Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

December 31 1999
December 31 1999
December 31 1999
Ebook160 pages1 hour

December 31 1999

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
December 31 1999

Read more from Rajeshkumar

Related to December 31 1999

Related ebooks

Related categories

Reviews for December 31 1999

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    December 31 1999 - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பதாம் வருஷம்.

    டிசம்பர் முதல் தேதி.

    இரவு மணி 10.31.

    சென்னை மவுண்ட் ரோட்டின் அகலத்தில் ஜனங்கள் கொத்து கொத்தாய் சந்தோஷத்தை சுமந்தபடி நகர்ந்து கொண்டிருந்தார்கள். எல்லோருடைய முகங்களிலும் ரோஜா நிற லேசர் கதிரைப் போன்ற பிரகாசம். நடைகளில் உற்சாகத் துள்ளல்கள்.

    மின்சாரத்தில் ஓடும் அதிவேக செவ்வக, சதுரக் கார்களில் முடியை ஒட்ட வெட்டிக் கொண்ட கம்ப்யூட்டர் காலேஜ் மாணவ மாணவிகள்

    1988-ம் வருஷத்து மாணவ மாணவிகளைப் போல் ‘ஹே... ஹேய்... ஹே... ஹேய்' என்று கத்திக் கொண்டு போனார்கள். இவர்களின் கார் வேகங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் எலக்ட்ரானிக் சிக்னல்கள் திணற சிக்னல்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ரோட்டோர ரோபாட் கான்ஸ்டபிள்கள் அதைவிட திணறினார்கள். சாலையின் இரு பக்கமும் தெரிந்த வெளிச்சமான ஐஸ்க்ரீம் பார்லர்களில் ஆணும் பெண்ணுமாய் நின்று ஐஸ்க்ரீம்களை சூப்பி அவைகளை சாப்பிட முடியாத நேரத்தில் உற்சாகமான சந்தோஷத்தில் ஒருவர் மீது ஒருவர் எறிந்து கொண்டார்கள். சந்தோஷத்தின் சதவீதம் இன்னும் கொஞ்சம் அதிகமானபோது ஒருத்தரையொருத்தர் தழுவியபடி இறுக்கமாய் கண்மூடி உதடு தேடி முத்தமிட்டுக் கொண்டார்கள். சில ஆண்கள் அது பொது இடம் என்றும் பாராமல் எல்லை மீற முயன்ற போது பெண்கள் 1959-ம் வருஷத்திய நம்ம தமிழ் பண்பாடு வெட்கத்தோடு ரோட்டில் நின்று ஜனங்களை கண்காணித்துக் கொண்டிருந்த ரோபாட் இன்ஸ்பெக்டர்களைக் காட்டினார்கள். ஒவ்வொரு எலக்ட்ரிக் போஸ்டிலும் அதி நவீன டெலிவிஷன்கள் பொருத்தப்பட்டு அதில் கலர் கலராய் ஆண்களும் பெண்களும் குதித்துக் கொண்டிருந்தார்கள். கம்ப்யூட்டர் நிமிஷத்துக்கு நிமிஷம் சானல்களை மாற்றிக் கொண்டிருந்தது. பிளாட் பாரங்களில் அடைத்தபடி நிற்காதீர்கள். நகர்ந்து கொண்டே இருங்கள் ரோபாட் கான்ஸ்டபிள் எந்திரக் குரலில் சொல்லியபடி பச்சை நிறக் கண்களை காட்டியவாறு நின்றிருக்க ஜனங்கள் அதன் ஆணைக்கு கட்டுப்பட்டு நகர்ந்தார்கள். அப்படி கட்டுப்பட்டு நடக்காவிட்டால் ரோபாட்டின் கையில் இருக்கும் லேசரிலிருந்து ஊதா நிற கதிர் பாய்ந்து நகராத நபரின் முதுகைச் சுள்ளென்று சுடும் என்பது எல்லோர்க்கும் தெரியும்.

    HOTEL என்று நியானில் மின்னிய ஒரு முப்பது மாடிக் கட்டிடத்தின் உச்சியில் நின்று கொண்டு கீழே ஊர்ந்து போகும் ஜனக்கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த குறிஞ்சி எரிச்சலோடு வாய்விட்டு முனகினாள்.

    முட்டாள்தனமான ஜனங்கள்...

    கண்ணாடி முன் நின்று ஏதோ ஒரு லோஷனை தன் வழுக்கைத் தலைக்குப் போட்டு தேய்த்துக் கொண்டிருந்த அவளுடைய அப்பா ஜெகதீஷ், பொருத்தப்பட்ட வெள்ளி பல்செட்டில் ப்ளாஷ் அடித்த மாதிரி பளீரென்று சிரித்தார்.

    ஜனங்களுக்கு ஒரு சந்தோஷந்தான்.

    எதுக்காக இப்போ சந்தோஷப்படணும்...?

    அவர் லோஷனை தேய்த்துக் கொண்டே குறிஞ்சியின் அருகே வந்தார்.

    என்ன குறிஞ்சி இப்படி கேக்கிறே...? நம்ம தேசம் விண்வெளி ஆராய்ச்சியில் எப்பேர்ப்பட்ட சாதனையைப் பண்ணியிருக்கு தெரியுமா...?

    தெரியும்...

    என்ன தெரியும்...?

    'சந்திர கிருஷ் என்கிற விண்வெளி வீரர் செவ்வாய் கிரகத்துல இறங்கி ரெண்டு நாள் இருந்துட்டு பத்திரமா பூமி திரும்பியிருக்கார்...

    இது சாதனை இல்லையா...?

    சாதனைதான்... ஒத்துக்கிறேன்... ஆனா தேவையில்லாத சாதனை. நம்ம நாட்டுக்கு இவ்வளவு காஸ்ட்லி சாதனை தேவைதானா...? இன்னும் ஒரு மாசத்துல ரெண்டாயிரமாவது ஆண்டைத் தொடப் போறோம். ஆனா நாட்ல இன்னும் வறுமையில் வாடற ஜனங்க இருக்காங்க... இந்த மெட்ராஸையே எடுத்துக் கோங்களேன்...! பாதி ஜனத்தொகை சேரிகள்லதான் இருக்கு. செவ்வாய்க்கு போய் அங்கேயிருக்கிற மண்ணையும் கல்லையும் எடுத்துட்டு வர்றதுக்காக நம்ம இந்திய அரசாங்கம் எவ்வளவு கோடி ரூபாய் செலவு பண்ணியிருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமாப்பா...?

    சுமார் ஆயிரம் கோடி ரூபாய்.

    இது பத்திரிகையில வர்ற போலியான மதிப்பு... உண்மையிலேயே செலவு பண்ணின பணம் ரெண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேலே... அதுல அறுபது பர்சென்ட் பணம் வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கினது...

    அரசாங்கம் கடன் வாங்கிச்சோ... இல்லே சொந்தப் பணமோ அதைப் பத்தியெல்லாம் யார்க்கும் கவலை கிடையாது. முப்பது வருஷங்களுக்கு முன்னாடி அமெரிக்கா நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கை சந்திரனில் இறக்கின மாதிரி இந்த வருஷத்துல இந்தியா 'சந்திர கிருஷ்’ஷை செவ்வாய்ல இறக்கியிருக்கு... இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை இல்லையா...?

    எனக்கென்னமோ இதெல்லாம் பைத்தியக்காரத்தனமா படுது. நம்ம இந்தியாவும் கொஞ்சம் கொஞ்சமா ஒரு வல்லரசா மாறிட்டு வருதோன்னு எனக்கொரு சந்தேகம்.

    அப்படி வல்லரசா மார்றதும் பெருமைதான் ஜெகதீஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேஜையின் மேலிருந்த கடல்நிற டெலிபோன் கிணு கிணுத்தது.

    ஜெகதீஷ் ரிஸீவரை எடுத்தார்.

    எஸ். ஜெகதீஷ் ஹியர்...

    முகர்ஜி பயாலாஜிகல் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டிலிருந்து பயாலாஜிஸ்ட் முகர்ஜியின் அஸிஸ் டெண்ட் தீபக் பேசறேன்...

    உங்க போனுக்காகத்தான் காத்திட்டிருக்கோம்.

    முகர்ஜி நாளைக்கு காலையில ஏழு மணிக்கு உங்களுக்கு அப்பாயின்ட்மெண்ட் குடுத்திருக்கார். நீங்கள் மொத்தம் எத்தனைபேர்...?

    ரெண்டே பேர்தான். நானும் என் மகளும்...

    கூட வேறு யாரையும் கூட்டிட்டு வரமாட்டீங்களே...?

    ஒரேயொரு வாயில்லா ஜீவன் மட்டும் எங்க கூட வரும்.

    என்னது நாயா...?

    இல்லை... பூனை...

    நோ... ப்ராப்ளம்... எடுத்து வரலாம். உங்க அனுமதி அட்டை எண் இருபத்தி மூணு...

    தாங்க்யூ...

    இன்னொரு விஷயம்...

    எஸ்... ப்ளீஸ்...

    முகர்ஜியோட பேச உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரம் சரியாய் முப்பது நிமிடங்கள். ஏழுமணியிலிருந்து ஏழரை மணிக்குள் உங்கள் பேச்சை...

    முடித்துக் கொள்வோம்...

    சிரிப்போடு ரிஸீவரை வைத்தார் ஜெகதீஷ்.

    குறிஞ்சி ஆவலாய் நெருங்கி வந்து அப்பாவின் தோளைத் தொட்டாள்.

    என்னப்பா... முகர்ஜியோட அப்பாயிண்ட்மெண்ட் நாளைக்கு எத்தனை மணிக்கு...?

    ஏழு டூ ஏழரை.

    "அருமையான பரிஸ்க்கான காலை நேரம். எப்படியோ முகர்ஜியைப் பார்த்து பேச அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டோம். இது முதல் கட்ட வெற்றி. என்னோட கோரிக்கையை

    Enjoying the preview?
    Page 1 of 1