Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neela Nira Nizhalgal
Neela Nira Nizhalgal
Neela Nira Nizhalgal
Ebook417 pages2 hours

Neela Nira Nizhalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Neela Nira Nizhalgal

Read more from Rajeshkumar

Related to Neela Nira Nizhalgal

Related ebooks

Related categories

Reviews for Neela Nira Nizhalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neela Nira Nizhalgal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அரபிக்கடலுக்கு வடமேற்கே ஐந்நூறு கிலோ மீட்டர் தூரத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த புயல் சின்னம் அங்கிருந்தபடியே மும்பையை மிரட்டிக் கொண்டிருந்தது. ஆகாயம் பூராவும் அழுக்கு மேகங்கள் திம்மென்று சூழ்ந்து கொண்டு ஒரு பெரிய அழுகைக்குத் தயாராயின.

    அது ஒரு ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமை, சாயந்தரம் ஐந்து மணி, மேகங்கள் மேற்கு திசை அஸ்தமன சூரியனை ‘கேரோ’ பண்ணியிருக்க… மும்பையின் எல்லாத்திசைகளிலும் செயற்கை இருட்டு ஈஷியிருந்தது. காற்றில் செல்லமாய் ஊட்டி குளிர்.

    விலேபார்லே ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளிப்பட்டாள் நிஷா. இருபத்து மூன்று வயது நிஷா ஐஸ்வர்யாராயின் ஐம்பது சதவிகித சாயலில் தேன்நிறக் கண்களுக்குச் சொந்தக்காரி. எந்த நேரத்திலும், எந்தக் கோணத்திலும், எப்படிப் பார்த்தாலும் அழகாய் இருப்பாள் போல் தோன்றியது. மஞ்சள் புள்ளிகள் தெளித்திருந்த கருஞ்சிவப்பு மேக்ஸியில் கச்சிதமாய்ச் சிக்கியிருந்தாள். மழையை எதிர்பார்த்து கையில் ஒரு ஸிங்தெடிக் க்ளாத் குடை இடது தோளில் வானிடி பேக்.

    நிஷா ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஞாயிற்றக்கிழமையின் காரணமாகக் களைத்துப் போயிருந்த பிளாட்பாரத்தில் இரண்டு நிமிட நடை நடந்து ஆள்நடமாட்டம் இல்லாத ‘பார்க் வ்யூ’ ரோட்டுக்கு வந்தாள்.

    பங்களாக்கள் தள்ளித்தள்ளித் தெரிய எல்லாத் திசைகளிலும் நிசப்தம் செதுக்கப்பட்டிருந்தது.

    நிஷா தன் வெண்ணெய் நிற மணிக்கட்டில் அப்பியிருந்த பொண்நிற ஹெச்.எம்.டி.யைப் பார்த்துக் கொண்டே வேகமாய் நடை போட்டாள்.

    பத்து நிமிட நடை

    சாலையின் வளைவிலேயே ஏகப்பட்ட மரங்களுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்த அந்தச் செங்காவிக் கட்டத்துக்கு முன்பாய் வந்து நின்றாள். பெயிண்ட் உதிர்ந்து போன காம்பௌண்ட் கேட் வெறுமனே சாத்தியிருந்தது.

    கேட்டை மெள்ளத் தள்ள அது ‘கீறீச்’சென்ற சின்ன அலறலோடு பின்வாங்கியது.

    நிஷா தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். கேட்டில் இருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்வாங்கிப் பரவியிருந்த அந்த பங்காள சற்றே வயோதிகமாய்த் தெரிந்தது ஆர்ச் ஜன்னல்களில் கட்டம் கட்டமாய்ப் பல நிறங்களில் கண்ணாடிகள், போர்டிகோவில் ஆஸ்டின் கார் ஒன்று கேன்வாஸ் படுதாவுக்குள் ஒளிந்திருந்தது.

    நிஷா முகப்பை நோக்கி நடந்தாள். சரியாய்ப் பராமரிக்கப்படாத புல்வெளியில் பார்த்தீனியம் முளைத்திருந்தது. தண்ணீர்த் தொட்டிக்கு நடுவே இருந்த பெண்ணின் சிலை தன் இரண்டு கைகளையும் இழந்திருந்தது, போர்டிகோ தூணோரம் வைக்கப்பட்டிருந்த ரோஜாத் தொட்டிகள் உடைந்து போய்ச் சிதிலமாய்த் தெரிந்தன.

    நிஷாவின் மனசில் வியப்பு ஓடியது.

    ‘ஒரு நியூரோ சர்ஜன் தன் வீட்டை இப்படியா வைத்துக் கொள்வார்…?’

    ‘பேட்டியை ஆரம்பிப்பதற்கு முன் இந்த வீட்டைப் பற்றி டாக்டரிடம் பேச வேண்டும்...!"

    நிஷா ஆஸ்டின் காரைச் சுற்றிக் கொண்டு போர்டிகோ படிகளில் ஏறிக் கதவின் இடது பக்க மூலையில் இருந்த அழைப்பு மணியின் பொத்தானின் மேல் தன் கட்டை விரலை வைத்தாள்.

    உள்ளே பத்து விநாடி இன்னிசை

    காத்திருந்தாள் நிஷா.

    அரை நிமிஷ அவகாசத்துக்குப்பின் உள்ளே காலடியோசை கேட்டுப் பின் கதவு திறந்தது.

    ஒரு பெண் நின்றிருந்தாள். முப்பது வயது இருக்கலாம். வளப்பமான உடம்பு. உயரத்தூக்கிக் கொண்டை போட்டிருந்தாள். உடுத்தியிருந்த சேலைக்கு மேல் காபித்தூள் நிற கவுன் அணிந்திருந்தாள். கையில் வெள்ளையாய் ஏதோ பவுடர் மாதிரி ஓட்டியிருந்தது.

    கேட்டாள்.

    யார்… வேணும்…?

    டாக்டர் சதுர்வேதி.

    நீங்க…?

    என் பேர் நிஷா…. நான் ஒரு ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டர்… டாக்டர் சதுர்வேதி ஒரு நரம்பியல் நிபுணர். பயோடெக்னாலஜியில் டாக்டரேட் வாங்கியவர்… அவரைப் பார்த்துப் பேட்டி எடுக்கிறதுக்காக வந்திருக்கேன். பத்து நாளைக்கு முன்னாடியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டேன். இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சு மணிக்கு என்னை வரச்சொல்லியிருந்தார்.

    டாக்டர் யாருக்கும் பேட்டி தரமாட்டாரே…?

    எனக்குத் தர்றதா சொன்னார்…

    உள்ளே வந்து உட்கார்ங்க…. நான் டாக்டரைக் கேட்டுட்டு வந்து சொல்றேன்…

    நிஷா உள்ளே நுழைந்தாள். அவள் உட்கார சோபா ஒன்றைக் காட்டிய அந்தப் பெண், பக்கவாட்டு அறைக்குள் நுழைந்து சட்டென்று காணாமல் போனாள்.

    பங்களா உடனே பாலைவன அமைதிக்குப் போயிற்று. நிஷா சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த டிராயிங் ரூமைப் பாதி அடைத்துக்கொண்டு ஒரு கண்ணாடி பீரோ தெரிய, உள்ளே பச்சை நிற காலிகோவால் பைண்ட் செய்யப்பட்ட தடிமனான புத்தகங்கள். அதன் மேல் மக்கிப்போன பொன்னிற எழுத்துக்கள். நிஷா பார்வையைப் கூர்மையாக்கி அந்த எழுத்துக்களைப் படித்துப் பார்த்தாள்.

    Experiments in Gene manipulation

    Author: Dennnis. E.Ohman

    Genes V- Lewis

    Genetic Engineering

    பக்கவாட்டுச்சுவரில் இளவயது சதுர்வேதி தலை கொள்ளாத கிராப்போடு கான்வகேஷன் உடையில் கேமிராக்காரரை முறைத்திருந்தார். பக்கத்திலேயே சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவருக்குக் கொடுத்திருந்த டாக்டரேட் பட்டங்களின் ‘சன்னத்’கள் கண்ணாடி பிரேமுக்குள் சிக்கித் தொங்கின.

    காலடிச் சத்தம் கேட்டது.

    நிஷா நிமிர்ந்தாள்.

    இடதுபக்கமாய்த் தெரிந்த ஒரு அறைக் கதவைத் திறந்து கொண்டு டாக்டர் சதுர்வேதி வெளிப்பட்டார்.

    அசரவைக்கிற உயரம். ஐம்பத்தைந்து வயது உடம்பு. முன்மண்டை இலையுதிர் காலப் பருவத்தில் இருந்தது. சற்றே அழுக்கான வெள்ளை ஜிப்பாவையும் பைஜாமாவையும் தரித்திருந்த சதுர்வேதி கையில் பைப் வைத்திருந்தார்.

    குட் ஈவினிங் டாக்டர்... நிஷா ஒரு பெரிய புன்னகையோடு எழுந்து நிற்க… சதுர்வேதி முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல் என்ன? என்றார்.

    பேட்டி…

    வரச் சொல்லியிருந்தேனா…?

    ஆமா டாக்டர்...

    எப்போ சொன்னேன்...?

    கல்யாண் ஆஷாத் ஹாலில் பத்து நாளைக்கு முன்னாடி நடந்த ஒரு செமினாருக்கு நீங்க வந்தீங்க… செமினார் முடிஞ்சு நீங்க கார்ல் ஏறும்போது உங்ககிட்ட பேட்டிக்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். நீங்க இருபதாம் தேதி சாயந்தரம் அஞ்சு மணிக்கு உங்க பங்களாவில் வந்து பார்க்கச் சொன்னீங்க… இன்னிக்குத் தேதி இருபது...

    சதுர்வேதி வாயில் பைப்பை வைத்துப் பதற்றமாய் ஒரு இழுப்பு இழுத்துப் புகைவிட்டார்.

    மறந்துட்டேன்…

    ஸாரி டாக்டர்… நான் மறுபடியும் உங்களுக்கு ஃபோன் பண்ணி பேட்டியைப் பத்தி ஞாபகப்படுத்தியிருக்கணும்…

    யெஸ்…. யெஸ்….! பேட்டியை இன்னொரு நாளைக்கு வெச்சுக்கலாமா…?

    நிஷா அப்போதுதான் கவனித்தாள். டாக்டர் சதுர்வேதி ஒரு அசாதாரணப் பதற்றத்தில் இருப்பது போல் தோன்றியது. அவருடைய பெரிய நெற்றிப் பரப்பு முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்ட தினுசில் வியர்த்து மினுமினுக்க… பைப்பைப் பிடித்திருந்த வலது கை விரல்கள் ஒரு மெல்லிய நடுக்கத்துக்கு உப்பட்டிருந்தன.

    "சரி டாக்டர்! பேட்டியை உங்கள் விருப்பப்படியே இனனொரு நாள் வைத்துக் கொள்ளலாம்’ என்று சொல்ல நினைத்து வாயைத் திறக்க முயன்ற நிஷாவின் பார்வை ஏதேச்சையாய் சதுர்வேதியின் ஜிப்பா பாக்கெட்டுக்குப் போக… அவளுடைய விழிகள் சட்டென்று லேசர் கதிர்களாய் மாறின.

    சதுர்வேதியின் ஜிப்பா பாக்கெட் அருகே நான்கைந்து ஈக்கள் வட்டமடித்துச் சட்டென்று உள்ளே போவதும் வெளியே வருவதுமாய் இருந்தன.

    சென்னை.

    பெசன்ட் நகரின் ஐந்தாவது மெயின்ரோட்டின் வால் பகுதியில் இருந்த ஒரு பெரிய பங்களாவின் படுக்கையறை.

    ஹரிஹரண் தன் மனைவி கீதாம்பரியின் எட்டுமாத பம்மிய வயிற்றை மெல்ல முத்திமிட்டான்.

    டேய் ராஜா…! அப்பா போயிட்டு வர்றேன்…

    கீதாம்பரி பொய்க்கோபத்தோடு கணவனின் முகத்தை தன் வயிற்றினின்றும் பிரித்தாள்.

    நீங்க ஒண்ணும் என் மகன்கிட்டே கொஞ்ச வேண்டாம்….

    ஏனாம்…?

    நீங்கதான் எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ளே ஜெர்மனி புறப்பட்டுப் போகப் போறீங்களே…?

    பத்தே நாள்தானே? ப்ராங்கஃபர்ட் போய் பிஸினஸ் பேசிட்டு ஓடி வந்துட மாட்டேனா. உன்னோட டெலிவரி டேட்தான் இன்னும் இருபது நாள் தள்ளியிருக்கே…

    உங்களுக்குப் பத்துநாள். எனக்கு அது பத்து வருஷம் மாதிரி…. பொண்டாட்டி வாயும் வயிறுமா இருக்கிற இந்த நேரத்துல எந்தக் கணவனும் பிஸினஸ்தான் பெரிசுன்னு வெளிநாட்டுக்குப் பறக்க மாட்டான்…

    ஹரிஹரன் சிரித்தான்.

    கிராமத்துப் பொண்ணு மாதிரி பாமரத்தனமா பேசாதே கீதாம்பரி… இது எவ்வளவு பெரிய முக்கியமான டீல் தெரியுமா…?

    ஏன், உங்க தம்பி ரமணி போகக் கூடாதாக்கும்…?

    அவனுக்கு இங்கிலீஷ் ப்ளுயன்ஸி கம்பி. பிஸினஸ் விகாரத்தைச் சொதப்பிட்டான்னா... நஷ்டம் லட்சக் கணக்கில் கையைக் கடிக்கும்…

    எதைக் கேட்டாலும் அதுக்கு ஒரு காரணத்தைத் தயாரா வெச்சிருப்பீங்களே…?

    இதோ பார் கீதாம்பரி! இங்கே உனக்கு என்ன குறைச்சல்…? என்னோட அம்மாவும் அப்பாவும் உன்மேல உயிரையே வெச்சிருக்காங்க… இதே ஊர்ல உங்கம்மாவும் அண்ணனும் இருக்காங்க… நான் ஊர்ல இல்லாத குறை தெரியதபடி அவங்க எல்லாருமே உன்னைப் பார்த்துக்குவாங்க…

    கீதாம்பரி கணவனின் இளஞ்சூடான கைகளைப் பற்றித் தன் கன்னத்தில் பதித்துக் கொண்டாள். கண்களில் கண்ணாடித் தாள் மாதிரி நீர் மினுமினுத்தது.

    உங்கப்பா, உங்கம்மா, எங்கம்மா, எங்கண்ணன் இப்படி எத்தனை பேர் என் பக்கத்துல இருந்தாலும் நீங்க பக்கத்துல உட்கார்ந்து ஒரு வார்த்தை பேசற மாதிரி இருக்கும்…?

    சரி, சரி புறப்படற நேரத்துல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடாதே… எனக்கும் என்னவோ போல் ஆயிடும்…

    ஜெர்மன்லயிருந்து பத்து நாள்ல வந்துடுவீங்கள்ல…?

    ம்…

    கண்டிப்பா…?

    பூஜை ரூமுக்கு வா… கற்பூரம் ஏத்திச் சத்தியம் பண்ணித்தர்றேன்…

    தினமும் என்கூட போன்ல பேசணும்…

    போசமே, இருப்பேனா…?

    ஒரு முத்தம் குடுங்க…

    ப்ச்…

    உங்க மகனுக்கு…?

    அவனுக்கு இல்லாத முத்தமா…?

    கீதாம்பரியின் வயிற்றில் ஹரிஹரன் வெப்பமான உதட்டைப் பதித்த விநாடி –

    ‘டொக்… டொக்…!’

    கதவு தட்டப்படும் சத்தம்.

    ஹரிஹரன் எழுந்து போய்க் கதவைத் திறந்தான்.

    வெளியே –

    அவனுடைய அப்பா மாசிலாமணியும் அம்மா திலகமும் அகலமான புன்னகைகளை உதட்டில் பொருத்திக் கொண்டு நின்றிருந்தார்கள்.

    ஏர்போர்ட்டுக்கு நேரமாச்சு ஹரி… மணி இப்போ நாலு…

    இதோ புறப்பட்டேன்ப்பா…

    லக்கேஜ் காருக்குப் போயாச்சு… ரமணி உன்னை ட்ராப் பண்ணக் காத்திட்டிருக்கான்… என்னம்மா கீதாம்பரி அழுதியா…?

    இல்ல மாமா…

    பொய் சொல்லாதே… கண்ல மையெல்லாம் கரைஞ்சிருக்கு பார்... சந்தோஷமா வழியனுப்பி வைம்மா… பத்து நாள்ல உன் வீட்டுக்காரன் வந்துடப் போறான்…

    அம்மா திலகம் கேட்டாள்.

    ஹரி… ப்ளைட் பம்பாய்க்கு எத்தனை மணிக்குப் போய்ச் சேரும்…?

    ஒன்பது மணிக்குள்ளே போயிடும்…

    பம்பாய் போய்ச் சேர்ந்து ஓட்டல்ல ரூம் எடுத்ததும் வீட்டுக்கு ஃபோன் பண்ணு….

    இதையெல்லாம் நீ சொல்லவே வேண்டாம்மா… உன் மருமக நேத்து ராத்திரியிலிருந்தே அதைச் சொல்லிச் சொல்லி என்னோட மூளையை ரணமாக்கி வெச்சிருக்கா…

    சிரித்தார்கள்.

    ஹரிஹரன் தன் அப்பா, அம்மா கால்களில் விழுந்து வணங்கிவிட்டு, போர்டிகோவில் நின்றிருந்த டாடா சியாராவை நோக்கிப் போனான்.

    ராத்திரி மணி பத்தரை.

    ஹாலில் எல்லாரும் ஹரிஹரனின் பம்பாய் டெலிஃபோன் காலுக்காகக் காத்திருந்தார்கள். மாசிலாமணி பொருமினார்.

    ஃப்ளைட் ஒன்பது மணிக்கே மும்பை போய்ச் சேர்ந்திருக்கும். இப்போ மணி பத்தரை. இவன் ஏன் ஃபோன் பண்ணலை…?"

    ஃப்ளைட் லேட்டா போயிருந்தா…?– இது திலகம்.

    மெட்ராஸ் ஏர்போர்ட்டுக்கு ஃபோன் பண்ணிக் கேட்கலாமா?– இது ரமணி.

    மொதல்ல அதைப் பண்ணு ரமணி…. கீதாம்பரி தவிப்பாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே…

    டீபாயில் உட்கார்ந்திருந்த டெலிஃபோன் முணுமுணுத்துக் கூப்பிட்டது.

    இது அண்ணன்தான்…– ரமணி பாய்ந்து ரிஸீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

    ஹலோ….!

    ஹலோ…. கால் ஃப்ரம் பாம்பே… மிஸ்டர் ஹரிஹரனின் வீடுதானே…?

    ஆமாம்…

    ஒட்டல் சில்வர் ஸாண்ட் ரிசப்ஷனிலிருந்து பேசுகிறோம். நீங்கள் ஹரிஹரனுக்கு என்ன உறவாக வேண்டும்...?

    நான் அவருக்குத் தம்பி…. ஏன், என்ன விஷயம்…?

    மன்னிக்க வேண்டும்… ஒரு அதிர்ச்சியான செய்தி!

    என்ன….?

    எங்கள் ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்த உங்கள் பிரதர், அரை மணி நேரத்துக்கு முன்பு ஓட்டலுக்கு முன்புறம் இருந்த சாலையைக் கடக்க முயற்சி செய்த போது வேகமாய் வந்த ஒரு லாரி மோதி ஸ்பாட்டிலேயே மரணம்… உடல் ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போகப்பட்டுள்ளது…. நீங்கள் உடனே புறப்பட்டு வரமுடியுமா…?

    2

    ரமணியின் கையில் இருந்த டெலிஃபோன் ரிஸீவர் ஒர் உயிருள்ள ஐந்து மாதிரி நடுங்கியது.

    மனசுக்குள் பிரளயம் நடந்து கொண்டிருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அண்ணிக்கு விஷயம் தெரிந்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில் உதட்டில் புன்னைகையை ஓட்டவைத்துக் கொண்டான். டெலிபோனில் தொடர்ந்து பேசினான்.

    தகவல் கொடுத்ததற்கு நன்றி….

    எப்போது வருகிறீர்கள்…?

    உடனே….

    தாமதம் செய்துவிடாதீர்கள். அடுத்த விமானம் பிடித்துப் புறப்பட்டு வாருங்கள்…

    சரி… சரி…

    ரமணி ரிஸீவரை வைத்தான். மாசிலாமணி கேட்டார்.

    ஃபோன் மும்பையில் இருந்துதானே…?"

    ஆ…. ஆமா…

    ஹரி பேசலை போலிருக்கே...?

    இ... இல்ல….

    பின்னே பேசினது யாரு…?

    பாம்பே சில்வர் ஸாண்ட் ஒட்டலிலிருந்து பேசறாங்க. அண்ணன் ஹரி அங்கேதான் தங்கியிருக்காராம், ஒரு மணி நேரமா வீட்டுக்கு. ஃபோன் பேச ட்ரை பண்ணினாராம். லைன் கிடைக்கலையாம், அதுக்குள்ளே யாரோ ஒரு ஃப்ரெண்ட் வந்ததனால அவர்கூட வெளியே புறப்பட்டுப் போயிட்டாராம். போகும்போது ஓட்டல் ரிசப்ஷன்ல நம்ம வீட்டு ஃபோன் நம்பர் கொடுத்து லைன் கிடைச்சதும் அவர் வந்து சேர்ந்துட்டதா தகவல் கொடுக்கச் சொன்னாராம்… அதுக்குத்தான். ஃபோன் பண்ணியிருந்தாங்க…

    கீதாம்பரி உஷ்ணமாய்ப் பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டுப் பொருமினாள்.

    அவருக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டா போதும். வீட்ல இருக்கிற எல்லாரையும் மறந்துடுவார் லைன் கிடைக்கலைன்னா என்ன, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி ஃபோன் செய்யக் கூடாதா…?

    ஹரி மறுபடியும் ஃபோன் பண்றதா சொல்லியிருக்கானாமா…?

    என்று திலகம் கேட்க, ரமணியின் தொண்டைக்குள்யே ஹரிஹரனின் மரணச்செய்தி ஒரு கசப்பு மருந்து மாதிரி சிக்கியிருக்க – பேச முடியாமல் திணறினான்.

    என்னடா பேச்சையே காணோம்…?

    வந்து…. வெளியே போயிருக்கிற அண்ணன் திரும்பி வர்றதுக்கு லேட் நைட் ஆயிடுமாம்… நளைக்குக் காலையில எட்டு மணிக்கு ஃபோன் பண்றதா சொன்னாராம்.

    பார்த்தீங்களா அத்தே உங்க புள்ளையை…?

    கோபப்படாதேம்மா… ஹரி பத்திரமா பம்பாய் பேய்ச் சேர்ந்த தகவல் நமக்குக் கிடைச்சாச்சு… இப்போதைக்கு இந்த சந்தோஷம் போதும் நாளைக்குக் காலையில அவன். ஃபோன் பண்ணிப் பேசும்போது ஆக்ரோஷமா ஒரு சண்டை போடு…

    நாளைக்கு உங்க மகன் ஃபோன் பண்ணினா நான் பேசப்போறதில்லை. நீங்களே பேசுங்க…- சொன்ன கீதாம்பரி இடுப்பைப் பிடித்துக் கொண்டு மெள்ள எழுந்தாள். அவருக்கு என்னிக்குமே பிஸினஸ்தான் பெரிசு… ஊர்ல இருக்கும்போதே பொண்டாட்டிகிட்டே ரெண்டு வார்த்தை பேசறதுக்காக டைரியில் நேரத்தை நோட் பண்ணிக்குவார், இப்போ வெளிநாட்டுப் பயணம். ஊர் மண்ணை மிதிக்கிற வரைக்கும் பொண்டாட்டி ஞாபகம் வராதே!

    மாசிலாமணி குறுக்கிட்டார். மனசைப் போட்டுக் குழப்பிக்காதேம்மா… ஹரிக்குக் கொஞ்சம் ட்யூட்டி கான்ஷியஸ் அதிகம்…. யாராவது முக்கியமானவங்க வந்திருப்பாங்க அதான் வெளியே போயிட்டான். நாளைக்குக் காலையில ஃபோன் பண்ணும்போது சந்தோஷமா பேசும்மா... உன்மேல அவனுக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா…?

    அதான் இப்ப தெரிஞ்சு போச்சே மாமா! உங்க மகனை நீங்கதான் மெச்சிக்கணும் மாமா… நாளைக்குக் காலையில் அவர் ஃபோன் பண்ணினா நிச்சயமா நான் பேசமாட்டேன்… நாளைக்கு மட்டும் இல்லை… அவர் ப்ராங்க்ஃபர்ட்டுக்குப் போய் அங்கிருந்து ஃபோன் பண்ணினாக்கூட நான் பேசமாட்டேன்…

    திலகம் சிரித்தாள். "பார்க்கலாமா….? நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு டெலிஃபோன் மணி அடிச்சதும் வயித்துல புள்ளை இருக்கறதைக்கூட மறந்துட்டு ஓடிவந்து ரிஸீவரை எடுத்துப் பேசப்போறே!

    மாட்டேன் அத்தே.

    ஹரியோட குரல் கேட்காம உனக்குச் சாப்பாடு தண்ணி இறங்குமா என்ன…? போய்ப் படுத்துக்கோம்மா… நாளைக்குக் காலையில பேசிக்கலாம்…

    Enjoying the preview?
    Page 1 of 1