Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Rattham
Karuppu Rattham
Karuppu Rattham
Ebook283 pages1 hour

Karuppu Rattham

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Karuppu Rattham

Read more from Rajeshkumar

Related to Karuppu Rattham

Related ebooks

Related categories

Reviews for Karuppu Rattham

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Rattham - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    Traces of Blood found upon the scene of a crime are not Always of the Dark Red Colour of Popular imagination and This variation Depends upon Their Age. The substance upon which They are found. The temperature Etc. Which make them assume all Imaginable tints Reddish brown, Greenish Brown, Light olive green, Light Rose… Sometimes They are Almost Colourless.

    -Dr. Hans Gross – Vienna.

    டிசம்பர் இருபத்து மூன்று. இரவு எட்டு மணி.

    அந்தோனியார் நகரின் எக்ஸ்டன்ஷனில் ஒதுக்குப் புறமாய் இருந்த அந்த பங்களாவின் ஹாலுக்குள் டீபாவின் மேல் உட்கார்ந்திருந்த ஆகாயவண்ண டெலிஃபோன் வாயைத் திறந்தது சோபாவில் உட்கார்ந்து 'புதிய ஏற்பாடு'களின் கனமான புத்தகத்தைப் புராடிக்கொண்டிருந்த தேவசகாயம் புத்தகத்தை மூடி வைத்து விட்டு நிமிர்ந்தார். அவர் கை நீட் ரிஸீவரை எடுப்பதற்குள் உள்ளேயிருந்து வேக வேகமாய் ஓடி வந்த லூர்தம்மாள் எடுத்தாள்.

    ஹலோ...

    ஹலோ...மம்மி! நான் குணசீலி... பேசறேன் சென்னையிலிருந்து டிரங்க்கால் மூலமாய்ப் பேசும் மகளின் குரல் லூர்தம்மாளின் காதில் தெளிவாகவே விழுந்தது.

    உன்னோட ஃபோனுக்காகத்தான்டி காத்திட்டிருக்கேன்...! இன்னிக்கு நைட்தானே... மெட்ராஸிலிருந்து புறப்படறே?

    ஆமாம்மா...

    எந்தட்ரெயின்...?

    சேரன்ல வர்றேன்... அண்ணனை ஸ்டேஷனுக்கு அனுப்பிவை... அப்பாவை அனுப்பாதே...! அவர்க்கு அந்த காத்தால பனி ஒத்துக்காது...

    லூர்தம்மாள் பெருமையாகச் சிரித்தாள். சரிடிம்மா... உன்னோட அப்பாவை நான் அனுப்பலை... கம்பளியில சுத்தி பத்திரமா வெச்சுக்கிறேன், போதுமா...?

    அப்பா இருக்காராம்மா...?

    இருக்கார். பக்கத்திலேயேதான்... உட்கார்ந்திட்டிருக்கார்.

    அப்பாகிட்டே... ரிஸீவரைக் குடும்மா

    லூர்தம்மாள் ரிஸீவரை புன்னகையோடு உட்கார்ந்திருந்த கணவனிடம் சிரிப்போடு நீட்டினாள்.

    உங்க அருமைப் பொண்ணு பேசறா...

    தேவசகாயம் ரிஸீவரை வாங்கி அம்மா -என்று குரல் கொடுத்தார்.

    அப்பா... எப்படி இருக்கீங்க...?

    இருமலும் மூட்டுவலியுமா சந்தோஷமா இருக்கேன்ம்மா.

    டாக்டர்கிட்டே போனீங்களா?

    ம்... போனேன். அவர் வழக்கமா குடுக்கிற மருந்தை வழக்கமா சாப்பிட மறந்துடறேன்... அதனால எந்தத் தெந்தரவும் இல்லாமே...சௌக்யமா இருக்கேன்...

    ஐயோ... அப்பா... ஹெல்த்ல கான்ஷியஸ்னஸ் வேண்டாமா...?

    என்னோட உடம்பை விடும்மா. இந்த வருஷ கிறிஸ்துமஸ்ஸைப் பத்திப் பேசுவோம். உனக்கும் அண்ணனுக்கும் இந்த வருஷம்... அருமையான டிரஸ்.

    அப்புறம்...?

    உனக்காக... ஒரு கிஃபட் வாங்கி வச்சிருக்கேன்...

    என்ன கிஃபட்?

    நாளைக்கு ராத்திரி 'மிட்நைட்' ப்ரேயர் முடிஞ்சதும்... உன்கையில இருக்கும்.

    அப்பா! ப்ளீஸ்... சொல்லுங்கப்பா...

    நோ... நோ... மை சைல்ட்... நாளைக்கு ராத்திரிக்குத் தான்...! ஆமா... காலேஜிலிருந்து எத்தனை நாள் லீவு எடுத்துக்கிட்டு வரப்போறே...?

    ஒருவாரம்...

    சின்னதா ஒரு டூர் போக அரேஞ்ச் பண்ணட்டுமாம்மா...?

    வேண்டாம்பா! வர்ற ஒரு வாரமும் நம்ம வீட்லேயே இருக்கப் போறேன் நேரா நேரத்துக்கு சாப்பிட வேண்டியது... தூங்க வேண்டியது. முழிச்சிட்டிருக்கிற நேரத்துல 'டெக்'ல கேஸட்டுகளைப் போடு இஷ்டத்துக்கு பார்க்க வேண்டியது...

    உனக்கு எப்படி இஷ்டமோ அப்படியே இரும்மா... நாளைக்குக் காலைல சேரன்ல வர்றியா...? 'ப்ளூ' வில வர்றியா?

    சேரன் ...

    ரிசர்வ் பண்ணிட்டியா...?

    ம்...

    கோச் நம்பர்?

    S5...

    அண்ணன் சேவியரை அனுப்பிச்சுடறேன்...

    மற்றவை நாளைக்கு காலை ஆறரை மணிக்கு...

    எழுந்து கொண்டே ரிஸீவரை வைத்தாள் குணசீலி. தேவசகாயமும் ரிஸீவரை வைத்துவிட்டு எதிரே நின்றிருந்த மனைவியை ஏறிட்டடார்.

    என்ன லூர்து முறைக்கிறே?

    உங்க கொஞ்சலைக் காதுகொடுத்து கேட்க முடியலை...

    முடியலைன்னா காதுக்குப் பஞ்சை வெச்சுக்க வேண்டியதுதானே? சரி... சேவியர் எங்கே...?

    கிளப்புக்கு போயிருக்கான்

    இன்னும் கிளிப்பிலிருந்து வரலை...?

    அவன் எப்பவும் எட்டரை மணிக்குத்தானே வருவான்...? இப்போ மணி எட்டு பத்து. உங்க அதிசயப் பொண்ணு ஊரிலிருந்து வர்றாங்கிறதுக்காக... கடிகாரம் கூடவா வேகமா ஓடும்...?

    மறுநாள் காலை ஆறு மணி

    நகரம் விடிந்துவிட்ட கோலாகங்களில் இருக்க சேவியர் தன் டால்பின் நிற காரை ரயில்வே ஸ்டேஷனை நோக்கி விரட்டி கொண்டிருந்தான். வழியில் நின்ற அந்த அழகான இளைஞனை காரை நிறுத்தி ஏற்றிக் கொண்டான்.

    லாரன்ஸ்!

    என்னடா?

    குணசீலியை ரிஸீவ் பண்ண நீ ஸ்டேஷன் பிளாட் பாரத்துக்கு வராதே

    ஏன்?

    "நீ கார் பார்க்கிங்கிலேயே இரு. காதலன் தன்னோட காதலிக்கு உடனடியா தரிசனம் குடுத்துடக் கூடாது...

    கொஞ்சம் ஏங்க வெச்சு... அழ வச்சு..."

    வேண்டாண்டா... குணசீலி தாங்கமாட்டா...! அவ கம்பார்ட்மெண்ட்டை விட்டு எட்டிப் பார்க்கும்போது... பிளாட்பாரத்துல என்னோட முகம் தெரியணும். இல்லேன்னா அவளுக்கு 'மூடு' அவுட்டாயிடும். அன்னிக்குபூராவும் பேசமாட்டா... நாள் மோசமயிடும்...

    கொஞ்ச நேரம்தானே...? சீண்டிப் பார்க்கலாம்...

    வேண்டான்டா சேவி

    போசாம வாடா...

    கார் ஸ்டேஷனைத் தொட்டு கார் பார்க்கிங்கில் இடம் தேடி நின்றது. சேவியர் மட்டும் இறங்கிக் கொண்டு கதவைச் சாத்த லாரன்ஸ் கெஞ்சினான்.

    டேய்... சேவியர்...! நானும்... வறேண்டா...

    உதைப்பேன்... ராஸ்கல்...! குணசீலியை ஒரு பத்து நிமிஷ நேரம் தவிக்க விடலாம்னு பார்த்தா... நீ விடமாட்டே போலிருக்கே...?

    சரி போய்ட்டு வாடா... குணசீலி எம் மேல கோவிச்சுக் கிட்டா... நீதான் அவளை சமாதானம் பண்ணனும்...

    சரி... சரி...- சேவியர் ஸ்டேஷனின் வெளிச்சமான வாசல் படிகளில் ஏறி உள்ளே போனான். அவன் உள்ளே போனதும் லாரன்ஸ் ஒரு பெருமூச்சு விட்டபடி சட்டைப் பையிலிருந்த அந்தக் கடித்தது எடுத்துப் பிரித்து ஒரு பூவை ரசிக்கிற ஆர்வத்தோடு படிக்கச் ஆரம்பித்தான்.

    என் அன்பான லாரன்ஸ்!

    உங்கள் குணசீலியின் குட்மார்னிங் - குட் ஆப்டர்நூன் - குட்ஈவினிங். இதில் ஏதாவது ஒன்றை நான் சொன்னதா வைத்துக் கொள்ளவும். மூன்று மாத இடைவெளிக்குப் பின் மறுபடியும் உங்கள் முகதரிசனம். நான் 24 -ம் தேதி காலை கோவை வருகிறேன். என் அண்ணன் சேவியர் உங்களை எப்படியும் ஸ்டேஷனுக்குக் கூட்டி வருவார். கம்பார்ட்மென்ட்டை விட்டு இறங்கும்போது - நீங்கள் பிளாட்பாரத்தில் இருக்க வேண்டும். ஸ்டேஷனுக்கு வராமல் ஏமாற்றினால் நான் ஊரில் இருக்கிற ஒருவாரம் வரைக்கும் உங்களோடு 'டூ'.

    உங்கள் குணசீலி.

    லாரன்ஸ் கடிதத்தைப் படித்து முடித்திருந்தபோது - ஸ்டேஷனுக்கு வெளியே பொருத்தியிருந்த ஸ்பீக்கரில் அறிவிப்பு வழிந்தது. சென்னையிலிருந்து கோவை வரவேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ் பத்து நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.

    போச்சுடா!- நெற்றியில் நோகாமல் தட்டிக்கொண்டு காரின் சீட்டுக்கு சாய்ந்தான் லாரன்ஸ்...

    சேரன் எக்ஸ்பிரஸ் ஏழு மணிக்கு ஏராளமாய் அதிர்ந்தபடி ஸ்டேஷனின் இரண்டாவது பிளாட்பாரத்திற்குள் நுழைந்து நின்றது. பிரயாணிகள் பளிச்சென்ற சூட்கேஸ்களோடு அழுக்கு மூட்டைகளாக இறங்கி நடக்க சேவியர் கம்பார்ட்மெண்ட் S 5 -ஐத் தேடித்கொண்டு ஓடினான்.

    S8, S7, S6... கம்பார்ட்மெண்ட்கள் கண்ணில் பட்டுபட்டு மறைய S5 வந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சேவியர் ஒவ்வொரு ஜன்னலாய் போய் எட்டிப் பார்த்தான்.

    குணசீலி தட்டுப்படவில்லை.

    இறங்கிக் கொண்டிருந்த பயணிகளைப் பார்த்தான்.

    அந்தக் கும்பலிலும் காணோம்.

    'இந்த கம்பார்ட்மெண்ட்தானா? இல்லை வேற கம்பார்ட்மெண்டா...?'- யோசித்துக் கொண்டே அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்கு ஓடினான்.

    அதே விநாடி -

    அவனுடைய முதுகை யாரோ தொட்ட உணர்வு திரும்பினான்.

    அவனுக்கு ரொம்பவும் பழக்கமான டி.டி.ஈ. ரங்கதாஸ் கறுப்புக் ககோட்டிலும் வெள்ளை பேண்ட்டிலும் ட்ரிம்மாய் நின்றிருந்தார்.

    என்ன சேவியர்...? யாரைப் பார்க்க இந்த ஓட்டம்?

    ஹலோ தாஸ் ஸார்... நீங்களா...? என்னோட சிஸ்டர் குணசீலி இந்த ட்ரெயின்லதான் வர்றதா ஃபோன் பண்ணியிருந்தா. கம்பார்ட்மெண்ட் S5. ஆனா அந்த கம்பார்ட்மெண்ட்ல காணோம். நீங்களும் இந்த ட்ரெயின்லதான் வர்றீங்களா?

    ஆமா...

    குணசீலியைப் பார்த்தீங்களா...? நான் ஏற்கெனவே ஒரு தடவை உங்களுக்கு அறிமுகம் பண்ணி வெச்சிருக்கேன்.

    எஸ்... எஸ்... ஞாபகமிருக்கு...! சிவப்பா... சுருட்டை முடியோடு... உயரமா...

    அவளேதான்

    நான் பார்க்கலையே...! எனக்கு S3 கம்பார்ட்மெண்ட். என்று சொன்ன தாஸ் சுற்றும் முற்றும் பார்த்து கையில் சார்ட்டோடும் சிவப்பேறிய - தூக்கம் கெட்ட கண்களோடும் போய்க் கொண்டிருந்த இன்னொரு டி.டி.ஈ.யைக் கூப்பிட்டார்.

    மணி!

    அவர் திரும்பினார். என்ன தாஸ்?

    நீ S5 தானே வந்தே?

    ஆமா...

    சார்ட்ல குணசீலிங்கிற பெரு இருக்கா பாரு...

    மணி கொஞ்சம் எரிச்சலோடு கசங்கிய சார்ட்டைப் புரட்டிப் பார்த்து விட்டு -

    டி.குணசீலி... பேர் இருக்கே, பெர்த் நம்பர் தர்ட்டி டூ...

    சேவியர் பதற்றப்பட்டான்.

    கம்பார்ட்மெண்ட்ல பார்த்தேன் ஸார், காணலையே...?

    அப்படீன்னா கீழே இறங்கிப் போயிருப்பாங்க...

    கீழே இறங்கி நடந்து வந்திருந்தா என்னோட பார்வையில் பட்டிருக்கணுமே...?

    மணி கோபமாய்க் கேட்டார்.

    கம்பார்ட்மெண்ட்ல ஏறிப் பார்த்தீங்களா...?

    பார்க்கலை...

    போய்ப் பாருங்க ஸார்... இந்த தர்ட்டி டூ பெர்த் ஒரு சூப்பர் பெர்த், அந்த பொண்ணு இன்னமும் மேலே படுத்துத் தூங்கிட்டிருக்கோ என்னவோ...?

    இருந்தாலும் இருக்கும், வாங்க பார்த்துடலாம்... தாஸ் செவியரைக் கூட்டிக் கொண்டு S.5 கம்பார்ட்மெண்ட்டுக்குள் ஏறினார், கம்பார்ட்மெண்ட் பாலைவனமாய் வெறிச்சோடியிருந்தது.

    32-ம் நம்பர் பேரத்தை நோக்கிப் போனார்கள். பேரத்தை நெருங்க -

    சேவியறும் தாஸும் ஆச்சரியப்பட்டார்கள்.

    2

    Detaching of Blood; If the surface Be Rough, For Example rusted Iron, A large underssed stone etc... Nothingelse can be done, But carefully to scrape off the Blook, Collecting it in a piece of paper held underneath and firmly pressed against the surface of the Object - பக்கோடா பொட்டலமாகக் கட்டி வந்த காகிதத்தில் காணப்பட்ட ஒரு வாசகம்.

    குணசீலி பெர்த்தில் இல்லை.

    ஆனால் -

    அவளுடைய சூட்கேஸூம் வானிடி பேக்கும் - பெர்த்தில் மேல் அநாதைக் குழந்தைகளாய் உட்கார்ந்திருந்தன, டி.டி.ஈ. தாஸ் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு ஆச்சரியப்பட்டார்.

    என்ன சேவியர்... லக்கேஜ் மட்டும் இருக்கு. உன்னோட சிஸ்டரைக் காணோம்?

    அதானே... ஆச்சர்யமாயிருக்கு...

    இது அவளோட லக்கேஜ்தானே...?

    ஆமா...

    சேவியர் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே- லாரன்ஸின் முகம் கம்பட்டர்மென்ட் ஜன்னலில் தெரிந்தது. சேவியர்! ஸ்டேஷன் மொத்தமும் காலியாயிடுச்சு. நீ கம்பார்ட்மெண்ட்டுக்குள்ளே ஏறிக்கிட்டு என்னடா பண்ணிட்டிருக்கே...? குணசீலி எங்கே...?

    அவளைத்தாண்டா தேடிட்டிருக்கேன்...

    தேடிட்டிருக்கியா...? இந்த கம்பார்ட்மெண்ட் தானே?

    ஆமா...! லக்கேஜ் இருக்கு, ஆளைக் காணோம்.

    காணோமா...? என்னடா... உளர்றே...? லாரன்ஸ் பிளாட்பாரத்திலிருந்து - கம்பார்ட்மெண்ட்டுக்குள் ஓடி வந்தான்.

    தாஸ் சேவியரை

    Enjoying the preview?
    Page 1 of 1