்லாமே தானா காணாமே போயிடும்.

    ஸ்வாமி...!

    மனசுக்குள்ளே எந்த ஒரு கலக்கமும் வேண்டாம். நீங்க நீதிபதியாய் இருந்தவரைக்கும் மக்களுக்கு நியாயமான தீர்ப்புகள் கிடைச்சுட்டு வந்தது. அது இனிமேலும் தொடரணும். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு இது ஒரு சோதனையான காலகட்டம். மனுஷங்களுக்கு சோதனை வராமல் வேற யார்க்கு வரும்... ஆனா எந்த ஒரு சோதனை வந்தாலும் அதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு... அந்தப் பரிகாரத்தைப் பண்ணினா சரியாய் போயிடும். நாளைக்கே கும்பகோணம் கிளம்புங்க...

    கஜபதிராவ் எழுந்து நின்று மறுபடியும் கைகளைக் குவித்தார். இப்பவே என்னோட மனசுக்குள்ளே இருக்கிற கலக்கமெல்லாம் காணாமல் போன மாதிரி இருக்கு ஸ்வாமி. நீங்க சொன்ன மாதிரி நான் நாளைக்கே என் மனைவியோடு கும்பகோணம் கிளம்பறேன்!

    போய்ட்டு வாங்க.. சந்தோஷமாய் சந்திப்போம்.

    சர்வஜித் சுவாமிகள் ஒரு புன்னகையோடு சொல்லிவிட்டு அந்த அறையினின்றும் நகர்ந்து வெளிப் பக்க வராந்தாவுக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தார்.

    நீளமான வராந்தா.

    நிதானமான நடை போட்டு நடக்க - காற்று அவரை அலம்பிக் கொண்டு போயிற்று. சற்றுத் தொலைவில் அன்னதானக்கூடமும், அதற்கு வெளியே காத்திருந்த பக்தர் கூட்டமும் தெரிந்தது.

    ஏதோ ஒரு யோசனையோடு தன்னுடைய வழக்கமான இருப்பிடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சுவாமிகள் அங்கிருந்த ஒரு தூணின் மறைவுக்குப் பின்னால் தெரிந்த ஒரு நடுத்தரவயதுப் பெண்ணைப் பார்த்ததும் நின்றார். தன் நெற்றியில் சுருக்கங்கள் விழ அவளைப் பார்த்தார்.

    மரகதம்...

    அந்தப் பெண் தயக்கமாய் தூணின் மறைவிலிருந்து வெளிப்பட்டாள். அவளுடைய முகம் வெளிறிப் போயிருக்க - கண்களில் மிரட்சியும் கலக்கமும் தெரிந்தன.

    என்ன மரகதம்... தூணுக்குப் பின்னாடி நின்னுகிட்டு என்ன பண்ணிட்டிருக்கே...?

    ஸ்வாமி! உங்களைப் பார்க்கத்தான் ரொம்ப நேரமாய் இங்கே நின்னுட்டிருக்கேன்!

    என்ன விஷயம்...?

    வறண்டு போயிருந்த மரகதம் குரலைத் தாழ்த்தினாள். ஸ்வாமீ! நம்ம மூலிகை நந்தவனத்துக்குள்ளே வலது கோடியில் மூங்கில் புதர்க்குப் பின்னாடி ரத்தக் காயங்களோடு யாரோ செத்துக் கிடக்கிறாங்க...!

    படித்தேன்... வியந்தேன்:

    யோகா கலையால் அஷ்ட சித்திகளையும் ‘தன் மாத்திரை’ மூலம் அடையலாம். மனதை நிலை நிறுத்தி தியானிப்பதால் ‘அணிமா’ என்ற சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை அணுவைப் போல் மிகமிகச் சிறிய வடிவமாக எடுக்கலாம். மஹத் என்னும் மந்திரத்தை தியானிப்பதின் மூலம் ‘மஹிமா’ என்ற சித்தியைப் பெறலாம். இந்த சித்தி மூலம் தன் உடலை மலை போல மிக மிகப் பெரிதாக்கிக் கொள்ள முடியும். ‘பரமாணு’ என்னும் மந்திரத்தை தியானிக்கும் போது ‘வகிமா’ என்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1