Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Last Bullet
Last Bullet
Last Bullet
Ebook223 pages1 hour

Last Bullet

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Last Bullet

Read more from Rajeshkumar

Related to Last Bullet

Related ebooks

Related categories

Reviews for Last Bullet

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Last Bullet - Rajeshkumar

    28

    1

    வைபவ் காரை ஓட்டிக் கொண்டிருக்க - அவனுடைய தோளில் சாய்ந்திருந்தாள் மாயா. நேரம் சாயந்தரம் ஐந்து மணி.

    புத்தம்புது கல்யாண ஜோடி. இன்றைக்கு கல்யாணமான ஏழாவது நாள்.

    மலைப்பாதையில் ஸ்டீயரிங்கை ஒடித்துக் கொண்டே மாயாவை வாசம் பிடித்தான் வைபவ்.

    ஆஹா...

    என்ன ஆஹா...?

    நேத்து ராத்திரி நீ தலையில் வெச்சிருந்த செண்பகப்பூ இன்னும் மணக்குது. கொஞ்சம் கிட்ட வாயேன்.

    என்னது? இன்னும் கிட்ட வர்றதா? அதான் கோந்து போட்டு ஒட்டின மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கேனே... இது போதாதா?

    போதலையே

    இதோ பாருங்க... பொண்டாட்டிகிட்ட விளையாடற இந்த விளையாட்டையெல்லாம் ஊட்டிக்கு போய் ரூம் எடுத்ததும் வெச்சுக்கலாம். இந்த காட் ரோட்ல ட்ரைவ் பண்ணும் போது வேண்டாம்.

    வைபவ் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே - அவனுடைய பார்வையில் எதிரே தெரிந்த பாதையின் குறுக்கே ஒரு இன்ஸ்பெக்டரும் ஓரத்தில் கான்ஸ்டபிள்களோடு ஒரு போலீஸ் ஜீப்பும் நின்றிருப்பது பட்டது.

    மாயா முகம் மாறினாள்.

    என்னங்க போலீஸ் மறிக்கறாங்க...?

    தெரியலையே...

    எனக்கு பயமாயிருக்குங்க...

    வைபவ் புன்னகைத்தான். தப்பு பண்ணினவங்க தான் போலீஸைப் பார்த்து பயப்படணும்... நாம எதுக்காகப் பயப்படணும்?

    பெரிதாய் மீசை வைத்த அந்த இன்ஸ்பெக்டர், கையில் வைத்திருந்த லாட்டியால் காரை நிறுத்தும்படி சொல்ல, வைபவ் ஸ்டீரியங்கை ஒடித்து காரை ஓரமாய் ஒதுக்கி நிறுத்தினான். என்ஜினின் உறுமலை நிறுத்தினான்.

    இன்ஸ்பெக்டர் காரின் ஜன்னல் அருகே குனிந்து தன் லேசர் பார்வையால் வைபவையும் மாயாவையும் அளந்தார்.

    எங்கே போறீங்க...?

    வைபவ் அவரை எறிட்டான்.

    ஊட்டிக்கு...

    எங்கிருந்து வர்றீங்க?

    மெட்ராஸ்.

    உங்க பேரு?

    வைபவ்.

    அவங்க...?

    என்னோட மனைவி மாயா...

    நீங்க என்ன வேலை பார்க்கறீங்க?

    க்ளோபல் ட்ரஸ்ட் பாங்கில் கம்ப்யூட்டர் இன்சார்ஜா ஒர்க் பண்றேன்...

    ஐடென்டிஃபிகேஷன் கார்ட் ஏதாவது இருக்கா?

    இருக்கு. பட்... கொண்டு வரலை.

    கார் ஆர்.சி.புக் எடுங்க...

    வைபவ் காரின் டாஷ்போர்டைத் திறந்து அந்த ஆர்.சி. புக்கை எடுத்துக் கொடுத்தான். இன்ஸ்பெக்டர் வாங்கி பார்த்தபடி கேட்டார்.

    ஊட்டிக்கு எதுக்காக போறீங்க?

    ஸார்... வீ...ஆர் ஹனிமூனர்ஸ்... ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் மேரேஜ் நடந்தது.

    ஈஸிட்...? ஆர்.சி.புக்கை வைபவிடம் கொடுத்து விட்டு புன்னகைத்தார்.

    ஸாரி ஃபார்... த... டிஸ்டர்பன்ஸ்... நீங்க போகலாம்.

    காரின் தொண்டைக்குழிக்கு இக்னீஷியனைக் கொடுத்துக் கொண்டே வைபவ் கேட்டான்.

    எதுக்காக இந்த விசாரணை? மே... ஐ... நோ த ரீஸன்?

    ஷ்யூர்... ரெண்டு நாளைக்கு முந்தி ஊட்டிக்கு ஓய்வு எடுக்க வந்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் நிலைய சேர்மன் நாராயணமேனன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் இன்னமும் இந்த ஊட்டி பகுதியில்தான் இருக்கிறதாக தகவல். ஸோ... இந்த வழியா எந்த வாகனம் வந்தாலும் சரி... நிறுத்தி சோதனை போட வேண்டியது எங்க ட்யூட்டி. எந்தக் காரையும் நாங்க அலட்சியம் பண்ண முடியாது.

    யூ... ஆர் கரெக்ட் ஸார்... ஷேல் வீ மேக் ஏ மூவ்?

    ப்ளீஸ்....

    வைபவ் காரை நகர்த்தினான்.

    மாயாவுக்கு அந்தக் குளிரிலும் மிகவும் வியர்த்துப் போயிருந்தது.

    என்ன மாயா இப்படி வேர்த்து விறுவிறுத்துப் போயிட்டே...?

    போலீஸ்ன்னாலே எனக்கு பயம்?

    எதுக்காக பயம்?

    அதென்னவோ தெரியலை. சின்ன வயசிலிருந்தே பயம்.

    உங்க வீட்ல உன்னை இப்படி கோழையா வளர்த்திருக்க வேண்டாம்

    அந்த இன்ஸ்பெக்டரோட மீசையைப் பார்த்தீங்களா? எவ்ளோ பெரிசு!

    அவரோட சம்சாரத்துக்கு கஷ்டம் இல்லாமே இருந்தா சரி.

    இருவரும் சிரித்தார்கள்.

    கார் வளைவைக் கடக்கும் போது வைபவ் சொன்னான் ஸ்ரீஹரிகோட்டா ஸ்பேஸ் ரிசர்ச் ஸ்டேஷன் நாராயணமேனன் ஒரு திறமையான சயன்டிஸ்ட். இன்னிக்கு இந்தியா விண்வெளித் துறையில் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறதுக்கு காரணம் அவர்தான். அவர் கொலை செய்யப்பட்டது சாதாரண விஷயமில்லை...

    மாயா கேட்டாள்.

    அவரைக் கொல்றதுல யார்க்கு என்ன லாபம்?

    லாபம் உள்ளூர் ஆசாமிகளுக்கு இல்லை. வைபவ் சிரித்தான்.

    பின்னே?

    வெளிநாட்டு ஆசாமிகளுக்கு...

    எதனால லாபம்?

    இந்தியா விண்வெளித் துறையில் முன்னேறி வர்றது பல நாடுகளுக்கு உள்ளூர எரிச்சல்... அந்த எரிச்சலின் வெளிப்பாடு தான் இந்தக் கொலை!

    அநியாயமா இருக்கே?

    இது மாதிரி அநியாயங்கள் உலகத்துல நிறைய இருக்கு.

    அது சரி, நாம எத்தனை மணிக்கு ஊட்டிக்கு போய் சேர்வோம்?

    இன்னும் அரைமணி நேரத்துக்குள்ளே. அப்புறம் சந்தோஷம்தான்.

    எப்ப பார்த்தாலும் உங்களுக்கு இதே நினைப்பு தானா?

    பின்னே கல்யாணம் பண்ணிக்கிட்ட புதுசுல எதைப்பத்தி நினைப்பாங்களாம்?

    மனசுக்குள்ளே இவ்வளவு ஆசைகளை வெச்சுகிட்டு எப்படி இருந்தீங்களாம்?

    சாப்பிட எதுவுமே இல்லைன்னா, வயித்தை இறுக்கிக் கட்டிக்கிட்டு படுத்துக்கிற மாதிரிதான் என்னோட நிலைமையும்.

    நீங்க சரியான காய்ஞ்ச மாடு.

    அந்த மாட்டுக்கு சரியான தீனிபோட வேண்டியது உன்னோட கடமை.

    நான் செத்தேன்.

    கேலிப் பேச்சுக்களில் நிமிஷங்கள் கரைந்து கிலோ மீட்டர்கள் விழுங்கப்பட - கொட்டுகிற பனியில் - சாயந்தர நேர விளக்கு வெளிச்சங்களோடு - ஊட்டி வந்தது.

    லேக் வ்யூ ரோட்டில் கார் திரும்பி - யூகலிப்டஸ் மரங்களுக்கு மத்தியில் சற்று மேட்டுப்பாங்கான பகுதியில் இருந்த மேஃபிளவர் காட்டேஜஸை நோக்கி கார் போயிற்று.

    மாயா சொன்னாள். காட்டேஜுக்கு பதிலா ஏதாவது ஹோட்டல்ல ரூம் எடுத்திருக்கலாமே.

    ஏன் அப்படி சொல்றே?

    காட்டேஜஸ் ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே?

    இருக்கட்டுமே. என் புத்தம்புது பெண்டாட்டிக்கு தானே செலவு பண்றேன்.

    என்னங்க... ஒரு சின்ன கோரிக்கை.

    என்ன?

    வைபவ் என்கிற உங்க பேரை பொண்டாட்டிதாசன்னு மாத்தி வெச்சுக்கோங்களேன்.

    அதுக்கென்ன சந்தோஷமா வெச்சுக்கிறேன். மெட்ராஸ் போனதும் முதல் வேலையா கெஜெட்டுக்கு எழுதிப் போட்டுடறேன். ஒரு நல்ல நாள் பார்த்து பேரை மாத்திக்கறேன்.

    நீங்க செஞ்சாலும் செய்வீங்க.

    ‘மேஃபிளவர் காட்டேஜஸ் வெல்கம்ஸ் யூ...’ என்று வரவேற்ற நியான் எழுத்துக்களுக்கு கீழே இருந்த காம்பௌண்ட் கேட்டுக்குள் கார் நுழைந்தது.

    பனிப்புகைக்கு நடுவே - வெளிச்ச ஜன்னல்களோடு காட்டேஜ் குடில்கள் தெரிந்தன.

    மாயா விழிகளை விரித்தாள். உதடுகள் ‘O’ வடிவத்தில் குவிந்து ‘ப்யூட்டிஃபுல் ப்ளேஸ்’ என்று சொன்னது.

    ஆனால், உண்மையில் அது ஒரு ஆபத்தான இடம் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

    2

    மேஃபிளவர் காட்டேஜஸ் ரிசப்ஷன் அறை அமர்க்களமாய் இருந்தது. கவுண்ட்டரில் நின்றிருந்த டை கட்டிய இளைஞன் சிரித்து - குட் ஈவினிங் சொன்னான்.

    வைபவ் அவனை ஏறிட்டான்.

    காட்டேஜ் ரிசர்வ் பண்ணச் சொல்லி டெலிகிராம் குடுத்திருந்தேன்.

    மே... ஐ... நோ யுவர் நேம் ப்ளீஸ் ஸார்?

    வைபவ்.

    இளைஞன் அருகில் இருந்த கம்ப்யூட்டரை உபயோகித்து மானிட்டர் திரையில் விபரம் பார்த்தான்.

    யூ... ஆர் கரெக்ட் ஸார்... உங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிற காட்டேஜ் நெம்பர் நைன்டீன். யூ...மே... ஆக்குபை த காட்டேஜ்.

    தேங்க்யூ.

    லக்கேஜ்?

    டிக்கியில இருந்து எடுத்து வெச்சிருக்கேன். யாராவது ஒரு ஆளை அஸிஸ்ட் பண்ண அனுப்பினா பரவாயில்லை.

    நீங்க காட்டேஜுக்கு போங்க ஸார். லக்கேஜை கொண்டு வந்து சேர்ப்பிக்க நான் ஏற்பாடு பண்றேன்.

    தேங்க்யூ. சாவியை வாங்கிக் கொண்ட வைபவ் கேட்டான்... நெம்பர் நைன்டீன் காட்டேஜ் எந்தப் பக்கம்?

    கோ... ஸ்ட்ரெய்ட் ஸார்.

    போனார்கள்.

    வெட்டி விடப்பட்ட சிப்ரஸ் மரங்களுக்கு மத்தியில் மண்பாதை ஒன்று வழிகாட்ட - அதில் நடந்தார்கள். மாயா சேலைத்தலைப்பை இழுத்து போர்த்திக் கொண்டாள்.

    என்னங்க?

    ம்.

    காட்டேஜுக்கு ஒரு நாள் வாடகை எவ்வளவு?

    அவசியம் தெரிஞ்சுக்கணுமா?

    ஆமா.

    தெரிஞ்சுகிட்டா ராத்திரி தூங்கமாட்டே. சரியா சாப்பிட மாட்டே.

    வேண்டாம் சொல்லாதீங்க. அப்புறம் நான் மூட்-அவுட் ஆயிடுவேன்.

    இப்ப சொன்னியே. இது புத்திசாலித்தனம்.

    ஐந்து நிமிஷ நடையில் 19ம் எண்ணிட்ட காட்டேஜ் வந்தது. சிட்-அவுட்டோடு கூடிய அழகான காட்டேஜ். அங்கிருந்து பார்க்கையில் ஏரி ப்ளோரஸன்ட் விளக்கு வெளிச்சச் சிதறல்களோடு அசைந்தது. காட்டேஜைச் சுற்றிலும் பூந்தொட்டிகள்.

    கதவை

    Enjoying the preview?
    Page 1 of 1