Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mottukkal Pookattum
Mottukkal Pookattum
Mottukkal Pookattum
Ebook134 pages44 minutes

Mottukkal Pookattum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Mottukkal Pookattum

Read more from Rajeshkumar

Related to Mottukkal Pookattum

Related ebooks

Related categories

Reviews for Mottukkal Pookattum

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mottukkal Pookattum - Rajeshkumar

    23

    1

    "ரத்தின விநாயகர் கோயில் இறங்கறது..." கண்டக்டரின் குரல் கேட்டு ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்த மகி வேகமாய் எழுந்து பஸ்சை விட்டு இறங்கினான்.

    பதினோரு மணி வெய்யில் நடுமண்டையில் உறைத்தது. ஆர்.எஸ். புரத்தின் பிரதான சாலையில் வாகனங்கள் புகை தள்ளிப் போய்க் கொண்டு இருக்க காற்று மண்டலம் கெட்டிருந்தது.

    ரோட்டை கவனமாய் கிராஸ் செய்த மகிக்கு வயது இருபத்தேழு. கிட்டத்தட்ட ஆறு அடி உயரம். மாநிறத்துக்கும் ஒருபடி தூக்கல். சற்றே நீள் வட்ட முகம். சிரித்தால் இடது பக்க கன்னத்தில் செல்லமாய் குழி விழுந்து அது ஸ்லோமோஷனில் மறையும் (ஆனால் அவன் சிரித்து ரொம்ப நாளாயிற்று). மகியை நீங்கள் பார்க்கிற இந்த நிமிஷம், அவன் முகத்தில் இரண்டு வார ரோமம். கண்களில் ஒரு இருபத்தேழு வயது இளைஞனுக்குரிய கனவுகள் இல்லை. எல்லாமே நொறுங்கிப் போய் விட்ட பிரமை. அணிந்திருந்த சர்ட்டில் காலர் பகுதியில் கணிசமான அழுக்கு.

    மகி எதிர்ப்பட்ட ஒருவரிடம் கேட்டான்.

    மணி எவ்வளவு சார்?

    லெவன் பைவ்.

    ‘டீ சாப்பிடலாமா?’ என்ற சிறிய நப்பாசை தோன்ற பாக்கெட்டில் இருந்த பொருளாதார நிலைமையை உத்தேசித்து அதை நிராகரித்தான். பிளாட்பாரத்தில் ஜனங்களோடு ஜனமாய் நடந்தான். அவனைத் தவிர இந்த உலகத்தில் எல்லோருமே சந்தோஷமாய் இருப்பதைப் போன்ற உணர்வு.

    ஏண்டி... உன்னோட சேலைக்கு மேட்ச்சா பிளவுஸ் கிடைச்சுதா?

    இல்லையே. பஜார் பூராவும் அலைஞ்சு பார்த்துட்டேன். கிடைக்கவேயில்லை. ஆட்டோவுக்கு அம்பது ரூபா அழுததுதான் மிச்சம்... சேலைக்கு மேட்சாய் ஜாக்கெட் கிடைக்காத கவலையில் ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு பேசிக் கொண்டே அவனைக் கடந்தாள். கிருஷ்ணா ஸ்வீட்சில் கிலோ கணக்கில் இனிப்புகளை வாங்கிப் போக ஒரு பணக்காரக் கூட்டம் காத்திருந்தது. பழமுதிர்ச்சோலை புரூட் ஸ்டாலில் ஒரு கும்பல் பழரசம் அருந்த, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் திட்டு திட்டாய் ஜனங்கள் தெரிந்தார்கள்.

    மகி ஜனங்களின் சந்தோஷத்துக்கு அந்நியப்பட்டு பிளாட்பாரத்தில் நடந்து, மெக்ரிக்கர் ரோட்டின் கார்னரில் நின்றிருந்த ஐந்து மாடி கட்டிடத்துக்கு முன்பாய் வந்து நின்றான். பீடி புகைத்துக் கொண்டிருந்த காவலாளியிடம் கேட்டான்.

    மாருதி பில்டர்ஸ் எத்தனையாவது மாடி?

    மூணாவது...

    போனான். லிப்ட் வேலை செய்யாததால் படிகள் ஏறி, மூன்றாவது மாடியில் இருந்த மாருதி பில்டர்சுக்கு வந்தான். காலையில் ஷாம்பு குளியல் செய்து சிலுசிலுவென்று இருந்த ரிசப்சனிஸ்ட் பெண் டெலிபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததை சற்றே நிறுத்திவிட்டு, எஸ் என்றாள்.

    மகி கேட்டான்.

    பத்திரிகைக்கு கதை எழுதற சுபிட்சா இந்தக் கம்பெனயில்தானே வேலை பார்க்கிறாங்க?

    ஆமா...

    அவங்களை நான் பார்க்கணும்.

    நீங்க யாரு?

    என் பேர் மகி. நான் சுபிட்சாவோட உயிர் வாசகன்.

    சாரி. மிஸ் சுபிட்சா, தான் வேலை செய்யற இடத்துக்கு எந்த வாசகர் வர்றதையும் விரும்பறதில்லை. சாயந்தரம் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளே அவங்க வீட்டுக்கே போய் பார்க்கலாம்...

    சாயந்தரம் வரைக்கும் என்னால காத்திட்டிருக்க முடியாது. விஷயம் கொஞ்சம் அவசரம். சுபிட்சாவோடு ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு போயிடறேன்.

    சுபிட்சா விரும்ப மாட்டாங்க.

    இண்ட்டர்காம் போன்ல கேட்டுப் பாருங்க. ப்ளீஸ், விஷயம் ரொம்பவும் அவசரம்.

    ரிசப்சனிஸ்ட் மகியின் குரலில் இருந்த குழைவை உணர்ந்து இண்ட்டர்காம் ரிசீவரை தொட்டு எடுத்தாள். ஒரு பட்டனைத் தட்டி விட்டு பேசினாள்.

    மிஸ் சுபிட்சா...

    ஸ்பீக்கிங்... மறுமுனையில் அக்கவுண்ட் செக்ஷனில் இருந்த சுபிட்சா பேசினாள்.

    உங்களைப் பார்த்துப் பேச ஒருத்தர் வந்திருக்கார்...

    யாரு?

    வாசகராம். பேரு மகின்னு சொன்னார்.

    ஆபீஸ்ல வாசகரை சந்திக்கிறதுதான் எனக்கு பழக்கமில்லையே?

    வந்தவர் ஏதோ ஒரு அவசரத்தில் இருக்கிறார். உங்ககிட்ட ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணுமாம்.

    பேர் என்ன சொன்னார்?

    மகி.

    வெயிட் பண்ணட்டும். ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். ரிசப்சனிஸ்ட் ரிசீவரை அதனிடத்தில் வைத்து விட்டு மகியிடம் நிமிர்ந்தாள்.

    அந்த விசிட்டர்ஸ் காபின்ல போய் உட்காருங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல சுபிட்சா வருவாங்க.

    தாங்க்யூ.

    மகி, பிளைவுட்டால் தடுக்கப்பட்ட அந்த கேபினை நோக்கிப் போனான். கேபின் சுத்தமாய் இருந்தது. எதிரெதிராய் பார்த்தபடி இரண்டு சோபாக்கள். நடுவே கண்ணாடிச் செவ்வக டீப்பாய். டீபாயின் மேல் பிளாஸ்டிக் பூக்கொத்துக்களோடு ஒரு பித்தளை ஃபிளவர் வாஷ்.

    கேபினில் யாரும் இல்லை.

    போய் உட்கார்ந்தான். கண்கள் எதேச்சையாய் உயர்ந்தபோது சுவரில் அந்த பொன்மொழி வாசகம் தெரிந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1