Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pachai Kan Devathai
Pachai Kan Devathai
Pachai Kan Devathai
Ebook210 pages1 hour

Pachai Kan Devathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Pachai Kan Devathai

Read more from Rajeshkumar

Related to Pachai Kan Devathai

Related ebooks

Related categories

Reviews for Pachai Kan Devathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pachai Kan Devathai - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    அறிந்தும் அறியாததும்: பெண்களுக்கு ஒரு இனிப்பான செய்ணி! இனி எதிர்காலத்தில் பிரசவ வலி என்பதே இருக்கப் போவது இல்லை. வலியில்லாத பிரசவம் மூலமாக குழந்தையை சுலபமாய் பெற்று எடுக்கலாம். இந்த வலியில்லாத பிரசவத்துக்குப் பெயர் எபிடியூரல் டெலிவரி. வலியில்லாத பிரசவம் எப்படி சாத்தியம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம். பிரசவ நேரத்தில் கர்ப்பப்பை சுருங்கும்போது அந்த மாற்றம் தகவலாக தண்டுவடத்தில் உள்ள நரம்புகள் வழியாக மூளையை எட்டுகிறது. இதுதான் ஒரு பெண்ணால் பிரசவ வலியாக உணரப்படுகிறது. இந்த பிரசவ வேதனை எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. குழந்தையின் எடை, கருப்பையில் குழந்தையின் நிலை, பெண்ணின் இடுப்பு எலும்பில் உள்ள கால்சியத்தின் அடர்த்தி, பெண்ணின் மனோநிலை போன்றவற்றின் அடிப்படையில் பெண்ணுக்கு பெண் பிரசவவலியின் தாக்கம் மாறுபடும். சரி, வலியில்லாத பிரசவம் எப்படி என்பதை 2-வது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பார்ப்போம்.

    1

    பைபிளின் எண்ணாகமம் 6:25 வரியில் சொல்லப்பட்டு இருந்த அந்த வாக்கியத்தின் மேல் பார்வையைப் போட்டிருந்தார் ஃபாதர் மைக்கேல் பொன்ராஜ்.

    கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரகாசிக்கப் பண்ணி உன்மேல் கிருபையாய் இருக்கக் கடவர். மேலும் அவர் உன் மேல் பிரசன்னமாகி உனக்குச் சமாதானம் கட்டளையிடக் கடவர்.

    மேற்கொண்டு அவர் படிக்க முயன்ற விநாடி கதவருகே குரல் கேட்டது.

    ஃபாதர்!

    பொன்னிற அட்டையோடு இருந்த பைபிளில் இருந்து பார்வையைத் திருப்பினார். தேவாலய அலுவலக சிப்பந்தி அந்தோணி நின்றிருந்தான்.

    ‘என்ன?’ என்பது போல் அந்தோணியைப் பார்த்தார் மைக்கேல் பொன்ராஜ்.

    இது கன்ஃபெஷன் டைம் ஃபாதர்.

    ஓ...! பதினோரு மணி ஆயிடுச்சா....? இன்னிக்கு டைம் போனதே தெரியலை. கன்ஃபெஷனுக்கு எத்தனை பேர் வந்து இருக்காங்க?

    ஒருத்தர் மட்டும்தான் ஃபாதர்.

    சரி.... நான் பார்த்துக்கிறேன்... நீ கிளம்பு அந்தோணி!

    அந்தோணி கிளம்பிப் போய்விட... ஃபாதர் மைக்கேல் பொன்ராஜ் சுவரின் ஆணியில் மாட்டியிருந்த சிவப்பு அங்கியை எடுத்து அணிந்து கொண்டு தன்னுடைய அறையிலிருந்து வெளிப்பட்டார். அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அவர் ஒரு இளைஞனைப் போல் வேகமாய் நடைபோட்டு ஐம்பது மீட்டர் தொலைவில் இருந்த தேவாலயத்தை நோக்கிப் போனார். செயற்கைப் புல்வெளியை சுத்தம் செய்து கொண்டு இருந்த துப்புரவுப் பணியாளர்கள், பார்த்துக் கொண்டிருந்த வேலையை சில விநாடிகளுக்கு நிறுத்திவிட்டு பவ்யமாய் கும்பிடு போட்டனர். ஃபாதர் அவர்களை புன்னகையோடு பார்த்து பேசிக் கொண்டே நடந்தார்.

    என்ன மரியதாஸ்! ஊருக்குப் போயிருந்தே போலிருக்கு!

    ஆமாங்க ஃபாதர்...! பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கேன்...!

    பெரிய பொண்ணு பேரு எஸ்தர்தானே?

    ஆமாங்க ஃபாதர்.

    பையனுக்கு என்ன வேலை?

    ட்ராவல்ஸ் கம்பெனியில் இருக்கார்.

    கல்யாணத்துக்கு கூப்பிட மறந்துடாதே.

    நீங்க இல்லாமலா ஃபாதர்....?

    எல்லாம் கர்த்தரோட கிருபை. அடுத்த மாசம் குருத்தோலை பண்டிகை வருது... தலைக்கு மேல் வேலை கிடக்கு மரியதாஸ். அதையெல்லாம் மறந்துடாதே.

    அதையெல்லாம் முடிச்சுடுவேன் ஃபாதர்.

    சரி... பொண்ணு கல்யாணத்துக்கு பணம் ஏதாவது வேணும்ன்னா முன்னாடியே நம்ம திருச்சபைக்கு ஒரு விண்ணப்பம் குடுத்துரு!

    சரிங்க ஃபாதர்.

    மைக்கேல் பொன்ராஜ் காற்றில் சிலுவைக் குறி வரைந்து அங்கே வேலை செய்துகொண்டு இருந்த எல்லோரையும் ஆசிர்வதித்துவிட்டு தேவாலயத்தை நோக்கி நடந்தார்.

    அந்த முற்பகல் வேளையில் தேவாலயத்தில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஸ்டாண்டில் சொற்ப அளவில் மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்க, உள்ளே போடப்பட்டு இருந்த நீளமான பெஞ்ச்களில் சிலபேர் உட்கார்ந்து கண்களை மூடியிருந்தார்கள். செங்குத்தான படிகளில் ஏறி கன்ஃபெஷன் அறைக்குள் நுழைந்தார் மைக்கேல் பொன்ராஜ். கதவைச் சாத்திவிட்டு நாற்காலிக்குச் சாய்ந்தார். சிறிய துவாரங்களுடன் கூடிய மரத்தடுப்புக்குப் பின்னால் பாவ மன்னிப்பு கேட்க வந்து இருந்த நபரின் உடம்பு ஒரு பத்து சதவீதம் மட்டுமே பார்வைக்கு கிடைக்க, மைக்கேல் பொன்ராஜ் தன் முகத்தை அந்தப்பக்கம் திருப்பாமல் செவிக்கு மட்டும் உன்னிப்பைக் கொடுத்தார். மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

    நீங்கள் செய்த தவறுகள் எதுவாய் இருந்தாலும் தேவ குமாரனின் செவிகளில் போட்டு வைக்கவும், அதற்கு பாவமன்னிப்பு பெறவும் இந்த தேவாலயம் அனுமதியளிக்கிறது. நீங்கள் இப்போது பேச ஆரம்பிக்கலாம்.

    அடுத்த சில விநாடிகளில் மரத்தடுப்புக்குப் பின்னாலிருந்து தளர்வாய் குரல் கேட்டது. ஃபாதர்! நான் பிறந்த உடனேயே என் அம்மாவும் எனக்கு ஐந்து வயது நடக்கும்போது என்னோட தந்தையும் இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் நான் கிராமத்துல இருக்கிற பெரியப்பா வீட்லதான் வளர்ந்தேன். படிப்பு மண்டையில் ஏறாததினால ஒரு ஒர்க்ஷாப்ல போய் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த ஓர்க்ஷாப் ஓனர் ஒரு குடிகாரன். அதோடு திருட்டுப் பேர்வழியும் கூட. திருட்டுக்கார்களை வாங்கி விற்பான். போலிஸ் விசாரணைக்கு வந்தா அவங்களுக்கு பணம் குடுத்து சரிக்கட்டிடுவான். எனக்கு இந்த உண்மை தெரிஞ்சதும் அந்த வேலையிலிருந்து நின்னுடலாம்ன்னு பார்த்தேன். ஆனா அந்த ஒர்க்ஷாப் ஓனர் விடலை. இந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்குப் போனா உன்னைக் கொன்னுடுவேன்னு மிரட்டினான். நானும் உயிர்க்குப் பயந்து இன்னமும் வேலை பார்த்துட்டு இருக்கிறேன். இந்த நிலைமையில் என்னோட பெரியப்பாவும் இறந்துட்டதால என் மேல அன்பு செலுத்துதறதுக்கு யாரும் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ நான் என்னோட ஓனர் பண்ணிட்டு இருக்கிற தப்புகளுக்கு எல்லாம் துணை போயிட்டிருக்கேன்.

    ஃபாதர் குறுக்கிட்டு கேட்டார், உங்களுக்கு அந்த வேலையை விட்டு விலக விருப்பமா?

    ஆமா..... ஃபாதர்.....

    போலிஸில் போய் சொல்லலாமே?

    போலிஸ்ல பல பேர் ஒர்க்ஷாப் ஓனர்க்கு தெரிஞ்சவங்களாய் இருக்காங்க. நான் போய் புகார் கொடுத்தாலும் அது குப்பைக் கூடைக்குத்தான் போகும். அதனால நான் இப்போ ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ஃபாதர்.

    என்ன முடிவு?

    இந்த ஊரைவிட்டு இந்த மாநிலத்தை விட்டு வடநாட்டுப் பக்கம் போய் ஏதாவது ஒரு ஊர்ல போய் செட்டிலாயிடலாம்ன்னு பார்க்கிறேன்... இன்னும் ஒரு பத்து நாள்ல இந்த ஊரிலிருந்து கிளம்பிடுவேன். அதுக்கு முன்னாடி பிறப்பால் கிறிஸ்தவனான எனக்கு பாவ மன்னிப்பு வேணும். கண் எதிரே நடக்கிற குற்றங்களைப் பார்த்துக்கிட்டு..... சும்மா இருந்தவனும் ஒரு வகையில் குற்றவாளிதான். அந்த வகையில் நானும் குற்றம் பண்ணினவன்தான். எனக்கு நீங்க பாவ மன்னிப்பு தரணும் ஃபாதர்.

    நீங்கள் எந்தக் குற்றமும் செய்யாத போது உங்களுக்கு பாவமன்னிப்பு வேண்டியது இல்லை... கர்த்தர் உங்கள் மேல் சினம் கொள்ள மாட்டார்.

    இல்லை ஃபாதர்.... என்னோட மன திருப்திக்காகவும், நான் இனி வாழப்போகிற வாழ்க்கையில் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாதபடி இருக்கவும் எனக்கு பாவ மன்னிப்பு வேணும்....

    "சரி! உங்கள் விருப்பப்படி பாவ மன்னிப்பு வழங்கப்படுகிறது. தேவனுடைய வழி என்றும் உத்தமமானது. கர்த்தருடைய வார்த்தைகள் பொன்னைப் போல் புடம் இடப்பட்டது. நம்மை நம்புகிற அனைவர்க்கும் அவர் பாதுகாப்பு கேடயமாய் இருக்கிறார். இனி உங்களுக்கும் அவர் பாதுகாவலனாக மாறி உங்களுடைய பாவங்களை மன்னிப்பார். ஜீவனுள்ள தேவன் அண்ட சராசரங்களைத் தமது வல்லமையுள்ள வார்த்தைகளால் சிருஷ்டித்தார். தேவன் இவ்வுலகில் முதன் முதலாய் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார். உடனே வெளிச்சம் உருவாயிற்று. அதைத் தொடர்ந்து கர்த்தர் ஆகாய விரிவு, சமுத்திரம், தரை, செடி கொடிகள், மரங்கள், பறப்பன, ஊர்வன, மிருகங்கள் ஆகிய எல்லாவற்றையும் தமது வார்த்தைகளின் மூலம் படைத்தார். மனிதர்களையும் படைத்தார். அவர்கள் பாவம் செய்யக்கூடாது என்று விருப்பப்பட்டார். அதற்காக சில கட்டளைகளையும் பிறப்பித்தார். அவருடைய கட்டளைகளை மீறுபவர்கள் பாவம் புரிந்தவராகவே கருதப்பட்டனர். இருப்பினும் எந்த மனிதனாவது பாவம் புரிந்தால் அதை மன்னிக்கும் இரக்கத்தையும் தேவன் கொண்டிருந்தார். ஒரு முறை மன்னிப்பு பெற்றவர்கள் மறுமுறையும் பாவம் செய்தால் அந்த பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் அறிவித்தார். எனவே நீங்கள் இப்போது தேவனின் கிருபையால்

    Enjoying the preview?
    Page 1 of 1