Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Febuary - 30
Febuary - 30
Febuary - 30
Ebook373 pages1 hour

Febuary - 30

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Febuary - 30

Read more from Rajeshkumar

Related to Febuary - 30

Related ebooks

Related categories

Reviews for Febuary - 30

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Febuary - 30 - Rajeshkumar

    26

    1

    சித்தர் பாடல்:

    அஞ்சு பஞ்ச பூதம் அறிந்தால் அநித்தியம் போம்

    அஞ்சு வசப்படுவ தாண்டதனில் அஞ்சினையும் கண்டறிவோர்

    ஞானக் காட்சியத னினைவு

    விண்டறிய லாமே விதி!

    கம்ப்யூட்டர்

    கம்ப்யூட்டர் என்பது சாதாரணமாய் நாம் எல்லோரும் நினைப்பதுபோல் புத்திசாலித்தனம் மிகுந்த ஓர் இயந்திரம் இல்லை. உண்மையில் ஒரு கரப்பான் பூச்சியின் மூளைத் திறன் கூட அதற்கு இல்லை. நீங்கள் என்ன செய்யச் சொன்னீர்களோ அதை மட்டுமே செய்யும். செய்யச் சொன்ன வேலை சரியா தவறா என்று யோசிக்கும் திறன்கூட அதற்கு இல்லை.

    குங்குமப் பொட்டாய் கிழக்குத் திசையில் உதய சூரியன் எட்டிப் பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்த வைகறை வேளை. காற்று மண்டலம் ஓஸோனில் நிரம்பியிருக்க வானப்பரப்பு பூராவும் கிழித்துப் போட்ட கறுப்புக் காகிதத் துணுக்குகளாய்ப் பறவைக் கூட்டம். மேகங்களின் ஓரங்களில் லேசாய் மஞ்சள் நிறம்.

    மொட்டை மாடியில் நின்று டர்க்கி டவலால் தன் ஈரக் கூந்தலைத் துவட்டிக் கொண்டிருந்த அருந்ததிக்கு அந்த இயற்கையின் அழகுக் கோலம் தினமும் பார்த்துப் பழகிப் போன ஒன்று என்றாலும் புதிதாய்ப் பார்ப்பது போல் பிரமித்துக் கொண்டிருந்தாள்.

    இன்னும் ஒரு நிமிஷம் போனால் கிழக்குத் திசையின் அட்டைக்கரி அடிவானத்தில் சிவப்பு பெயிண்ட்டைத் தொட்டு வெகு அலட்சியமாய்க் கோடு இழுத்த மாதிரி நீளமாய் ஒரு கோடு விழும். அதற்குப் பிறகு விநாடிக்கு விநாடி நிறம் நிறமாய் கோடுகள் விழுந்து விழுந்து பிறகு எதிர்பாராத விநாடியில் சூரியனின் விளிம்பு காரட் துண்டாய் எட்டிப் பார்க்கும்.

    எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத அந்த வைகறை மாடர்ன் ஆர்ட்டைப் பார்ப்பதற்காகவே அந்த அதிகாலை வேளையில் மொட்டை மாடிக்கு வந்து விடுவாள் அருந்ததி.

    அன்றைக்கு சூரியனின் விளிம்பு கிழக்குத் திசையில் உற்பத்தியானதும் அவசர அவசரமாய் டவலைத் தலைக்குச் சுற்றிக் கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி நமஸ்கரித்தாள். அவளுடைய சதைப் பிடிப்பான உதடுகள் வேகமாய் அசைந்தன.

    ஓம் ஆதித்யாய... ஸூர்யாய... ஹம்ஸாய... பாஸ்கராய... ஸூராய... நமோ ஹராய... விஸ்வத்குதே... வித்யஹே...! பாஸஹஸ்தாய தீமஹி தன்னோஸ்ஸூர்ய ப்ரசோதயாத்...

    சூர்ய நமஸ்காரத்தை முடித்துக் கொண்டவள் தாலிக்கொடியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்ட போது கீழே ஹாலில் டெலிபோன் வீறிடும் சத்தம் காற்றில் கலந்து குறைந்த டெஸிபலில் கேட்டது.

    மாடிப்படிகளில் சரசரவென்று இறங்கி ஹாலுக்கு வந்த அருந்ததி டீபாயின் மேலிருந்த டெலிபோனைத் தொட்டு ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    குட்மார்னிங் அருந்ததி... மறுமுனையிலிருந்து வெளிப்பட்ட பெண் குரலைக் கேட்டதுமே அருந்ததி அடையாளம் புரிந்து கொண்டாள்.

    இரண்டு தெரு தள்ளியிருக்கும் காயத்ரி மாமி.

    ஓ... மாமியா! குட்மார்னிங்...

    இந்நேரம் குளிச்சு முடிச்சு பூஜை புனஸ்கார மெல்லாம் செஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன்...

    ம்... ஆச்சு மாமி! இனி வீடு பூராவும் சாம்பிராணி புகை காட்ட வேண்டியது ஒண்ணுதான் பாக்கி.

    அப்படீன்னா நாம ரெண்டு பேரும் அம்பாள் கோயிலுக்குப் போய்ட்டு வந்துடலாமா...?

    அம்பாள் கோயிலுக்கா...?

    என்ன திரும்பிக் கேக்கறே...? தயங்கற மாதிரி தெரியுது...

    அது... வந்து மாமி...

    ஏதாவது உடம்பு அசௌகரியமா இருக்கா...?

    அது இல்ல மாமி...

    பின்னே...?

    வீட்ல கொஞ்சம் வேலையிருக்கு.

    என்னடியம்மா... எப்போ பார்த்தாலும் வீட்டு வேலை கிடக்கவே கிடக்கு. கோயிலுக்கு ஒரு அரை மணி நேரம் போய்ட்டு வர்றதால என்னாயிடும்...?

    இல்ல மாமி... இன்னும் பால்காரன் வரலை. வேலைக்காரி இன்னிக்கு வரமாட்டேன்னு நேத்திக்கே சொல்லிட்டுப் போயிட்டா... அதுமில்லாமே அவர் வீட்ல இல்லை...

    உன்னோட ஆத்துக்காரர் வீட்ல இல்லையா...? வெளியூர் போயிருக்காரா...?

    ஆமா...

    இப்பெல்லாம் அடிக்கடி வெளியூர் போறார் போலிருக்கே?

    ம்...

    ஆம்படையானை ரொம்பவும்தான் வெளியே அலையவிடாதே. அது நல்லதில்லை...

    ஏன் மாமி... அப்படிச் சொல்றீங்க...?

    ஆம்பளைங்க மனசு ஒரு நேரம்போல இன்னொரு நேரம் இருக்காது.

    அவர் அப்படிக் கிடையாது மாமி...

    சொல்லாதே...! ஒரு சில விஷயங்களில் மட்டும் எல்லா ஆம்பிளைகளும் ஒண்ணுதான். ஓவர் கான்ஃபிடன்ஸ் வைக்காதே. காலையில வேலைக்கு போற ஆம்பிளை விளக்கு வைக்கறதுக்கு முன்னாடி வீட்டு சோபாவில் வந்து உட்கார்ந்துடணும்.

    மாமி! அவரோட வேலை விஷயமே வேற. எல்லாமே ப்ராஜக்ட் ஒர்க். வெளியே போய் ரெண்டு மூணு நாள் தங்கித்தான் தீரணும்.

    என்னடியோம்மா... என்னோட மனசுக்குத் தோணினதைச் சொல்லிட்டேன். பின்னாடி கண்ணைக் கசக்கிட்டு நிக்கக்கூடாது பாரு.

    உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம் மாமி. கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துக்குள்ளேயே அவரைப்பத்தி நல்லா புரிஞ்சு வெச்சிருக்கேன். நான் கிழிச்ச கோட்டை அவர் தாண்ட மாட்டார்...

    இப்படி அநேகம் பேர் சொல்லிச் சொல்லியே கோட்டை விட்டிருக்காங்க...

    மாமி...! உங்களுக்கு கோயிலுக்கு நேரமாச்சு. இப்பவே கிளம்பிப் போனாத்தான் உஷத் காலை பூஜையைப் பார்க்க முடியும்...

    இதோ... கிளம்பிட்டேன்...

    எனக்கும் சேர்த்து வேண்டிக்குங்க மாமி.

    கட்டாயமா...

    மாமி ரிஸீவரை வைத்துவிட, அருந்ததியும் ரிஸீவரைச் சாத்திவிட்டு பூஜையறைக்குப் போய் சாம்பிராணி சம்புடத்தை எடுத்து வந்தாள். கரித்துண்டுகளைக் கங்குகளாக்கி பங்களா முழுவதும் சாம்பிராணிப் புகையை மணக்க மணக்க அனுப்பி வைப்பதற்குள் ஜன்னலுக்கு வெளியே வானம் பளபளவென்று துவைத்து எடுத்த துணியைப் போல் வெளுத்திருந்தது.

    சமையலறைக்குப் போய் காப்பி போட்டு இரண்டு வாய் விழுங்கியிருந்தபோது...

    வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.

    டிடிங்...

    வேகவேகமாய்ப் போய்க் கதவைத் திறந்தாள். வெளியே எதிர் வீட்டு ஆடிட்டர் ராமசேஷன் ஜாக்கிங் சூட்டில் நின்றிருந்தார். ஐம்பது வயதுக்குரிய தளர்வே தெரியாமல் ட்ரிம்மாய்த் தெரிந்தார். அருந்ததி மலர்ந்தாள்.

    குட்மார்னிங் ஸார்...

    வெரி வெரி குட்மார்னிங். வசந்தைக் கூப்பிடம்மா.. வாக்கிங் போகணும்...

    ஸார்... அவர் வெளியூரிலிருந்து இன்னும் திரும்பலை...

    இன்னிக்கு வர்றதா என்கிட்ட சொன்னாரே?

    என்கிட்டேயும் அப்படித்தான் சொல்லிட்டுப் போனார்.

    எங்கேயாவது ஹெல்ட் அப் ஆயிட்டாரோ என்னவோ?

    மே... பி... ஸார்... தலையைச் சாய்த்துப் புன்னகைத்தவள் சொன்னாள்.

    உள்ளே வாங்க ஸார்...! காப்பி சாப்டுட்டுப் போலாம்...

    அதெல்லாம் வேண்டாம்மா. உன்னோட கையால ஒரு டம்பளர் தண்ணி கொடுத்தா போதும்...

    இதோ... உள்ளே போய் ஒரு டம்பளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, டம்ளரை வாங்காமல் அவளையே பார்த்தார் ஆடிட்டர் ராமசேஷன்.

    அருந்ததி ஏற்கெனவே உதட்டில் நிறுத்தியிருந்த புன்னகையைப் பெரிதாக்கினாள்.

    என்ன ஸார் அப்படிப் பார்க்கறீங்க?

    அம்மா...! உன்னைப் பார்க்கிற ஒவ்வொரு சமயமும் என்னையும் அறியாம கையெடுத்துக் கும்பிடணும் போல் தோணுது. ரவிவர்மா பெயிண்டிங்கில் வர்ற மகாலட்சுமி மாதிரி இருக்கேம்மா... அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தா அந்த ஜென்மத்திலாவது நீ எனக்கு மகளா பிறக்கணும்.

    அருந்ததி வெட்கத்தோடு, புன்னகைத்தாள்.

    என்ன ஸார் இது... சினிமா டயலாக் மாதிரி எதை எதையோ பேசிகிட்டு...?

    இது சினிமா டயலாக் கிடையாதம்மா. என் மனசுக்குள்ளேயிருந்துவர்ற வார்த்தைகள். இந்த காலத்துல இவ்வளவு காலையில் குளிச்சிட்டு இப்படி பளிச்சினு எந்தப் பொண்ணும்மா இருக்கா...? ராத்திரி பன்னிரெண்டு மணிவரைக்கும் டி.வி. பார்த்துட்டு காலையில எட்டு மணி வரைக்கும் பெண்கள் தூங்கற காலமம்மா இது...

    ஸார்... மொதல்ல நீங்க தண்ணியை குடிங்க.

    அவர் வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டு காலி டம்ளரை நீட்டினார்.

    உனக்கு கடவுள் எல்லா சௌபாக்கியங்களும் கொடுக்கட்டும்.

    தாங்க்யூ வெரிமச்...! இந்த ப்ளஸ்ஸிங்ஸே எனக்குப் போதும் ஸார்...

    நான் வர்றேம்மா...! வசந்தை அப்புறமா வந்து பார்த்துக்கிறேன்.

    ஆடிட்டர் ராமசேஷன் வாக்கிங் ஸ்டிக்கைச் சுழற்றியபடி வேகமாய் நகர்ந்துபோக, அருந்ததி கதவைச் சாத்தி தாழிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள்.

    ஹால் சுவர் கடிகாரம் மணி 6.05ஐக் காட்டிக் கொண்டிருக்க தன் கணவன் வசந்தைப் பற்றி முதல் தடவையாக அருந்ததி கவலைப்பட்டாள்.

    ‘காலை ஐந்து மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று சொன்னவர் ஏன் இன்னும் வரவில்லை...?’

    ‘போன வேலை நல்லபடியாய் முடிந்து இருக்குமா?’

    ‘இது வரையிலும் அவர் தோல்வியோடு திரும்பியது இல்லையே!’

    ‘அவர் வந்து சேர்கிறவரைக்கும் காத்துக் கொண்டிராமல் நாம் வேலையை ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.’

    தீர்மானத்துக்கு வந்தவளாய் மாடிப்படிகளை நோக்கி நடந்தாள். வளைந்து சென்ற படிகளில் கால்பதித்து உயர்ந்தவள் உச்சிப்படிகளின் பக்கத்தில் மறைந்த மாதிரி இருந்த அந்த ஃப்ளஷ் டோர் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனாள்.

    விஸ்தாரமான அறை.

    அறையின் மையத்தில் போடப்பட்டிருந்த ஒரு பெரிய செவ்வக ஃபைபர் மேஜையின் மேல் பெண்டியம் அதிநவீன கம்ப்யூட்டர் ஒன்று பவ்யமாய் ப்ளாஸ்டிக் உறைக்குள் உட்கார்ந்திருந்தது.

    போர்த்தப்பட்டிருந்த உறையை விலக்கிக் கொண்டே கம்ப்யூட்டருக்கு முன்பாய் இருந்த நாற்காலிக்குத் தன்னைக் கொடுத்தாள் அருந்ததி.

    சுவிட்சை ஆன் செய்தாள்.

    கம்ப்யூட்டர் உயிர் பிடிக்க ஆரம்பித்தது. பத்தே விநாடிகளில் கட்டளைக்குக் காத்திருக்கும் வேலைக்காரனாய் தயார் நிலைக்கு வந்து நின்றது. கீபோர்டையும் மௌஸையும் லாவகமாய்க் கையாண்டு கம்ப்யூட்டரிடம் வேலை வாங்க ஆரம்பித்தாள் அருந்ததி.

    இருபது நிமிஷங்கள் கரைந்து போயிருந்தபோது.

    வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்டது.

    ‘நம் கார்தானா...?’ எழுந்து போய் கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

    வெள்ளை நிறத்தில் முயல் குட்டி மாதிரி அந்த மாருதி 1000 நின்றிருந்தது. உள்ளேயிருந்து அவளுடைய கணவன் வசந்த் கசங்கிப்போன காகிதம் மாதிரி வெளிப்பட்டுக் கொண்டிருந்தான்.

    அருந்ததிக்கு இனம்புரியாத பதட்டம் அரும்பி இருதயச் சுவர்களை மோதி நெம்பியது.

    ‘அவர் போன காரியத்தை முடித்துக் கொண்டு வந்திருப்பாரா?"

    ‘இல்லை... வெறும் கையை வீசிக் கொண்டு வந்திருப்பாரா...?’

    மாடிப்படிகளில் வேகவேகமாய் இறங்கிப் போய் கதவின் தாழ்ப்பாளை விலக்க, வசந்த் தோளில் மாட்டிய ஒரு ஏர்பேக்கோடு உள்ளே வந்தான்.

    அவன் கண்களில் தூக்கம் கெட்ட களைப்பு சிவப்பாய்த் தெரிந்தது.

    அருந்ததி கதவைத் தாழிட்டுக் கொண்டே கேட்டாள்.

    என்னங்க... அஞ்சு மணிக்கே வர்றதா சொல்லிட்டுப் போனீங்க...?

    கொஞ்சம் லேட்டாயிடுச்சு...

    தேடிப்போனது கிடைச்சுதா...?

    கிடைக்கலைன்னா விடுவேனா...?

    2

    சித்தர் பாடல்:

    உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ

    உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர்

    உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையோ

    உடம்புமெய்ம் மறந்துகண் டுணர்ந்து ஞானமோதுமே!

    கம்ப்யூட்டர்

    கம்ப்யூட்டரில் தமிழ் எழுத்துக்கள் எப்படி வருகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எனப்படும் கிராஃபிக்ஸ் சூழலில் எழுத்து வடிவங்கள் படமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. A என்ற பொத்தானை நீங்கள் அழுத்தும்பொழுது A போன்ற வடிவம் பதிவாகிறது. இதற்குப் பதிலாக தமிழ் எழுத்து வடிவிலான உருவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு செய்யும்போது நமக்கு தமிழ் எழுத்துக்களின் வரி வடிவம் துல்லியமாகக் கிடைக்கிறது. எந்த பொத்தானை அழுத்தினால் என்ன தமிழ் எழுத்து விழ வேண்டும் என்கிற விசைப் பலகை வடிவமைப்புத்தான் இன்றைய தலையாய தலைவலி.

    அருந்ததி தன் கையில் வைத்திருந்த மண்டையோட்டைத் தடவிப் பார்த்துக் கொண்டே கணவன் வசந்தை ஏறிட்டாள்.

    நீங்க இந்த வேலையை முடிச்சுக்கிட்டு வருவீங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலை...

    வசந்த் இரண்டு கைகளாலும் தலையைக் கோதிக் கொண்டு அண்ணாந்து சிரித்தான். நான் ஒரு வேலையில இறங்கிட்டா அதை முடிக்காம விடமாட்டேன்!

    எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது.

    எதுக்கு பயம்...?

    அது கொஞ்சம் ரிஸ்கி மேட்டராச்சே?

    எந்த ஒரு காரியத்தையும் ரிஸ்க் எடுத்து பண்ணினாத்தான் ஒரு த்ரில். உன்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதுகூட த்ரில்லான விஷயம் தானே...?

    சரி... சரி... ஃபளாஷ்பேக்குக்கு போயிடாதீங்க சிரித்துக் கொண்டே சொன்ன அருந்ததியின் பார்வை மறுபடியும் கையில் இருந்த மண்டையோட்டுக்குப் போயிற்று.

    இந்த மண்டையோட்டுக்குரிய நபர் ஆணா... பெண்ணா...?

    ஆண்...

    பேர்...?

    கஜபதி...

    ஊர்...?

    வேடப்பட்டி கிராமம்.

    இவனோட மரணம் எப்போ நடந்தது?

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதுல.

    அருந்ததி வியப்பில் விழிகளை விரித்துக் கொண்டே கேட்டாள்... முப்பது வருஷங்களுக்கு முன்னாடி செத்துப்போன ஆளா இந்த கஜபதி...?

    ஆமா...

    எப்படி செத்தான்?

    மர்மமான முறையில் யாரோ இவனைக் கொலை பண்ணியிருக்காங்க. தூங்கும்போது கழுத்தை வெட்டி தலைமாட்டிலேயே வெச்சுட்டுப் போயிருக்காங்க...

    கேட்கிறபோதே மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாயிருக்கு...

    இவன் மேல பரிதாபப்படாதே அருந்ததி...

    ஏன்...?

    இந்த கஜபதி அவ்வளவு நல்லவன் கிடையாது. கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு இவன் பேர்ல ஏகப்பட்ட கேஸ்கள் இருந்ததாம். ஒரு கேஸ்ல மாட்டிக்கிட்டு ஜாமீன்ல வந்தவனைத்தான் போட்டு தீர்த்துட்டாங்களாம்.

    அப்படீன்னா இப்படியொரு கபாலமோட்சம் இவனுக்கு வேண்டியதுதான்.

    அருந்ததி கையிலிருந்த மண்டை ஓட்டை அருகில் இருந்த டீபாயின் மேல் வைத்துக் கொண்டே கேட்டாள்...

    உங்க ஃப்ரண்ட் பாபு மூலமாத்தானே இந்த ஸ்கல் கிடைச்சுது...?

    ஆமா...! ஒரு ஃபாரன்ஸிக் லேபில் இருந்த ஸ்கல்லைத்தான் பாபு வாங்கிக் கொடுத்தான்.

    அருந்ததியின் அழகான நெற்றி ஒரு வியப்புக்குட்பட்டு பின் பழைய நிலைக்கு மீண்டது.

    இது ஃபாரன்ஸிக் லேபில் இருந்த மண்டையோடா?

    ஆமா...

    அங்கிருந்து எப்படி கிடைச்சது?

    ஃபாரன்ஸிக் ஆபீஸ்ல பாபுவுக்குத் தெரிஞ்ச ஃப்ரண்ட் ஒருத்தர் இருந்தார். அவர்கிட்ட ஒரு ரிசர்ச்சுக்கு வேணும்னு சொல்லி இந்த ஸ்கல்லைக் கொண்டு வந்தேன்.

    வசந்த் சொல்லிக் கொண்டே ஏர் பேக்கின் பக்கவாட்டுப் பையைப் பிரித்து ஒரு பழைய ஃபைல் ஒன்றை எடுத்தான்.

    ஃபைலின் முதல் பக்கத்தைப் பிரித்து அதில் ஒட்டப்பட்டிருந்த பாஸ்போர்ட் புகைப்படத்தைக் காட்டினான்.

    இந்த போட்டோவைப் பாரு அருந்ததி.

    பார்த்தாள்.

    ஒரு அழகான இளைஞன் பளிச்சென்ற கண்களோடும் முறுக்கு மீசையோடும் கேமிராவை முறைத்துப் பார்த்திருந்தான்.

    யார்ங்க இது...? வசந்த் சிரித்தான்.

    இந்த மண்டையோட்டுக்குச் சொந்தக்காரன்.

    கஜபதியா...?

    அவனேதான்...!

    Enjoying the preview?
    Page 1 of 1