Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aabathukku Oru Azhaipithazh
Aabathukku Oru Azhaipithazh
Aabathukku Oru Azhaipithazh
Ebook152 pages36 minutes

Aabathukku Oru Azhaipithazh

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Aabathukku Oru Azhaipithazh

Read more from Rajeshkumar

Related to Aabathukku Oru Azhaipithazh

Related ebooks

Related categories

Reviews for Aabathukku Oru Azhaipithazh

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aabathukku Oru Azhaipithazh - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஏர்போர்ட்.

    லவுஞ்சில் ஜனம் வழிந்தது. நீல நிற பாலிமர் இருக்கைகளை ஜீன்ஸ், சல்வார் கம்மீஸ், புடவைகள் ஆக்ரமித்திருந்தன. சிலர் வரப் போகிறவர்களை வரவேற்க உதிரும் ரோஜா மாலைகளோடு காத்திருந்தார்கள். ஜப்பானில் உள்ள வாரியங்களைப் பார்த்துத் தெரிந்துக் கொள்வதற்காக - வாரியத் தலைவர் ஒருவர் பறக்க - காத்திருந்தார். அவரைச் சுற்றிலும் கட்சி ஆட்கள். சூட்கேஸின் ரோலர்கள் பளிங்குத் தரையைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தன. நிஜமான அயல்நாட்டு ஆங்கிலம் சிலரின் உதடுகளில் தவழ்ந்து கொண்டிருந்தது.

    கார் பார்க்கிங்கின் வரிசையில் செருகி நின்றிருந்த அந்த பீட்ரூட் நிற ஸ்டாண்டர்ட் 2000 முன் இருக்கையிலிருந்து லக்ஷ்மண் கீழே இறங்கினான்.

    ஆறடி உயரம், நீள்வட்ட முகம், தாரால் கோடி ழுத்த மாதிரி அச்சாய் மீசை. ஸ்டோன்வாஷ் சர்ட் - அதே ஸ்டோன்வாஷ் பேண்ட். நடையில் அலட்சியம். முகத்தில் குளிர் கண்ணாடி. மணிக்கட்டில் சிடிஸன் எலக்ட்ரானிக் வாட்ச். காலில் பாட்டாவின் கான்வாஸ் நார்த் ஸ்டோர். ஏர்போர்ட்டில் அடித்த காற்றில் சிலம்பின தலை முடியை வலது கையால் கோதிக் கொண்டே - காரின் பின்சீட் கதவை இடது கையால் இழுத்தான்.

    கதவு விலகியது. உள்ளிருந்து இறங்கினாள் அருந்ததி.

    அருந்ததியின் உடம்புமேல் சைனா சில்க் டிஸ்கோ டெக்கரேஷனாய் ஜிலுஜிலுத்தது. பெளர் ணமி நிறத்தில் - கண்களுக்கு மென்மையாய் இருந்தாள். அழகு அசாதாரணமாயிருந்தது. ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் வரை மிஸ் அருந்ததி சேஷகோபாலன். இப்போது மிஸஸ் அருந்ததி ராக்கேஷ். (ராக்கேஷ் ஃப்ளைட்டில் வந்து கொண்டி ருக்கிறான். சிறிது நேரத்தில் வந்து விடுவான்).

    இறங்க - இறங்க ரிஸ்ட்டைக் கவ்வியிருந்த குவார்ட்ஸைப் பார்த்தாள் அருந்தி. லக்ஷ்மணை ஏறிட்டு நடந்துக் கொண்டே சொன்னாள்.

    ஃப்ளைட் வர பதினைஞ்சு நிமிஷம் இருக்கு...

    லக்ஷ்மண் புன்னகைத்தான்.

    ஏன்...? நேரம் நெருங்க நெருங்க... வீட்டுக்காரரை பார்க்கற ஆர்வம் அதிகமாகிடுச்சா...?

    சிரித்தாள்.

    வந்ததும் – அவரை ‘பிலுபிலு’ன்னு பிடிக்கப் போறேன்...

    எதுக்காக...?

    சிங்கப்பூர் போனவர். இந்தப் பதினைஞ்சு நாள்ல ஒரு நாளாவது ஃபோன் பண்ணி பேசி னாரா...? கிணத்துல விழுந்தகல் மாதிரி ‘கம்’ன்னு இருந்துட்டார்... உங்க தம்பிக்கு என் ஞாபகமே வராது போலிருக்கு...

    அவனோட ஹேபிட்டே அதுதானே - போனது பிஸினெஸ் ட்ரிப்... காரியம் சக்ஸஸ் ஆகற வரைக்கும் யாரையும் நினைக்கமாட்டான்

    அதுக்காக... கட்டின பொண்டாட்டியைக் கூடவா...?

    சரி... விடு... இன்னும் பதினைஞ்சு நிமிஷத்தில் வந்துவிடுவான். வீடு போய் சேர்றதுக்குள்ள கேக்க வேண்டிய கேள்விகளையெல்லாம்... கார்ல்லேயே கேட்டு முடிச்சிடு...

    லவுஞ்ச்சுக்குள் நுழைந்தார்கள்.

    பெரிய கண்ணாடித் தடுப்பு எதிரே தெரிந்தது. ரன்வே சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் கண்ணைத் தாக்கியது. ஸ்பீக்கர் அனௌன்ஸ்மென்ட்டில் அருந்ததி காதைத் தீட்டிக் கொண்ட போது - லக்ஷ்ம ணின் அருகே வந்து -

    ஹலோ... ஸார்... குட்மார்னிங்... என்றான் இளைஞன்.

    வயது இருபத்தொன்றை மீறுமா? என்று சந்தேகத்தை எழுப்புகிற - தோற்றம். உதட்டில் தேக்கியிருந்த புன்னகையில் ஐஸ் கட்டியின் குளிர்ச்சி தெரிந்தது. சுத்தமான வெள்ளைப் பேண்ட்டினுள் அதே வெள்ளை சர்ட்டை இன் செய்திருந்தான். சர்ட் பாக்கெட் விளிம்பில் அஜந்தா நீலநிற டால்ஃபின் சின்னதாய் அயர்ன் ஸ்டிக்கரின் உபயோகத்தால் ஒட்டியிருந்தது, - திரும்பிப் பார்த்த லக்ஷ்மண் - புன்னகைத்தான்.

    ஒ...! கிருஷ்ண குமார்... நீயா? எப்போ வந்தே?

    பத்து நிமிஷம் ஆச்சே... ஸார்.

    எங்கே பங்களா பக்கமே காணோம்...

    ராக்கேஷ் ஸார் இருந்தா அடிக்கடி வரச் சொல்லுவார். அவர் தான் ஊருக்குப் போயிட்டாரே...

    செமஸ்டர் எக்ஸாமினேஷன்ஸ் எப்ப...?

    முடிஞ்சது ஸார்...

    ரிஸல்ட்...?

    வந்துடுச்சு... அமோக மார்க்...

    லக்ஷ்மண் கிருஷ்ணகுமாரின் முகத்தைத் தட்டினான்.

    குட்...!

    அருந்ததியும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

    இப்போ எந்த இயர் பண்றே...?

    ஃபோர்த் இயர் மேடம்...

    அடுத்த வருஷம் ஹவுஸ் சர்ஜனா...?

    "ஆமா...

    வெரிகுட்... இன்னும் ஒரே வருஷத்தில் டாக்டராயிடுவே...?

    எல்லாம்... ராக்கேஷ் ஸாரோட நல்ல மனசாலதான் மேடம்...

    அவன் சொன்ன விநாடி அந்த அறிவிப்பு காதை வருடியது.

    அவர்கள் எதிர்பார்க்கிற விமானம் வரப் போவதை இந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவித்தார்கள். தொடர்ந்து வந்த நிமிஷங்களில் ஃப்ளைட் ஒசை காதுக்குள் பாய்ந்தது. லவுஞ்ச்சில் கொஞ்சம் சுறுசுறுப்பு அலைந்தது. ரன்வேயில் கால் பதிக்க அனுமதி கேட்டு - வட்டமடித்துக் கொண்டிருக்கிற சில்வர் நிற ஏர் பஸ் பறவையாய் தெரிந்தது. உட்கார்ந்திருந்த சிலர் இருக்கைகளை காலி செய்துவிட்டு ஆர்வ உணர்வோடு எழுந்து வந்தார்கள்.

    உலோகப் பறவை ரன்வேயை உரசியது.

    அவசர கதியில் ஸ்டெப்ஸ் இணைக்கப்பட - உள்ளிருந்து பயணிகள் வரிசையாய் படிகளில் இறங்க ஆரம்பித்தார்கள்.

    லக்ஷ்ம ண் - அருந்ததி - கிருஷ்ணகுமார் -

    மூன்று பேருமே...

    ராக்கேஷின் உருவம் தெரிகிறதா என்று ஆர்வத்துடன் ஸ்டெப்ஸில் கண்களை - நிலை குத்த விட்டிருந்தார்கள். அவர்கள் நிற்கிற இடத்திலிருந்து விமானப் படிகள் ஓரளவு அடையா ளம் தெரிகிற தூரத்தில் இருந்தது.

    இறங்கி வருகிற' பயணிகளின் அடர்த்தி குறைய ஆரம்பித்தது.

    இந்த ஃப்ளைட்லதானே வர்றதா சொன்னார்...

    ஆமா...

    தவிப்போடு ஸ்டெப்ஸையே பார்த்தபடி - இருந்த மூன்று பேரும் –

    சட்டென மகிழ்ச்சிப் பிரதேசத்தில் விழுந்தார்கள். அந்த மிடி அணிந்த பெண்ணைத் தொடர்ந்து இறங்கி வந்து கெண்டிருந்தான் ராகேஷ்.

    வர்றார்...

    அருந்ததி

    Enjoying the preview?
    Page 1 of 1