Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Pournami Maranam and Naan Yen Iranthen
Oru Pournami Maranam and Naan Yen Iranthen
Oru Pournami Maranam and Naan Yen Iranthen
Ebook282 pages1 hour

Oru Pournami Maranam and Naan Yen Iranthen

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Pournami Maranam and Naan Yen Iranthen

Read more from Rajeshkumar

Related to Oru Pournami Maranam and Naan Yen Iranthen

Related ebooks

Related categories

Reviews for Oru Pournami Maranam and Naan Yen Iranthen

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Pournami Maranam and Naan Yen Iranthen - Rajeshkumar

    25

    1

    கெட்டிமேளம் தடதடவென்று அதிர - ஏரணிஐமானவர்களின் கையிலிருந்து புறப்பட்ட அட்சதை மணப் பந்தலில் சிதற - ஜெயந்த், சுப்ரியாவின் கழுத்தில் மாங்கல்ய முடிச்சுகளைப் போட்டு முடித்திருந்தான்.

    புரோகிதரிடமிருந்தும் - ஹோமப் புகையிலிருந்தும் விடுதலை பெற்று மண்டபத்தில் நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த அலங்கார சோபாவுக்குப்போனதுமே - சுற்றிலும் இருப்பவர்களுக்குத் தெரியாமல் ஒரு தரம் ‘வெடுக்’கென்று சுப்ரியாவின் வெண்ணெய் இடுப்பைக் கிள்ளிவிட்டான் ஜெயந்த்.

    ஸ்பாஞ்ச்சுல செஞ்சு வெச்ச மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கியே...

    ஜெயந்தின் கிள்ளலாலும் - அவனின் காதோரக் கிசுகிசுப்பாலும் ‘குப்’பென்று சிவந்துபோன சுப்ரியா நிஜமாகவே அபார அழகோடு இருந்தாள். அந்த மணப்பெண் அலங்காரத்தில் ஜிகுஜிகுவென்று கந்தர்வ லோகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவள் மாதிரி மின்னினாள். ஓரக் கண்ணில் அவனை முறைத்தாள்.

    எனக்கு பயமாயிருக்குங்க...

    எதுக்கு பயம்?

    இவ்வளவு பேருக்கு முன்னாடியே நீங்க இவ்வளவு ஆட்டம் போடறீங்க. இனி ராத்திரிக்கு ரூம்லே...?

    உறவினர் கும்பல் ஒன்று ப்ரசன்ட்டேஷன் பாக்கெட்டுகளோடு வந்து சூழ சோபாவைவிட்டு எழுந்தார்கள்.

    சுப்ரியா... இவர் ஆல்வாயில் இருக்கிற என் சித்தப்பா, இவங்க சித்தி... -அந்த சித்தப்பா ஜெயந்த்தைப் பார்த்து சிரித்தார்.

    கழுத்துல மூணு முடிச்சைப் போட்டு பத்து நிமிஷம்கூட ஆகலை. பத்து வருஷம் பழகின மாதிரி ரெண்டு பேரும் அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க! உன் சித்தியை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ அவ மூணு நாள் வரைக்கும் என் பக்கமா திரும்பி மூச்சைக்கூட விடலை!

    அது உங்க ஜெனரேஷன் சித்தப்பா.

    காலில் விழுந்து நமஸ்கரித்து ப்ரசன்ட்டேஷன் பாக்கெட்டைப் பெற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து ஐந்து நிமிஷம் இரண்டு பேருக்கும் அதே எக்ஸர்சைஸ்.

    டிஃபன் நேரம் நெருங்க- மேளக் கோஷ்டி வாத்தியங்களை உறைக்குள் சொருக ஆரம்பித்திருக்க - மழை பெய்து ஓய்ந்த மாதிரி மண்டபம் நிசப்தத்தில் விழுந்தது.

    யாரோ, அந்த டேப்ரிக்கார்டரை தட்டிவிடேன் என்று சொல்ல- ஒருவர் தட்டிவிட - ஸ்டீரியோ ஸ்பீக்கர்களில் மனோவும் சித்ராவும் பாட ஆரம்பித்திருந்தார்கள்.

    கல்யாண கும்பல் விலகிப் போயிருக்க, ஜெயந்த் சுற்றும் முற்றும் யாரையோ தேடுகிற மாதிரி பார்த்தான். கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த ஒருவனைக் கூப்பிட்டான்.

    என் ப்ரெண்ட்ஸெல்லாம் எங்கே...? ஒருத்தரையும் காணோம்?

    டைனிங் ஹாலுக்கு போயிருக்காங்க ஸார்...

    அவன் பதில் சொல்லச் சொல்ல - மடித்த கர்ச்சீஃபை பின்புற பாக்கெட்டில் சொருகிக் கொண்டே அந்த இளைஞன் வந்தான்.

    அணிந்திருந்த ட்ரஸ்ஸில் உயர்தரம் பளீரிட்டது. சர்ட்டின் மேல்பட்டன் திறந்துவிடப்பட்டிருக்க - உள்ளே வெளிச்ச டாலடிப்போடு தங்க செயின் மின்னியது.

    சாப்பிட்டியா மனோஜ்...?

    ஆச்சு

    ஜெயந்த் சுப்ரியாவின் பக்கம் திரும்பினான்.

    இது மனோஜ். சின்ன வயசிலிருந்தே பழக்கம். ஒரே தட்டில் சாப்பிடற அளவுக்கு நெருக்கம். படிக்கிற காலத்திலிருந்தே எது செஞ்சாலும் ரெண்டு பேரும் சேர்ந்துதான் செய்வோம்... மேரேஜ் விஷயத்துலதான் இவனை நான் முந்திகிட்டேன்!

    டேய்... டேய்... போதுண்டா...

    -சொன்ன மனோஜைக் கையமர்த்திவிட்டுப் புன்னகையோடு தொடர்ந்தான் ஜெயந்த்.

    என்ன போதும்...? உன்னை மாதிரி வி.ஐ.பி.யை எல்லாம் இவ தெரிஞ்சுக்க வேண்டாமா...?

    கொஞ்ச நாள் போச்சுன்னா தானாகவே தெரிஞ்சுக்கறாங்க...

    அதென்ன கொஞ்ச நாள்? இப்பவே தெரிஞ்சுக்கட்டும் - சுப்ரியா கேக்கறியா? ஊட்டியில பாதி டீ எஸ்டேட்டுக்கு சொந்தக்காரன்.

    வணக்கம்.

    சுப்ரியா சொல்ல -

    பதிலுக்குக் கை கூப்பினான்.

    என்ன படிச்சிருக்கீங்க? இன்விடேஷன்ல ஏதோ டிகிரி போட்டிருந்த மாதிரி ஞாபகம்!

    பி.எஸ்ஸி.

    ஜாப்க்கு போற எண்ணம் இருக்கா?

    இவர் விரும்பினா போறதுல அப்ஜெக்ஷன் எதுவும் இல்லை.

    எப்படிடா என் சகதர்மினி?

    யூ ஆர் வெரி லக்கி மிஸஸ் சுப்ரியா. இவனோட பழகினதை வச்சு சொல்றேன். இவன்கிட்டே இருக்கற ஒரே மைனஸ் பாயிண்ட் முன் கோபம்.

    எனக்கும் அதே மைனஸ் பாயிண்ட்தான்!

    எல்லோரும் சிரித்தார்கள்.

    சரி ஜெயந்த். எனக்கு நேரமாச்சு... நான் புறப்படறேன்...

    உன்கிட்டே இருக்கற ஒரே கெட்ட பழக்கம் இதுதான். எப்ப பாரு... நேரமாச்சு நேரமாச்சுன்னு பறக்கறது.

    என் பிஸினஸ் அப்படி. ஓ.கே. சாந்தி முகூர்த்தம், சடங்கு, சம்பிரதாயமெல்லாம் முடிச்சுட்டு உங்க ரெண்டு பேரையும் எப்ப ஃப்ரீயா விடுவாங்க?

    நாளை மறுநாள்!

    அப்ப ஏற்கனவே சொன்ன மாதிரி நாளை கழிச்சு மறுநாள் ஹனிமூனுக்காக நீங்க ரெண்டு பேரும் ஊட்டி வர்றீங்க?

    ஷ்யூர்!

    நான் கெஸ்ட் ஹவுஸ்ல உங்களுக்காகக் காத்திட்டிருப்பேன்.

    2

    இரண்டு சிகரெட்டுகள் சாம்பலாக உதிர்ந்து போயிருக்க மூன்றாவது சிகரெட்டை புகையாக மாற்றிக் கொண்டே கட்டிலில் காத்திருந்தான் ஜெயந்த்.

    கட்டிலின் மேல் விரித்திருந்த படுக்கையிலும், தலையணைகளிலும், பூக்கள் சிதறியிருந்தன.

    தலையணைகளில் எம்பிராய்டரி நூல் SWEET DREAMS என்று சொல்லிக் கொண்டிருந்தன.

    அருகில் இருந்த ஸ்டூலின்மேல் பழத்தட்டு. ஊதுபத்தி ஸ்டாண்டில் ஒரு கொத்து பத்திகள் - அறைக்குள் சுகந்தம் பரப்பும் பணியில் மும்முரமாய் இருந்தது.

    மூன்றாவது சிகரெட்டையும் காலடியில் தேய்த்த போது கதவருகே வளையல் சத்தம் கேட்டது. கூடவே பெண்களின் யூஷுவலான கேலிச் சிரிப்பு.

    ச்சீய்! கொஞ்சம் சும்மா இருங்கடி... எனக்கு எல்லாம் தெரியும்.

    யாரையோ பார்த்துச் சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள் சுப்ரியா.

    தாள் போட மறந்துடாதே!

    -வெளியே இருந்து குரல் கேட்டது.

    வலது கையிலிருந்த பால் டம்ளரை இடது கைக்கு மாற்றிக் கொண்டு அறையின் தாழ்ப்பாளை மேலே ஏற்றி விட்டாள். திரும்பி, பதுமையாக நடந்து கட்டிலருகே வந்தாள்.

    பொறுமை கொத்துக் கறி ஆயிடுச்சு. எவ்வளவு நேரமா வெயிட் பண்றேன்?

    -சுப்ரியா சின்னதாகப் புன்னகைத்தாள்.

    ‘அவர் வெயிட் பண்றார். சீக்கிரமா என்னை உள்ளே அனுப்புங்க’ன்னு நான் சொல்ல முடியுமா?

    சொல்லிக் கொண்டே பால் டம்ளரை அவனிடம் நீட்டினாள்.

    இந்தாங்க...

    பாலா? நான் குடிக்கணுமா?

    முதல்ல டம்ளரை வாங்கிக்கங்க. நான் காலில் விழுந்து உங்களை நமஸ்கரிக்கணும். அப்புறம் நீங்க பாதி குடிக்கணும். நான் பாதி குடிக்கணும்.

    என்ன ஒரே சினிமாடிக்கா இருக்கு?

    இதெல்லாம் சம்பிரதாயம்!

    மொதல்ல இப்படி உக்காரு.

    சுப்ரியா அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்தாள்.

    இப்படி சாஞ்சிக்க.

    என்னங்க...

    சிணுங்கியவளை தோளைப் பற்றி தன் மார்பில் சார்த்திக் கொண்டான். பால் டம்ளரை அவள் கீழுதட்டில் அழுத்தினான்.

    குடி.

    இதுதான் சினிமாத்தனமா இருக்கு.

    ஒரு சிரிப்பலை இரண்டு பேரிடமும் மோதியது. ஜெயந்த் பாலைப் புகட்ட இரண்டு வாய் விழுங்கி விட்டு நிமிர்ந்தாள்.

    அப்புறம்? என்றாள்.

    அப்புறம், படுத்துக்க வேண்டியதுதான்!

    கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமே.

    இப்படி அலங்காரம் பண்ணிகிட்டு என் எதிர்ல நீ உக்காந்திருக்கிற கோலத்துல என் மனசு நொறுங்கிட்டிருக்கு. என்ன பேச முடியும்?

    ஏதாவது பேசுங்க.

    நீதான் பேசேன்.

    நீங்க வேலை பார்க்கிற கம்பெனியோட பேரைப் பலபேர் பலவிதமா சொல்றாங்க. உண்மையாவே உங்க கம்பெனி பேரென்ன?

    சுஜீத் அண்ட் கம்பெனி.

    சீஃப் அக்கௌண்ட்டென்ட்டா இருக்கிற உங்களுக்கு கம்பெனியில ஜி.எம்.முக்கு அடுத்த கிரேடுன்னு சொன்னாங்க... உண்மையா?

    ஆமா!

    அக்கௌண்ட்ஸ்னாலே எனக்கு பிடிக்காது.

    பி.எஸ்.ஸி பாட்டனி படிச்ச உனக்கு அக்கௌண்ட்ஸைப் பத்தி என்ன தெரியும்?

    என்னவோ சின்ன வயசிலிருந்தே கணக்குன்னா எனக்கு அலர்ஜி!

    எனக்கும் இந்த பூ, இலை, வேர், மகரந்தம் இதெல்லாம் பிடிக்காது.

    மெல்லமாய் அவனைக் குத்தினாள்.

    நான் சொன்னதுக்குப் போட்டியா..?

    ஆமா...

    தினமும் எத்தனை மணிக்கு ஆஃபீஸ் கிளம்புவீங்க...?

    கடவுளே! இதென்ன ஃபர்ஸ்ட் நைட்டா? இண்ட்டர்வ்யூ நைட்டா? நீ கேள்வி கேட்டே விடிஞ்சிடும்...

    பயப்படாதீங்க. பனிரெண்டு மணி வரைக்கும் பேசிட்டு அப்புறம் தூங்கிடலாம். எத்தனை மணிக்கு தினமும் ஆஃபீஸ் போவீங்க...?

    எட்டரை மணிக்கு.

    ஸ்கூட்டரா?

    ஆமா.

    அதுக்குள்ள நான் சமையலை முடிக்கணும்..?

    இப்ப நீ கேள்விகளை முடிக்கணும்.

    ப்ச்! சொல்லுங்க.

    ஆமா.

    என்ன டிஃபன் உங்களுக்குப் பிடிக்கும்..?

    ரவா இட்லின்னா சொக்கிடுவேன்... பூரின்னா பூரிச்சி போயிடுவேன்... சப்பாத்தியும் குருமாவும்ன்னா சம்மணம் போட்டு உட்கார்ந்திடுவேன்.

    சாப்பாட்டு ராமன் பரம்பரை போலிருக்கு.

    ஏய்... என்ன பரம்பரையைப்பத்தி பேசறே..? எங்க குடும்பத்துக்கு என்ன பேர் தெரியுமா?

    சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன்.

    தின்னு கெட்ட குடும்பம்!

    சுப்ரியா சிரித்துவிட்டுக் கேட்டாள்.

    எத்தனை மணிக்கு ஆஃபீஸ் முடிஞ்சு வருவீங்க..?

    அஞ்சரை மணிக்கு. நான் வர்றப்போ நீ ரெடியா இருக்கணும்... இந்த மாசம் பூராவும் சினிமோத்ஸவ்.

    சினிமோத்ஸவ்வா?

    சினிமா விழா! தினம் ஒரு படம் பார்த்தாகணும்...

    சினிமா பார்க்கறது எனக்குப் பிடிக்காதுங்க.

    இனிமே பிடிக்கும்படியா பண்ணிக்கோ.

    இத்தனை நேரம் உங்களைக் கேள்வி கேட்டேன். நீங்க என்னை ஏதாவது கேளுங்களேன்.

    கேட்கட்டுமா..?

    ம்...

    ஏ ஜோக் பிடிக்குமா உனக்கு..?

    ச்சீய்!

    பிடிக்காதா..?

    இல்லே! ‘ச்சீய்’னு சொல்லிக்கிட்டே கேட்டுக்குவேன்.

    ஒண்ணு சொல்லேன்.

    சொல்லத் தெரியாது...

    நான் சொல்லட்டுமா?

    வேண்டாம்.

    இல்லை. நான் சொல்லுவேன். ஏர் ஹோஸ்டஸ் ஒருத்தி ஃப்ளைட்ல போகும்போது ஒரு பாஸஞ்சருக்கு பக்கத்துல வந்து நின்று...

    சுப்ரியா காதைப் பொத்திக் கொண்டாள்.

    சொல்லாதீங்க... நான் இப்ப கேக்கற மூட்ல இல்லை.

    வேற எந்த மூட்ல இருக்கே...?

    சுப்ரியா இன்னமும் சிவந்தாள்.

    சரி. நான் சீரியஸா ஒரு கேள்வி கேட்கட்டுமா..?

    ம்...

    காலேஜ் டேஸ்ல யாரையாவது நீ லவ் பண்ணியிருக்கியா சுப்ரியா?

    முகம் மாற நிமிர்ந்தாள்.

    எ... என்ன கேட்டீங்க..?

    நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கியான்னு கேட்டேன்... எந்த பதிலையும் நான் ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்குவேன்.

    இந்த காதல் கத்திரிக்காயெல்லாம் எனக்கு பிடிக்காது. நான் யாரையும் லவ் பண்ணினதில்லை.

    3

    ஊட்டியின் குளிரை எதிர்க்க ஸ்வெட்டரையும் சால்வையையும் உபயோகப்படுத்தியிருந்தார்கள் ஜெயந்த்தும், சுப்ரியாவும்.

    பஸ், மலைப் பாதையின்

    Enjoying the preview?
    Page 1 of 1