Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek, Vishnu Vetri
Vivek, Vishnu Vetri
Vivek, Vishnu Vetri
Ebook138 pages45 minutes

Vivek, Vishnu Vetri

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vivek, Vishnu Vetri

Read more from Rajeshkumar

Related to Vivek, Vishnu Vetri

Related ebooks

Related categories

Reviews for Vivek, Vishnu Vetri

Rating: 2.6666666666666665 out of 5 stars
2.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek, Vishnu Vetri - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஜிம்பாப்வேவை இந்தியா கஷ்டப்பட்டு ஜெயித்துக் கொண்டிருக்க - விவேக் டீ.வி.யில் அந்த பகல் இரவு ஆட்டத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்த விநாடி டெலிபோன் கூப்பிட்டது. ஹர்பஜன்சிங் வீசிய பந்தில் ஆன்டி ஃப்ளவர் க்ளீன் போல்டாகி - மட்டையை கக்கத்தில் அதக்கி - க்ளவுஸை கழற்றியபடி பெவிலியனை நோக்கிப் போக விவேக் ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ

    மிஸ்டர் விவேக்...? நடுத்தர வயதுள்ள ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

    எஸ்.

    நான் யார்ன்னு உங்களால தெரிஞ்சுக்க முடியுதா மிஸ்டர் விவேக்…?

    ஒரு இருபது விநாடி எனக்கு அவகாசம் கொடுக்க முடியுமா...?

    எடுத்துக்குங்க...!

    விவேக், டீ.வி.யில் ஐஸ்வர்யா ராய் பெப்ஸி குடிப்பதைப் பார்த்துக் கொண்டே யோசித்தான்.

    சரியாய் 19 - வது விநாடி ரிஸீவரில் குரல் கொடுத்தான்.

    கண்டுபிடிச்சுட்டேன்...

    சொல்லுங்க... பார்க்கலாம்.

    வார்டன் கிறிஸ்டிதானே…?

    விவேக்! யூ... ஆர்… கிரேட்…! ஒரே ஒரு தடவைதான் ஹாஸ்ட்டல் டே ஃபங்க்ஷன்ல என்னை மீட் பண்ணி பேசியிருக்கீங்க... அதுவும் பத்து நிமிஷம்தான் பேசியிருப்போம். எப்படி என் குரலை வெச்சே கண்டுபிடிச்சீங்க...?

    உங்க தமிழ் உச்சரிப்புத்தான்! என்னோட பேரை நீங்க சொல்லும்போது கொடுக்கிற அழுத்தம் மத்தவங்க சொல்றதிலிருந்து நிறையவே வேறுபடுது...! அதை ஹாஸ்ட்டல் டே ஃபங்க்ஷன் அன்னிக்கே அப்ஸர்வ் பண்ணிட்டேன். ஸோ... இன்னிக்கும் இதே தமிழ் உச்சரிப்புதான் காட்டிக் கொடுத்தது. பை... த... பை... இந்த ராத்திரி வேளையில் போன் பண்ணியிருக்கீங்க... எனி அர்ஜென்ஸி வார்டன்...?

    எஸ்...!

    சொல்லுங்க...

    ஐ. நீட் யுவர் ஹெல்ப்...! நீங்க உடனே புறப்பட்டு எங்க காலேஜ் ஹாஸ்ட்டலுக்கு வரமுடியுமா...?

    உடனே…?

    எஸ்...

    விவேக் தன் மணிக்கட்டில் இருந்த ரேடியம் வாட்ச்சைப் பார்த்தான். மணி பத்தே கால்.

    விஷயம் என்னான்னு சொல்ல முடியுமா?

    ஒரு பர்சனல் ப்ராப்ளம்...

    சொல்லுங்க வார்டன்...

    டெலிபோனிக் கான்வர்சேஷன் எதுவும் வேண்டாம். நீங்க நேர்ல வந்துட்டா பரவாயில்லை... ப்ளீஸ்...! இப்போது வார்டன் கிறிஸ்டியின் குரலில் பயமும் பதட்டமும் தெரிந்தது.

    இன்னும் ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே உங்க ஹாஸ்ட்டல்ல இருப்பேன் வார்டன்...

    தேங்க்யூ...!

    விவேக் டெலிபோன் ரிஸீவரை அதனிடத்துக்கு கொடுத்துவிட்டு எழுந்தான். இந்தியா ஜிம்பாப்வேயை ஜெயித்துவிட்ட சந்தோஷத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அதிர்ந்து கொண்டிருந்தது. மைக்கில் ஒரு வழுக்கைத் தலையும், முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்தியா ஏதோ உலகக் கோப்பையையே ஜெயித்துவிட்ட மாதிரி மாறிமாறி பேசி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    விவேக் வேறு சர்ட் பேண்ட்டுக்கு மாறினான். ரூபலா படுக்கையறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கேட்டாள்.

    மன்னர் இந்த இரவு வேளையில் எங்கே புறப்பட்டு விட்டார்...?

    ஒரு அவசரப் பணி தேவி.

    இது முன்னிரவு நேரம்... இரண்டாம் சாமம் துவங்கும் நேரம். இந்த வேளையில் அப்படியென்ன பணி...?

    போய்ப் பார்த்தால்தான் தெரியும்...

    தொலைபேசியில் அழைத்தது யார்...?

    வார்டன் கிறிஸ்டி…

    என்ன செய்தி...?

    தொலைபேசியில் எதுவும் சொல்லவில்லை. நேரில் வரும்படியாய் அழைப்பு... போய்விட்டு வரட்டுமா தேவி...?

    ………...

    என்ன தேவி... பதிலையே காணோம்...

    தேவிக்கு கோபம்...

    போய்விட்டு வந்து தேவியின் கோபத்தை ஒரு வழி பண்ணிவிடுகிறேன்...

    விவேக் கார் சாவியோடு வெளியே வந்தான். கான்வாஸ் படுதாவுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ‘மாருதி ஜென்’னுக்கு உயிர் கொடுத்து ரோட்டுக்கு கொண்டு வந்தான்.

    சென்னையின் பத்தரை மணி சாலைகள் காலியான கல்யாண மண்படங்களைப் போல் வெறிச்சோடி கிடக்க மாருதி ஜென் டாப் கியரில் பறந்தது.

    சரியாய் இருபது நிமிஷ பயணம். வேப்பேரிப் பகுதியின் கடைக் கோடியில் இருந்த ‘சேரிங் க்ராஸ் ஹாஸ்ட்டல்’ வந்தது. கேட்டில் இருந்த வாட்ச்மேன் கேட் கதவுகளை அகலமாய் திறந்து வைக்க, கார் உள்ளே போயிற்று. ஹாஸ்ட்டலின் எழுபது சதவிகித ஜன்னல்கள் சாத்திக் கிடக்க பாக்கி ஜன்னல்களில் ட்யூப்லைட் வெளிச்சம் ஒட்டியிருந்தது. ‘ஜீசஸ் ஈஸ் த ஒன்லி ஆன்ஸர்...!’ என்கிற குரோமியம் போர்டு வாசகம் ஃபோகஸ் லைட் வெளிச்சத்தில் பிரதானமாய் தெரிந்தது.

    ஹாஸ்ட்டலின் போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு விவேக் இறங்க - காபிக் கொட்டை நிற அங்கியில் ஐம்பது வயது வார்டன் கிறிஸ்டி போர்டிகோ படிகளில் நின்றிருப்பது தெரிந்தது. லேசாய் வியர்த்த முகம், பதட்ட உடம்பு.

    வாங்க. மிஸ்டர் விவேக்...!

    விவேக் போர்டிகோ படிகளில் ஏறினான். மதரின் குரலில் கனமான வருத்தம். ஸாரி மிஸ்டர் விவேக்... இந்த நேரத்துல உங்களை தொந்தரவு படுத்தறேன்...

    அதெல்லாம் ஒண்ணும் இல்லை வார்டன்...! உங்களுக்கு ஏதோ பிரச்னை இருக்கப்போய்த்தான் எனக்கு போன் பண்ணியிருக்கீங்க... சொல்லுங்க என்ன ப்ராப்ளம்...?

    ப்ளீஸ் கம்... டூ... மை ரூம்...

    விவேக் வார்டன் கிறிஸ்டியை பின் தொடர்ந்து அந்த அரையிருட்டான நீள வராந்தாவில் நடந்தான். இரண்டு நிமிஷ நடைக்குப் பின் அந்த அறைக்குள் நுழைந்தார்கள். நாற்காலியில் வெளுத்துப் போன முகத்தோடு உட்கார்ந்திருந்த ஒரு இளம்

    Enjoying the preview?
    Page 1 of 1