Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatru Urangum Neram...
Kaatru Urangum Neram...
Kaatru Urangum Neram...
Ebook160 pages1 hour

Kaatru Urangum Neram...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kaatru Urangum Neram...

Read more from Rajeshkumar

Related to Kaatru Urangum Neram...

Related ebooks

Related categories

Reviews for Kaatru Urangum Neram...

Rating: 4.5 out of 5 stars
4.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatru Urangum Neram... - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    இரவு மணி 11.30.

    இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்தின் மணிக் கட்டில் ஒளிர்ந்த சிடிஸன் டிஜிடல் வாட்ச் ரத்த நிற எண்களில் நேரத்தைக் காட்டி விட்டு விநாடிகளைத் தின்ன ஆரம்பித்தது. கான்ஸ்டபிள் கொண்டு வந்து வைத்த மூலைக்கடை நாயர் டீயை ஒரு வாய் உறிஞ்சி விட்டு டீயிலிருந்து அடிக்கிற நாற்றம் மண்ணெண்ணெய் நாற்றமா... இல்லை சீயக்காய் நாற்றமா என்பதைக் தீர்மானிக்கும் முன்பு மேஜையின் மேலிருந்த சாயம் போன அரசாங்க டெலிபோன் தன் தொண்டையைத் திறந்தது, அது ‘ர்ர்ர்ர்’ரிங்கிய விதம் விநோதமாயிருந்தது. ‘கர்ர்க்... கர்ர்க்...'

    டீ டம்ளரை நகர்த்தி வைத்து விட்டு ரிஸிவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தார் கோகுல்நாத்.

    ஹலோ...

    மறுமுனையில் ஒரு வயோதிகக் குரல் பதட்டமாய் கேட்டது:

    ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்...?

    எஸ்...

    இன்ஸ்பெக்டர் இருக்காரா...?

    ஹோல்டிங்...

    மிஸ்டர் இன்ஸ்பெக்டர்... ஐ யாம் புரபசர் நாத். பணிக்கர் கெஸ்ட் ஹவுஸிலிருந்து பேசறேன்...

    கோகுல் நாத் ஆச்சர்யமானார். குரலுக்கு ஒரு மரியாதையைக் கொண்டு வந்து கேட்டார்;

    சொல்லுங்க புரபசர் ஸார்...! எனி திங்க் இம்பார்ட்டெண்ட்...?

    நீ... நீ...நீங்க உடனடியா கெஸ்ட் ஹவுஸுக்கு வர முடியுமா இன்ஸ்பெக்டர்...? மேட்டர் ஈஸ் அர்ஜெண்ட்...

    என்ன விஷயம் ஸார்...? தெரிஞ்சா நான் சில முன்னேற்பாடுகளோடு வர வசதியா இருக்கும்... பூரா விவரத்தையும் சொல்ல வேண்டாம். ஜஸ்ட் ஒரு ஹிண்ட் கொடுங்க... தட் வில்... இனப்...

    கெஸ்ட் ஹவுஸ்ல இப்போ நான் மட்டுந்தான் இருக்கேன் இன்ஸ்பெக்டர்... என்னோட ரிசர்ச் ரூமுக்கு நேர் மேலே மாடி ரூம்ல யாரோ நடக்கற சத்தம் கேட்குது... மாடி ரூமுக்குப் போய்ப் பார்த்தேன்... அந்த ரூம்ல யாருமேயில்லை... பங்களாவோட முன் பக்கக் கதவையும், பின்பக்கக் கதவையும் ராத்திரி எட்டுமணிக்கே ‘லாக்' பண்ணிட்டேன்...

    எட்டுமணிக்கு மேலே உங்களைத் தேடி யாரும் வரலையா புரபசர்?

    யாரும் வரலை... வரவும் மாட்டாங்க...

    ஏன் அப்படிச் சொல்றீங்க...?"

    இது கொஞ்சம் ரிமோட் ஏரியா... ஈஞ்சம் பாக்சம் பீச் ரோட்ல லாஸ்ட் கட்... ஒரு சவுக்குத் தோப்புக்கு மத்தியில் இந்த கெஸ்ட் ஹவுஸ் இருக்கு... மெயின் ரோட்டிலிருந்து இடதுகைப் பக்கமா மண் ரோடொண்னு பிரியும்... அந்த ரோட்ல அரை கிலோமீட்டர் தூரம் உள்ளே வரணும்... என்னைப் பார்க்க வர்றவங்க மத்தியானமே வந்துட்டுப் போயிடுவாங்க... ராத்திரி நேரத்துல யாரும் வரமாட்டாங்க...

    இந்த நிமிஷம்... அந்த கெஸ்ட் ஹவுஸ்ல நீங்க மட்டுந்தான் இருக்கீங்களா புரபசர் ஸார்...?

    ஆமா...

    நீங்க இப்போ கீழ் ரூம்ல இருக்கீங்க... இல்லையா...?

    ஆமா இன்ஸ்பெக்டர்...

    ரூமை லாக் பண்ணிக்குங்க... நாங்க இப்போ அரைமணி நேரத்துல வந்துடறோம்... காலிங் பெல் சத்தம் கேட்டா கதவைத் திறங்க...

    உடனடியா வாங்க... இன்ஸ்பெக்டர்... சொல்லிவிட்டு புரபசர் நாத் ரிஸீவரை வைத்து விட- இந்தப்பக்கமும் ரிஸீவரைக் கவிழ்த்தார் கோகுல்நாத். உடம்பு பூராவும் தடவிக் கொண்ட பதட்டத்தோடு எழுந்தார்.

    அதே விநாடி-

    ஸ்டேஷன் வாசலில் யமஹா பைக்கின் ‘த்தட்... த்தட்...' சத்தம் கேட்டது. தலையை உயர்த்த- விவேக் யமஹாவின் சத்தத்தை நிறுத்திக் கொண்டே கீழே இறங்கினான். பைக்கை ஸ்டாண்ட் இட்டு- தலையிலிருந்த ஹெல்மெட்டைக் கைக்கு இறக்கிக் கொண்டே வாசற்படி ஏறினான். அணிந்திருந்த வெள்ளை நிற டீ சர்ட்டின் மார்புப் பகுதியில் ‘I AM YOUR FRIEND' என்று ரூபலா எம்ப்ராய்டர் செய்து கொடுத்த எழுத்துக்கள் சொல்லியது. தன்னிச்சையாய் முனகிக்கொண்டே உள்ளே வந்தான் விவேக்.

    'ஸ்காட்லாந்து யார்ட் ஸ்பெஷல் ட்ரெய்னிங்கிற்காக ஏன் தான் ‘கன்சென்ட் லெட்டர்’ கொடுத்தமோன்னு இருக்கு...! நினைச்சா... ஐ.ஜி. கூப்பிடறார்... நினைச்சா கமிஷனர் கூப்பிடறார். உட்கார வெச்சு மணிக்கணக்கா கிளாஸ் எடுக்கிறாங்க... ரூபலா இந்நேரம் கோபமா பாய்லிங் ஸ்டேஜ்ல இருப்பா... ஒரு போன் பண்ணி சமாதானப்படுத்திட்டுதான் வீட்டுக்குள்ளே நுழைய முடியும்...’

    பேசிக்கொண்டே உள்ளே வந்த விவேக் நாற்காலியில் சரிந்து-டெலிபோனைத் தன் பக்கமாய் இழுத்துக் கொண்டான். ரிஸீவரை எடுக்கப் போனவன் கோகுல் நாத்தின் அவசரத்தைப் பார்த்துவிட்டு புருவத்தை உயர்த்தினான்.

    என்ன கோகுல் நாத் எங்கேயாவது புறப்பட்டீங்களா...?

    புரபசர் நாத் போன் பண்ணி வரச் சொல்லியிருக்கார்... விவேக்... பங்களா மாடியறையில யாரோ நடக்கிற சத்தம் கேட்கிறதாகவும் போய்ப் பார்த்தா யாரும் இல்லைன்னும் சொல்றார்... அதான் புறப்பட்டுட்டிருக்கேன்... நீங்களும் வந்து... பார்த்தீ...

    நானா...? நோ... நோ... நான் இப்பவே உலக மகா லேட். வீட்ல ரூபலா ஊறப் போட்ட மொச்சைக் கொட்டையாட்டம் விழிச்சிட்டிருப்பா... கோகுல் நாத்...

    சொல்லிவிட்டு வீட்டுக்கு டயலைச் சுழற்றினான் விவேக், அடுத்த நிமிஷத்தின் ஆரம்பத்தில் ரூபலா லைனில் வந்தாள்.

    ஹலோ...

    ரூபலா... நான் உன்னோட பிராண நாதன் பேசறேன்

    மறுமுனையில் ரூபலா சிரித்தாள்.

    வீட்டுக்கு எப்போ வர்றதா உத்தேசம்? எட்டு மணிக்கு கமிஷனர் கூப்பிட்டதா சொல்லிப் பைக்கை உதைச்சீங்க... இன்னுமா பேசி முடிக்கலை...?

    பேசி முடிச்சாச்சு...

    இப்போ எங்கிருந்து பேசறீங்க...?

    ஸ்டேஷன்லயிருந்து...

    பக்கத்துல கோகுல் நாத் அங்கிள் இருக்காரா...?

    உனக்கெப்படி தெரிஞ்சுது...?

    அவர் என்னமோ உங்ககிட்ட கேட்டுட்டிருக்காரே... அவர் பேசற சத்தம்... எனக்கு நல்லா கேட்குது... என்ன சொல்றார் அவர்...?

    வெளியே இருந்து ஒரு கேஸ். வந்திருக்கு... என்னையும் வரச் சொல்லிக் கூப்பிடறார்... நான் அவரோடு போனா நீ திட்டுவே தானே...?

    வெளியே இருந்து என்ன கேஸ்...?

    யாரோ புரபசர் நாத் தாம்... அவர்க்கு ஒரு பிரச்னை...

    சரி... நீங்களும் கோகுல் நாத் அங்கிள் கூட போயிட்டு வாங்க... நானொன்னும் உங்களைக் கோபிச்சுக்க மாட்டேன்... திட்டமாட்டேன்... தாராளமா போயிட்டு வாங்க...

    போச்சுடா...! இப்ப நேரம் எவ்வளவு தெரியுமா ரூபி?

    தெரியும்... 11.40

    இப்பவே நாள் ஏகப்பட்ட லேட்டு...

    தலைக்கு மேலே ஜான் போயிடுச்சு... முழம் போனா என்ன...? கேஸை அட்டெண்ட் பண்ணமே வந்துடாதீங்க... நான் கதவைத் திறக்க மாட்டேன்...

    Enjoying the preview?
    Page 1 of 1