Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uthadugal Sudum!
Uthadugal Sudum!
Uthadugal Sudum!
Ebook149 pages42 minutes

Uthadugal Sudum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Uthadugal Sudum!

Read more from Rajeshkumar

Related to Uthadugal Sudum!

Related ebooks

Related categories

Reviews for Uthadugal Sudum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uthadugal Sudum! - Rajeshkumar

    20

    1

    இன்றைய மெசபடோமியாவின் தென்பகுதியில் கி.மு.1940இல் சுமேரியர் என்ற வகுப்பினர் ஆண்டு வந்த போது இருந்த காவல்துறையே நேர்மையாகவும், திறமையாகவும் துப்பறிந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனை வழங்கி இருக்கிறது. உதாரணமாக, கோவில்களிலும், அரண்மனையிலும் கொள்ளையடிப்பவர்களைக் கண்டுபிடித்து மரண தண்டனையை உடனே வழங்கி இருக்கிறார்கள்.

    பாபிலோனியாவில் தன் மனைவி இன்னொருவனுடன் தவறாக நடந்திருந்தால் கணவனே மனைவியையும், கள்ளக் காதலனையும் கொன்று விடலாம் என்று ஒரு சட்டம் இருந்தது.

    டெல்லி விமான நிலையம். விடியற்காலை நேரம். விமான நிலையத்தின் எலக்ட்ரானிக் கடிகாரம் 5.15 என்று சிவப்பாய் நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்க - சொற்பமாய் சில பேர் சென்னையிலிருந்து வரப்போகும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொருவரின் கைகளில் ரோஜா மாலைகள். பதவியிழந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரை வரவேற்க - கட்சிக் கொடிகளோடும், பேனர்களோடும் ஏழெட்டுப் பேர் நின்றிருந்தார்கள். டெல்லி பனியில் தொலைதூரக் கட்டிடங்கள் பாலிதீன் பேப்பரால் சுற்றப்பட்ட மாதிரி தெரிந்தது. ரன்வேயின் இரண்டு பாதைகளிலும் நடவு செய்யப்பட்டிருந்த சிவப்பு விளக்குகள் - கறுப்புத் துணியில் கோர்த்த பவளங்களாய் ஒளிர்ந்தது.

    நகுல் கையிலிருந்த கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே விமான நிலையத்திற்குள் நுழைந்தான். இருபத்தேழு வயது இளைஞன். கரும்பச்சையில் சபாரி அணிந்து - கழுத்துக்கு உயர்தர மப்ளர் துணியைச் சுற்றியிருந்தான். கண்களில் மெலிதான குளிர்கண்ணாடி தொற்றியிருந்தது.

    மெல்ல நடந்து- விசாரணை கவுண்ட்டரை நெருங்கி, இடது புறங்கை விரல்களால் லிப்ஸ்டிக் பூசிய உதடுகளை மூடி கொட்டாவியை அடக்க முயன்று கொண்டிருந்த வரவேற்பு பெண்ணிடம் கேட்டான்.

    மேடம்... சென்னை விமானம் எத்தனை மணிக்கு வரும்?

    ஐந்து நாற்பது...

    விமானம் தாமதமில்லையே...?

    இல்லை...

    ஐந்து நாற்பதுக்கு இங்கே வரும் விமானம்... மறுபடியும் கொல்கத்தாவுக்கு எத்தனை மணிக்கு போகும்...?

    ஒரு மணி நேரம் கழித்து...

    நன்றி...

    நகுல் விசாரணைக் கவுண்ட்டரை விட்டு நகர்ந்து பக்கத்தில் இருந்த கேண்ட்டீனுக்குப் போய் வந்து, ரூபாயைக் கொடுத்து அட்டை தம்ளரில் காபியை வாங்கி குடித்துக் கொண்டே - நேற்றைக்கு இரவு தனக்கு வந்த தந்தியை மறுபடியும் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தான்.

    ‘நகுல்! சென்னை - டெல்லி விமானத்தில் நாளை விடியற்காலை வருகிறேன். அவசியம் என்னை வந்து சந்திக்கவும். விஷயம் ரொம்பவும் முக்கியம். தவறாமல் வரவும். -சாம்பமூர்த்தி.’

    நகுல் காபியை சப்பிக் கொண்டே யோசித்தான். ‘விஷயம் என்னவாக இருக்கும்...? ஒரு மூன்று மாத காலத்திற்கு எந்த வகையிலும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாமென்று பத்து நாட்களுக்கு முன்பு தானே... சாம்பமூர்த்தி கடிதம் போட்டிருந்தான்...’

    ‘இப்போது அந்தக் கண்டிஷனை அவனே உடைத்திருக்கிறான்.’

    ‘டெல்லிக்கு வருகிறவன்... உடனே... அதே விமானத்தில் புறப்பட்டு கொல்கத்தாவுக்கு போகிறான்... எதற்காக இந்த திடீர் பயணங்கள்...?’

    காபி காலியாக - அட்டை தம்ளரைக் கசக்கி பிளாஸ்டிக் குப்பைக் கூடையில் எறிந்துவிட்டு சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான்.

    முதல் புகையை வெளியிட்ட விநாடி-

    அவன் தோளை யாரோ தொட்டார்கள்.

    புகை கசியும் வாயோடு திரும்பினான்.

    ஒரு இளைஞன் நின்றிருந்தான். முகம் பரிச்சயமான மாதிரி இருந்தது. ‘இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோம்...?’

    டேய் நகுல்... என்னடா பார்க்கிறே...? என்னைத் தெரியலை...?

    நீ... நீ... நீ...?

    சொல்லு பார்க்கலாம்...

    நீ... வின்சென்ட் தானே...?

    அப்பாடி..! கண்டுபிடிச்சுட்டே..! ஏண்டா... ஒரு ஏழெட்டு வருஷம் பார்க்காமல் இருந்தால் இப்படியா மறந்து போயிடறது...?

    சாரிடா... பள்ளிக்கூடத்துல படிச்சப்ப ஒண்ணா பழகிட்டிருந்தோம்... ஆள் அப்ப இருந்ததுக்கும், இப்ப இருக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது. தொப்பை வேற போட்டுட்டே... மூஞ்சி பூராவும் கன்னாபின்னான்னு சதை பிடிச்சிருக்கு...

    ஆமா... என்ன இந்த நேரத்துல... விமான நிலையத்துக்கு...?

    நண்பர் ஒருத்தர் சென்னையில் இருந்து வர்றார்... அவரை பார்க்கத் தான் காத்திட்டிருக்கேன்..! நீ...?

    நான் கொல்கத்தாவுக்கு பயணம். என் மனைவியோடு...

    அட... உனக்கு கல்யாணமும் முடிஞ்சாச்சா...?

    போன டிசம்பரில் தான் ஆச்சு...

    எங்கே மனைவியைக் காணோம்...?

    தோழி ஒருத்தியோடு பேசறதுக்காக... டெலிபோன் பூத்துல நுழைஞ்சிருக்கா... எப்படியும் பேசி முடிக்க பத்து நிமிடமாவது ஆகும். அதுவரைக்கும் என்ன பண்றதுன்னு யோசிச்சு சுற்றும் முற்றும் பார்த்திட்டிருந்தப்பத்தான்... நீ என் பார்வையில் பட்டே! ஆமா... நகுல்! நீ டெல்லியில் தான் இருக்கியா...?

    ம்... அஞ்சு வருஷமா இங்கதான் இருக்கேன்...

    எங்கயாவது வேலைக்குப் போறியா...?

    இல்லை... வேலை தேடித் தேடி அலுத்துப் போய் - ஒரு தொழிலை ஆரம்பிச்சுட்டேன்...

    என்ன தொழில்...?

    நகுல் ஆட்டோ காரேஜ்... கன்னாட் பிளேஸ்ல தான் வீடு, கடை எல்லாமே..! ஒண்டிக்கட்டை வாசம்... நீ என்ன பண்றே...?

    வின்சென்ட் சிரித்துக் கொண்டே சட்டைப் பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து நகுலிடம் கொடுக்க, அவன் அதை வாங்கி - வாய் விட்டுப் படித்தான்.

    பர்னிங் லிப்ஸ்..! சூப்பரான நிகழ்ச்சி. தொடர்புக்கு - திருமதி. லீனா வின்சென்ட் அண்ட் மிஸ்டர் வின்சென்ட்..! என்னடா இது...?

    இதான் எனக்கும் என் மனைவிக்கும் தொழில்...

    இதென்ன ‘பர்னிங் லிப்ஸ்’...

    தமிழில் சொல்லிப் பாரு...

    உதடுகள் சுடும்...

    "நானும் என் மனைவி லீனாவும் நடத்தற

    Enjoying the preview?
    Page 1 of 1