Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Mathippirkkuriya Kutram...
Oru Mathippirkkuriya Kutram...
Oru Mathippirkkuriya Kutram...
Ebook148 pages36 minutes

Oru Mathippirkkuriya Kutram...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Mathippirkkuriya Kutram...

Read more from Rajeshkumar

Related to Oru Mathippirkkuriya Kutram...

Related ebooks

Related categories

Reviews for Oru Mathippirkkuriya Kutram...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Mathippirkkuriya Kutram... - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஒரு பிப்ரவரி மாதத்தின் இரவு. நேரம் பதினோரு மணி முப்பது நிமிடம். பனி, ஸ்லோமோஷனில் கொட்டிக் கொண்டிருக்க வானத்தில் நிலா வெகுவாய்த் தேய்ந்து, பிடி இல்லாத அரிவாள் மாதிரி தெரிந்தது. நட்சத்திரங்கள் பொறுப்பில்லாமல் சிதறியிருக்க குளிர்க் காற்று உக்கிரமாய் வீசியது.

    அந்த நெடுஞ்சாலையின் புளியமரத்துக்குக் கீழ் தன் என்பீல்ட் பைக்கை ஸ்டாண்டிட்டு நிறுத்தினான் சத்யன். இருபத்தேழு வயதைப் போன மாதம் ஆறாம் தேதியே முடித்துக் கொண்ட சத்யனுக்கு உத்யோகம், க்ரைம் பிராஞ்ச் விசிலென்ஸில். அடுத்த வருஷ முடிவுக்குள் உச்சப்பட்ச டெஸிக்னேஷனைத் தொடப் போகிறவன், அசல் பிரம்மச்சாரி. (நம்பிக்கையில்லாத வாசகர்கள் ஒரு வாரம் முழுவதும் முயற்சி செய்து சத்யனை வசப்படுத்த முயன்ற ஹோட்டல் கேலார்ட் காபரே டான்ஸர் ஜமீலாவிடம் கேட்டு நம்பிக்கை பெறுக) ‘கல்யாணம் பண்ணிக்கோயேண்டா' என்று கடிதம் தோறும் நச்சரிக்கும் அம்மாவிடம் ப்ரமோஷன் வந்தால் தான் கல்யாணம் என்று சொல்லியிருப்பவன். டிபார்ட்மெண்ட் மூலமாக தன்னிடம் வந்த கேஸ் எதுவாக இருந்தாலும் சரி... அதில் ரிஸ்க் எடுத்துக்கொண்டு காரியம் ஆற்றுகிறவன். அதிக பட்ச தைரியம். துணிச்சல்.

    ஒரு மணி நேரத்திற்கு முன்னால் அவனுக்குக் கிடைத்த ஒரு தகவலை ஆதாரமாக வைத்து இந்த நிமிஷம் அந்த நெடுஞ்சாலையின் புளியமரத்துக்குக் கீழே பைக்கை ஸ்டாண்ட் இட்டிருக்கிறான்.

    பைக்கைப் பூட்டிக் கொண்ட சத்யன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுக் கொஞ்சம் தொலைவில் பிரும்மாண்டமான புகைபோக்கிகளோடு தெரியும் அந்த பேப்பர் தொழிற்சாலையைப் பார்த்து நடக்க ஆரம்பித்தான். க்ரேப் பதித்த ஷூக்கள் சத்தம் எழுப்பாமல் நடையைப் போட்டன.

    மூளை, தீவிரமாய் யோசித்தது.

    ‘எனக்குக் கிடைத்த தகவலில் எவ்வளவு சதவீதம் உண்மை...?’

    ‘ஆனால் நிச்சயமாய் - முழுப் பொய்யாய் இருக்க வாய்ப்பில்லை.'

    சத்யன் ரோட்டோரமாகவே நடக்க தொழிற்சாலையின் பின்பக்க காம்பௌண்ட் சுவர் உச்சியில் கண்ணாடி செதிள்களோடு வந்தது. தொழிற்சாலையிலிருந்து வெளிப்பட்ட பேப்பர் கூழின் நாற்றம் காற்றில் அடர்த்தியாய் அப்பியிருந்தது.

    காம்பெளண்ட் சுவர் ஓரமாகவே நடந்து போய் அதன் இருட்டான பின்னணிக்கு வந்ததும் அருகேயிருந்த எலக்ட்ரிக் போஸ்டில் விறுவிறுவென்று ஏறி அதன் பாதி உயரத்திலிருந்து காலை நீட்டிக் காம்பௌண்ட் சுவருக்குத் தாவினான்.

    சுவரின் உச்சியிலிருந்து -- மறுபக்கம் கொட்டியிருந்த வைக்கோல் போரின் மேல் குதித்து உடனே எழுந்து விடாமல் சில நிமிஷங்கள் வரை அப்படியே உட்கார்ந்தான்.

    கொஞ்சம் தொலைவில் இருட்டின் பின் புலத்தில் ஏராளமான மின்சாரத்தைத் தின்று தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தது. சொற்பமாய் ஆள் நடமாட்டம் தெரிந்தது. தொழிற்சாலையின் உச்சியில் நீல நிற நியானில் (BRIGHT PAPER PRODUCTS' என்கிற வாசகங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. தொழிற்சாலையின் கட்டிடத்திற்குள்ளே பிரும்மாண்டமான உலைகளுக்கு முன்னால் தொழிலாளர்களின் இயக்கம் தெரிந்தது. காகிதக் கூழின் நாற்றம் அழுகின முட்டைக் கோஸ் மாதிரி முகத்தில் மோதியது. கர்ச்சீப்பை எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டே ஜெனரேட்டர்கள் இயங்கும் கூடத்தைக் கடந்து எதிர்ப்பட்ட இரண்டொருவரின் கண்களில் பட்டுவிடாமல் இருப்பதற்காக குரோட்டன்ஸ் செடிகளுக்குப் பின்னால் உட்கார்ந்து சத்யன் தன் சர்ட் பாக்கெட்டிலிருந்து அந்தச் சிறிய பேப்பர் துண்டை எடுத்த தொழிற்சாலைக்குள் விரவிக்கிடந்த மெல்லிய வெளிச்சத்தில் பிரித்துப் பார்த்தான்.

    'ஸ்டாக் ரூம் எங்கேயிருக்கிறது...? ஜெனரேட்டர் ரூமுக்கு நேர் எதிரே அதாவது தொழிற்சாலையின் மேற்குப்பக்கம். இந்த இடத்திலிருந்து அந்த அறைக்குப் போகத்தான் கோஞ்சம் ஜாக்கிரதைத்தனம் வேண்டும். சிறிது ஏமாந்தாலும் யாரிடமாவது மாட்டிக் கொள்ள நேரிடலாம்.

    சத்யன் மெதுவாய்க் குரோட்டன்ஸ் செடிகளுக்குப் பின்னாலேயே ஊர்ந்து அங்குலம் அங்குலமாய் ஸ்டாக் ரூமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். தொழிற்சாலை ‘உஸ்'ஸென்று சீறிக் கொண்டிருக்க ராத்திரி நேரக் கான்டீனில் நான்கைந்து பேர் டீ டம்ளர்களோடு தெரிந்தார்கள்.

    கடைசியாய் வந்த குரோட்டன்ஸ் செடிக்கும் ஸ்டாக் ரூமுக்கும் இடையே எந்த மறைவும் இல்லாமல் ஒரு சின்ன பொட்டல் வெளி பரவியிருக்க அதை எப்படிக் கடப்பது என்கிற யோசனையில் நெற்றியைத் தடவிக் கொண்டான்.

    யாருடைய கண்ணிலாவது பட்டுவிட்டால் இத்தனை கஷ்டப்பட்டு உள்ளே வந்தது பிரயோஜனமில்லாமல் போய்விடும்... என்ன செய்யலாம்...?

    விருட்டென்று எழுந்து வேகவேகமாய் நடந்து -அந்த ஸ்டாக் ரூமைத் தொட்டுவிடலாமா...? இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

    சத்யன் தீர்மானித்துக் கொண்டு எழுந்தான். எந்தப் பக்கமும் பார்க்காமல் ‘விர்ர்'ரென்று நடந்து ஸ்டாக் ரூமின் முன்புறச் சுவரைத் தொட்டு- அதன் பக்கவாட்டு இருட்டில் ஒண்டிக் கொண்டான்.

    'அப்பாடா... இனிமேல் பயமில்லை!' சில விநாடிகள் கழிந்ததும் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஸ்டாக் ரூமின் கதவை நோக்கி நகர்ந்தான். கதவை நெருங்கி வெறுமனே சாத்தப்பட்டிருப்பதை உணர்ந்து தள்ளினான். கதவு சத்தம் எழுப்பாமல் உள்ளே போயிற்று.

    அதே விநாடி -

    அவன் தோளில் கொஞ்சம் வெதுவெதுப்பாய் - அந்தக் கை விழுந்தது.

    அதிர்ந்து போய்த் திரும்பினான் சத்யன். திரும்பிய வேகத்திலேயே மலர்ந்தான்.

    கிருஷ்ணன் நீயா...?

    நானே தான் ஸார்... பயப்படாதீங்க...

    லேபர் யூனிபார்மில் அவன் சிரித்தான்.

    நீ சொன்ன நேரத்துக்கு கரெக்டா உள்ளே வந்துட்டேன்... கிருஷ்ணன். எம்.டி. குவார்ட்டர்ஸுக்குப் போயிட்டாரா... இல்லே பாக்டரிக்குள்ளே இருக்காரா...?

    குவார்ட்டர்ஸுக்குப் போயிட்டார் ஸார்...

    சரி... அந்த பிரிண்டிங் செக்ஷன் போற வழி... இது தானே...?

    "ஆமா

    Enjoying the preview?
    Page 1 of 1