Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thappu+Thappu=Sari!
Thappu+Thappu=Sari!
Thappu+Thappu=Sari!
Ebook146 pages43 minutes

Thappu+Thappu=Sari!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thappu+Thappu=Sari!

Read more from Rajeshkumar

Related to Thappu+Thappu=Sari!

Related ebooks

Related categories

Reviews for Thappu+Thappu=Sari!

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thappu+Thappu=Sari! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    சென்னை - பெங்களூர் ஹைவேஸ் ரோடு.

    நள்ளிரவைத் தாண்டிய நேரம்.

    ரோட்டின் குறுக்கே நீளமான மூங்கில் கம்பைக் கட்டி - அதற்குப் பக்கத்தில் தார் டின்களை வைத்து - சிவப்புக் காகிதம் ஒட்டிய அரிக்கேன் விளக்கை தொங்கவிட்டு - அந்த இடம் ஒரு தற்காலிக சோதனை சாவடியாக மாறியிருக்க, ஏழு பேர் கொண்ட ஒரு போலீஸ் ஸ்க்வாட் கைகளில் டார்ச்களோடு வாகனங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தது.

    அஸிஸ்டண்ட் கமிஷனர் மேகவர்ணன் அந்த லான்ஸர் கார்க்குப் பக்கத்தில் குனிந்து ஸ்டீயரிங் பிடித்திருந்த சஃபாரி நபரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

    உங்க பேரு...?

    ராமானந்தம் ஸார்...

    ஷோ... மீ... யுவர் ஆர்.சி.புக்...

    அவர் எடுத்துக் காட்டினார். மேகவர்ணன் அதை டார்ச் அடித்துப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

    நீங்க எங்கே போய்ட்டு வர்றீங்க...?

    பெங்களூர்க்கு...

    பர்ப்பஸ் ஆப் விஸிட்?

    பிசினஸ்

    கார்ல வேற யாரெல்லாம் இருக்காங்க?

    நான் மட்டும்தான் ஸார்...

    டிக்கியை கொஞ்சம் ஓப்பன் பண்ணுங்க.

    அந்த ராமானந்தம் எரிச்சலாய் கீழே இறங்கி சாவியுடன் காரின் பின்பக்கம் போய் டிக்கியைத் திறந்தார்.

    மேகவர்ணன் டிக்கிக்குள் தலையை நுழைத்து அதற்குள் இருந்த ஸ்டெப்னியைப் பார்த்துவிட்டு தலையாட்டினார்.

    சரி... நீங்க போலாம்...

    எதுக்கு ஸார்... இந்த சோதனை...?

    சட்டசபைக்குள்ளே நாலு தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தப் போறதாக உளவுத்துறைக்கு செய்தி கிடைச்சிருக்கு. அந்தத் தீவிரவாதிகளைப் பிடிக்கத்தான் ஸ்டேட்டோட எல்லா எல்லையிலேயும் செக் போஸ்ட் போட்டு சோதனை பண்ணிக்கிட்டு இருக்கோம்...

    ராமானந்தம் புன்னகைத்தார்.

    ஸார்... நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த ஹைவேஸ் ரோட்ல ஒரு போலீஸ் ஸ்குவாடை வெச்சுகிட்டு, உங்க தூக்கத்தையும் கெடுத்துகிட்டு, ஒவ்வொரு வண்டியா சோதனை போடுறதுல ஒரு பிரயோஜனமும் கிடையாது ஸார். நான் சொல்ற இடங்கள்ல சோதனை போட்டீங்கன்னா நிச்சயமா அந்த தீவிரவாதிகளைப் பத்தின தடயங்கள் கிடைக்கலாம்...

    மேகவர்ணன் ஆர்வமானார்.

    சொல்லுங்க எந்த இடங்கள்...?

    ஸார்...! முள்ளை முள்ளால் எடுக்கணும். வைரத்தை வைரத்தால் அறுக்கணும்ன்னு சொல்லுவாங்க. அதே மாதிரி சட்டசபைக்குள்ளே தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தப் போறாங்கன்னா... சட்டசபையிலேயே இருக்கிற நடப்பு எம்.எல்.ஏ.க்களில் யாரோ உதவி பண்ணப் போறாங்கன்னு அர்த்தம். நீங்க மேலிடத்துல பர்மிஷன் வாங்கிகிட்டு எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வீட்ல சோதனை நடத்திப் பாருங்க. யாராவது ஒரு எம்.எல்.ஏ. மாட்டுவாரு... அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வாகவும் இருக்கலாம். ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வாகவும் இருக்கலாம்...

    அப்படியெல்லாம் எம்.எல்.ஏ.க்கள் வீட்ல புகுந்து சோதனை போட முடியாது. நீங்க மொதல்ல புறப்படுங்க… வெட்டிப் பேச்சு பேசிட்டிருக்க நேரம் இல்லை… லைன்ல வண்டிகள் காத்திட்டிருக்கு...

    லான்ஸர் புறப்பட்டு போனதும் ஒரு ஆம்னி மாருதி வேன் மெல்ல ஊர்ந்து வந்தது.

    டிரைவிங் சீட்டில் ஸ்வெட்டர் அணிந்த அந்த அழகான இளைஞன். தமிழ் தெரியவில்லை. ஆங்கிலம் பேசினான்.

    ஸார்...! உங்கள் சோதனையை சீக்கிரம் முடித்துக் கொண்டால் பரவாயில்லை. என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. பின்சீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

    கார் கதவைத் தள்ளி உள்ளே பார்த்தார் அஸிஸ்டண்ட் கமிஷனர் மேகவர்ணன். இருட்டாய் இருந்தது.

    விளக்கைப் போடுங்கள்...

    அவன் ஸ்விட்ச்சைத் தட்ட கார்க்குள் வெளிச்சம். பின்சீட்டில் ஒரு இளம்பெண் உல்லன் சால்வையால் கழுத்து வரைக்கும் போர்த்திக் கொண்டு மல்லாந்து படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். சீரான சுவாசத்தில் அவளுடைய மார்புகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.

    உங்கள் மனைவிக்கு என்ன உடம்பு...?

    அவள் ஒரு ஆஸ்துமா நோயாளி ஸார்...

    விளக்கை அணைத்து விடுங்கள்...

    அணைக்கப்பட்டது

    உங்களுடைய ஆர்.சி. புக் ப்ளீஸ்...?

    எடுத்துக் கொடுத்தான். மேகவர்ணன் பார்த்தார். பெயர் விஷ்ணு ஜித்தன். பெங்களூர் ரெஜிஸ்ட்ரேஷன்.

    சொந்த ஊர் பெங்களூரா?

    எஸ்...

    என்ன வேலை பார்க்கிறீர்கள்...?

    என்ஜினியர். ஹைடெக் சொல்யூஷன்ஸ் கம்பெனியில் வேலை...!

    சென்னைக்கு எதற்காக போகிறீர்கள்...?

    பெங்களூர் க்ளைமேட் என் மனைவிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. சென்னையில் உள்ள அவளுடைய அக்கா வீட்டில் சில நாட்கள் இருக்கட்டுமே என்று கூட்டி வந்தேன்...!

    உங்கள் டிக்கியை கொஞ்சம் ஓப்பன் செய்யுங்கள்.

    ஸார்...! தீவிரவாதிகளைப் பிடிக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு எங்களைப் போன்றவர்களை ரொம்பவும்தான் படுத்துகிறீர்கள். நீங்கள் தேடுகிற தீவிரவாதிகள் இந்நேரத்திற்கு சென்னையில் உள்ள ஏதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிம்மதியாக படுத்து தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

    மேகவர்ணன் புன்னகைத்தார்.

    மிஸ்டர் விஷ்ணு ஜித்தன் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க நாங்கள் எல்லா மட்டங்களிலும் தீவிரமாய் சோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறோம். தீவிரவாதிகள் எந்த நேரத்தில் எந்த உருவத்தில் எப்படி வருவார்கள் என்று யார்க்குமே தெரியாது. உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்களே கூட ஒரு தீவிரவாதியா இருக்கலாம். வேனின் பின் சீட்டில் படுத்து தூங்கிக் கொண்டு இருக்கிற அந்தப் பெண்ணை உங்கள் மனைவி என்று சொல்கிறீர்கள். அதை நாங்களும் நம்ப வேண்டி இருக்கிறது. டோண்ட் டேக் மிஸ்டேக் மீ... நாங்க எல்லோரையும் இந்த விஷயத்தில் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. ப்ளீஸ்... ஓப்பன்… டிக்கி.

    விஷ்ணு ஜித்தன் வேனின் பின் பக்கத்துக்குப் போய் டிக்கியைத் திறந்தான். உள்ளே ஸ்டெப்னி மட்டும் இருந்தது. மேகவர்ணன் பார்த்துவிட்டு தலையசைத்தார்.

    "சரி... நீங்கள் போகலாம்...!

    Enjoying the preview?
    Page 1 of 1