Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorry, Konnutten!
Sorry, Konnutten!
Sorry, Konnutten!
Ebook159 pages46 minutes

Sorry, Konnutten!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sorry, Konnutten!

Read more from Rajeshkumar

Related to Sorry, Konnutten!

Related ebooks

Related categories

Reviews for Sorry, Konnutten!

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorry, Konnutten! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அலாரம் டைம்பீஸ் தொண்டை கட்டிக் கொண்ட அழகான பெண் மாதிரி சிணுங்க அந்த சிணுங்கலில் விழித்துக்கொண்டான் அவன். அந்த முதல் அத்தியாயத்திலேயே இவனுடைய பெயரை நான் சொல்லப் போவதில்லை. சொன்னால் நாவலின் சுவாரஸ்யம் ஒரு ஐந்து பர்சென்ட் குறைந்து போய்விடும். எனவே, இப்போது அலாரம் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டிருக்கும் 'அவனை' இன்னும் சில அத்தியாயங்களுக்கு அவன் என்றே சொல்லப் போகிறேன்.

    கண்களைத் தேய்த்துக்கொண்டே எழுந்து உட்கார்ந்த அவன், அலறிக்கொண்டிருந்த அலாரத்தின் தலையில் தட்டிவிட்டு- நீளமாய்க் கொட்டால் விட்டுப் போர்வையை உதறினான்.

    பாத்ரூமில் பக்கெட், தரையில் நகர்த்தப்படு சத்தமும் தண்ணீரை மொண்டு சளசளவென்று ஊற்றும் சத்தமும் கலந்து கேட்டது.

    கதவு தாழிடப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருப்பது அதன் அசைவில் தெரிந்தது. கட்டிலை விட்டு இறங்கிய அவன் சத்தம் காட்டாமல் நடந்து போய் பாத்ரூம் கதவைப் பளிச்சென்று திறந்தான்.

    அவள் பாவாடையை நெஞ்சு வரைக்கும் ஏற்றிக் கட்டிக்கொண்டு கைகளுக்கும் கால்களுக்கும் சோப்பைக் குழைத்துப் பூசிக்கொண்டிருந்தாள். இவளுடைய பெயரையும் சொல்லப் போவதில்லை வாசகர்களே! சொன்னால் சுவாரசியம் இன்னும் ஒரு ஐந்து பர்சென்ட் குறைந்து போய்விடும். எனவே, குளித்துக் கொண்டிருக்கிற 'இவளை' இன்னும், சில அத்தியாயங்களுக்கு 'இவள்' என்றே சொல்லப் போகிறேன்.

    என்ன டார்லிங்! சீக்கிரத்திலேயே எந்திரிச்சுட்டியா...? அவன் பாத்ரூம் கதவுக்கு சாய்ந்து நின்று குளிக்கிற அவளையே ஒரு ரசனையோடு பார்த்தபடி கேட்டான்.

    நாலரை மணிக்கே எந்திரிச்சுட்டேன். உங்களை எழுப்பிப் பார்த்தேன். நல்லா தூங்கிட்டிருந்தீங்க. சரி அலாரம் அடிக்கட்டும்மேன்னு விட்டுட்டேன்...

    ஆமா... முகூர்த்தம் எத்தனை மணிக்கு...?

    ஆறு மணி யிலிருந்து ஏழு மணிக்குள்ளே...

    அடேங்கப்பா... இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு... நீ குளிச்சுட்டு வர்றதுக்குள்ளே நான் ஒரு மினி தூக்கம் போட்டுடறேன்...

    "மறுபடியும் தூங்கப் போறீங்களா...? சரியாப் போச்சு... முகூர்த்த நேரத்துக்கு நாம் ரெண்டு பேரும் மண்டபத்துல இல்லேன்னா வைதேகிக்குக் கோபம் வந்துடும்...'

    அவன் சிரித்துக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

    எதுக்காக இப்போ உள்ளே வர்றீங்க...?

    உனக்கு முதுகு தேய்க்க வேண்டாமா...?

    எனக்கொண்ணும் நீங்க முதுகு தேய்க்க வேண்டாம்... அந்த முதுகு தேய்க்கிற வேலைக்குப் பதிலா நான் சொல்ற ஒரு உருப்படியான காரியத்தைப் பண்றீங்களா...?

    சொல்லு...

    "நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ளே... காப்பி போட்டு வெக்கறீங்களா?'

    காபியா...? பால்காரன் இன்னும் வரலையே... அவன் ஆறு மணிக்குத் தானே வருவான்...

    "ப்ரிஜ்ல நேத்து சாயந்தரமே. மீந்துபோன பாலை ஒரு பாத்திரத்துல எடுத்து வெச்சுருக்கேன். அதை எடுத்து ரெண்டு டம்ளர் காபி பிரமாதமா போடலாம்...

    அப்போ முதுகு தேய்க்க வேண்டாம்ன்னு சொல்றே...?

    வேண்டாம்... முதுகு எட்டற வரைக்கும் நானே தேய்ச்சுக்கிறேன். நீங்க போய் காபியைக் கலந்து வையுங்க...

    கட்டளையை சிரமேற்கொண்டேன். சொல்லிக்கொண்டே ப்ரிஜ்ஜை நோக்கிப் போனான் அவன். வழியில் ஸ்டூலின் மேல் உட்கார்ந்திருந்த டெலிபோன் ரீங்காரித்து அவனை நிறுத்தியது.

    ‘காலங்கார்த்தாலே யார் மெனக்கெட்டு போன் செய்கிறார்கள்...?’ ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ...

    ஹலோ... நான் வைதேகி பேசறேன்... இன்னுமா ரெண்டு பேரும் வீட்ல உட்கார்ந்துட்டிருக்கீங்க... மண்டபத்துக்கு வரலை...

    வந்துடறோம்...

    உங்க அருமை மனைவி ரெடியா...?

    குளிச்சிட்டிருக்கா...

    சீக்கிரம் வாங்க... மண்டபம் ரொம்பிட்டிருக்கு...

    அரைமணி நேரத்துல வந்திடறோம்...

    "லேட் பண்ணிடாதீங்க... எதிர் முனையில் ரிஸீவர் சாத்தப்பட இவனும் ரிஸீவரை சாத்தி விட்டு... ப்ரிஜ்ஜை நோக்கி நடந்தான். சுவரிலிருந்த சுவிட்சைத் தேய்த்து டியூப் லைட்டின் உடம்பை வெளுப்பாக்கினான். பீரிட்டு வந்த கொட்டாவியை வலதுபுறக் கையால் தடுத்துக்கொண்டே- இடது கையால் ப்ரிஜ் கதவைத் திறந்தான்.

    கதவு கேக் துண்டமாய் பின்வாங்க உள்ளே குனிந்து பார்த்து பால் பாத்திரத்தைத் தேடினான் அவன். பாத்திரம் உள்ளே தெரிந்தது. இழுத்தான். இழுக்கும் போதே- பாத்திரத்துக்குப் பின்பக்கம் கன்னங்கரேலென்று அது தெரிந்தது. அவன் பார்வையை உன்னிப்பாக்கிப் பார்த்தான்.

    என்னத்தை அப்படி பார்த்துகிட்டு இருக்கீங்க...? பாத்ரூமினின்றும் தலையைத் துவட்டிக் கொண்டே வெளிப்பட்ட அவள் கேலியாய் கேட்டுக்கொண்டே அவனை நெருங்கினாள்.

    ப்ரிஜ்ல என்னது கருப்பா...?

    கருப்பாவா...? அவளும் குனிந்து பார்த்தாள்.

    ஆமா... என்னது... நீளமா...? வெளியே எடுங்க பார்க்கலாம்... அவன் உள்ளே கையை நுழைத்து அதை எடுத்து ட்யூப்லைட் வெளிச்சத்தில் உயர்த்திப் பார்த்தான்.

    அவன் உயர்த்த உயர்த்தவே அவள் வில் என்று வீறிட்டாள். முழங்கை வரைக்கும் சேர்த்து வெட்டப்பட்ட அந்த மனிதக் கை கறுப்பாய் நொதநொதவென்றிருந்தது. ஐந்து விரல்களும் கொக்கி மாதிரி வளைந்திருந்தது.

    2

    ஹிண்டு பத்திரிகையின் வாண்டட் காலத்தை பத்தி பத்தியாய் மேய்ந்து கொண்டிருந்த நவ கோடி சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தார்.

    அம்மா... தைலா! ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டாம்மா... சமையலறையில் இட்லி வார்த்துக் கொண்டிருந்த இருபது வயது தைலா அந்த வேலையைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஒரு வெளிச்சமாய் வெளியே வந்தாள்.

    எதுக்கப்பா...?

    உன்னோட அண்ணன் படிப்புக்கு ஏற்ற மாதிரி... ஒரு வேலை வந்திருக்கு... அட்ரஸைக் குறிச்சு வெக்கலாம். அவன் பிரியப்பட்டா அப்ளை பண்ணட்டும்...

    "அண்ணனுக்கு வேலை கிடைக்கலைன்னு நீங்க தான் இப்படி உருகறீங்க... அண்ணனுக்கு எந்த விதமான வேலையும் இல்லை... காலையில எந்திரிச்சதும் ஒன்றரை டம்ளர் காப்பி குடிச்சிட்டு டென்னிஸ் விளையாடப் போயிடவேண்டியது. நீங்க வெளியே கிளம்பிப் போறபோது டென்னிஸ் கோர்ட்டிலிருந்து திரும்பிவர வேண்டியது... குளிச்சு டிபனை சாப்பிட்டு... கிரிக்கெட் மேட்ச் ஹைதராபாத்திலோ, ஆமதாபாத்திலோ நடந்தா... ட்ரான்சிஸ்டரை காதோட ஒட்ட வெச்சுகிட்டு...

    Enjoying the preview?
    Page 1 of 1