Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Mullaip Poovin Mudivu!
Oru Mullaip Poovin Mudivu!
Oru Mullaip Poovin Mudivu!
Ebook174 pages53 minutes

Oru Mullaip Poovin Mudivu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Mullaip Poovin Mudivu!

Read more from Rajeshkumar

Related to Oru Mullaip Poovin Mudivu!

Related ebooks

Related categories

Reviews for Oru Mullaip Poovin Mudivu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Mullaip Poovin Mudivu! - Rajeshkumar

    16

    1

    அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள் போலீஸ் ஜீப் நுழைந்து போர்டிகோவில் மௌனமானதும் இன்ஸ்பெக்டர் விக்ரம் மெல்ல திறந்து உள்ளே போனார். கண்ணாடிக் கதவு அருகே நின்றிருந்த பேரர் கதவைத் திறக்க ஹோட்டல் மானேஜர் எதிர்கொண்டார்.

    வாங்க இன்ஸ்பெக்டர்...

    போன் பண்ணியது நீங்கதானே...?

    ஆமா...

    எந்த ரூம்...?

    எட்டாவது மாடி. ரூம் நெம்பர் எய்ட் நாட் ஸெவன்.

    எப்பயிருந்து பேட் ஸ்மெல் வருது...?

    ஒரு மணி நேரத்துக்கு முந்தியிருந்துதான்.

    வாங்க பார்க்கலாம்.

    லிஃப்ட்டை நோக்கிப் போனார்கள்.

    சூரிய வெளிச்சம் சென்னையின் இருட்டைக் கழுவிக் கொண்டிருந்த வேளையில் நீலகிரி எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ஸ்டேஷனின் ஐந்தாவது ஃப்ளாட் பாரத்திற்குள் நுழைந்து தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு பெருமூச்சு விட்டது.

    எஸ்7 கோச்சிலிருந்து பவ்யா ஒரு சிறிய சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள். போர்ட்டர் பக்கத்தில் வர வேண்டாம்பா என்று சொல்லி எக்ஸிட்கேட்டைப் பார்த்து நடக்க ஆரம்பித்தாள்.

    பவ்யாவுக்கு இருபத்தைந்து வயது உடம்பு. ரோஜா நிறம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகாக இருந்தாள். மெலிதான நீலவர்ண சுடிதார். அவளுடைய உடம்பின் ஏற்ற இறக்கங்களையும் வளைவுகளையும் ரசனையோடு வழங்கியிருந்தது.

    முதுகுக்குப் பின்னால் யாரோ கமெண்ட் அடித்தார்கள்.

    யார்ரா அவ சினி ஸ்டார் மாதிரி இருக்கா?

    எந்தப் படத்திலேயும் பார்த்தது மாதிரி தெரியலையே...

    தனியா வந்திருக்கா போலிருக்கு. கூட யாரையும் காணோம்...

    செம ஃபிகர்...

    இடுப்பைப் பாரு...

    "பவ்யா பொருட்படுத்தாமல் நடந்தாள். இது மாதிரியான கமெண்ட்ஸ் அவளுக்குப் பழக்கமாகிப் போன ஒன்று. என்றைக்குமே பவ்யா தன் அழகைப் பற்றி பெருமையாய் நினைத்தது கிடையாது.

    எக்ஸ்க்யூஸ்மி! ஒரு நிமிஷம்!

    பவ்யா நின்று திரும்பிப் பார்த்தாள்.

    கம்பார்ட்மெண்ட்டில் ஈரோட்டிலிருந்து அவளோடு பயணம் செய்த ஒரு இளைஞன், ஜொள்ளு பார்ட்டி என்பது பார்வையிலேயே தெரிந்தது.

    எஸ்...!

    மெட்ராஸ்ல நீங்க எங்கே போகணும்...?

    பெசண்ட் நகர்...

    எனக்கு கார் வந்திருக்கும்... வாங்களேன்...! உங்களை நீங்க போக வேண்டிய இடத்துக்கு ட்ராப் பண்ணிட்டு நான் போறேன்...

    நோ... தாங்கஸ்...! எனக்காக என் ஃப்ரண்ட் கார் எடுத்துட்டு வந்திருப்பா... ஷீ வில் பி வெயிட்டிங் ஃபார் மீ, நியர் பை ஹிக்கின் பாதம்ஸ் புக் ஸ்டால்...

    பை... த பை... மெட்ராஸுக்கு நீங்க அடிக்கடி வருவீங்களா...?

    இல்லை... இதுதான் முதல் தடவை....

    நீங்க படிக்கிறீங்களா... வேலை பார்க்கிறீங்களா?

    பவ்யா அந்த இளைஞனை உஷ்ணமான பார்வை பார்த்தாள்.

    இது உங்களுக்குத் தேவையில்லாத கேள்வின்னு நினைக்கிறேன்...

    டோண்ட் மிஸ்டேக் மீ... மிஸ். நான் அந்தக் கேள்வியைக் கேட்டதுக்கு காரணம் இருக்கு.

    என்ன காரணம்...?

    நான் ஒரு விளம்பரக் கம்பெனியை நடத்திக்கிட்டு வர்றேன். ஒரு ப்ராடக்டை விளம்பரம் பண்ண உங்களை மாதிரியான அழகான பெண்ணை மாடலிங்கா பயன்படுத்தினா நல்லாயிருக்கும்...

    பவ்யா புன்னகைத்தாள்.

    ஏற்கனவே பல பேர் என்கிட்ட கேட்ட ஆப்ளிகேஷன்தான் இது... அவங்களுக்கு சொன்ன பதிலையே உங்களுக்கும் சொல்லிடறேன். ஸார்...

    ப்ளீஸ் கன்ஸிடர் மை ஆப்ளிகேஷன்

    அகெய்ன்... ஸாரி...

    எவ்வளவு பணம் வேண்டுமானாலும்...

    பவ்யா நின்றாள். லுக்... மிஸ்டர்... அது பணம் சம்பந்தப்பட்ட விஷயமில்லை. மனம் சம்பந்தப்பட்ட விஷயம். கோ அண்ட் சர்ச் சம்படி...

    இளைஞன் தளர்ந்து போய் நிற்க, பவ்யா சூட்கேஸை கைமாற்றிக் கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.

    அந்த மே மாத காலை நேரமே சென்ட்ரல் ஸ்டேஷன் முழுவதும் சூடாய் இருந்தது. முன்நெற்றியும் பின்னங்கழுத்தும் வியர்த்தது. மகா சந்தடியோடு இருந்த ஸ்டேஷனின் ஜனத்திரளுக்கு நடுவே விடுவிடுவென்று நடந்து ‘ஹிக்கின் பாதம்ஸ்’ புக் ஸ்டாலை நெருங்கினாள்.

    ஆச்சரியப்பட்டாள்.

    அவளை வரவேற்க வருவதாய் சொன்ன தோழி லட்சணாவைக் காணோம்.

    கழுதை! மறந்துட்டா போலிருக்கே...

    வாடி...! கொங்கு நாட்டுத் தங்கமே... பக்கவாட்டில் குரல் கேட்டுத் திரும்பினாள்.

    லட்சணா.

    கையில் வைத்திருந்த அட்டை டம்ளரில், காபி ஆவி பறந்து கொண்டிருந்தது. பவ்யா அவளை முறைத்தாள்.

    உன்னை இப்போ திட்டிக்கிட்டு இருந்தேன்...

    காலையில காப்பி சாப்பிடலேன்னா வாழ்க்கையே வெறுத்துப் போனது மாதிரி இருக்கு... நீயும் காப்பி சாப்பிடறியா?

    வேண்டாம். அரக்கோணத்துல குடிச்ச காப்பியே இன்னும் அடிவயித்துல உட்கார்ந்துக் கிட்டு அடம் பிடிச்சுட்டிருக்கு... நீ விழுங்கு

    சுடிதாரில் சுமாராய் இருந்த லட்சணா ஒருவாய் காப்பியை விழுங்கிவிட்டு பவ்யாவை ஏறிட்டாள்.

    கோயமுத்தூர் எப்படியிருக்கு...?

    ஏர்கண்டிஷன் காத்து. சிறுவாணித் தண்ணீர். இந்த ரெண்டும் இருக்கும்போது கோயமுத்துருக்கு கேட்கவா வேணும்?

    நீ கூட முன்னைக் காட்டிலும் நிறம் கூடியிருக்கே...! ரோஸ் மில்க் நிறம்...

    பவ்யா சிரித்தாள்.

    நீ எப்படி இருக்கே அதைச் சொல்லு...

    ஃபைன்...

    உன்னோட கணவர்...?

    அமர்க்களமா இருக்கார்...

    வயித்துல ஏதாவது புழு பூச்சி...

    ஒண்ணும் கிடையாது. எல்லாம் ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் தான்...

    லட்சணா காப்பியை சாப்பிட்டு முடித்து அட்டை டம்ளரை நசுக்கி வேஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு கர்ச்சீப்பால் வாயை ஒற்றிக் கொண்டாள்.

    புறப்படலாமா...?

    ம்...

    ஸ்டேஷனுக்கு வெளியே வந்தார்கள்.

    சென்னை இன்னமும் சோடியம் வேப்பர் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தில் தான் இருந்தது. க்யூ வரிசையில் காத்திருந்த ஆட்டோக்களில் பயணிகள் லக்கேஜ்களை திணித்துக் கொண்டிருந்தார்கள்.

    லட்சணா...

    ம்...

    எனக்கு நிச்சயமா நீ வேலை பார்க்கிற கம்பெனியில் வேலை கிடைக்குமா?

    வேலை ரெடி...

    நீயா சொல்லிட்டா எப்படி...? உன்னோட மானேஜிங் டைரக்டர் சொல்ல வேண்டாமா...?

    அவரே சொல்லிட்டார்.

    எனக்கு என்ன போஸ்ட்...?

    இன்னிக்கு காலையில பத்து மணிக்கு அவரை நாம் பார்க்கும்போது அவரே சொல்வார்...

    நான் நினைச்சே பார்க்காத அதிர்ஷ்டம் இது...

    லட்சணா கார் பார்க்கிங்கைத் தொட்டு, ‘மாருதி 1000’க்குள் நுழைந்து பக்கவாட்டுக் கதவைத் திறக்க, பவ்யா பின் சீட்டுக்கு சூட்கேஸை கொடுத்து விட்டு லட்சணாவுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

    கார் கிளம்பியது.

    ஸ்டேஷனின் கசகசப்பிலிருந்து கழன்று ரோட்டுக்கு வந்ததும் லட்சணா வாயைத் திறந்தாள்.

    பவ்யா...

    ம்...

    "கம்பெனியில் உனக்கு என்ன போஸ்ட் கிடைக்கும்னு எனக்குத் தெரியாது. நீ பி.காம் முதல் வகுப்பில் பாஸ் பண்ணியிருக்கிறதுனால அசிஸ்டெண்ட் போஸ்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1