Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sooriyanai Thirudu and Aabathukku vayasu 20
Sooriyanai Thirudu and Aabathukku vayasu 20
Sooriyanai Thirudu and Aabathukku vayasu 20
Ebook271 pages1 hour

Sooriyanai Thirudu and Aabathukku vayasu 20

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sooriyanai Thirudu and Aabathukku vayasu 20

Read more from Rajeshkumar

Related to Sooriyanai Thirudu and Aabathukku vayasu 20

Related ebooks

Related categories

Reviews for Sooriyanai Thirudu and Aabathukku vayasu 20

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sooriyanai Thirudu and Aabathukku vayasu 20 - Rajeshkumar

    5

    1

    கௌதமன், அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் தன்னுடைய க்ளாஸிக் கண்டேஸாவை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். கதவை லாக் செய்து கொண்டு கொஞ்சம் தொலைவில் ‘பார்’ என்று நியானில் மின்னிய கண்ணாடி ப்ளாக்கை நோக்கி நடந்தான். காலையிலிருந்து பெய்த மழை காற்றுக்கு ஏராளமான குளிரைக் கொடுத்திருக்க அது ஊசியாய் வீசியது. கௌதமன் தன் கோட் பைக்குள் இரண்டு கைகளையும் நுழைத்துக்கொண்டு மெதுவாய் நடந்து பார்-ன் வாசற்படிகளின் சலவைக்கல் பரப்பில் ஏறினான்.

    குட் ஈவினிங்...ஸார்... பேரர் கண்ணாடிக் கதவை திறந்து விட்டபடி பவ்யமாய் தலைகுனிந்தான். அவனை அலட்சியப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தான் கௌதமன். ‘பார்’ வெறிச்சோடிப் போயிருந்தது. பிடரி வழிய முடிவைத்திருந்த ஒரு இளைஞன் மட்டும் தன் பெண் ஸ்நேகிதியின் கையிலிருந்த காலியான டம்பளரில் பீரை ஊற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

    ஒன் மோர் க்ளாஸ் ப்ளீஸ்... எனக்காக...

    போதும். போதும்

    நோ, நோ...

    ஏற்கெனவே போதையில் இருந்த அவன், ‘நான் எந்த விதமான கெட்ட காரியத்துக்கும் தயார்’ என்று கண்களில் போர்டு எழுதி மாட்டியிருந்தான்.

    கௌதமன் அறையின் கார்னரில் இருந்த பதினோராம் எண் மேஜைக்கு போய் உட்கார்ந்தான். ப்ளேவர் ஏ.ஸி நறுமணமாய் இருந்தது. அறையின் ஃபால்ஸ் ரூஃப்பில் ஒளிந்திருந்த ம்யூசிக் சேனலில் ட்ரம்ஸ் ஒத்தையடியாய் ஒலித்துக்கொண்டிருக்க, நடுநடுவே சாக்ஸபோன் ஊளையிட்டது.

    கௌதமன் சிகரெட் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை உருவி உதட்டில் பொருத்திய விநாடி- புதிதாய்க் கல்யாணமான கிராமத்துப் பெண்ணை போல் - அந்த பேரர் பவ்யமாய் வந்து நின்றான்."

    ஒன் லார்ஜ் என்றான் கௌதமன்.

    ஸ்காட்ச்?

    ம்...

    அவன் நகர்ந்தான், லைட்டரைத் தட்டிவிட்டு அது உமிழ்ந்த சுடரில் - சிகரெட்டின் தலையை நனைத்து - சிவப்பாக்கிக் கொண்டு முதல் புகையை விட்டான். சிகரெட் பாதி கரைந்திருந்த போது - ஸ்காட்ச் வந்தது.

    கண்ணாடி ட்மளர்க்கு அடியில் பொன்னிறமாய் ஸ்காட்ச் அசைந்தது.

    ஸார், சோடா.

    ம்

    பேரர் ஸ்காட்ச்சுக்கும் சோடாவுக்கும் கல்யாணத்தை செய்து வைத்து விட்டு ஒதுங்க - இடது கையால் டம்ளரை எடுத்துக் கொண்டு, ஒரு வாய் சப்ப அதன் கசப்பை கண்களை மூடி தொண்டைக்குள் இறக்கினான். ரத்த நாளங்களிலும், நரம்புகளிலும் நெருப்பு பரவியது.

    ஸ்காட்ச் பாதி டம்ளராக குறைந்திருந்த போது பேரர் வந்து பக்கத்தில் நின்றான். ஸார், எனி சைட்டிஷ்?

    ஏதாவது சிக்கன் அயிட்டம் கொண்டா?

    லாலி பப் சிக்கன் ஸார்.

    ம்...

    நகர முயன்ற வெயிட்டரை தன் குரலால் நிறுத்தினான்.

    பேரர்...

    ஸார்...

    கோட்ல, ஜாம் பட்டுடுச்சு. வாஷ் பண்ணனும், பாத்ரூம் எந்த சைட்ல இருக்கு?

    பின்னாடி ஸார்...

    என்னோட ப்ரீப்கேஸ் இங்கேயே இருக்கட்டும். நான் போய் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்.

    போய்ட்டு வாங்க ஸார். நான் பாத்துக்கிறேன். அதுல கேஷ் ஒண்ணும் இல்லையே?

    இல்ல...

    அப்ப... போய்ட்டு வாங்க சார்.

    கெளதம் எழுந்து - பாரின் பின்பக்கம் இருந்த டாய்லெட்டை நோக்கிப் போனான். ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த டாய்லெட் ஏரியா நிசப்தமாய் இருக்க, கெளதமன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு - டாய்லெட்டைக் கடந்து - சிறிது தூரத்தில் - பக்கவாட்டில் தெரிந்த இருட்டான் படிகளில் தாவி ஏறினான்.

    ஹோட்டல் அறைகளுக்கு செல்வதற்காக மாடிப்படி வழி அது.

    வேகமாய் தாவித் தாவி ஏறினான்.

    இரண்டாவது மாடி வந்ததும் நின்றான்.

    இரண்டு பக்கமும் வரிசையாய் அறைகள், எண்களைப் பார்த்துக்

    கொண்டே வேகமாய் நடந்தவன் 222 எண்ணிட்ட அறை பார்வைக்குத் தட்டுப்பட்டதும் நின்றான்.

    மாடி வராந்தாவில் ‘ஹோ’ வென்ற நிசப்தம்.

    கதவின் இடது பக்க சுவரில் இருந்த காலிங்பெல் பொத்தானை அழுத்தினாள். உள்ளே அது ‘டிடிங் டிடிங் ‘ என்றது.

    சில விநாடிகளுக்குப் பின் - கதவு திறக்க - திறந்த கதவுக்குப் பின்னால் அந்த இளம் பெண் நின்றிருந்தாள். மலர்ந்தாள்.

    ஓ...! கெளதம், நீங்களா? வாங்க வாங்க.

    கெளதம் புன்னகைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். ஃ ப்ளைட் ஜர்னி எப்படியிருந்தது மிருதுளா?

    ஃபைன்...

    நான் ஏர்ப்போட்டுக்கு வரலாம்னுதான் இருந்தேன். மத்தியான சாப்பாடு பலம்... சாப்பிட்டு சாய்ஞ்சேன். தூங்கிட்டேன். என்னோட ஒய்ஃப்பும் எழுப்ப மறந்துட்டா.

    ஸோ வாட்.

    கதவை சாத்தி தாழிட்டாள்.

    உட்காருங்க.

    கெளதம் கட்டிலில் உட்கார்ந்து கொண்டே கேட்டான், பம்பாய் டயமண்ட் மார்க்கெட் எப்படி இருக்கு?

    அமோகம்.

    சூரஜ் டயமண்ட் கொண்டு வந்திருக்கியா?

    ம்.

    காட்டு பார்க்கலாம்.

    ஏன் இன்னிக்கு... இவ்வளவு அவசரப்படறீங்க.

    ஒரு பார்ட்டிக்கு விலை பேசிட்டேன். பிசினஸை முடிக்க வேண்டாமா?

    பார்ட்டி யாரு?

    கன்யாலால் முந்த்டா.

    ரேட்?

    நீ டெலிபோன்ல சொன்ன அதே ரேட்.

    அம்பது லட்சம்?

    ஆமா.

    டயமண்ட்டை பார்க்காமலேயே கன்யாலால் எப்படி அந்த ரேட்டுக்கு ஒத்துக்கிட்டார்?

    அந்த சூரஜ் டயமண்டைப் பத்தி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்காராம். ‘பார்கெய்ன்’ பண்ணாம சொன்ன ரேட்டுக்கு ஒத்துக்கிட்டார். அந்த நிமிஷத்திலருந்தே எனக்கு சூரஜ் டயமண்ட்டை பார்க்கணும்ங்கிற ஆர்வம் வந்துடுச்சு.

    மிருதுளா சிரித்தாள். உண்மையிலேயே சூரஜ் ஒரு அற்புதமான வைரம்தான். நேபாள பிரின்ஸ் ஒருத்தர் வெச்சிருந்தாராம். பல கை மாறி இப்ப அது என்னோட கைக்கு வந்திருக்கு.

    காட்டு பார்க்கலாம்.

    மிருதுளா கட்டிலுக்கு கீழே இருந்த தன் சூட்கேஸை இழுத்து டீபாயின் மேல் வைத்துக் கொண்டு திறந்தாள். நீல நிற வெல்வெட் பாக்ஸை எடுத்து பிரித்தாள்.

    கௌதமன்! உங்க வலது உள்ளங்கையை நீட்டுங்க.

    நீட்டினான்.

    பாக்ஸை கவிழ்த்தாள் மிருதுளா.

    கௌதமனின் உள்ளங்கையில் மொச்சைக் கொட்டை அளவுக்கு தகதகவென்று மின்னிக் கொண்டு ஒரு வைரம் உருண்டது.

    அறை முழுக்க - வெளிச்சச் சிதறல்கள்.

    கௌதமன் பிரமித்தான்.

    அற்புதம்.

    கரண்ட் பெயிலியராயிட்டா, வீட்ல கவலையே பட வேண்டாம். இந்த வைரத்தை எடுத்து டேபிள் மேல வெச்சுட்டா போதும். ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் கிடைக்கும்.

    ரியலி?

    ம்

    மிருதுளா?

    என்ன...கெளதம்?

    இந்த சூரஜ் வைரத்தை நானே விலைக்கு வாங்கிக்கலாம்னு இருக்கேன்.

    என்ன விளையாடறீங்களா? விலை அம்பது லட்சமாக்கும்.

    தந்துட்டா போகுது.

    ஆர்... யூ... ஜோக்கிங்?

    ஜோக்கில்லை நிஜம்தான். பிஸினஸை இப்பவே முடிச்சுக்கலாம். சொன்ன கௌதமன் கோட்பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து அந்த சின்னிஞ்சிறு பிஸ்டலை எடுத்தான்.

    மிருதுளா விழிகளை விரித்து திகைத்துக் கொண்டிருக்கும் போதே சரியாய் மார்பைப் பார்த்துச் சுட்டான். சைலன்ஸர் பிஸ்டல் கமுக்கமாய் தோட்டாக்களை அனுப்ப, மிருதுளா ரத்தப் பெருக்கோடு சோபாவுக்கு பக்கத்தில் விழுந்து மடங்கினாள். கைக்கு கர்ச்சீப்பை இறுக்கமாய் சுற்றிக் கொண்ட - கௌதமன் அறைக்கதவை திறந்து, கொண்டு வெளியே எட்டிப் பார்த்தான்.

    வராந்தாவில் யாருமில்லை.

    கதவைச் சாத்திவிட்டு - வராந்தாவில் எட்டி நடைபோட்டு மாடிப்படிகளுக்கு வந்து வேகமாய் இறங்கி - டாய்லெட் ஏரியாவைக் கடந்து - ‘பார்’க்குள் நுழைந்தான்.

    பாரில் இப்போது புதிதாய் நான்கைந்து பேர் உட்கார்ந்து பீர் பாட்டில்களைக் கையில் ஏந்தியிருந்தார்கள்.

    கௌதமன் தன்னுடைய மேஜைக்கு வந்தான். டம்ளரில் மிச்சம் வைத்திருந்த ஸ்காட்ச் அப்படியே இருந்தது.

    கையிலிருந்த வாட்சைப் பார்த்தான்.

    ‘சரியாய் ஏழு நிமிஷிங்களுக்குள் காரியம் முடிந்திருந்தது. ஒரு பத்து நிமிஷம் பாருக்குள் இருந்து விட்டு எந்த டென்ஷனையும்

    காட்டிக் கொள்ளாமல் புறப்பட்டுவிட வேண்டியதுதான்.’

    மிச்சம் இருந்த ஸ்காட்சை விழுங்கிவிட்டு நிமிர்ந்தபோது பேரர் எதிரில் நின்றிருந்தான். கையில் வைத்திருந்த பிளேட்டில் சில்லி சிக்கன்.

    வாஷ் பண்ணீட்டீங்களா ஸார்?

    ம்.

    சிக்கன் அயிட்டதில் சில்லி சிக்கன் ரெடியாயிருந்தது ஸார். கொண்டு வந்துட்டேன் ஸார்.

    மேஜையின் மேல் பிளேட்டை வைத்தான்.

    பேரர்

    ஸார்.

    ‘ஒன் மோர் லார்ஜ்."

    அவன் தலையாட்டிவிட்டு நகர்ந்தான். கௌதமன் தன்

    இடது கையை கோட் பாக்கெட்டுக்குள் நுழைந்து வைரத்தை நிரடினான்.

    ஐம்பது லட்சம்.

    சந்தோஷத்தில் இருதயம் எகிறியது. சில்லி சிக்கனில் தொடை பாகத்தை எடுத்து பற்களுக்கு கொடுத்து, காரமான அதன் சதையைப் பிய்த்து மென்ற விநாடி - பின்பக்கம் அந்தக் குரல் கேட்டது.

    எக்ஸ்க்யூஸ் மீ.

    திரும்பினான்.

    உயரமான நடுத்தர வயது நபர் ஒருவர் வெள்ளை சர்ட்டில் நின்றிருந்தார்.

    எஸ்.

    அயாம் போலீஸ் விஜிலன்ஸ் ஆபீஸர்... சொன்னவர் தன் கையில் வைத்திருந்த - உத்யோக அட்டையை அவனுடைய முகத்துக்கு நேரே நீட்டினார்

    2

    போலீஸ் உத்யோக அட்டையைப் பார்த்ததும் அதற்குள் முகம், கழுத்து, பிடரி என்று அவசர அவசரமாய் வியர்த்தான் கௌதமன்.

    வா... வாட்... டூ யூ... வாண்ட்... ஸார்...

    உங்க பேரென்ன?

    கௌதமன்

    இந்த பாருக்கு அடிக்கடி வருவீங்களா?

    நோ, நோ, அக்கேஷனல்

    பெர்மிட் வெச்சிருக்கீங்களா...?

    ம்...

    ஷோ... மீ...

    கோட்டின் இடது பக்க பாக்கெட்டில் வைத்திருந்த பெர்மிட் கார்டை எடுத்துக் காட்டினான். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு - அவனிடமே கொடுத்தார். ஸாரி ஃபார் த ட்ரபிள்... ப்ளீஸ் கேரி ஆன்...

    கௌதமனுக்கு மனதில் தைரியம் ஊறியது. கேட்டான். ஸார்... எதுக்காக இந்த என்கொய்ரின்னு தெரிஞ்சுக்கலாமா...?

    ஆபீஸர் புன்னகைத்தார். இந்த ‘பார்’க்குள்ளே சில பேர் போதை மருந்துகளைக் கொண்டு வந்து யூஸ் பண்றதா எங்களுக்குத் தகவல் வந்தது. அதான் இந்த செக்கிங். வாரத்துல ரெண்டு தடவை இது மாதிரியான செக்கிங் வருவோம்... சொல்லிக் கொண்டே பக்கத்து மேஜையிலிருந்த இளைஞர்களை நோக்கிப் போனார்.

    கௌதமன் அவசர அவசரமாய் சிக்கனை விழுங்கினான். பேரர் அதற்குள் கொண்டு வந்திருந்த - செக்கண்ட் லார்ஜையும் மடமடவென்று உள்ளே தள்ளி - டம்ளரை கீழே வைத்தான். பேரரைக் கையசைத்துக் கூப்பிட்டுக் பில் என்றான்.

    பில் வந்தது.

    அமௌண்ட் எவ்வளவு என்று

    Enjoying the preview?
    Page 1 of 1