Panja Varna Kolaigal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Panja Varna Kolaigal
Related ebooks
Vinaya Oru Vidukathai Rating: 0 out of 5 stars0 ratingsRed Rose! Guest House! Rating: 0 out of 5 stars0 ratingsSandarpatthai Payanpaduthi Kol Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maarum Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsThookkumara Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsSaathal Saamraajjiyam Rating: 0 out of 5 stars0 ratingsEastmen Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsVidiyaatha Iravondru Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVendru Vaa Vivek Rating: 0 out of 5 stars0 ratingsVaa Arugil Vaa and Kagitha Ayuthangal Rating: 0 out of 5 stars0 ratingsNenju Porukkuthillaiye Rating: 0 out of 5 stars0 ratingsThigil Thiruvizha! Rating: 0 out of 5 stars0 ratingsKatrathu Diamond Kalavu Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsPaatharasa Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSilent Killers Rating: 0 out of 5 stars0 ratingsThoorathil oru Sigappukodi Rating: 0 out of 5 stars0 ratingsIni Min Mini Rating: 0 out of 5 stars0 ratingsOru Chinna Missdeath Rating: 5 out of 5 stars5/5August 5 Athikalai Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Arivu Rating: 2 out of 5 stars2/5Sivappu Iravu Rating: 0 out of 5 stars0 ratingsIni Illai Ilaiyuthirkaalam Rating: 5 out of 5 stars5/5Paththu Vinaadi Aabathu! Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Killer Rating: 0 out of 5 stars0 ratingsNooru Degree Thendral Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Panja Varna Kolaigal
0 ratings0 reviews
Book preview
Panja Varna Kolaigal - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
டி.வியில் அந்தப் பெண் வீட்டுக் கவலைகளோடு செய்தி வாசித்துக் கொண்டிருந்தாள்.
மேலும்... அவர் கூறியதாவது... பாலஸ்தீனிய நாட்டுப் பிரச்னை அவர்களுடைய உள்நாட்டு விவகாரமென்றும் இதில் தான் எந்த விதத்திலும் தலையிட முடியாது என்றும் கலாச்சார உறவுகள் பாதிக்கும் பட்சத்தில் தான் எத்தகைய முடிவுகளை மேற்கொள்ளக்கூடும் என்பதை மந்திரி சபையை கலந்தாலோசித்துதான் செயல்பட வேண்டுமென்று...
செய்தி வாசிக்கும் பெண்ணைப் பார்த்துக் கொண்டே நீளமாய்க் கொட்டாவி விட்டான் விவேக். ரூபலா பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டாள்.
ரூபலா.
ம்...
டி.வி.யை ஆஃப் பண்ணு...
ஏன்... நீங்கதான் பிரியமா ந்யூஸ் கேப்பீங்களே...?
என்ன ந்யூஸ் இது...? பாலஸ்தீனத்துல என்னவோ உள்நாட்டு பிரச்னையாம். ஜோர்டானில் சமய மாநாடாம். டெல்லியில் நாற்பத்தி ஒண்ணாவது சம்மேளனமாம். போன மாசம் நம்ம தமிழ் நாட்டு சட்டசபையில் நடந்த மாதிரி ஒரு காரசாரமான ந்யூஸ் உண்டா...? ரத்தம் சொட்ட சொட்ட சட்டசபையே போர்க்களமான மாதிரி ஒரு எமோஷனல் ந்யூஸ் உண்டா...? சை... ந்யூஸ் கேக்கவே பிரியமில்லாமே போயிடுச்சு...
ரூபலா சிரித்துக் கொண்டே போய் டி.வி.யில் மீண்டும் தலைப்பு செய்திகளைப் படிக்க ஆரம்பித்த அந்தப் பெண்ணின் முகத்தைக் காணாமல் போக்கினாள்.
அதே விநாடி –
டெலிபோன் தன் தொண்டையைச் செருமியது. ரூபலா! டெலிபோனை அட்டெண்ட் பண்ணு... கோகுல்நாத்தா இருந்தா நான் இல்லேன்னு சொல்லிடு... மனுஷன் கேஸை கொண்டு வந்துட்டார்ன்னா 'லோ லோ'ன்னு ராத்திரி பகலா அலையணும். போஸ்ட்மார்ட்டத்தை படிக்கணும். கொலையாளியை அமுக்க லேட்டானா... கமிஷனரோட கோபமான தக்காளி கலர் முகத்தைப் பார்க்கணும்
அவன் புலம்பிக் கொண்டிருக்கும் போதே ரூபலா ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
ஹலோ...
…….
இருக்கார்.
……
உடனே பேசச் சொல்லணுமா...? ஒன்மினிட் ஸார்...
என்றவள் விரல்களால் ரிஸீவரின் வாயை மூடிக்கொண்டு விவேக்கிடம் திரும்பினாள். குரலை அவசர ஸ்தாயிக்குக் கொண்டு வந்து கிசு கிசுத்துக் கூப்பிட்டாள்.
என்னங்க...?
ம்...
கமிஷனர் உங்க கூட உடனடியா பேசணுமாம்.
கமிஷனரா...?
உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு விவேக் தடாலென்று எழுந்தான். வேகமாய் ரிஸீவரை வாங்கி காதுக்குக் கொடுத்தான்.
ஹலோ... நான் விவேக் பேசறேன்... ஸார்...
என்ன விவேக்... என்னைப் போய்... புதுசா ஸார்ன்னு கூப்பிடறீங்க... நான் உங்க கோகுல்நாத் பேசறேன்.
ரூபலாவை முறைப்பதற்காகத் திரும்பினான் விவேக். அவள் பூனை மாதிரி உள்ளறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அவள் சிரிப்பது முதுகிலேயே தெரிந்தது.
விவேக்...
சொல்லுங்க கோகுல்நாத்.
நீங்க உடனடியா தி.நகர் பாகீரதி தெருவுக்கு புறப்பட்டு வரணும்.
என்ன, கேஸ் கொண்டாந்துட்டீங்களா?
என்ன பண்றது விவேக்... நானும் ஸ்டேஷனை விட்டு வீட்டுக்கு கிளம்பற நேரம். தகவல் வந்தது... போகாமே இருக்க முடியுமா...?
சரி மர்டர் ஆனது யார்? ஆணா, பொண்ணா?
ரெண்டும்.
என்ன சொல்றீங்க...?
பெமிலியர் மாடலிங் கேர்ள் ரோஸியும் அவளோட ஹஸ்பெண்ட் நீலேஷும் ப்ரூட்டலா கொல்லப்பட்டிருக்காங்க...
சம்பவம் நடந்து எத்தனை மணி நேரமாச்சு கோகுல்நாத்?
சரியா போச்சு...! எத்தனை நாளாச்சுன்னு கேளுங்க விவேக். அஞ்சு நாளா பூட்டிக் கிடந்த பங்களாவிலிருந்து நாத்தம் கிளம்பினதினாலதான் பக்கத்து வீட்டுக்காரங்க பொறுக்க முடியாமே போன் பண்ணியிருக்காங்க.
சரி, உடனே நான் கிளம்பி வர்றேன்.
சீக்கிரம் வாங்க விவேக்... உங்களுக்காகத்தான் ரெண்டு பாடியையும் டிஸ்டர்ப் பண்ணாமே அப்படியே வெச்சிருக்கேன்.
விவேக் ரிஸீவரை வைத்துவிட்டு திரும்பினான்.
இடது கையில் ஹெல்மெட். வலதுகையின் ஆட்காட்டி விரலில் யமஹா பைக்கின் சாவி. உதட்டில் வெடிக்கக் காத்திருக்கும் சிரிப்பு.
என்ன என் அருமைக் கணவரே! உம்மை கடமை அழைக்கிறதோ...?
'கிராதகி...!
ஹெல்மெட்டையும் பைக் சாவியையும் வெடுக்கென்று பறித்துக் கொண்டு வாசலை நோக்கிப் போனான். அடுத்த நிமிஷத்தின் ஆரம்பத்தில் யமஹாவின் உடம்பு தடதடத்தது. ஹெல்மெட் தரித்த விவேக்கின் முகம் வாசற்படியை நோக்கித் திரும்ப ரூபலா சிரித்தாள்.
போய்ட்டு சீக்கிரம் வாங்க... உங்களுக்காக நான் சாப்பிடாமே காத்திருப்பேன்.
சாயந்தரமே மூக்கு முட்ட டிபன் சாப்பிட்டாச்சு... நடு ஜாமத்துலதான் இனிமே உனக்கு பசிக்கும்... அப்புறமும் எதுக்காக எனக்காக காத்திட்ருக்கிறே... போய் தூங்கு போ. இல்லேன்னா டி.வி.யை போட்டுகிட்டு 'ஜிந்தகி ஜிந்தகி' பாரு...
எரிச்சலாய் கத்திவிட்டு யமஹாவின் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான் விவேக்.
அது குபுக்கென்று வீட்டைக் கடந்தது.
ராத்திரி ஒன்பதேகால் சென்னை, சோடியம் வேபர் விளக்குகளோடும் வாகன நெரிசலோடும் சமுத்திரக் காற்றோடும் அமர்க்களமாய் இருந்து. கணவன்மார்கள் ஸ்கூட்டர்களில் ஹெல்மெட் தலைகளோடு பிளாட்பார ஓரத்தில் காத்துக் கொண்டிருக்க பெண்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் பணத்தை விரயம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அலங்கார் தியேட்டர் வாசலில் பத்து மணி ஷோவில் ஆங்கிலப் படத்தின் அரை நிர்வாணக் காட்சிகளைப் பார்ப்பதற்காக ஒரு கும்பல் காத்துக் கொண்டிருந்தது.
விவேக்கின் யமஹா சிக்னல்களில் மாட்டாமல் பறந்தது. பத்து நிமிஷம் பறப்பில் -
தி.நகர் வர பாகீரதி தெரு எது என்று ஞாபகப்படுத்திக் கொண்டு பைக்கை வளைத்தான். அந்த குறுகலான தெருவின் கோடியில் போலீஸ் ஜீப்பின் நீலநிற முகம் தெரிந்தது. பக்கத்தில் கோகுல்நாத் நின்று கான்ஸ்டபிள்களுக்கு எதையோ சொல்லி அபிநயித்துக் கொண்டிருந்தார்.
பைக்கை அவரருகே கொண்டு போய் மெளனமாக்கினான் விவேக். கோகுல்நாத் மலர்ந்தார்.
வாங்க விவேக்...
விவேக் பைக்கினின்றும் கழன்று தரைக்கு வந்தான். கான்ஸ்டபிள்கள் விறைத்து சல்யூட் போட்டார்கள். விவேக்கின் பார்வை சுற்றிலும் அலைந்தது.
தெரு முழுக்க நெருக்கமான பங்களாக்கள். அநேகமாய் எல்லா, பங்களாக்களிலும் அடர்த்தியான மரங்கள் மாடி ஜன்னல்களில் போலீஸ் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கும்