Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Miss Thevathai 1996
Miss Thevathai 1996
Miss Thevathai 1996
Ebook236 pages1 hour

Miss Thevathai 1996

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Miss Thevathai 1996

Read more from Rajeshkumar

Related to Miss Thevathai 1996

Related ebooks

Related categories

Reviews for Miss Thevathai 1996

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Miss Thevathai 1996 - Rajeshkumar

    20

    1

    அந்த மேடை ஒரு சினிமா செட்போல வடிவமைக்கப்பட்டிருக்க இடுக்குகள் வழியே கசிந்த வெளிச்ச வெள்ளம் அந்த அரங்கத்தை ஒரு தேவலோகம் மாதிரி அசத்திக் கொண்டிருந்தது.

    உயரமான வெல்வெட் ஆசனங்களில் ஜூரிகள் உட்கார்ந்து மேடையில் ஒயிலாக உலாவரும் அழகிகளைக் கண்களால் துல்லியமாக அளவெடுப்பதும் பிறகு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு மதிப்பெண்கள் குறிப்பதுமாய் இருந்தார்கள்.

    ‘மிஸ் தேவதை 1996’ என்று அறிவிக்கும் ஜிகினா பேனர்கள் ஆங்காங்கே காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. ஆர்வமாய்த் திரண்டிருந்த ஜனக் கூட்டம் இசைப் பின்னணியுடன் அழகிகள் நடந்து வரும்போது ஆரவாரம் எழுப்பியது.

    அறிவிப்பாளர் மைக் மூலமாய் உற்சாகக் குரலை வீசினார்.

    அடுத்து கேள்வி நேரம்... தேர்வாகியிருக்கும் அழகிகளின் புத்திசாலித்தனத்தை சோதித்துப் பார்க்கும் கேள்வி நேரம்...

    கூட்டம் காதுகளைத் தீட்டிக் கொண்டு நிசப்தமானது.

    ஒரு வெண்கலக் குரல் நபர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்த அழகிகளைப் பார்த்துக் கேள்வியைக் கேட்டார்.

    இறைவன் திடீரென உங்கள் முன்னால் தோன்றி நூறு கோடி ரூபாய் பணம் தருகிறான்... ஒரே நாளில் அத்தனை பணத்தையும் செலவழிக்க வேண்டும் என்று நிபந்தனையும் இடுகிறான்... எப்படி அந்தத் தொகையை செலவழிப்பீர்கள்?

    லிப்ஸ்டிக் உதட்டுக்கு அருகே மைக் தண்டு நீட்டப்பட, அந்த அழகி மோவாயைத் தட்டி ஒரு விநாடி யோசித்துவிட்டு - இதழ்க் கோடியில் புன்னகை விரியச் சொன்னாள்.

    இதுவரை இந்தியா கண்டிராத வகையில் மிக மிக ஆடம்பரமாய்க் கல்யாணம் செய்து கொள்வேன்... கேள்வி கேட்டவரும் ஜனக்கூட்டமும் உச்சஸ்தாயியில் சிரிப்பலையைச் சிந்தினார்கள்.

    இன்னொருத்தி சினிமா படம் தயாரிப்பேன்... என்றாள்.

    ஒரே நாளில் அந்தத் தொகையைச் செலவழிக்க வேண்டுமென்பது நிபந்தனை... ஒரே நாளில் சினிமாப் படம் எடுக்க முடியாதே...?

    அசடு வழிவதைப் புன்னகைக் கவசத்தில் மறைக்க முயற்சித்தாள் அவள்.

    எதுவும் தோன்றவில்லை... என்று சொல்லி சிரித்துக் கொண்டே பின் வாங்கினாள்.

    மைக் அடுத்த பெண்ணிடம் போனது.

    அவள் அலட்சியமாய்த் தோள்களைக் குலுக்கினாள்.

    வெரி சிம்பிள்... ஸ்டாக் மார்க்கெட்டில் புழங்குகிற அத்தனை ஷேர்களையும் வாங்கிப் போட்டுவிடுவேன்...

    இது சரியான பதில் இல்லை.

    வெண்கலக் குரல் நபர் புன்னகைத்தபடியே கடைசியாய் நின்றிருந்த அழகியிடம் சென்றார்.

    மிஸ். மாயா... நீங்கள் எப்படி அந்தப் பணத்தைச் செலவழிப்பீர்கள்?

    மாயா புன்னகையோடு சொன்னாள்.

    அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு நேராக இந்திய ஜனாதிபதியிடம் போவேன்... நம் நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் வெளிதேசக் கடன் சுமையில் ஒரு துரும்பளவேனும் பாரத்தைக் குறைக்க இத்தொகையைப் பயன்படுத்துமாறு அவரைக் கேட்டுக் கொள்வேன்.

    தாய் நாட்டின் கடன் சுமையைக் குறைக்க அந்தப் பணத்தைச் செலவழிப்பீர்கள்...?

    ஆமாம்...

    என்ன ஒரு அருமையான பதில்...!

    கூட்டம் தீப்பற்றிக் கொண்ட மாதிரி சடச்சடவென்று கரகோஷம் எழும்ப ஆரம்பித்தது.

    வெகு நேரத்துக்கு கைத்தட்டல் சப்தம் நிற்கவேயில்லை.

    ஜூரிகள் மீண்டும் விவாதித்தார்கள்.

    அடுத்த சில நிமிடங்களில் அந்த ஆரவார அறிவிப்பு.

    இந்த முறை ‘மிஸ் தேவதை 1996’ பட்டத்தை வெல்பவர்... சிறிது இடைவெளிவிட்டு குரலின் வேகத்தை அதிகப்படுத்தி மிஸ். மாயா... என்றார் அறிவிப்பாளர்.

    கேமராவின் ஃப்ளாஷ் வெளிச்சத்தில் மாயா நனைந்து கொண்டிருந்தாள். ஏராளமான நிருபர்கள் அவளை மொய்த்திருந்தார்கள். மாயாவின் முகப்பரப்பு பூராவும் சந்தோஷமும், உற்சாகமும் அடர்த்தியாய் முலாம் பூசியிருந்தது. அருகில் இருந்த அம்மாவையும் அப்பாவையும் இறுக்க கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டாள்.

    மிஸ் தேவதை 1996 ஆகத் தேர்வு பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் மாயா...

    நன்றி...

    எதிர்பார்த்தீர்களா... இந்தப் பட்டம் உங்களுக்குக் கிடைக்கும் என்று?

    நம்பிக்கையுடன் தான் போட்டியில் கலந்து கொண்டேன்... கவர்ச்சிகரமான உடைகளுடைன் கலந்திருந்த மற்ற போட்டியாளர்களைப் பார்த்தபின் என் நம்பிக்கை லேசாய் ஆட்டம் காண்பது போலிருந்தது... கவர்ச்சியை விட நிஜமான அழகே ஜெயிக்கும் என்பது கடைசியில் நிரூபணம் ஆகிவிட்டது...

    வீடியோ கேமராக்களின் மஞ்சள் வெளிச்சம் அவளைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது.

    எப்போது கல்யாணம்...? என்றார் ஒரு நாளிதழ் நிருபர்.

    சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லவேண்டும் என்ற ஆசை இருக்கிறது... அதற்குள் என்ன அவசரம்...?

    வரப்போகிற கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    ஆறடி உயரத்தில் கம்பீரமான உடற்கட்டோடு, இந்தி நடிகரைப் போல அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு எதிர்பார்ப்பில்லை... கட்டையோ... குட்டையோ... கறுப்போ... சிவப்போ... நல்லவராக இருக்க வேண்டும்... என்னை முழுமையாக நம்புவராக இருக்க வேண்டும்...

    நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி கணவர் அமைய வாழ்த்துக்கள்.

    நன்றி...

    உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா...? இல்லை பெற்றோர் பார்த்து நிச்சயிப்பதாக இருக்குமா...?

    ஊகங்களின் அடிப்படையில் பதில் சொல்ல விரும்பவில்லை... ஒரு பெண்ணிடம் கல்யாணத்தைத் தவிர கேட்பதற்கு வேறு கேள்விகளே இல்லையா...? ப்ளீஸ்... மற்ற விஷயங்களைக் கேளுங்கள்...

    மாடலிங் அனுபவம் இருக்கிறதா மிஸ் மாயா...?

    இல்லை...

    இனிமேல் அத்துறையில் ஈடுபடுவீர்களா...?

    மாடலிங் என்ற போர்வையில் பெண்களை சம்பந்த சம்பந்தமில்லாமல் ஆபாசமாய்க் காட்டுவதை நான் வெறுக்கிறேன்... யாரையும் முகம் சுளிக்க வைக்காத ஒரு மாடலாய் இருப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை...

    உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்...

    சொல்லுமளவுக்கு ஏதுமில்லை... சாதாரண அப்பர் மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்தவள் நான்...

    ஒரு பளிச் புன்னகையோடு மாயா சொல்ல அந்த நிருபர் சிரித்துக் கொண்டே தொடர்ந்து சொன்னார்.

    ஆனால்... நீங்கள் மிஸ் தேவதையாக அறிவிக்கப்பட்ட அந்த நிமிடத்தில் இருந்து அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்... விழாக் குழுவின் பரிசைத் தவிர ஸ்பான்சர்ஸ் கிஃப்ட்கள் ஏராளமாய்க் குவியப் போகின்றன... ஜே.கே. அன்ட் கம்பெனி வளசரவாக்கத்தில் ஒரு பங்களா பரிசளிப்பதாய் அறிவித்திருந்தார்கள்... சௌந்தரா பைனான்ஸ் டாட்டா சுமோவைப் பரிசளிக்கப் போகிறது... இதைப் போல இன்னும் ஏராளம்...

    மாயா புன்னகை விலகாத முகத்தோடு சொன்னாள்.

    இந்தப் பரிசுகளெல்லாம் சந்தோஷத்துக்குரிய விஷயம்தான்... ஆனால் ‘மிஸ் தேவதை 1996’ என்ற பட்டம் பெறுகிற சந்தோஷத்துக்கு முன்னால் மற்றதெல்லாம் தூசு...

    மாயாவின் அம்மா புஷ்பம் குறுக்கிட்டு அவள் காதில் கிசுகிசுத்தாள்.

    போதும் மாயா... கிளம்பு. நீ பதில் சொல்லிட்டு இருந்தின்னா விடியவிடிய வேணாலும் இந்த நிருபர்கள் மாத்தி மாத்தி கேள்விகளைக் கேட்டுகிட்டே இருப்பாங்க...

    அடுத்த சில நிமிடங்களில் சூழ்ந்திருந்த நிருபர் கூட்டத்தினின்றும் போலீஸ் உதவியோடு வெளியே வந்தாள் மாயா.

    தலையில் கிரீடம் ஒரு மின்னலின் தகதகப்போடு தெரிய காத்துக் கொண்டிருந்த காரை நோக்கி மாயா நடந்தாள்.

    கதர் வேஷ்டி, கதர் சர்ட் அணிந்திருந்த அந்த நபர் மாயாவுக்கு எதிர் சோபாவில் கால்மேல் கால்போட்டு நன்றாகப் பின்னுக்கு சாய்ந்து உட்கார்ந்திருந்தார். ஏராளமான தொந்தி. வெற்றிலையை அரைத்திருந்த உதடுகளும் நாக்கும் பேசும்போது ரத்தச் சிவப்பைக் கொட்டின.

    போன வருஷ ‘மிஸ். தேவதை’ இன்னிக்கு எங்கேயோ போயிட்டாம்மா. இந்திப் படவுலகத்தை ஒரு கலக்குக் கலக்கிட்டிருக்கா... படத்துக்கு ஒரு கோடி ரூபாய் வாங்கிட்டிருக்கா... தமிழ் படத்துல நடிக்கற பெரிய பெரிய ஹீரோக்களே நினைச்சுப் பார்க்க முடியாத தொகை...

    மாயா அவர் பேச்சை அசுவாரஸ்யமாகக் காதில் வாங்கியபடி தனது பத்துவிரல் நகங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அவர் புஷ்பத்தையும். தனகோடியையும் பார்த்துப் பேச்சைத் தொடர்ந்தார்.

    நீங்க மட்டும் உம்ன்னு சொல்லுங்க... உங்க பொண்ணை ஒருபெரிய லெவலுக்கு கொண்டு வந்து காட்டறேன்...

    மாயாவோட விருப்பம்தான் முக்கியம்... அவளுக்கு இஷ்டமில்லாத எதையும் செய்யச் சொல்லி நாங்க நிர்ப்பந்திக்க மாட்டோம்...

    அவர் வெற்றிலைக்கறைப் பற்கள் தெரியச் சிரித்தார்...

    "மாயா சின்னப் பொண்ணும்மா... அவளுக்கு என்ன தெரியும்...?

    நாமதான் வழிகாட்டணும்... இதுவரைக்கும் ஏழு படம் புரொட்யூஸ் பண்ணிட்டேன்.. ஏழுமே ஜூபிலி தான்... ஏழு படத்திலும் புதுமுகம் தான்... அதுல மூணு பேர் ‘மிஸ் தேவதை’ பட்டம் வாங்கினவங்க... யாருமே சோடை போகலை... கோடி கோடியா சம்பாதிச்சிட்டிருக்காங்க..."

    முடிவெடுக்க வேண்டியவ மாயாதாங்க... நீங்க அவளைப் பார்த்துப் பேசுங்க...

    இங்கே பாரம்மா மாயா... நீ என்ன சொல்றே? ஸ்கிரீன் டெஸ்ட்டெல்லாம் எதுவுமே வேண்டாம்... அக்ரிமெண்ட் பேப்பர்ல கையெழுத்தை மட்டும்போடு... அப்புறம் லட்சுமி மழை மாதிரி கொட்ட ஆரம்பிச்சுடுவா...

    மாயா தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரை நேருக்குநேர் பார்த்துச் சொன்னாள்.

    "நீங்க இவ்வளவு தூரம் எடுத்துச் சொன்ன பிறகும்... ‘முகத்திலடிச்ச

    Enjoying the preview?
    Page 1 of 1