Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udaiyaatha Vennila
Udaiyaatha Vennila
Udaiyaatha Vennila
Ebook290 pages2 hours

Udaiyaatha Vennila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Udaiyaatha Vennila

Read more from Rajeshkumar

Related to Udaiyaatha Vennila

Related ebooks

Related categories

Reviews for Udaiyaatha Vennila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udaiyaatha Vennila - Rajeshkumar

    22

    இந்தியாவிற்கு வந்த முதல் சினிமா படம்: ஏசுவின் வாழ்க்கை, ஆண்டு: 1896, இடம்: பம்பாய்.

    1

    பாலாஜி புன்னகைத்தான்.

    இவங்க இப்படி மூர்க்கமா சண்டை போடுறது... ஒரு வகைல நமக்கு நல்லதுதான்...

    எப்படிண்ணா சொல்றே...?

    அப்போதான் இவரோட வாரிசுகள் ஒவ்வொருத்தரையா தீர்த்துக் கட்டறப்போ யாருக்கும் நம்ம மேலே சந்தேகம் எழாது...

    மேகா பிசிறடிக்கிற குரலில் பாலாஜியைப் பார்த்துத் தயக்கமாய் கேட்டாள்.

    அண்ணா... நம்ம பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? நாம நினைச்ச மாதிரியே ஈஸ்வரோட சொத்து பூராவும் நமக்கு சிக்கலில்லாம வந்து சேருமா?

    அவருக்கு வாரிசுகளே இல்லைன்னு ஆனதுக்கப்புறம் சட்டப்படி சொத்துக்கள் உனக்குத்தானே வந்தாகணும்... நீ இப்போ ஈஸ்வருக்கு சட்டபூர்வமான மனைவி...

    என்னோட கேள்வி இதுதான்... இவரோட வாரிசுகளை சிக்கலில்லாமல் தீர்த்துக்கட்ட முடியுமா?

    அதைப் பத்தியெல்லாம் நீ கவலைப்படாதே... என்னோட ப்ளானுக்கு நீ ஒத்துழைப்புக் குடுத்தின்னாப் போதும்...

    அண்ணா... ஈஸ்வரோட மகன்கள் கொலையானா போலீசுக்கு சந்தேகம் தன்னால என் மேலதானே திரும்பும்...?

    பாலாஜி அகலமாய் வாயைத் திறந்து புன்னகைத்தான்.

    அவங்க கொலையானாதானே உன்மேல சந்தேகம் கிளம்பும்...

    என்ன அண்ணா சொல்றே...?

    ஈஸ்வரோட மகன்களையும், மகளையும் ஒவ்வொருத்தரையா கொலை செய்யப் போறோம்... ஆனா அந்தக் கொலைகளெல்லாம் மத்தவங்க பார்வைக்கு கொலைகளாத் தெரியாது...

    பின்னே...?

    நாம நடத்தற கொலைகளெல்லாம் தற்கொலை மாதிரியோ, விபத்து மாதிரியோதான் பார்க்கறவங்களுக்குத் தெரியும்... அந்த மாதிரி மூளையைக் கசக்கி நான் திட்டங்கள் போட்டு வெச்சிருக்கேன்...

    ஈஸ்வரோட தம்பி தேவராஜ் ஏதாவது பிரச்சினை பண்ணுவாரா அண்ணா...?

    அந்த ஆள் என்ன செய்வார்...?

    சொத்துல தனக்கும் பங்கிருக்குன்னு கடைசி நேரத்தில் ஏதாவது தகாராறு செய்வாரா?

    ஈஸ்வரோட மனைவி நீ இருக்கறப்ப அவரோட சொத்துக்களைப் பத்திப் பேச தேவராஜுக்கு எந்த அருகதையும் கிடையாது...

    மூத்த மகன் ஜெயனைத் தவிர மத்தவங்க யாரையும் காணோமே அண்ணா...?

    எல்லாருமே கோபத்தில்... அவங்கவங்க ரூமில் ஆளுக்கொரு பக்கமா அடைஞ்சு கிடக்கிறாங்க... இவங்க சண்டை போடற சத்தம் கேட்டு இப்பத்தான் ஒவ்வொருத்தரா வெளியே வந்திருக்காங்க...

    சொல்லிக்கொண்டே ஜன்னலைக் காட்டினான் பாலாஜி.

    மூத்த மகன் ஜெயனை அவனுடைய தம்பிகள் மாதவன், தினேஷ் இருவரும் சமாதானப்படுத்த முயன்றனர்.

    மகள் வாகினி ஜெயனின் கையைப் பிடித்து இழுத்தாள்.

    அண்ணா... வீணா சத்தம் போட்டு என்ன பிரயோஜனம்...? வெட்கங்கெட்டதனமா அப்பா அவளோட கழுத்துல தாலியைக் கட்டிக் கூட்டிட்டு வந்துட்டார்... கத்தறதால நம்ம எனர்ஜிதான் விரயமாகும்...

    அம்மாவோட போட்டோவுக்கு கண்ட கழிசடைக எல்லாம் கற்பூர ஆரத்தி காட்டறதை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியுமா...?

    ஈஸ்வர் கத்தினார்.டேய்... அவ உனக்கு அம்மா ஸ்தானம்... நாக்கை அடக்கிப் பேசு...

    என்னோட தங்கச்சி வயசில ஒருத்தியை கூட்டிட்டு வந்து ‘இவ உனக்கு அம்மா ஸ்தானம்’ன்னு சொல்றீங்களே... கேவலமா இல்லே...?

    யு... யு... ப்ளடி

    விசுவம், ஆவேசமாயிருந்த ஈஸ்வரை அப்பால் தள்ளினார்.

    விடுங்க ஸார்... நாளைக்கு பேசிக்கலாம்... இப்போ எல்லாருமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்காங்க...

    மாதவன், தினேஷ், வாகினி மூன்று பேருமாகச் சேர்ந்து ஜெயனை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்றார்கள்.

    புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது.

    தளர்வான நடையில் ஈஸ்வர் அவருடைய அறையை நோக்கி வந்தார்.

    பாலாஜி மேகாவிடம் புன்னகைத்தான்.

    கிழவர் வர்றார்... மகன்களோட மகாபாரத யுத்தம் பண்ணி களைச்சிப் போயிருக்கார்... பாவம். அவரை சமாதானப்படுத்து... நான் வீட்டுக்கு கிளம்பறேன்...

    பாலாஜி வெளியேற - ஈஸ்வர் உள்ளே வந்தார்.

    டோர்க்ளோசர் தானாகச் சாத்திக்கொண்டது.

    ஈஸ்வர் சர்ட்டின் மேல் பட்டன்கள் இரண்டை விடுவித்துக்கொண்டு பரந்த போம் மெத்தையில் பெருமூச்சோடு தொப்பென்று சரிந்தார்.

    மேகா அவரை நெருங்கிச் சென்று மென்மையாய் பக்கத்தில் அமர்ந்தாள்.

    புடவை முந்தானையால் அவர் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வை முத்துக்களை அக்கறையாய் அகற்றினாள்.

    ஈஸ்வரிடமிருந்து மெதுவாய் வார்த்தைகள் வெளிப்பட்டன.

    ஸாரி மேகா...

    எதுக்கு ஸாரி...?

    "நீ வீட்டுக்குள்ள காலடி வெச்சதுமே... உன்னை

    மூட் - அவுட் பண்ணிட்டேன்..."

    அவருடைய தலையைக் கோதிவிட்டாள் மேகா.

    நான் மூட் - அவுட் ஆகலை... இதெல்லாம் எதிர் பார்த்ததுதானே... அவங்க என்கிட்டே முறைச்சிப்பாங்கன்னு நினைச்சேன்... என்கிட்ட ஏதாவது வாய்த்தகராறு பண்ணுவாங்களோன்னு பயந்துட்டே வந்தேன்... ஆனா நிலைமை தலைகீழாயிடுச்சு...

    வந்தவுடனே நீ, என்னோட முதல் மனைவி பார்வதிகிட்டே ஆசீர்வாதம் வாங்கணும்னு நான் விரும்பினேன். ஆனா அது முடியாமப் போன ஆத்திரத்தில்தான் கோபம் தலைக்கேறி கத்த ஆரம்பிச்சிட்டேன்...

    நோ சென்ட்டிமென்ட்ஸ் ப்ளீஸ்... போட்டோவுக்கு கற்பூர ஆரத்தி காட்டினாத்தான் பார்வதி அக்காவோட ஆசி எனக்குக் கிடைக்குமா என்ன...? ஒண்ணை நல்லாப் புரிஞ்சிக்கங்க... நீங்க ஒண்ணும் பார்க்கறவ பின்னாலெல்லாம் அலையற மூன்றாம் தர மனிதர் கிடையாது... அது எனக்கும் நல்லாத் தெரியும்... செத்துப்போன பார்வதி அக்காவுக்கும் நல்லாத் தெரியும்... அப்படியிருக்கறப்ப என்மேல உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்குன்னா அது அக்காவோட ஆசியாலதான்... தன்னோட இடத்தை நிரப்ப தகுந்த துணை நான்தான்ங்கற எண்ணத்தை அக்காதான் உங்க மனசிலே விதைச்சிருக்காங்க...

    அது உனக்குப் புரியுது... இந்தப் பசங்களுக்குப் புரியலையே...?

    விடுங்க... சின்னப் பசங்கதானே... போகப் போக சரியாப் போயிடும்...

    அவரைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் மேகா.

    தட்டில் சாதத்தைப் போட்ட ரங்கநாயகி தேவராஜை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.

    என்னங்க ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க...?

    டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்த தேவராஜன் கதர் வேஷ்டி, கதர் சர்ட் உடுத்தியிருந்தார். பாதி நரைத்த தலைமுடியை மேல்நோக்கி வழித்துச் சீவியிருந்தார். நெற்றியின் துவக்கத்தில் இரண்டு ஆங்கில யு-க்களை வைத்ததுபோல வழுக்கை விழுந்திருந்தது. சந்தனப் பட்டை நெற்றியை நிறைத்திருக்க - அடர்த்தியான புருவங்களுக்கு மத்தியில் குங்குமத் தீற்றல்.

    சாதத்தில் கைகளை அளைந்து கொண்டே தேவராஜன் கரடுமுரடான குரலில் சொன்னார்:

    அண்ணன் ஈஸ்வர் பண்ணிட்டு வந்திருக்கிற காரியத்தைப் பார்த்தியா...?

    ரங்கநாயகி புன்னகைத்தாள்.

    எதைச் சொல்றீங்க...?

    சினிமா நடிகையைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறாரே, அதைத்தான் சொல்றேன்... எல்லாப் பேப்பர்லயும் தலைப்புச் செய்தியில நம்ம குடும்ப மானம் போகுது...

    ரங்கநாயகி அலட்சியமாகச் சொன்னாள்.

    ஊர் உலகத்துல நடக்காததையா உங்கண்ணன் பண்ணிட்டார்... அவனவன் பெண்டாட்டி உயிரோட இருக்கிறப்பவே பத்து சின்ன வீடுகள் செட்டப் பண்ணிகிட்டு சுத்திட்டிருக்கானுங்க... இவரு முதல் சம்சாரம் இறந்து போனப்புறம்... அதுவும் நாலைஞ்சு வருஷம் கழிச்சித்தானே இன்னொருத்தியை ஏறெடுத்துப் பார்த்திருக்கார்...

    ரங்கநாயகி... இந்த வயசில் இவருக்கு இது தேவையா...?

    வயசான காலத்தில்தான்ங்க துணைக்கு ஒருத்தி வேணும்... இதெல்லாம் அவங்கவங்க சொந்த விவகாரம்... இதைப் பத்தியெல்லாம் நாம விமர்சிக்கறது தப்பு...

    அண்ணனுக்கு கல்யாண வயசில ஒரு பொண்ணு இருக்கு... வாகினிக்கும், இப்போ தாலி கட்டிக் கூட்டிட்டு வந்திருக்கிற அவளுக்கும் எத்தனை வயசு வித்தியாசம் இருக்கும்னு நினைக்கறே...?

    வயசானவரைக் கல்யாணம் பண்ணிக்கறோமேன்னு அவளே கவலைப்படலை... உங்களுக்கு எதுக்கு வீண் கவலை...?

    ரங்கநாயகி... எதுக்குமே ஒரு விவஸ்தை வேண்டாமா...? மகளை நேருக்கு நேரா பார்க்கவே கேவலமா இருக்காது...?

    இதெல்லாம் அவங்க பிரச்சனை... அண்ணன் குடும்பத்தைப் பத்தி என்னிக்குமே இல்லாம புதுசா இவ்வளவு கவலைப்படறீங்களே...?

    அவர் குடும்பத்தைப் பத்தி யாருடி கவலைப்பட்டா...? நான் நம்ம குடும்பத்தைப் பத்திதான் கவலைப்படறேன்...!

    என்ன சொல்றீங்க...?

    நீயா பாயிண்ட்டைப் புரிஞ்சிக்குவேன்னு பார்த்தேன்... மரமண்டை... திரும்பத் திரும்ப ஒண்ணுமே புரியாம பேசிட்டிருக்கே...

    என்னங்க சொல்றிங்க...? எனக்குப் புரியும்படியாகத்தான் சொல்லித் தொலைங்க...

    அண்ணன் கணக்கு வழக்கில்லாம சொத்து சேர்த்து வெச்சிருக்கார்... வாரிசுகளுக்கு கல்யாணமாச்சுன்னா... மகன்களுக்கும், மகளுக்குமா கூடிய சீக்கிரமே சொத்தை பிரிச்சு வெக்க வேண்டி வரும்... அப்படிப் பிரிக்கிறப்ப என் ஞாபகம் வந்து தம்பிக்கும் ஒரு பங்கைப் போடுவாருன்னு இத்தனை நாளா நான் இலவு காத்த கிளியாக காத்திட்டிருக்கேன்...

    அண்ணன் தன்னோட சொத்துல உங்களுக்கு ஒரு பங்கு குடுப்பாருன்னு காத்திட்டிருந்தீங்களா...?

    ஆமா... அப்படிப் பிரிச்சாலும் சித்தப்பாவுக்குத்தானே ஒரு பங்கு போகுதுன்னு அவரோட மகன்களும், மகளும் பெருந்தன்மையா விட்டுருவாங்க... ஏன்னா... அதுங்க நான் தோளில் தூக்கி வளர்த்த பிள்ளைங்க... என்னோட இந்த கணக்கு... அண்ணன் பண்ணின அசட்டுக் காரியத்தால தப்புக் கணக்காயிடுச்சு...

    எப்படி...?

    அவரோட வாரிசுகளைப் போல் வந்திருக்கற புதுப் பெண்டாட்டி பெருந்தன்மையா எனக்கு சொத்தில் ஒரு சின்ன பாகத்தையாவது விட்டுத் தருவாளா...? நிச்சயமா மாட்டா... அதை நினைச்சித்தான் நான் கவலைப்படறேன்...

    ரங்கநாயகி அவரை நோக்கி ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு சொன்னாள்.

    அடுத்தவங்க சொத்து மேல நமக்கு எதுக்குங்க வீண் ஆசையும், சபலமும்...? நாம உழைச்சி சம்பாதிக்கறது தான் என்னைக்குமே நம்மகிட்ட ஒட்டும்...

    ரங்கநாயகி... எனக்குக் கல்யாணம் ஆகற வரைக்கும் அண்ணன் குடும்பத்துக்கு ஓடா உழைச்சிருக்கேன்... சட்டப்படி அவரோட சொத்தில் எனக்குப் பங்கு இல்லைன்னாலும் மனசாட்சியுள்ள மனுஷனா இருந்தார்ன்னா அவர் ஒரு சின்னப் பங்கையாவது எனக்குக் குடுக்கணும்...

    உங்க அண்ணன் சொத்தைப் பிரிக்கறப்ப பார்க்கலாம் விடுங்க...

    இனி எங்கே பார்க்கறது... அதான் பட்டவர்த்தனமா தெரிஞ்சு போச்சே... அண்ணி மட்டும் உயிரோடு இருந்தா என்னை என்னிக்குமே மறக்க மாட்டாங்க... ஆனா இப்ப வந்தவளுக்கு என்னை யாருன்னே தெரியாது... அவபேச்சைக் கேட்டுத்தானே இனிமே அண்ணன் ஆடப்போறார்...?

    இந்த மாதிரி எதிர்பார்ப்பெல்லாம் நமக்கு வேண்டாங்க... எதிர்பாராம நமக்கு ஒரு பங்கு வந்தா சந்தோஷம். அப்படி வரலைன்னாலும் அதைப் பற்றி பெரிசா நாம கவலைப்பட வேண்டாம்.

    அப்படி என்னால கவலைப்படாம இருக்க முடியாது... நியாயமா வரவேண்டிய பங்குக்காகத்தான் இத்தனை நாளா நான் காத்திட்டிருந்தேன்... அதுல மண் விழுந்துடுச்சு... இப்போ நான் என் வேலையைக் காட்டித்தான் ஆகணும்...

    என்ன சொல்றீங்க...?

    அவங்க எல்லோரும் சந்தோஷமா சொத்தை அனுபவிச்சிட்டு ஜாலியா இருக்கறப்ப நாம மட்டும் ஏன் கஷ்டப்படணும்...?

    உங்க தொழில் ஓஹோன்னு இல்லைன்னாலும் திருப்திகரமா நடக்குது... நம்ம ஒரே மகன் டெல்லில பெரிய கம்பெனில வேலை பார்க்கறான்... நமக்கு என்ன கஷ்டம்...

    "பையனை எங்கேயோ வடநாட்டில் வேலைக்கு அனுப்பிட்டு அவன் நினைவா இங்கே உக்காந்திருக்கோமே... அது

    Enjoying the preview?
    Page 1 of 1