Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinna Thappu Periya Thappu
Chinna Thappu Periya Thappu
Chinna Thappu Periya Thappu
Ebook119 pages38 minutes

Chinna Thappu Periya Thappu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Chinna Thappu Periya Thappu

Read more from Rajeshkumar

Related to Chinna Thappu Periya Thappu

Related ebooks

Related categories

Reviews for Chinna Thappu Periya Thappu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinna Thappu Periya Thappu - Rajeshkumar

    24

    1

    அந்த டிசம்பர் மாதத்து விடியற்காலை, கோவையை ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த மாதிரி ஜில்லிப்பாக்கியிருக்க- சூரியன் சூடு மழுங்கிப்போன கதிர்களோடு கிழக்கில் தலை நீட்டிக் கொண்டிருந்தான்.

    சிறைச்சாலை என்று அரை வட்டமாய் எழுதப்பட்டு- நிசப்தம் பரவியிருந்த அந்த காம்பௌண்டுக்குள் - வரிசையான கருங்கல் அறைகளைக் கடந்து டக்டக்கென்று ஷூ சத்தத்தோடு நடந்து கொண்டிருந்தார்கள் அந்த இரண்டு ஆர்டர்லிகள். பேசினார்கள்.

    ரிலீஸ் ஆகறவன் யார் தெரியுமா?

    தெரியாதே--, நான் இன்னிக்குத்தானே ட்யூட்டிக்கு வர்றேன்.

    பேரு குமரேசன்.

    ஏதாவது கொலை பண்ணிட்டு உள்ளே வந்த வனா?

    பெரிய ஸ்மக்லர். கள்ளக் கடத்தல்ல கைதேர்ந்த ஆளு. அவ்வளவு சுலபமா மாட்டிக்கவே மாட்டான். இந்த தடவை எப்படியோ மாட்டிக்கிட்டான்.

    இவன் கிட்டே சொல்லித்தான் வீட்டுக்கு ஒரு ஃபாரின் வால்கிளாக் வாங்கணும்.

    அந்த அறைக்கு முன்னால் நின்றார்கள். ஒரு ஆர்டர்லி குனிந்து லாக்கைத் திறந்தார்.

    தொளதொளப்பான கை வைத்த பனியனும், அரை டிராயரும் அணிந்திருந்த குமரேசன் திட்டின் மேல் உட்கார்ந்திருந்தான். நீள்வட்ட முகம். தாடி, கவிழ்த்து வைத்த முக்கோணமாய்த் தெரிந்தது.

    வாப்பா குமரேசா! இன்னிக்கு நீ ரிலீஸ் ஆகறே!

    நேத்தே வார்டன் சொன்னாரு.

    குமரேசன் எழுந்து நின்றபோது ரோலர் மாதிரியான உடம்புவாகில் தெரிந்தான். ஆர்டர்லிகளோடு லாக்கப்பைவிட்டு வெளியே வந்தான். வார்டன் அறையை நோக்கி நடந்தபோது-

    கம்பிகளைப் பிடித்துக் கொண்டு, ரிலீஸாகிற குமரேசனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற- அவனுக்குப் பரிச்சயமான மற்ற கைதிகள் கையசைத்தார்கள். புன்னகைத்தார்கள்.

    வார்டன் முகத்திற்குக் கண்ணாடியைக் கொடுத்து டிசம்பர் குளிருக்கு கேடயமாக ஸ்வெட்டர் அணிந்திருந்தார். அகலமான பேப்பரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். காலடியோசை சத்தம் கேட்டு நிமிர்ந்தார்.

    அவருடைய மேஜைமேல் ஓரமாக அவனுடைய பேண்ட் சர்ட் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒரு ஆர்டர்லி அதை எடுத்துத் தந்தார்.

    ட்ரஸ் மாத்திட்டு வா.

    இரண்டு நிமிஷத்தில் மாற்று உடையில் திரும்பி வந்தான். கையால் தலைமுடியைக் கோதிவிட்டுக்கொண்டு வார்டனின் மேஜைக்கருகே நின்றான்.

    குமரேசா, ஜெயில்ல நீ செஞ்ச வேலைக்கு முந்நூத்தி சொச்சம் பணம் வந்திருக்கு. ஸ்டாம்ப்ல கையெழுத்து போட்டு அவர்கிட்டே வாங்கிக்க.

    சரிங்க.

    குமரேசன் பணம் விநியோகிக்கிற டேபிளை நோக்கி நடக்க ஆரம்பித்த போது வார்டன் குரல் கொடுத்து நிறுத்தினார்.

    ஒரு நிமிஷம் வந்துட்டுப் போ.

    வந்தான்.

    மறுபடியும் வெளியே போய் பழைய தொழிலையே ஆரம்பிச்சுடாதே. நேர்மையா- ஒழுக்கமா சம்பாதி.

    குமரேசன் அலட்சியமாய்ச் சிரித்தான்.

    ட்ரை பண்றேன் சார்.

    கையெழுத்தை ஸ்டாம்ப்பின் மேல் கிறுக்கிவிட்டு ரூபாய் நோட்டுக்களை மட்டும் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு சில்லறைகளை மேஜை மேலேயே விட்டுவிட்டு நடந்தான்.

    சென்ட்ரி விக்கெட் கதவை அவனுக்காகத் திறக்க வெளிச்சமான வாசலுக்கு வந்தான். விக்கெட் கதவு மறுபடியும் சாத்திக் கொண்டது. குமரேசன் விடுதலைக் காற்றை நீளமாய் சுவாசித்தான்.

    பனி மஸ்லின் துணி மாதிரி சுற்று வட்டாரத்தைப் போர்த்தியிருக்க தூரத்து ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தான். முன்பாக நின்றிருந்த ஆட்டோவில் ஏறி இடத்தைச் சொல்ல - ஆட்டோ கோவையின் காலை வீதிகளில் குலுங்கியது.

    ஆட்டோ ஓட ஓட - பெட்டிக் கடைகளில் தொங்குகிற நியூஸ் பேப்பர் போஸ்டர்களில் தலைப்புச் செய்திகள் படிக்க முயற்சித்தான். பேன்ட் பாக்கெட்டில் எதுவோ அழுத்த கைவிட்டுத் துழாவினான்.

    ஆறு மாசத்துக்கு முன்னால் ஜெயிலுக்குப் போன போது உள்ளே வைத்திருந்த சின்ன டைரி, லைட்டர், ஒரு பேனாக் கத்தி, பால்பாயிண்ட் பேனா தட்டுப்பட்டது. ஒரு பெட்டிக்கடை அருகே ஆட்டோவை நிறுத்தி, சிகரெட் ஒன்றை உருவி - உதட்டில் பொருத்தி லைட்டர் ஜ்வாலையில் அதற்கு உயிர் கொடுத்தான். சிகரெட்டின் ஆயுள் முடிந்தபோது - ஆட்டோ அந்த டெரஸ் வீட்டின் முன்னால் நின்றது. தீர்ந்த சிகரெட்டை வீசிவிட்டு - சார்ஜ் தந்து விட்டு வீட்டு வாசற்படி ஏறினான்.

    காலிங்பெல்லை வீட்டுக்குள் கதறவிட்டான்.

    ஜன்னல்

    Enjoying the preview?
    Page 1 of 1