Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Evan Avan and Poovil Seitha Aayutham!
Evan Avan and Poovil Seitha Aayutham!
Evan Avan and Poovil Seitha Aayutham!
Ebook542 pages3 hours

Evan Avan and Poovil Seitha Aayutham!

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Evan Avan and Poovil Seitha Aayutham!

Read more from Rajeshkumar

Related to Evan Avan and Poovil Seitha Aayutham!

Related ebooks

Related categories

Reviews for Evan Avan and Poovil Seitha Aayutham!

Rating: 3.5 out of 5 stars
3.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Evan Avan and Poovil Seitha Aayutham! - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    கண் சிமிட்டும் ஆபத்துகள்:

    செய்தித்தாளில் வந்த செய்தி இது. தேவாரம் அருகே அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடம் மிக ஆபத்தான திட்டம். கண்களுக்குத் தெரியாத நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்து பூமிக்குள் இருக்கின்ற இயற்கை வளங்களை அமெரிக்காவுக்கு அறிக்கையாகத் தந்துவிட்டு 5 ஆண்டுகளில் மூடிவிடுவார்கள். பின்பு இந்தியாவில் உள்ள அணு உலைகளின் கழிவுகளைக் கொட்டுகின்ற இடமாக நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். அணுக்கழிவுகளின் வீரியம் 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அணுக்கதிர் வீச்சுகள் எக்காலத்திலும் மறைந்து போகாது.

    1

    விவேக் தன்னுடைய ஸ்மார்ட் போனில் தீவிரமாய் இருக்க, சுடச்சுட பக்கோடா நிரம்பிய தட்டும், ஏலக்காய் வாசனையோடு கூடிய டீ நிரம்பிய டம்ளர்களுமாய் அவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் ரூபலா.

    விவேக் இன்னமும் செல்போனில் பிடிவாதமாய் இருந்தான். ரூபலா பொறுத்து பொறுத்துப் பார்த்துவிட்டு பொருமினாள்.

    நான் உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்து ரெண்டு நிமிஷமாச்சு...!

    விவேக் செல்போனிலிருந்து பார்வையைத் திருப்பாமல் ஏன் பொய் சொல்றே ரூபி... நீ வந்து முப்பது செக்கண்ட்ஸ்தான் ஆச்சு...! என்றான்.

    சரி... அப்படியே இருக்கட்டும். என்னை ஏறிட்டுப் பார்க்காமே போனாக்கூட பரவாயில்லை. இந்த வெங்காய பக்கோடாவையாவது சின்னதாய் ஒரு பார்வை பார்த்து இருக்கலாமே!

    அதானே...! வெங்காய பக்கோடாவைக் கூட கண்ணெடுத்துப் பார்க்காமே அப்படி என்னத்தைத்தான் பாஸ் செல்போன்ல பார்த்துட்டு இருக்காரோ...?

    தனக்குப் பின் பக்கம் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் ரூபலா. பக்கத்து அறையில் இருந்த செல்ஃபில் எதையோ தேடிக் கொண்டிருந்தான் விஷ்ணு. ரூபலா திகைத்தாள்.

    டே.. டேய்...! நீ எப்படா வீட்டுக்குள்ளே வந்தே?

    நான் வந்து பதினைஞ்சு நிமிஷமாச்சு...!

    என்னங்க.. இவன் வந்தது உங்களுக்குத் தெரியுமா?

    செல்போனிலிருந்து நிமிராமல் தெரியும்! என்றான் விவேக்.

    எதுக்காக இப்ப வந்திருக்கான்?

    அவனையே கேளு ரூபி!

    ரூபி விஷ்ணுவிடம் திரும்பினாள்.

    சொல்லுடா!

    மேடம்...! ‘வாட்ஸ் அப்’ல வாசனை வந்தது. அதான் உடனே புறப்பட்டு வந்துட்டேன்!

    " ‘வாட்ஸ் அப்’ல வாசனை வந்ததா...?

    ஆமா மேடம்... வெங்காயப் பக்கோடா வாசனை. அதான் உடனே புறப்பட்டு வந்துட்டேன்!

    உனக்கு கழுகு மூக்குடா...!

    எங்க பரம்பரைக்கே அப்படித்தான் மேடம்...! என்னோட தாத்தா கூட ஒரு கழுகு வளர்த்துட்டு இருந்தார். பகல் பூராவும் ஆகாயத்துல சஞ்சாரம் பண்ணிட்டு ராத்திரி ஏழுமணிக்கெல்லாம் சரியாய் வீட்டுக்கு வந்து அவரோட தோள் மேல் உட்கார்றதைப் பார்க்க தினசரி வாசல்ல ஒரு டூரிஸ்ட் கூட்டம் காத்திட்டிருக்கும்!

    சரி...! இப்ப அங்க என்னடா தேடிட்டு இருக்கே?

    கடலை உருண்டை போட்டு வெச்ச டப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி இங்கதானே இருந்தது?

    என்னங்க... இவனை என்ன பண்ணலாம்?

    விவேக் அப்பவும் செல்போனிலிருந்து நிமிராமல் இருக்கவே ரூபலா கோபத்தின் விளிம்புக்குப் போனாள்.

    செல்போன்ல அப்படி என்னத்தைப் பார்த்துட்டு இருக்கீங்க...?

    மேடம்...! பாஸை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. ஃபேஸ்புக்ல போலீஸ் டிபார்ட்மெண்ட் சம்பந்தமாய் ஒரு முக்கியமான ஸ்டேட்டஸைப் போட்டிருந்தாங்க... அதைப் படிச்சுப் பார்க்கும்படியாய் நான்தான் சொன்னேன்.

    அப்படியென்ன ஸ்டேட்டஸ்?

    கடலை உருண்டை டப்பாவோடு விவேக்குக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் விஷ்ணு.

    பாஸ்! அந்த ஸ்டேட்டஸைப் படிச்சுட்டீங்களா?

    ம்.. படிச்சுட்டேன்!

    செல்போனை மேடத்துகிட்டே குடுங்க... படிக்கட்டும். அதுவரைக்கும் நீங்க இந்த கடலை உருண்டையைச் சாப்பிடுங்க. நான் உங்களுக்கும் எனக்கும் பிடிக்காத இந்த வெங்காயப் பக்கோடாவை எப்படியோ கஷ்டப்பட்டாவது சாப்பிட்டு முடிச்சுடறேன்...!

    என்னங்க.. இவன் என்னென்னமோ சொல்றான்! அது என்ன ஸ்டேட்டஸ்...?

    உனக்கு இப்ப கிச்சன்ல எந்த வேலையும் இல்லையே?

    இல்லை...!

    இந்தா.. படி...! விவேக் நீட்டிய செல்போனை வாங்கினாள் ரூபலா.

    ‘நான் ஒரு டாக்டர் பேசுகிறேன்’ என்னும் தலைப்பில் அந்த ஸ்டேட்டஸ் போடப்பட்டு இருந்தது.

    இவர் என்னங்க சொல்லியிருக்கார்?

    படிச்சுப் பாரு ரூபி... இன்னிக்கு சிட்டியில் இருக்கிற டாக்டர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர். அவர் தன்னோட மனக் குமுறலை எப்படி கொட்டியிருக்கார்ன்னு படிச்சுப் பாரு...!

    ரூபலா படிக்க ஆரம்பித்தாள்.

    "நான் கோவையிலிருந்து ஈரோட்டுக்கு காரில் போய்க் கொண்டிருந்தேன். ராத்திரி பத்து மணி இருக்கும். அவிநாசியைத் தாண்டியதும் ஒரு கிராமத்தைக் கடந்து கார் போய்க் கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் யாரோ ஒரு நபர் தலையில் அடிபட்டு லேசாய் புரண்டு கொண்டிருப்பது என் கண்களில் பட்டது. உடனே நான் காரின் வேகத்தைக் குறைத்து ரோட்டோரமாய் நிறுத்தினேன். அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த வாகனங்களில் இருப்பவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்தாலும் நின்று பார்க்காமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருந்தார்கள்.

    நான் காரினின்றும் இறங்கினேன். யாராவது உதவிக்கு வந்தால் பரவாயில்லையே என்று நினைத்து சில கார்களை நிறுத்திப் பார்த்தேன். விஷயத்தை சொன்னதும் அவர்கள் பீதி படர்ந்த முகங்களோடு ஒரு ‘ஸாரி’ சொல்லிவிட்டு கார்களை நகர்த்திவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நானே அந்த அடிபட்ட நபரை நெருங்கினேன். ஏதோ ஒரு வாகனம் மோதியதில் அவருடைய தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெகுவாய் வெளியேறியிருந்தது. உடம்பை மெள்ளப் புரட்டிப் பார்த்தேன். துடிப்பு அடங்கிப் போய் உயிர் பிரிந்து விட்டது என்பதை என்னுடைய மருத்துவ அறிவு சொன்னது.

    இனிமேல் மருத்துவமனைக்குக் கொண்டு போவதால் எந்தவித பயனும் இல்லாததால் அவசர போலீஸ் எண்ணை என் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். அந்த கண்ட்ரோல் ரூம் போலீஸ் அதிகாரி எந்தவிதமான அதிர்ச்சியையோ, டென்ஷனையோ காட்டாமல் நிதானமான குரலில் கேட்டார். குரலில் சற்றும் மரியாதை இல்லை.

    இப்ப நீங்க எங்கே இருக்கீங்க...?

    இடத்தைச் சொன்னேன்.

    நீங்க உடனடியாய் ஒரு காரியம் பண்ணுங்க. நீங்க இருக்கற இடத்தில் இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி ஹைவேஸ்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. அங்கே இன்ஸ்பெக்டர் இருப்பார். இன்ஃபார்ம் பண்ணிட்டு போயிடுங்க. மத்த ஃபார்மாலிடீஸையெல்லாம் அவர் பார்த்துக்குவார்.

    மறு முனையில் இருந்த அதிகாரி இயந்திரத்தனமாய் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட, நானும் வேறு வழியில்லாமல் செல்போனை அணைத்தேன். இறந்துபோன நபரை ஒரு பரிதாபப் பார்வையால் நனைத்துவிட்டு காரில் புறப்பட்டேன். அந்த போலீஸ் ஸ்டேஷன் ‘நெடுஞ்சாலை காவல் நிலையம்’ என்கிற பெயர்ப்பலகையைத்தாங்கித் தெரிய, நான் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனேன்.

    ஒரு நடுத்தர வயது இன்ஸ்பெக்டர் அந்த நேரத்திலும் கடமை உணர்வோடு கனமான ஒரு ஃபைலைப் புரட்டிப் பார்த்து ஏதோ குறிப்புகள் எடுத்து எழுதிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், பார்த்துக்கொண்டிருந்த ஃபைலைத் தள்ளிவைத்து விட்டு எஸ்... என்றார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மரியாதை கொடுத்து எழுந்து நின்று கைகுலுக்கினார். உட்காரச் சொல்லிவிட்டு விஷயம் என்னவென்று கேட்டார். நான் விஷயத்தை சொன்னதும் பதற்றப்பட்டார்.

    இப்படித்தான் டாக்டர்.. ரோட்ல ஓரமா போறவனை ஏதாவது ஒரு வாகனம் தூக்கி வீசிட்டுப் போயிடும். ஒரு மாசத்துல இப்படி ரெண்டு மூணு சம்பவமாவது நடந்துடும். அடிபட்டவன் ரோட்டோரமாய் விழுந்து கிடப்பான். யாரும் கண்டுக்க மாட்டாங்க. நீங்க ஒரு டாக்டராய் இருந்ததால பொறுப்புணர்வோடு தகவல் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்து இருக்கீங்க. ரொம்பவும் நன்றி. இனிமே நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன். - சொன்னவர் மேஜையின் மேலிருந்த ப்ளாஸ்க்கை எடுத்து டிஸ்போஸல் டம்ளரில் காப்பி ஊற்றிக் கொடுத்தார். நான் வேண்டாம் என்று சொல்லியும், என்ன டாக்டர்! ரோட்ல அடிபட்டுக் கிடந்த ஒருத்தனை மனிதாபிமானத்தோடு போய்ப் பார்த்து இருக்கீங்க. அவன் உயிரோடு இல்லைன்னு தெரிஞ்சதும் உங்க வேலையை எல்லாம் விட்டுட்டு வந்து இன்ஃபர்மேஷன் கொடுத்து இருக்கீங்க. மனிதாபிமானம் செத்துப் போய்விட்ட இந்தக் காலத்துல உங்களை மாதிரி இருக்கிறவங்களைப் பெருமைப்படுத்தணும். என்னோட சந்தோஷத்துக்காக ஒரு வாய் காப்பி சாப்பிடுங்க என்றார்.

    நானும் அவருடைய அன்புக்குக் கட்டுப்பட்டு காப்பி குடித்துவிட்டு புறப்பட்டேன். இன்ஸ்பெக்டர் என்னுடைய கார் வரைக்கும் வந்து வழியனுப்பி வைத்தார்.

    காரில் நான் பயணம் செய்து ஈரோடு போய் சேரும் வரை அந்த நபரின் மரணம் என்னைப் பெரிதாய் பாதித்தது. சரியான நேரத்துக்கு யாராவது உதவிக்கு வந்து இருந்தால் அந்த நபரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று காப்பாற்றியிருக்கலாமே என்கிற ஆதங்கமும் எனக்குள்ளே எழுந்தது. இருந்தாலும் உரிய நேரத்தில் போலீஸுக்குத் தகவலைக் கொண்டு போய் சேர்த்ததில் ஒரு சின்ன மகிழ்ச்சியும் எனக்குள் இருந்தது.

    ரூபலா இந்த இடத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு விவேக்கையும், விஷ்ணுவையும், பார்க்க, விஷ்ணு பக்கோடாவை இரண்டு கடைவாய்ப் பற்களிலும் மாறி மாறி அரைத்துக் கொண்டே சொன்னான்.

    மேற்கொண்டு படிங்க மேடம்!

    ரூபலா படிக்க ஆரம்பித்தாள்.

    ஒரு மாதம் கழித்து எனக்கு ஒரு போன்கால் வந்தது. அந்த இன்ஸ்பெக்டர்தான் கூப்பிட்டார்.

    டாக்டர்! ஒரு சின்ன ஃபார்மாலிடி. நீங்க நாளைக்கு காலைல பத்துமணிக்கு ஸ்டேஷனுக்கு வரணும்!

    நாளைக்கு எனக்கு நிறைய ஓ.பி. அப்பாய்ட்ண்மெண்ட்ஸ் இருக்கே!

    ப்ளீஸ்... டாக்டர்... ஒரு பத்து நிமிஷம் வந்துட்டுப் போனா பரவாயில்லை. என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

    ‘ஒரு மாசம் கழித்து எதற்காக போன்?’

    போலீஸ் அழைப்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமே என்பதற்காக நான் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் போனேன்.

    அந்த இன்ஸ்பெக்டர் எனக்கு ஒரு புன்னகையோடு வணக்கம் சொல்லி தனக்கு எதிரே இருந்த இருக்கையைக் காண்பித்தார். நான் வேண்டாமென்று சொல்லியும் காப்பி வரவழைத்துக் கொடுத்தார். பாதி காப்பியில் நான் இருந்த போது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

    டாக்டர்! போன மாசம் ரோட்டோரம் கிடந்த ஒரு பாடியைப் பார்த்துட்டு வந்து தகவல் கொடுத்தீங்களே?

    ஆமா...?

    அது ஆக்ஸிடெண்ட் இல்லை!

    பின்னே?

    கொலை!

    குடித்துக் கொண்டிருந்த காப்பியை அப்படியே வைத்து விட்டேன்.

    கொலையா...?

    ஆமா.. டாக்டர்... யாரோ கடப்பாரையாலே மண்டையில் ஒரு போடு போட்டிருப்பாங்க போலிருக்கு. போஸ்ட் மார்ட்டம் க்ளீயரா சொல்லுது. கொலை செய்யப்பட்டவன் ஒரு கட்டிடத் தொழிலாளி. அதைக் கண்டு பிடிச்சுட்டோம். ஆனா கொலயாளி யார்ன்னு தெரியலை. கண்டு பிடிக்கவும் முடியலை. மேலே இருந்து ஏகப்பட்ட ப்ரஷர். கேஸை ஒரு முடிவுக்குக் கொண்டு வரணும். அதுக்கு உங்க உதவி தேவை!

    என்ன உதவி?

    இது கொலை விவகாரம். போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் சொன்னாலும் நாங்க எஃப்.ஐ.ஆர். ரிப்போர்ட்ல ஆக்ஸிடெண்ட்ன்னுதான்னு பதிவு பண்ணியிருக்கோம். ஆளை நேர்ல பார்த்த ஒரே சாட்சி நீங்கதான். கோர்ட்டுக்கு வந்து சாட்சி கூண்டுல ஏறி ரெண்டு வார்த்தை நீங்க சொன்னா போதும்.

    என்னான்னு சொல்லணும்...?

    வெரி சிம்பிள் டாக்டர்...! வண்டி வரும் போது ரோட்ல ஒருத்தன் இருட்டுல தள்ளாடிகிட்டே வந்தான். திடீர்ன்னு ஒரு கார்க்கு முன்னாடி தடுமாறி விழுந்ததைப் பார்த்தேன். கார் அவன் மேலே மோதிட்டு நிக்காமே போயிடுச்சு... நான் இறங்கிப் போய்ப் பார்த்தேன். ஆள் ஸ்பாட் அவுட். சாராய வாடை. அவ்வளவுதான் ஸார்...!

    அப்படி எப்படி நான் சொல்ல முடியும்...? ஒரு டாக்டராய் இருந்துட்டு நான் பொய் சொல்லலாமா...?

    இன்ஸ்பெக்டர் ஒரு கோணல் சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னார்.

    அப்படீன்னா உண்மையைச் சொல்லிடுங்க...!

    உண்மையா...? என்ன உண்மை?

    உங்க கார்லதான் அவன் அடிபட்டு செத்துட்டான்னு!

    நான் அதிர்ந்து போய் எழுந்தேன்.

    என்ன இன்ஸ்பெக்டர்.... விளையாடறீங்களா?

    இது விளையாட்டில்லை டாக்டர்.. ஒரு கேஸை முடிவுக்கு கொண்டு வரணும்ன்னா இப்படிப்பட்ட ஃபார்மாலிடீஸையெல்லாம் செய்ய வேண்டியிருக்கு. ஒரு குடிகாரன் மேல நீங்களாக காரைக் கொண்டு போய் மோதலை. அவனாகவே வந்து காரின் குறுக்கே விழுந்துட்டான். கோர்ட்ல இதை நீங்க சொன்னா ஜட்ஜ் உங்களைக் குற்றவாளியாய் நினைக்க மாட்டார். இது ஒரு விபத்துன்னு சொல்லி கேஸை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்...!

    நான் கோபப்பட்டேன்.

    நோ.. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். நான் என்னோட லாயர்கிட்டே கலந்து பேசிட்டு...!

    எதுக்கு டாக்டர்.. இந்த விஷயத்தைப் பெரிசு பண்றீங்க? நீங்க லாயர்கிட்ட போனா விஷயம் மீடியாவுக்குப் போயிடும். பரவாயில்லையா? நான் சொன்னபடி நடந்துட்டா உங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை.

    எனக்குப் பொறியில் மாட்டிக் கொண்ட எலியின் உணர்வு. யோசித்துப் பார்த்தேன். வேறு வழியில்லை. இன்ஸ்பெக்டரோடு ஒத்துப் போக வேண்டியதுதான்.

    தலையை ஆட்டி வைத்தேன்.

    கேஸ் கோர்ட்டுக்குப் போயிற்று. ஒரு வாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிடும் என்று இன்ஸ்பெக்டர் சொன்னார். ஆனால் ஆறுமாதம் கேஸ் நடந்தது. அரசு வழக்கறிஞர் என்னை சாட்சிக் கூண்டில் நிறுத்தி வைத்து கதறக்கதற கேள்விகள் கேட்டு நான் பதில் - சொல்லி ஒரு வழியாய் கொலையாளி என்கிற பழிச்சொல்லில் இருந்து தப்பித்து நான் நிரபராதி என்று என்னை நிரூபித்து வெளியே வருவதற்குள் இரண்டாய் உடைந்து போனேன். மனசளவில் நான் பாதிக்கப்பட்டதால் என்னுடைய மருத்துவப் பணியையும் என்னால சரிவர கவனிக்க முடியவில்லை.

    இந்த சம்பவத்துக்குப் பிறகு இப்போதெல்லாம் காரில் போனால் நடுவில் அவசரமாய் ‘உச்சா’ வந்தாலும் கூட நான் காரை நிறுத்துவது இல்லை.

    முகநூல் பதிவு அதோடு முடிந்து போயிருக்க, ரூபலா கலவர முகத்தோடு நிமிர்ந்தாள்.

    என்னங்க இது அநியாயம்...? ஒரு டாக்டர்க்கே இந்த நிலைமையா...?

    விஷ்ணு ஒட்டு மொத்த பக்கோடாவையும் கபளீகரம் செய்து விட்டு தட்டில் இருந்த தூளைப் பொறுக்கி சாப்பிட்டுக் கொண்டே சொன்னான்:

    மேடம்...! இந்த முகநூல் பதிவைப் படிச்சுட்டு உங்களுக்கே இவ்வளவு கோபம் வந்தா எனக்கு எவ்வளவு கோபம் வந்து இருக்கும். அந்த கோபத்தைப் பங்கு போட்டுக்கத்தான் பாஸ் கிட்டே வந்தேன். நான் வந்த நேரம் நல்ல நேரம். ஒன்மோர் பிளேட் பக்கோடா மேடம்!

    ரூபலா விஷ்ணுவின் கேளிக்கையை காதில் போட்டுக் கொள்ளாமல் விவேக்கிடம் திரும்பினாள்.

    என்னங்க... இப்படிக் கூட இன்ஸ்பெக்டர் இருப்பாரா?

    இதோ பார் ரூபி... போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ஒரு சிலர் அப்படியிருக்கலாம். அந்த இன்ஸ்பெக்டர் டாக்டர்கிட்ட ஏன் அப்படி நடந்துக்கிட்டார்ன்னு அவர்கிட்டே கேட்டாத்தான் தெரியும். ஒரு சிலர் போலீஸுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு தராதபோதும் டிபார்ட்மெண்ட் பீப்பிள் அப்படி நடந்துக்க வாய்ப்பு இருக்கு...!

    விஷ்ணு குறுக்கிட்டான்.

    மேடம்...! பாஸ் என்னிக்குமே போலீஸ் டிபார்ட்மெண்ட்டை விட்டுக் கொடுக்கமாட்டார். ஆனா இந்த விஷயத்தை நான் சும்மா விடப் போவதில்லை. அந்த இன்ஸ்பெக்டர் யாரு... டாக்டர் யாருன்னு கண்டுபிடிச்சு நியாயம் யார் பக்கம் இருந்ததுன்னு இன்வெஸ்டிகேட் பண்ணப் போறேன்.

    ரூபலா கேட்டாள்.

    உன்னால முடியுமா விஷ்ணு?

    என்ன மேடம்... இப்படி கேட்டுட்டீங்க...? நம்ம சைபர் க்ரைம் ப்ராஞ்சில் சைமன்னு ஒருத்தர் இருக்கார். அமெரிக்காவின் நாஸாவில் வேலை பார்க்க வேண்டியவர் சைதாப்பேட்டை க்ரைம் ப்ராஞ்சில் உட்கார்ந்துகிட்டு ஃபேஸ் புக்கிலேயும், ட்விட்டர்லேயும் எவனெவன் வாலாட்டிகிட்டு இருக்கான்னு கண்காணிச்சு உளவுத்துறைக்கு ஃபார்வேர்ட் பண்ணிட்டிருக்கார். அவர்கிட்டே இந்த விஷயத்தைக் கொண்டு போனா போதும். உண்மை என்னான்னு தெரிஞ்சுடும். அதுக்கு முன்னாடி எனக்கு...

    இன்னொரு பிளேட் பக்கோடா வேணும்

    பாஸ் மாதிரியே உங்களுக்கும் கற்பூர மூளை மேடம்.

    ரூபலா ஒரு சின்ன முறைப்போடு கிச்சனை நோக்கிப் போக, விஷ்ணு குரல் கொடுத்தான்.

    தட்டு பெரிசாய் இருக்கட்டும் மேடம்!

    விவேக் விஷ்ணுவின் தலையை செல்லமாய் தட்டி சிரித்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்போன் ரிங்டோனை மெலிதாய் வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

    அவனுடைய இம்மீடியட் பாஸ் சீஃப் டைரக்டர் விஸ்வேஸ்வரன் செல்போனின் டிஸ்ப்ளேயில் முகம் காட்டினார்.

    விவேக், ஹேண்ட்செட்டை எடுத்து காதுக்கு ஒற்றினான்.

    ஸார்!

    விவேக்! நீங்க இப்போ எங்கே இருக்கீங்க?

    வீட்லதான் ஸார்!

    சரி..! உங்க ‘வாட்ஸ் அப்’க்கு ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன். அதைப் பார்த்துட்டு என்கூட பேசுங்க...!

    ஒரே நிமிஷம் ஸார்! - சொன்ன விவேக் தன் செல்போனின் ‘வாட்ஸ் அப்’பை ஓப்பன் செய்து சீஃப் டைரக்டர் விஸ்வேஸ்வரன் அனுப்பி வைத்து இருந்த போட்டோவைப் பார்த்தான்.

    லேசாய் முகம் மாறினான்.

    என்ன ஸார்.. இப்படிப்பட்ட போட்டோ?

    அதிர்ச்சியாய் இருக்கா...?

    ரொம்பவும்..

    "நேர்ல பார்த்தா.. இன்னமும் அப் நார்மலாய் இருக்கும். நான் சொல்ற அட்ரஸுக்கு உடனே புறப்பட்டு வாங்க!

    சொல்லுங்க ஸார்!

    நோட் பண்ணிக்குங்க. தேவசகாயம், நெம்பர் 13, ஞான ஒளி நகர், நியூ ஆவடி ரோடு...!

    ஒரு மணிநேரத்துக்குள்ளே வந்துடறேன் ஸார்

    கண் சிமிட்டும் ஆபத்துகள்:

    நமது பூமியுருண்டையில் நாம் பத்திரமாக இருப்பது போல் தோன்றினாலும் ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. இன்னும் 20 ஆண்டுகளில் பூமியை வால் நட்சத்திரம் ஒன்று தாக்கி மாபெரும் பிரளயத்தை உண்டாக்கப் போகிறது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த விண்ணியல் விஞ்ஞானி கிரஹாம் ஹென்ஹாக் திட்டவட்டமாகச் சொல்லியுள்ளார். அவர் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பூமியின் அழிவு என்பது நெருப்பு அல்லது வெள்ளத்தால் மட்டுமே ஏற்பட்டுள்ளது. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு வால் நட்சத்திரம் நமது பூமியைத் தாக்கியதில் பல விலங்கினங்கள் அழிந்து போனது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது அதே மாதிரியான ஒரு வால் நட்சத்திரம் 2036-ம் ஆண்டு பூமியைத் தாக்கிப் பெரிய அழிவை உண்டாக்கப் போகிறது. இந்த வால் நட்சத்திரத்தின் தாக்கம் என்பது ஓர் அணுகுண்டை வெடிக்க வைக்கும் போது ஏற்படும் அழிவைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாய் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சர்வதேச விண்ணியல் விஞ்ஞானிகள் குழு கவலை தெரிவித்துள்ளது.

    2

    இரவு பதினோரு மணி.

    ஹைதராபாத்.

    ராஜீவ்காந்தி இண்ட்டர்நேஷ்னல் ஏர்போர்ட்.

    விமான நிலையம் முழுவதும் ஒளி வெள்ளத்தில் நிரம்பியிருக்க, வானில் பறந்து பயணிக்கக் காத்திருந்த பயணிகள் விதவிதமான வண்ணங்களில் தெரிந்த பாலிவினைல் நாற்காலிகளில் தூக்கக் கலக்கத்தோடு காத்திருந்தார்கள்.

    அவர்களுக்கு நடுவே தன்னுடைய தலையை இரண்டு கைகளாலும் பிடித்தபடி உட்கார்ந்திருந்த அந்த முப்பது வயது இளைஞன் ஜீவன் தன்னுடைய சிறிய சூட்கேஸோடு எழுந்து ரிசப்ஷன் கௌண்ட்டரை நோக்கிப் போனான்.

    ஒரு பெரிய ஜவுளிக்கடையின் ஷோ கேஸுக்குள் உட்காரவேண்டிய அந்தப் பெண் தான் பார்த்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டரினின்றும் ஸ்லோ மோஷனில் நிமிர்ந்தாள். ஜீவனை ஓர் அவசரப் புன்னகையில் நனைத்தாள்.

    எஸ்.

    ஜீவன் ஆங்கிலம் பேசினான்.

    டெல்லி விமானம் எப்போதுதான் புறப்படும்? ஆல்ரெடி ஒன் அவர் லேட்.

    அவள் கோபத்தை மறைத்துக் கொண்டு புன்னகைத்தான்.

    ஸார்! நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் மூன்றாவது தடவையாய் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். போனதடவை நான் உங்களுக்கு என்ன பதில் சொன்னேனோ அதையேதான் இப்போதும் உங்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே புறப்பட்டிருக்க வேண்டிய அந்த விமானத்தில் சம் டெக்னிக்கல் பிராப்ளம்.

    அந்த பிராப்ளம் எப்போது சரியாகும்?

    இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது ஸார்! ஏனென்றால் விமானத்தில் ஏற்பட்டிருக்கிற தொழில்நுட்பக் கோளாறு எது மாதிரியானவை என்கிற விபரம் எனக்குத் தெரியாது.

    மாற்று விமானம் ஏற்பாடு செய்யலாமே?

    அகெய்ன் அண்ட் அகெய்ன் வெரி.. வெரி... ஸாரி.. ஸார்... திஸ் ஈஸ்.. ஒன்லி என்கொய்ரி டெஸ்க்... விமானம் தாமதமாவதற்கு காரணம் என்ன என்பதைச் சொல்லலாமே தவிர உங்களுடைய அதிகப்படியான கேள்விகளுக்கான பதில்கள் என்னிடம் இல்லை!

    ஜீவன் சற்றே கோபத்தோடு தன் குரலை உயர்த்தினாள்.

    டெல்லியில் இருக்கும் என்னுடைய அப்பா இறந்து விட்டார். அவருடைய இறுதி காரியங்களைச் செய்ய நான் நாளைக்குக் காலை ஆறுமணிக்கெல்லாம் அங்கே இருக்க வேண்டும். கடைசி நேரத்தில் பிரீமியம் டிக்கெட் கிடைத்தது. வழக்கமான கட்டணத்தைவிட மூன்று மடங்கு அதிகம். நான் கொடுத்த அதிகப்படியான கட்டணம் ஒரு பொருட்டில்லை. ஆனால் நாளைக்குக் காலை ஆறுமணிக்கெல்லாம் நான் டெல்லியில் இருக்க வேண்டும். அதற்கு உங்களுடைய விமான நிர்வாகம் என்ன செய்யப் போகிறது?

    அவள் மெலிதாய் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னாள்: ஸார்! இந்த நிலைமையில் நான் உங்களுக்கு ஒரே ஒரு உதவியை மட்டுமே செய்ய முடியும்!

    என்ன?

    ஏர்போர்ட் மானேஜரை சந்தித்துப் பேச நான் உங்களுக்கு பர்மிஷன் வாங்கித் தருகிறேன். அவரிடம் நீங்கள் பேசிப் பாருங்கள். அவர் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்துதரலாம்!

    அவர் எங்கே இருப்பார்...?

    அதோ.. அந்த இடது பக்க கார்னரில் ஒரு ரெஸ்டாரண்ட் தெரிகிறதே?

    ஆமாம். பிக் அண்ட் டேஸ்ட்!

    " அதேதான். அதற்குக் கொஞ்சம் தள்ளி க்ரீன் டோர் ரூம்தான் அவரோடது. அவருடைய பெயர் பாலாஜி சர்மா. போய்ப் பார்த்து உங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் விரைவில் டெல்லி

    Enjoying the preview?
    Page 1 of 1