Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Nizhalum Naanthaane!
Un Nizhalum Naanthaane!
Un Nizhalum Naanthaane!
Ebook261 pages1 hour

Un Nizhalum Naanthaane!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Un Nizhalum Naanthaane!

Read more from Rajeshkumar

Related to Un Nizhalum Naanthaane!

Related ebooks

Related categories

Reviews for Un Nizhalum Naanthaane!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Nizhalum Naanthaane! - Rajeshkumar

    21

    1

    பச்சைநிற பட்டுச்சேலையில் ஒரு மரகதச் சிலையைப் போல் அமர்க்களம் பண்ணிய தீபாவை இமைக்காமல் பார்த்தாள் சரளா.

    அவளுடைய கன்னத்தில் தீபா மெல்லத் தட்டினாள்.

    என்னடி! அப்படிப் பார்க்கிறே?

    நான் மட்டும் இந்நேரம் ஒரு ஆண்மகனா இருந்தேன்னு வைய்யி...!

    என்ன பண்ணியிருப்பியாம்...?

    ஏதேதோ பண்ணியிருப்பேன்...! இந்த பட்டுச்சேலையில் நீ எப்படி இருக்கேன்னு தெரியுமா...?

    ......

    பத்து ஐஸ்வர்யாராய்களை ஒரே அழகாய் செய்து வைத்த மாதிரி இருக்கே...

    ஏய்...! சும்மா அளக்காதே...!

    இது அளப்பு கிடையாது தீபா. நீ இவ்வளவு அழகா இருக்கப்போய் தான் ஒரு பெரிய பணக்கார வீட்டுக்கு மருமகளாகி இருக்கே. இன்னிக்கு காலையில் உனக்கு தாலி கட்டின திவாகர் பல கோடி சொத்துக்கு அதிபதி. நூத்துக்கும் மேற்பட்ட பெண்களைப் பார்த்து யாரையுமே பிடிக்காமே ‘உச்’ கொட்டி பெண்களோட படங்களை கிழிச்சு குப்பைக் கூடையில் போட்டிருக்காராம்...

    ......

    அப்படிப்பட்டவர் உன்னைப் பார்த்ததுமே காதல் கொண்டு கல்யாணம் வரைக்கும் வந்திருப்பாரா?

    தீபா தன் முல்லைமொக்கு பல்வரிசை தெரிய சிரித்தாள்.

    ஏதோ என் பூர்வஜென்ம புண்ணியம் எனக்கு இப்படி ஒரு பம்பர் பரிசு அடிச்சிருக்கு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருமாரியம்மன் கோவிலுக்குப் போய் எலுமிச்சம் பழ மாலை போட்டு நெய் விளக்கு ஏத்திட்டு வந்தது வீண் போகலை. அந்த அம்பாள் என்னை ஒரு நல்ல குடும்பத்துக்கு மருமகளாக்கி இருக்கா...

    அது இருக்கட்டும்...! இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு முதலிரவு. நீயும் திவாகரும் கடந்த மூணு மாச காலமா காதல் ஜோடிகளா பல இடங்களுக்கு போயிட்டு வந்து இருப்பீங்க... அங்கேயே ஏதாவது முதலிரவு முடிஞ்சு போச்சா... இல்லே... இன்னிக்குத்தான் உனக்கு உண்மையிலேயே முதலிரவா...?

    சேச்சே...! திவாகர் நல்லவர். கடந்த மூணுமாச காலத்துல அவரோட விரல் நகம் கூட என்மேல் பட்டதில்லை. எங்களுடைய சந்திப்பு இருட்டான இடங்களில் நடந்ததே இல்லை...

    ஏய்! பொய் சொல்லாதே... இந்த மூணு மாச காலத்துல அவர் உனக்கு ஒரு முத்தம்கூட கொடுத்தது இல்லையா?

    இல்லை...

    நான் நம்ப மாட்டேன்...!

    உங்க தோழி சொல்றது உண்மை தாங்க... அறை வாசலில் குரல் கேட்டு இருவரும் சட்டென்று திரும்பினார்கள்.

    வாசலில் திவாகர் பட்டு வேஷ்டி, பளபளப்பான சட்டையில் தெரிந்தான். திவாகர் கொஞ்சம் நிறம் குறைவாக இருந்தாலும் எடுப்பாக இருந்தான். நல்ல உயரம். கழுத்தில் கனமான தங்கச் சங்கிலி. வலது கை மணிக்கட்டில் ‘பிரேஸ்லெட்’ மினுமினுத்தது.

    திவாகரைப் பார்த்ததும் சரளா நாக்கைக் கடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் உதறினாள். இல்ல... ஸார்! நான் சும்மா ஒரு தமாஷுக்கு... சொன்னேன்...

    திவாகர் சிரித்தான். நானும் உங்க தோழியும் தொண்ணூறு நாள் காதலிச்சோம். இந்த தொண்ணூறு நாளில் ஒரு நாலைஞ்சு தடவைதான் நேரில் சந்திச்சிருப்போம். எப்பன்னாலும் சரி, அந்தச் சந்திப்பு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மேல் போனது கிடையாது. அந்த அஞ்சு நிமிஷத்தில் நாலரை நிமிஷம் நான் பேசுவேன். மீதி அரை நிமிஷம் தான் தீபா பேசுவா...! ஆக, நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எங்க முதலிரவு நடந்துடலை. இன்னிக்குத்தான் நடக்கப் போகுது...

    சரளா வெட்கத்தில் முகம் கவிழ்ந்து வேகவேகமாய் அந்த அறையிலிருந்து வெளியேறினாள். திவாகர் மெல்ல நடைபோட்டு புன்சிரிப்போடு தன்னைப் பார்த்த தீபாவை நெருங்கினான்.

    என்ன தீபா... உன் தோழி சரளா ஒரு புதுமைப் பெண் போலிருக்கு...

    அவ பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க. அவ கொஞ்சம் வாயரட்டை. எதையுமே வெளிப்படையாகத்தான் பேசுவா...! அதுசரி... நீங்க எதுக்காக இப்போ நான் இருக்கிற அறைக்கு வந்தீங்க? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க...?

    திவாகர் தன் கண்களைச் சிமிட்டினான். இதோ பாருங்க மேடம்...! இன்னிக்கு காலையில் உங்க கழுத்தில் தாலியைக் கட்டி அனுமதி வாங்கிட்டேன். இனி யாரும் எதுவும் சொல்ல முடியாது! கீழே முதலிரவுக்கான அறையை என் அம்மாவும், அண்ணியும் அலங்காரம் பண்ணிட்டிருக்காங்க. அப்பா சொந்தக்காரங்களோடு பேசிட்டிருக்கார்...

    நினைக்க நினைக்க எனக்கு பிரமிப்பா இருக்குங்க...!

    எதுக்கு...?

    உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்ததைத்தான். அப்பா... அம்மான்னு எந்த சொந்த பந்தமும் இல்லாத ஒரு அனாதையான என்னை... இந்த வீட்டுக்கு மருமகளாக்கி...

    ஏய்... ஏய்... போதும் தீபா! உன்னை நான் எப்ப காதலிக்கத் தொடங்கினேனோ அந்த நிமிஷத்தில் இருந்தே நீ அனாதை கிடையாது. என்னுடைய அப்பா தொழிலதிபர் ஆனந்தகீர்த்தனுக்கும் அம்மா யோகலட்சுமிக்கும் நீ மருமகள். இந்த திவாகருக்கு மனைவி. என்னோட அண்ணி சர்மிளாவுக்கு நீ தங்கை. இந்த உறவுகள் எல்லாவற்றைக் காட்டிலும் அடுத்த ஆண்டு நமக்கு பிறக்கப் போகிற குழந்தைக்கு அம்மா. இத்தனை உறவுகள் இருக்கும்போது நீ எப்படி அனாதைன்னு உன்னைச் சொல்லிக்கலாம்? அப்படி சொன்னதுக்காக நீ மொதல்ல மன்னிப்பு கேட்கணும்... செல்லமாய் வற்புறுத்தினான்.

    ......

    ம்... சொல்லு...

    ம்... மன்னிப்பு...!

    மூஞ்சியை இப்படி உம்முன்னு வைச்சுக்கிட்டு சொல்லக் கூடாது. எங்கே சிரிச்சுக்கிட்டே சொல்லு...

    தீபா சிரிப்போடு மன்னிப்பு கேட்க, திவாகர் அவளுடைய மோவாயை மெல்லத் தட்டினான். இப்பத்தான் நீ என்னோட தீபா!

    தீபா அப்போதுதான் கவனித்தாள்- திவாகரின் கையில் ஒரு கடிதம் இருப்பதை.

    அது என்ன கடிதம்...?

    பார்த்தியா... இதை உனக்கு கொடுக்க வந்துட்டு வேற எதை எதையோ பேசிட்டிருக்கேன். மத்தியானம் கூரியர் தபாலில் உன்னோட பெயருக்கு இந்தக் கடிதம் வந்தது. ‘உரியவர் மட்டும் கடிதத்தை பிரிக்கவும்’ன்னு எழுதியிருந்ததால நான் பிரிக்கலை...

    தீபா அதை வாங்கினாள். அனுப்புனர் முகவரியைப் பார்த்தாள். பெயரும் முகவரியும் தெளிவாக இல்லை.

    ஏதாவது வாழ்த்து அட்டையா...? தீபா வாய்விட்டு முனகிக் கொண்டே கடித உறையின் வாயைக் கிழித்தாள். உள்ளிருந்து இரண்டு புகைப்படங்கள் வெளிப்பட்டன.

    இரண்டு படங்களிலும் தீபாவின் முழு உருவம். அவற்றில் பார்வையைப் பதித்த தீபாவின் பொன்னிற முகம் லேசாய் கறுத்தது.

    முதல் படத்தில் சேலை கட்டி, தலையில் மல்லிகைச் சரத்தோடு சிரித்தபடி தீபாவின் தோற்றம் தெரிய- படத்துக்குக் கீழே அந்த வாக்கியம் பெரிதாய் எழுதப்பட்டிருந்தது.

    இன்று இரவு இப்படி...!

    இரண்டாவது படத்தில் தீபா வெள்ளைச் சேலை உடுத்தி, பாழ் நெற்றியோடு... அதன் கீழிருந்த வாக்கியம் கண்களில் ஊசியைப் பாய்ச்சியது.

    நாளை காலை இப்படி...!

    இரண்டு படங்களையும் மாறி மாறிப் பார்த்த தீபாவின் உடம்பில் ரத்த ஓட்டம் ஸ்தம்பித்துப் போக அப்படியே சரிந்து விழுந்தாள்.

    இப்போது கொல்கத்தாவாக மாறிவிட்ட கல்கத்தா நகரம். அந்த மாலை ஏழு மணி வேளையில் நல்ல மழையில் இருந்தது.

    ரயிலை விட்டு ஒரு கனமான சூட்கேஸோடு வெளிப்பட்ட கோகுலவாசன்- அந்த நடைமேடை முழுக்க நிரம்பியிருந்த முகங்களில் தன் தங்கை கீர்த்தனாவைத் தேடினான்.

    அவளுடைய அழகான முகம் உடனே கிடைக்கவில்லை. கும்பலை கொஞ்சம் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டு நடந்தான். பார்வைக்குத் தட்டுப்படவில்லை.

    கோகுலவாசனுக்கு வியப்பாக இருந்தது. ‘எந்தப் பெட்டியில் வருவேன் என்று சொல்லியிருந்தேனே...?’

    ‘பெய்கிற மழையில் எங்கேயாவது மாட்டிக் கொண்டு விட்டாளா...?’ கொஞ்சம் கவலையாய் யோசித்துக் கொண்டே நடந்தான். மக்கள் நெரிசலில் மூச்சுத் திணறியது. பார்வைக்குக் கிடைத்த எல்லா முகங்களும் அன்னியமாய்த் தெரிந்தன. அடித்த காற்றில் எல்லாப் பக்கமும் வங்காள மொழி.

    சூட்கேஸைத் தள்ளிக் கொண்டு நடந்த கோகுலவாசனுக்கு கோதுமை நிறத்தில் அழகான முகம். தலை கொள்ளாமல் சுருள் கேசம். சிரிக்கும்போது தெரிகிற பல்வரிசை அவனுடைய முகத்துக்கு ஒரு மின்னல் வெளிச்சத்தைக் கொடுக்கும்.

    சூட்கேஸை சிரமமாய் உருட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்த கோகுலவாசன், ஒரு பத்து நிமிட நேரம் கீர்த்தனாவுக்காக காத்திருந்து பார்த்தான். பெய்து கொண்டிருந்த மழையிலும் வாகனங்கள் வேகமாய் போய்க் கொண்டிருந்தன.

    கீர்த்தனாவைக் காணோம்!

    ‘ஒருவேளை மறந்து விட்டாளோ...?’

    ‘என்னை மறக்கக் கூடியவளா கீர்த்தனா...?’

    ‘எதற்கும் வீட்டுக்கு ஃபோன் பண்ணிப் பார்க்கலாம்...’ -எண்ணத்தை செயல்படுத்த பக்கத்திலிருந்த பொது தொலைபேசியை நோக்கிப் போக முயற்சித்த விநாடி-

    பக்கவாட்டில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. தமிழ்க் குரல். நீங்க கோகுலவாசன் தானே?

    திரும்பினான்.

    சல்வார் அணிந்த இளம்பெண் நின்றிருந்தாள். கையில் பூப்போட்ட குடை.

    ஆமா. நீங்க...?

    என்னோட பேர் நந்தினி. உங்க தங்கை கீர்த்தனாவோட தோழி...! உங்களை கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கேன்...

    கீர்த்தனா எங்கே...?

    அது... வந்து... வந்து...

    சொல்லுங்க...

    அவளுக்கு ஒண்ணுமில்லை. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி வீட்டு மாடிப்படியிலிருந்து வேகமா இறங்கி வரும்போது வழுக்கி விழுந்துட்டா. வலது கால் எலும்புல அடிபட்டுட்டு... ஒரு வாரத்துக்கு நடக்க முடியாது...

    ......

    கீர்த்தனா குடியிருக்கிற வீட்டுக்கு எதிர்வீட்டுலதான் நான் குடியிருக்கேன். கீர்த்தனா என்கிட்டே விபரம் சொல்லி உங்களை கூட்டிட்டு வரும்படி சொன்னா... போகலாமா...?

    கோகுலவாசன் பதற்றமானான்.

    கீர்த்தனா இப்போ எங்கே இருக்கா...? வீட்டிலா, ஆஸ்பத்திரியிலா...?

    வீட்டுலதான்...! டாக்டர் வந்து கட்டு போட்டுட்டு போயிருக்கார். ஒரு வாரம் ஓய்வு எடுத்தா போதும். குணமாகிடும்னு சொல்லியிருக்கார். புறப்படலாமா...?

    இரண்டடி வேகமாய் எடுத்து வைத்த கோகுலவாசன் தயங்கி நின்று நந்தினியைப் பார்க்க, அவள் கேட்டாள்.

    என்ன பார்க்கறீங்க...?

    ஒ...ஒ... ஒண்ணுமில்லை...

    நந்தினி புன்னகைத்தாள். புரியுது...! நான் சொன்னதெல்லாம் உண்மையா, பொய்யான்னு -உங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சு. அதுதானே...! உங்க சந்தேகத்தை இப்ப கழுவிடுறேன். செல்ஃபோன்ல உங்க தங்கை கூட நீங்களே பேசுங்க...

    நந்தினி தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த ‘பேக்’குக்குள் கையை நுழைத்து செல்ஃபோனை எடுத்து எண்களை தட்டிவிட்டு இணைப்பு கிடைத்ததும் கோகுலவாசனிடம் நீட்டினாள்.

    ம்... பேசுங்க...

    அவன் வாங்கிப் பேசினான்.

    அலோ... கீர்த்தனாவா...?

    Enjoying the preview?
    Page 1 of 1