Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedinaalum Kidaikkaathu! and Rendum Moonum Yezhu
Thedinaalum Kidaikkaathu! and Rendum Moonum Yezhu
Thedinaalum Kidaikkaathu! and Rendum Moonum Yezhu
Ebook248 pages1 hour

Thedinaalum Kidaikkaathu! and Rendum Moonum Yezhu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thedinaalum Kidaikkaathu! and Rendum Moonum Yezhu

Read more from Rajeshkumar

Related to Thedinaalum Kidaikkaathu! and Rendum Moonum Yezhu

Related ebooks

Related categories

Reviews for Thedinaalum Kidaikkaathu! and Rendum Moonum Yezhu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedinaalum Kidaikkaathu! and Rendum Moonum Yezhu - Rajeshkumar

    15

    1

    ரிச்சி ரிசார்ட்ஸ்.

    நீலகிரியின் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட குளிர், சுற்றுப்புறத்தை பனிப்புகையால் நிரப்பியிருந்தது. மலைச் சரிவின் அடர்த்தியான சிப்ரஸ் மரங்களுக்கு இடையில் ஆங்காங்கே காட்டேஜ்கள் மறைந்திருந்தன. சமவெளியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த செயற்கை நீச்சல் குளத்தின் வெதுவெதுப்பான வெந்நீரில் சிலர் திளைத்துக் கொண்டிருந்தார்கள். தூ... ர... த்... தி... ல் கோல்ஃப் ஆடுகிற கும்பல் ஒன்று தெரிந்தது. புற்களின் தலைகளில் பனிக் கிரிஸ்டல்கள். அபூர்வமாய் வெய்யில் அடிக்கும் போதெல்லாம் மின்னியது.

    காட்டேஜ் எஃப் 5-ல் யோகேஷ் - நீரஜா, ஃபோம் கட்டிலில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்திருந்தார்கள். எதிரில் ஒரு ராட்சஸ சைஸ் லைட் வெயிட் சூட்கேஸ் - வாய் பிரித்து உட்கார்ந்திருக்க - உள்ளே லாண்ட்ரி ட்ரைவாஷ்க்கு போய்விட்டு பெட்ரோல் மணத்தோடு வந்திருந்த ட்ரஸ்களை ஒழுங்காய் அடுக்கிக் கொண்டிருந்தாள் நீரஜா.

    நீரஜாவுக்கு இருபத்தியோரு வயது. பார்க்கிற இந்த நிமிஷம் வழவழப்பான கார்டன் சில்க் சாரியை உடம்புக்குக் கொடுத்து அதன் முந்தானை பகுதியை - இடுப்பின் பால்வண்ண சதைக்குள் சொருகியிருந்தாள். கேஷுவலாக அவள் போட்டிருந்த கோடாலிக் கொண்டைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சில முடிக் கற்றைகள் பக்கவாட்டு நெற்றியைத் திருட்டுத்தனமாய் விழித்திருந்தன. பெரிய கண்களில் மின்சாரம். உதடுகளில் பாதரச ஈரம். எங்கே தொட்டாலும் இனிக்கிற ரக உடம்பு.

    யோகேஷை வர்ணித்தால் காது கொடுத்துக் கேட்க மாட்டீர்கள். சுருக்கமாய் ஒரு வரி மட்டும். 27 வயது. மாநிறம். மீசையை வழித்து விட்டால் ஹிந்திப்பட ஹீரோ மாதிரியான தோற்றம் காட்டுவான்.

    இந்த நிமிஷம் பார்க்கிற போது - டீபாயின் மேல் இருந்த லாவண்டர் நிற டெலிபோனின் பட்டன்களைத் தட்டி - யாரையோ பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

    சே! எங்கேஜ்ட் டோன்தான் வருது...

    சூட்கேஸ் ஜிப்பை இழுத்து மூடும் முயற்சியில் இருந்த நீரஜா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

    பிசினஸ் ஹவர்ஸ்ல அப்பாவோட போன் லைன் கிடைக்கிறது கஷ்டம்தான்.

    ஏழு நெம்பர் இருக்கு. ஒரு நெம்பர்கூட கிடைக்க மாட்டேங்குதே...

    வீட்டுக்கு ட்ரை பண்ணிப் பாருங்க...

    இந்த நேரத்துல... வீட்ல சர்வண்ட்ஸ் மட்டும்தான் இருப்பாங்க.

    நான் டயல் பண்ணிப் பார்க்கட்டுமா?

    நீ டயல் பண்ணினா லைன் கிடைச்சுடுமாக்கும்?

    ஒவ்வொருத்தர்க்கும்... ஒவ்வொரு கைராசி இருக்கே?

    சரி! பண்ணு பார்க்கலாம்...

    நீரஜா யோகேஷிடமிருந்து ரிஸீவரை வாங்கிக் கொண்டு கோர்ட் பட்டன்களைத் தட்டினாள். தட்டி முடித்ததும் உடனே மலர்ந்தாள்.

    ஓ... காட்... இட். ரிங்டோன் போகுது...

    எங்கே...?

    ரிஸீவரைப் பறித்து காதுக்குக் கொடுத்த யோகேஷ், பற்களைக் காட்டி கண் சிமிட்டினான்.

    நிஜமாவே உனக்கு மச்சம்தான்...

    பின்னே... அம்மா எது தொட்டாலும் துலங்கும். அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மறுமுனையில் கெட்டியான குரலில் ஹலோ சொல்லி கேசவ் வந்தார்.

    மாமா... நான் யோகேஷ்...

    யோகேஷா...? உன் போனைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். எங்கிருந்து பேசறே...?

    ரிசார்ட்டிலிருந்துதான்...

    வெதர் எப்படி...?

    ஃபைன்...

    எப்ப அங்கிருந்து கிளம்பறீங்க...?

    கிளம்பிட்டிருக்கோம்...

    என்னது... கிளம்பி வர்றீங்களா...? இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு வரலாமே...?

    இன்னும் ஒரு வாரமா...? சரியாப் போச்சு. எனக்கு கம்பெனி ஞாபகம் வந்தாச்சு மாமா. பெல் சாம்பிள் என்னாச்சு. மெட்டலர்ஜிகல் டெஸ்ட் ரிப்போர்ட் என்ன சொல்லுது...?

    கேசவ் சிரித்தார். யோகேஷ்! யூ... ஆர் எ வொர்க்கறாலிக் கம்பெனி. பிஸினஸ் பரபரப்பையெல்லாம் மறந்து பொண்டாட்டியோடு நாலைஞ்சு நாள் பிக்னிக் அனுப்பி வெச்சா... அங்கே போயும் பெல் சாம்பிளா...

    போதும் மாமா...! ரிச்சி ரிசார்ட்ஸ் ரெண்டு நாளிலேயே அலுத்துப் போச்சு... ட்ரஸ்ஸெல்லாம் பேக் பண்ணியாச்சு. இன்னும் அரை மணி நேரத்துல பெக்-அவுட் ஆயிடுவோம். ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் வீட்ல இருப்போம்.

    கார்ல எந்த ப்ராப்ளமும் இல்லையே...?

    ஒரு ப்ராப்ளமும் இல்லை மாமா... ஆரோக்கியமா இருக்கு.

    ட்ரைவ் கேர்ஃபுலி... இந்த சீஸன்ல மிஸ்ட் அதிகமாயிருக்கிறதா பேப்பர்ல பார்த்தேன்.

    கார்லதான் ஹைலோஜன் லாம்ப் இருக்கே.

    நீரஜா ட்ரைவ் பண்ண ஆசைப்பட்டா, வண்டியைக் குடுத்துட வேண்டாம்.

    ரிஸீவரை... உங்க... பொண்ணுகிட்ட தர்றேன். நீங்களே சொல்லிடுங்க மாமா. அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே - நீரஜா யோகேஷிடமிருந்து ரிசீவரை வாங்கி காதுக்குக் கொடுத்தாள்.

    அப்பா...

    என்னம்மா... பிக்னிக் ஸ்பாட் பிடிச்சுதா?

    ஃபைன் டாடி...! ஆனா, உங்க மாப்பிள்ளை தான் அப்பப்ப கம்பெனியைப் பத்தியும், பிசினஸ் பத்தியும் பேசி போரடிச்சார்.

    மாப்பிள்ளையோட ட்யூட்டி கான்ஸியஸைப் பத்தித்தான் நமக்கு தெரியுமே... சரி எத்தனை மணிக்கு கிளம்பறீங்க...?

    நாலு மணிக்கு...

    காரை மாப்பிள்ளையே ஓட்டட்டும். நீ ஸ்டிரிங்கை தொடக் கூடாது.

    அப்பா... ப்ளீஸ் கொஞ்ச தூரம் மட்டும்...

    நோ... நோ... காட் ரோடு - ட்ரைவிங் எப்பவுமே ரிஸ்க். மாப்பிள்ளை காரை ஓட்டுவார். நீ வேடிக்கை பார்த்துட்டு வந்தா போதும்.

    அப்பா... ப்ளீஸ்...

    நத்திங் டூயிங்...

    மறுமுனையில் கேசவ் ரிஸீவரை வைத்து விட்டார்.

    யோகேஷ் சிரித்தான்.

    என்ன சொன்னார் உங்கப்பா...? ஸ்டியரிங்கைத் தொடக் கூடாதுன்னு சொன்னாரா...?

    ஆமா...

    கவலைப்படாதே..! கோத்தகிரி தாண்டினதும் நீ காரை ஓட்டலாம்.

    நிஜமா...?

    நிஜம்மா..!

    தாங்க்யூ...

    காப்பி சாப்பிட்டு கிளம்பலாமா...?

    ம்...

    இண்ட்டர்காம் பண்ண காப்பி வந்தது. நீரஜா காப்பியைக் குடித்து விட்டு மிதமாய் மேக்கப் போட்டுக் கொண்டாள். யோகேஷ் உல்லன் கோட்டை மாட்டிக் கொண்டான். ரிசப்ஷன் ஹாலில் இருபது நிமிஷங்கள் பெக் - அவுட் சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு - வெளியே நின்றிருந்த கார்க்கு வந்தார்கள். காரின் உச்சந்தலையில் இருந்த காரியரில் காட்டேஜ் பையன், சூட்கேஸ்களை ஒழுங்காக அடுக்கி கட்டியிருந்தான். காரின் உடம்பை சாக்லேட் வண்ணம் போர்த்தியிருந்தது. ‘மாருதி 1000!’

    யோகேஷ் காரை நகர்த்தினான்.

    ஐஸ் காற்று ஓடி வந்து முகத்தில் மோதியது.

    நீரஜா...!

    ம்...

    ஸ்கார்ப்பை நல்லா கட்டிக்க... இல்லேன்னா பனிக்காத்துக்கு காது அடைக்கும்.

    நல்லாத்தான் கட்டியிருக்கேன்.

    கார் ரிசார்ட்டின் சாலைகளை விழுங்கி விட்டு- காட் ரோட்டு வளைவுகளில் இறங்க ஆரம்பித்தது.

    ஸ்டீரியோவை ஆன் செய்தாள் நீரஜா. ரஹ்மானின் மேற்கத்திய இசையை ஸ்பீக்கர்கள் சன்னமான டெஸிபலில் கொட்டின. மலர்கள் இசையில் விழித்துக் கொள்ள - பார்வை வெளிப்பச்சையில் நிலைத்துக் கொண்டது.

    இமையில் நிமிஷங்கள் கரைந்தன.

    ‘எவ்வளவு நேரம்?’

    ‘தெரியவில்லை!’

    சட்டென்று காரின் வேகம் குறைந்த போது தான் ‘திடும்’ என்று நிமிர்ந்தாள் நீரஜா.

    ‘ஏன் காரை ஸ்லோ பண்றீங்க...?’ - கேட்க வாயெடுத்தவள் - ரோட்டைப் பார்த்ததும் கேள்வியைத் தொண்டைக்குள்ளேயே நிறுத்திக் கொண்டாள்.

    ரோட்டின் நடுவில் -

    பனி மூட்டத்தில் நின்றபடி - காரை நிறுத்தச் சொல்லி இரண்டு கைகளையும் அசைத்துக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.

    2

    மலைப் பாதையின் வளைவிலிருந்து, அந்த ‘மாருதி 1000’ கார் உற்பத்தியானதும் ரோட்டின் குறுக்கே ஓடிப்போய் - பனிப்புகையில் நின்று கைகளை அசைத்தான் சேதுபதி.

    சேதுபதிக்கு வயது இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் இருக்கலாம். லேசாய் முடி கொட்டிய மண்டை. பழுப்பு வெள்ளையில் பேண்ட்டும் அடர்த்தியான நீல நிறத்தில் சர்ட்டும் அணிந்து டை கட்டியிருந்தான். இடது கையில் ஒரு ப்ரீஃப் கேஸ். ப்ரீஃப் கேஸில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் வாசகம் ‘ஹில் அண்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ்’ என்று சொன்னது.

    மாருதியின் வேகம் குறைந்தது. சேதுபதிக்குப் பக்கத்தில் வந்து நின்றது. ட்ரைவிங் சீட் ஜன்னலில் குனிந்தான் சேதுபதி.

    எக்ஸ்யூஸ்... மீ... வில் யூ... ட்ராப் மீ.. ஸார்...?

    ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய யோகேஷ் சேதுபதியை பார்வையில் வாங்கியதும் நெற்றியில் வியப்பு காட்டினான்.

    டே... டேய்... நீ... சேதுபதி இல்லை...?

    ஆமா... நீ...?

    சொல்லு பார்க்கலாம். யோகேஷ் தன் கண்களைக் கவ்வியிருந்த குளிர் கண்ணாடியையும் தலைக்கு வைத்திருந்த பனிக்குல்லாவையும் கழற்ற - ஆச்சர்யம் சேதுபதியை தொற்றிக் கொண்டது.

    நீ... நீ... யோகேஷ்?

    யோகேஷ்தான்...!

    என்னடா இப்படி பெருத்துட்டே...? மூஞ்சி பூரா ‘கன்னா பின்னா’ன்னு சதை போட்டிருக்கு.

    கல்யாணமாயிடுச்சுல்ல... ஆமா நீ எங்கே போகணும்...?

    கோயமுத்தூர்...

    இங்கே எங்கடா வந்து மாட்டிக்கிட்டே...? சொல்லிக் கொண்டே பின்புறக் கதவின் உட்பக்க லாக்கை விடுவித்தான் யோகேஷ். சேதுபதி உள்ளே ஏறி உட்கார்ந்ததும் - கார் நகர்ந்தது.

    நீரஜா...! இவன் என்னோட காலேஜ்மேட் சேதுபதி.

    ஹலோ...

    ப்ளீஸ் டூ... மீட்... யூ...

    யோகேஷ் ஒரு வளைவைக் கையாண்டு கொண்டே கேட்டான்: "இந்த அத்துவான

    Enjoying the preview?
    Page 1 of 1