Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnudaiya GUNkalukku Mattum
Unnudaiya GUNkalukku Mattum
Unnudaiya GUNkalukku Mattum
Ebook244 pages1 hour

Unnudaiya GUNkalukku Mattum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Unnudaiya GUNkalukku Mattum

Read more from Rajeshkumar

Related to Unnudaiya GUNkalukku Mattum

Related ebooks

Related categories

Reviews for Unnudaiya GUNkalukku Mattum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnudaiya GUNkalukku Mattum - Rajeshkumar

    28

    1

    கோவை ரயில்வே ஸ்டேஷனில் உயிர்ப்பான ராத்திரி நேர ஆரவாரம்.

    முதல் பிளாட்பாரம்.

    ரிசப்ஷன் கௌண்ட்டருக்கு மேலே நீள் செவ்வகத்தில் தொங்கிக்கொண்டிருந்த எலெக்ட்ரானிக் கடிகாரத்தில் 7.55 எண்கள் குங்கும நிறத்தில் தெரிய, ஜனங்கள் பிளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு நின்றார்கள். கண்ணாடி கேஸ்களில் ரிசர்வேஷன் சார்ட்டுகள் பொடிசு பொடிசான எழுத்துக்களில் மசமசவென்று தெரிந்ததை வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் தவிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்க - எஞ்சின் இல்லாத ப்ளூமவுண்ட்டன் பிளாட்பாரத்தில் இருட்டான போகிகளோடு நின்றிருந்தது. இரண்டாவது பிளாட்பாரத்தில் வரப்போகும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ்ஸுக்காக ஒரு கும்பல் தவம் பண்ணிக் கொண்டிருக்க, ஹிக்கின் பாதம்ஸ் புக் ஸ்டால் அருகே ஜனார்த்தனனும், ஜோசப்பும் சிகரெட் புகைகளோடு நின்றிருந்தார்கள்.

    ஜனார்த்தனனுக்கு இருபத்தாறு வயசு. மாநிறம். மாறுகண். முகத்திலே லேசாய் ரௌடிஸக் கொள்கை தெரிந்தது. மோவாய் பூராவும் மழிக்காத ரோமம் முசுமுசுவென்று மண்டியிருந்தது. தொழில்: ஏமாந்தவனைத் தேடிக் கண்டு பிடித்து அவன் கூடவே பிரயாணித்து, அவன் அசந்து போகிற நேரத்தில் சூட்கேஸை அள்ளிக்கொண்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கிக் கொள்வது. 9768 மணி நேரம் சிறையில் வாசம் செய்தவன். பிடித்த பானம்: ஜூலி சாராயக் கடையின் பட்டைச் சாராயம்.

    இனி, ஜோசப்: ஜோசப் ஜனார்த்தனனைக் காட்டிலும் ஒரு வயசு பெரியவன். யானை நிறம். சினிமாவில் கதாநாயகனிடம் உதை வாங்குகிற வில்லனின் அடியாள் மாதிரி வரி வரியாய் பனியன் போட்டு - சீவாத தலையோடு தெரிந்தான். முன் பல்வரிசையில் ஒரு பல் காணாமல் போயிருந்தது. அவன் சிரிக்கிறபோது பல்வரிசை கொஞ்சம் பயத்தைக் கொடுக்கும். தொழிலில் ஜனார்த்தனனின் பார்ட்னர். 9879 மணி நேரம் சிறைவாசம். பிடித்த பானம்: மிலிட்டரி த்ரீ ஸ்டார் ரம்.

    என்னடா ஜனா, ஏதாச்சும் தேறுதா? ஜோசப் கிசுகிசுப்பாய்க் கேட்டான்.

    அதாண்டா பார்த்திட்டிருக்கேன்...

    நான் ஒருத்தனைக் குறி வெச்சிருக்கேன். ஆசாமியைப் பார்த்தா அவ்வளவு முழிச்சவனாத் தெரியலை. சுலபமா மாட்டலாம் போலிருக்கு.

    யார் அவன்?

    அதோ, அந்தப் பெரிய ரோல் சூட்கேஸை ஒருத்தன் மெள்ளமா உருட்டிட்டுப் போறானே அவன்தான். ஜோசப் கண்ணைக் காட்டிச் சொல்ல, ஜனார்த்தனன் பார்வையால் கும்பலை ஊடுருவினான்.

    அந்த இளைஞன் தெரிந்தான். பழுப்பு நிறமான அந்தப் பெரிய ரோலர் சூட்கேஸ், அவனுக்குப் பின்னால் நிதானமாய் உருண்டு கொண்டு வர, அவன் பிளாட்பாரச் சுவரில் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டே நடந்தான். ஜீன்ஸ் நீலநிற பேண்ட்டுக்குள் வெள்ளை ஸ்லாக் சர்ட்டை நுழைத்து அலட்சியமாய் ‘இன்’ பண்ணியிருந்தான். தலையின் முன்பக்க கிராப்பில் லேசாய் பித்த நரை வாங்கியிருந்தான்.

    ஆளைப் பார்த்தா வெளியூர் மாதிரித் தெரியுது ஜோசப்...

    வெளியூரேதான்! உள்ளூர்க்காரன், இப்படிப் பராக்குப் பார்த்துகிட்டு நிக்கமாட்டான். போய் ஆளை விசாரிப்பமா?

    ம்...

    பிளாட்பாரக் கும்பலை அறுத்துக்கொண்டு இருவரும் அவனை நோக்கிப் போனார்கள். ஆளில்லாத ரயில்வே கேட்டை எப்படிக் கடக்க வேண்டுமென்று ரயில்வே ஒட்டியிருந்த போஸ்டரை உன்னிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன், ஜனார்த்தனனும் ஜோசப்பும் தன்னை நெருங்குவதைக் கண்டு விருட்டென்று திரும்பினான்.

    ஜனார்த்தனன் புன்னகைத்தபடி கேட்டான். ஸார்... பெங்களூர்க்கா?

    ம்... அவன் தலையாட்டினான்.

    பெர்த் வேணுமா ஸார்?

    பெர்த் கிடைக்குமா?

    கிடைக்கிறது கஷ்டந்தான்... வண்டியில் வர்ற எல்லா டி.டி.இ.யையும் நம்ம பலான போர்ட்டர் ஒருத்தனுக்குத் தெரியும். அவன் மூலமா பெர்த்த வாங்கிடலாம்.

    எக்ஸ்ட்ராவா எவ்வளவு பணம் தரணும்?

    இருபது ரூபா...

    இருபது ரூபா குடுத்தா நிச்சயம் பெர்த் கிடைக்குமா?

    நாங்க வாங்கித் தர்றோம் ஸார்.

    வண்டி எத்தனை மணிக்கு?

    இப்போ வந்துடும் ஸார். ஸாருக்கு இந்த சூட்கேஸ் ஒண்ணுதானா?

    ஆமா...

    சரி, வா ஸார். அந்தாண்ட போயிடலாம். செகண்ட் கிளாஸ் போகி பூராவுமே அந்தக் கோடியில்தான் நிற்கும்...

    சொல்லிக்கொண்டே சூட்கேஸின் வாரைத் தொடப் போனான் ஜனார்த்தனன்.

    இளைஞன் அவன் கையைத் தட்டிவிட்டான். நீங்க முன்னாடி போங்க... நானே சூட்கேஸைத் தள்ளிட்டு வர்றேன்.

    நடக்க ஆரம்பித்தார்கள்.

    ஜனார்த்தனன் பின்னால் வந்து கொண்டிருந்த அந்த இளைஞனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டான். வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் போட்டு டிக்கெட் வாங்கியிருக்கீங்களா, சார்?

    ப்ளெயின் டிக்கெட்தான் எடுத்திருக்கேன்.

    சரி, பரவாயில்லை. பெர்த் வாங்கிடலாம்.

    வண்டி எத்தனை நிமிஷம் நிற்கும்?

    பத்து நிமிஷம்.

    டேய்... பாலு.

    நடந்து கொண்டிருந்த இளைஞனை பிளாட்பாரத்தில் பரவியிருந்த கும்பலிலிருந்து யாரோ கூப்பிட, அவன் சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான்.

    வேட்டி சட்டை அணிந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் தாம்பூலத்தை மென்று சிவந்து போன வாயோடு அவனை நெருங்கினார். இளைஞன் லேசாய் முகம் மாறி வியர்த்தான்.

    ஓ... வணக்கம், மாமா.

    எங்கேடா கோயமுத்தூர் பக்கம்? அவர் அவன் தோளைத் தட்டினார்.

    ஆபீஸ் விஷயமா வந்தேன்.

    இன்னமும் அதே டெஸிக்னேஷன்தானா?

    ஆமா, மாமா.

    உங்கப்பன் எப்படியிருக்கான்?

    நல்லாயிருக்கார், மாமா.

    அடுத்த வாரத்தில ஒரு நாள் வீட்டுக்கு வர்றதாச் சொல்லு.

    சரி மாமா.

    இளைஞன் மறுபடியும் ரோலர் சூட்கேஸை இழுத்துக் கொண்டு நகர ஆரம்பித்தான். தள்ளி நின்றபடி பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனார்த்தனனும், ஜோசப்பும் பார்வையாலேயே பாஷையைப் பரிமாறிக் கொண்டார்கள். நடந்தார்கள். பிளாட்பாரக் கும்பலை நீந்திக் கொண்டு பிளாட்பார கோடிக்கு வந்தார்கள்.

    இதே இடத்திலே நின்னுடுவோம் ஸார்.

    அந்த இளைஞன் நின்றான். கூட்டம் இல்லாத அந்த இடத்தில் காற்று சரளமாய் வந்தது. ஒற்றை இஞ்சின் ஒன்று பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சத்தோடு ஹண்டிங் நடத்திக் கொண்டிருந்தது. அதற்கப்பால் தெரிந்த மேம்பாலத்தில் நகரின் போக்குவரத்து சுறுசுறுப்பாய் இருப்பது தெரிந்தது. இளைஞன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து சிகரெட்டை உருவி உதட்டுக்குக் கொடுத்து, சட்டைப் பாக்கெட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்தான்.

    பெர்த் நிச்சயமா கிடைக்குமில்ல?

    கண்டிப்பாக் கிடைக்கும் ஸார்.

    யாரோ தெரிஞ்ச போர்ட்டர் இருக்கிறதாகச் சொன்னே?

    அவனும் இதே இடத்துக்குத்தான் ஸார் வருவான்.

    உங்க ரெண்டு பேர்லே யாராச்சும் ஒருத்தர் போய் அந்த போர்ட்டரைக் கூட்டிட்டு வாங்களேன். ட்ரெயின் வந்த பிறகு கூட்டத்திலே போர்ட்டரைத் தேடறது ரொம்பவும் சிரமம்.

    இளைஞன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு மெலிதாய்ப் புகைவிட்டான். ஜோசப் ஜனார்த்தனனின் பக்கமாய்த் திரும்பினான். ஜனா, நானும் ஸாரும் இதே இடத்திலே நின்னுட்டிருக்கோம். நீ போய்ப் போர்ட்டர் குருசாமியைப் பார்த்துக் கையோட கூட்டிட்டு வா.

    சரி தலையாட்டிவிட்டு ஜனார்த்தனன் புறப்பட்டான்.

    ஜோசப் அந்த இளைஞனை ஏறிட்டான். சாருக்கு சொந்த ஊரே பெங்களூர்தானா?

    ம்...

    இந்த மாதிரி ரோலர் சூட்கேஸ் என்ன விலையிருக்கும் ஸார்?

    எழுநூத்தி சொச்ச ரூபா ஆகுது.

    சூட்கேஸ் ஷோக்கா இருக்கு ஸார்.

    ம்... ம்... ம் என்ற அந்த இளைஞன் சுற்றுமுற்றும் பார்த்தான். சிகரெட்டை அவசர இழுப்பு இழுத்தான்.

    என்ன சார் பார்க்கறீங்க?

    யூரினல்ஸ் போகணும். லாவட்ரி இருக்கான்னு பார்த்தேன்.

    ஜோசப் சிரித்தான். ஒண்ணுக்குப் போகணுமா சார்? அதோ பிளாட்பாரக் கோடியிலே கக்கூஸ் இருக்கு. போயிட்டு வாங்க சார்.

    அந்த இளைஞன் தயங்கினான். சூட்கேஸைப் பார்த்தான்.

    சூட்கேஸை நான் பார்த்துக்கிறேன் சார். ஜல்தியாய்ப் போயிட்டு வாங்க. இவ்வளவு பெரிய சூட்கேஸை நான் ஒண்டியா எப்படி சார் தூக்கிட்டுப் போக முடியும்?

    அந்த இளைஞன் சிகரெட் புகையும் கையோடு குனிந்து சூட்கேஸைத் தொட்டு அதன் லாக்கை இழுத்துப் பார்த்தான். நிமிர்ந்தான். ரெண்டே நிமிடம். வந்துடறேன்.

    நூறு மீட்டர் தூரத்துக்கு அப்பால் தொலைவில் தெரிந்த அந்த இருட்டான லாவட்டரியை நோக்கி நடந்தான் அவன். ஜோசப்பைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான்.

    ஒரு நிமிடம் முழுசாய் நழுவியது. கும்பலை விலக்கிக் கொண்டு ஜனார்த்தனன் வேக வேகமாய் வந்து கொண்டிருந்தான்.

    ஜோசப் எழுந்து நின்று பரபரத்தான்.

    "டேய்... ஜனா, சீக்கிரம் வாடா.

    ஜனார்த்தனன் அருகே வந்தான். ஆளு எங்கேடா காணோம்?

    கக்கூசுக்குப் போயிருக்கான்.

    உன்னை நம்பி இந்த சூட்கேஸை விட்டுட்டா?

    இருவரும் பேசிக் கொண்டிருந்த அதே விநாடி ரயில்வே ஸ்டேஷனை அரைக்கிற மாதிரி தபதபவென்று ஐலண்ட் எக்ஸ்பிரஸ் நீலநிற டீசல் இஞ்சினோடு பிளாட்பாரத்துக்குள் நுழைந்தது.

    போர்ட்டரைப் பார்த்தியா ஜனா?

    ம்... பார்த்தேன். வர்றதாகச் சொன்னான்.

    வயதான அந்த போர்ட்டர் குருசாமி தோளில் போட்ட சிவப்புத் துண்டோடு வேக வேகமாய் வந்தார். ஜனார்த்தனா... ‘ஏ’ போகியிலே ஒரு பெர்த் இருக்கு. வேணுமா வேணாமா?

    ஒரு ரெண்டு நிமிஷம் பொறு குருசாமி. ஆள் வந்துடட்டும். கேட்டுச் சொல்றேன். ஜனார்த்தனன் சொல்ல, குருசாமி பொருட்படுத்தாமல் நகர்ந்தான்.

    "நீ கேட்டுச்

    Enjoying the preview?
    Page 1 of 1