Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivappu Vaanavil
Sivappu Vaanavil
Sivappu Vaanavil
Ebook189 pages57 minutes

Sivappu Vaanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sivappu Vaanavil

Read more from Rajeshkumar

Related to Sivappu Vaanavil

Related ebooks

Related categories

Reviews for Sivappu Vaanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivappu Vaanavil - Rajeshkumar

    19

    1

    ஆபீஸுக்கு புறப்பட்டுப் போகும் அவசரத்தில் இருந்தான் சதீஷ்.

    இருபத்தேழு வயது. உயரம். சிவப்பு நிறம். எண்ணெயின் மினுமினுப்பில் சுருண்ட கேசம்.

    ஜெயா.. ஜெயா..

    குரலை உயர்த்தி சமையல்கட்டில் இருந்த மனைவியைக் கூப்பிட்டான். ஒரு நிமிஷம் வந்துட்டுப் போயேன்...

    வந்துட்டேன்... வந்துட்டேன்...

    சமையலறையினின்று வெளிப்பட்டாள். வாளிப்பான தேகம். மாநிறமாய் இருந்தாலும் திருத்தமாய் இருந்தாள். தலைக்குக் குளித்து கேசத்திற்கு தேங்காய்ப்பூ துவாலையைச் சுற்றியிருந்தாள்.

    என்னவாம்...?

    மேஜை ட்ராயர்ல ஒரு ஃபைலை வெச்சிருந்தேன்.

    ப்ரௌன் கலர் ஃபைலா...?

    ஆமா...

    டைனிங் டேபிள் மேல இருக்கு...

    அங்கு எப்படி போச்சு...

    எப்படி போச்சா...? அரை மணி நேரத்துக்கு முந்தி டைனிங் டேபிள்ல உட்கார்ந்து டிஃபன் சாப்பிட்டுகிட்டு இருக்கும்போது ஃபைலை பார்த்துகிட்டு இருந்தது யாராம்...?

    சதீஷ் தலையை கீறிக் கொண்டான்.

    அட... நான்தான்... சொன்னவன் வேகவேகமாய் போய் ஃபைலை எடுத்துக் கொண்டான். ஜெயா கேட்டாள்.

    என்ன இன்னிக்கு அவ்வளவு அவசரம்...?

    எம்.டி. வர்றார். ஒன்பது மணிக்கெல்லாம் நான் ஆபீஸ் நாற்காலியில் இருக்கணும்.

    சாய்ந்தரம் சீக்கிரம் வந்திடுவீங்கள்ள?

    சொல்ல முடியாது... எம்.டி. இருக்கிற வரை ஆபீஸ்ல நானும் இருந்தாகணும். சீஃப் அக்கௌண்டன்ட் நான்... அவ்வளவு சீக்கிரத்துல வெளியே வந்துட முடியுமா...?

    இன்னிக்கு சாய்ந்தரம் நானும் வர்றதுக்கு லேட்டாகும்.

    எதுக்காக லேட்...?

    இன்னிக்கு ஹாஸ்பிடல்ல ஒரு முக்கியமான ஆப்ரேஷன். ஆப்ரேஷன் என்னமோ சாதாரணமானது தான்... அப்பெண்டிக்ஸ் ஆப்ரேஷன். ஆனா பண்ணிக்கப் போற வி.ஐ.பி. யார் தெரியுமா?

    யாரு... மந்திரியா...?

    சை! மந்திரியெல்லாம் இன்னிக்கு வி.ஐ.பி.யே கிடையாது...

    பின்னே யாரு...?

    நடிகை ப்ரிய கீதா...

    சதீஷ் சிரித்தான். நடிகை ப்ரியகீதாவுக்கா ஆப்ரேஷன்...? அப்படீன்னா அது நிச்சயமா அப்பெண்டிக்ஸ் ஆப்ரேஷனா இருக்காது. ஏதாவது கலைக்கிற விஷயமா இருக்கும்...!

    இல்லீங்க... நேத்திக்கு சாய்ந்தரம் சினிமா ஷூட்டிங் நடந்திட்டிருக்கும் போதே வயித்து வலி தாங்காமே அவுட்டோர்க்கு போன இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துட்டா.... உடனடியா செக்கப்புக்கு கொண்டு வந்தாங்க... எங்க டாக்டர்தான் செக்கப் பண்ணிப் பார்த்துட்டு - இது அப்பெண்டிக்ஸ். முத்தின நிலைமையில் இருக்கு. ஆபரேஷன் பண்ணியாகணும்னு சொல்லிட்டாங்க...

    கழுத்துக்கு ‘டை’யைச் சுற்றிக் கொண்டே கேட்டான் சதீஷ்’ ப்ரியகீதா நேர்ல பார்க்க நல்லாயிருப்பாங்களா...?

    என்ன அழகு தெரியுங்களா...? சிவப்பா சிக்குன்னு இருக்கா...

    வயசு...

    இருபதுக்கு மேல போவாது... பாவம் அந்தச் சின்ன வயசிலேயே அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன்...

    ராத்திரியும் பகலும் உழைச்சா அப்படித்தான்...

    சிரித்தார்கள்.

    சரி... நான் கிளம்பட்டுமா...?

    ம்... ம்...

    மத்தியான டிபன் பாக்ஸ்...?

    ஸ்கூட்டர் பேஸ்கட்ல எடுத்து வெச்சாச்சு...

    இன்னிக்கு என்ன அயிட்டம்..

    தக்காளி சாதம்...

    நேத்தும் தக்காளி சாதம். இன்னிக்கும் தக்காளி சாதமா...?தக்காளி கொஞ்சம் சீப்பா கிடைச்சுடக்கூடாது.. வாரத்துல மூணு நாள் அதை வெச்சே டிபனை ரொப்பிடுவே...! சப்பாத்தி பண்ணியிருக்கக் கூடாது...?

    நாளைக்கு பண்ணலாம் கிளம்புங்க...

    ஒரு நாளைக்கு இல்ல ஒருநாள் அந்த தக்காளியினாலேயே நமக்குள்ளே சண்டை வரப்போகுது...

    வர்றப்ப பார்த்துக்கலாம்...

    சதீஷின் ஆபீஸ் பீச் ரோட்டில் இருந்தது. கட்டிடத்தின் எந்த ஜன்னலைத் திறந்தாலும் கடல் பரப்பின் நீல நிறம் தெரிந்தது.

    ஸ்கூட்டரை டூ வீலர் பார்க்கிங்கில் பொருத்திவிட்டு ஆபீஸ் போர்டிகோவுக்கு வந்தான். க்ரே வண்ண டயோட்டா நின்றிருந்தது. ‘எம்.டி. வந்துட்டார் போலிருக்கே...’

    பதைபதைப்போடு உள்ளே ஓடினான். கேட் வாட்ச்மேன் சல்யூட் அடிக்க - சதீஷ் கேட்டான்.

    எம்.டி. வந்துட்டாரா...?

    எட்டு மணிக்கே வந்துட்டார் ஸார்.

    ஜி.எம்...?

    எம்.டி. கூடவே அவரும் வந்துட்டார் ஸார்...

    சதீஷ் உள்ளே போனான். ஆபீஸில் ஸ்டாஃப் யாரும் வரவில்லை. டைப்பிஸ்ட் ராஜலட்சுமி மட்டும் சிரத்தையாய் டைப் செய்து கொண்டிருந்தாள். தலையை உயர்த்தினாள்.

    குட் மார்னிங் ஸார்.

    குட்மார்னிங்... எம்.டி. எட்டு மணிக்கே வந்துட்டாராமே...?

    ஆமா...

    என்னைக் கேட்டாரா...?

    ம்... கேட்டார். நீங்க ஒன்பது மணிக்குத்தான் வருவீங்கன்னு சொன்னேன். வந்ததும் இன்ஃபார்ம் பண்ணச் சொன்னார்... பண்ணட்டுமா...?

    ம்...

    ராஜலட்சுமி தனக்குப் பக்கத்தில் இருந்த இண்ட்டர்காமின் ரிஸீவரை எடுத்து காதுக்கு கொடுத்து பட்டனைத் தட்டினாள்.

    பேசினாள்.

    ஸார்... சீஃப் அக்கௌண்ட்டன்ட் மிஸ்டர் சதீஷ் வந்திருக்கார்.

    .....

    எஸ்... ஸார்... ரிஸீவரை வைத்த ராஜலட்சுமி சதீஷை ஏறிட்டாள். ஸார்... நீங்க எம்.டி.யைப் போய் பார்க்கலாம்.

    சதீஷ் அலுவலகத்தின் மையப் பகுதிக்குள் நுழைந்து... திரைச்சீலைகள் அசையும் கண்ணாடி கேபின் முன் போய் நின்றான். கதவை மெல்லத் தட்டி சப்தித்தான்.

    டொக்... டொக்...

    எஸ்... கம்மின்...

    கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனான். ஏ.ஸி.யின் குளிர் அவனை உடனே முகர்ந்தது.

    குட்மார்னிங் ஸார்...

    வெரி குட்மார்னிங். வாங்க மிஸ்டர் சதீஷ்... ரிவால்விங் நாற்காலியில் சுழன்ற எம்.டி. ரங்கராஜ் ஐம்பது வயதின் ஆரம்பத்தில் இருந்தார். உடம்பில் பிஸ்கெட் நிற சஃபாரி. முடி கொட்ட ஆரம்பித்திருந்த மண்டையில் மீதமிருந்த சொற்ப ரோமத்தை ஜாக்கிரதையாய் சீவியிருந்தார்.

    உட்கார்ங்க சதீஷ்...

    உட்கார்ந்தான்.

    கம்பெனி ப்ராக்ரஸ் எப்படியிருக்கு...?

    ஃபைன் ஸார்..."

    எனி ப்ராப்ளம்ஸ்...?

    அட்மினிஸ்ட்ரேஷன் சைடில் எந்த ப்ராப்ளமும் இல்லை ஸார். ஆனா ஃபாக்டரியிலேயும் ப்ரொடக்ஷன் சைடிலேயும் வீ ஆர் ஃபேஸிங் ப்ராப்ளம்ஸ்...

    ஜி.எம். சொன்னார்... நேச்சர் ஆஃப் ப்ராப்ளம் வெரி ஈஸி டு ஹேண்டில். ஃபாக்டரி மானேஜர்க்கு வேண்டிய இன்ஸ்ட்ரக்ஷன்களை குடுத்திருக்கேன். அதை அவர் ஃபாலோ பண்ணினா போதும். காப்பி சாப்பிடறிங்களா சதீஷ்?

    வேண்டாம் ஸார்.

    அரை கப் சாப்பிடலாமே...? மேஜையின் ஓரத்தில் இருந்த பிளாஸ்கை எடுத்து வெண்ணிற கப்களில் ஊற்றினார்.

    சதீஷ்...

    ஸார்...

    உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் இருக்கும்?

    ரெண்டு வருஷம்....

    உங்க மிஸஸ் பேரு...?

    ஜெயா...

    நர்ஸா இருக்காங்க இல்லையா...?

    ஆமா ஸார்...

    எந்த ஹாஸ்பிடல்ல...?

    டாக்டர் புவனேஸ்வரியோட நர்சிங்ஹோம்ல.

    குழந்தைங்க..?

    இன்னும் இல்ல சார்...

    காப்பிக் கப்பை நீட்டினார்.

    சாப்பிடுங்க...

    சதீஷ் அந்த கப்பை வாங்கி - உதட்டுக்கு கொடுத்த விநாடி ரங்கராஜ் கேட்டார். திருவள்ளூர்க்குப் பக்கத்தில் ஒரு ப்ளாட் வாங்கிப் போட்டிருந்தீங்களே... அங்கே வீடு கட்டற வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா?

    இன்னும் இல்லை ஸார்.

    ஏன்...?

    எல்.ஐ.ஸி.யில் லோன் கேட்டு அப்ளை பண்ணியிருக்கேன். லோன் சேங்ஷன் ஆக எப்படியும் ஒரு வருஷமாயிடும்.

    ஆபீஸ்ல லோனுக்கு அப்ளை பண்ணலையா?

    லோனுக்கு அப்ளை பண்ண சர்வீஸ் இயர்ஸ் போதாது ஸார். அதான் அப்ளை பண்ணலை...

    வீடு கட்ட பணம் எவ்வளவு தேவைப்படும்?

    மூணு லட்சம்...

    இந்த மாசத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்து பூமி பூஜையை ஆரம்பிச்சுடுங்க... வேண்டிய பணத்தை நான் தர்றேன்...

    சதீஷின் தொண்டையில் காப்பி திகைப்பாய் இறங்கியது.

    ஸார்...

    நான் தர்ற பணம் கூட கடன் இல்லை. என்னோட அன்பளிப்பு...

    ஸார்...

    Enjoying the preview?
    Page 1 of 1