Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ainthu Gram Nilavu
Ainthu Gram Nilavu
Ainthu Gram Nilavu
Ebook157 pages48 minutes

Ainthu Gram Nilavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ainthu Gram Nilavu

Read more from Rajeshkumar

Related to Ainthu Gram Nilavu

Related ebooks

Related categories

Reviews for Ainthu Gram Nilavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ainthu Gram Nilavu - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    பரிதி, கம்ப்யூட்டர் அறையின் மையத்தில் இருந்தார். சுற்றிலும் அதிசயமான விஞ்ஞானம் சிதறியிருந்தது. ஒரு விநாடிக்கு ஐம்பது மெகா ஃப்ளாப் ஓடக்கூடிய கம்ப்யூட்டர்கள் அவருடைய ஆணைக்காகக் காத்திருந்தன. ஆப்டிகல் காமிராக்கள் பொருத்தப்பட்ட ரோபோட்கள் அவரையே விசுவாசமாய் பார்த்தன. ஒரு மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டரில் கவனமாய் இருந்த பரிதியை - பக்கத்திலிருந்த டெலிபோன் 'முணு முணு' என்று கூப்பிட்டது. ரிஸீவரை எடுத்து பட்டனைத் தட்டியதும் - மானிட்டரின் திரையில் சோலை தெரிந்தாள். சிரித்தாள். அழகான பல் வரிசையில் கேட்டாள்.

    நான் உள்ளே வரலாமா தலைவரே...?

    வா...

    காசி வந்தாயிற்றா...?

    இன்னும் வரவில்லை. அவனுக்கு முக்கியமான ஒரு வேலையை கொடுத்து அனுப்பியிருக்கிறேன்...

    எங்கே...?

    ஏரோடைனமிக்ஸ் நிர்வாகத்தில் ஒரு சிக்கல். சரி செய்யப் போயிருக்கிறான். இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவான்... நீ உள்ளே வா...

    ரிஸீவரை வைத்ததும் மானிட்டரில் சோலையின் அழகான உருவம் வரி வரியாய் கரைந்து போயிற்று.

    சோலைக்காக காத்திருந்த பரிதிக்கு அறுபது வயது இருக்கலாம். அடுத்த வருஷமான 2050 பிறந்தால் அவருக்கு அரசாங்கம் ஓய்வு கொடுத்து விடும். அறுபது வயதுக்குரிய தளர்ச்சி அவரிடம் இல்லை. உடம்பு இன்னமும் கற்பாறை மாதிரிதான் இருந்தது. பல் வரிசையில் எனாமலின் ஆரோக்கியம் தெரிந்தது. மண்டையில் மட்டும் பாதி முடி கொட்டிப் போய் - எவர்சில்வர் பாத்திரத்தின் பளபளப்போடு பாதி மண்டை மின்னியது. கழுத்திலிருந்து முழங்கால் வரை - எந்தப் பிடிப்பும் இல்லாமல் தொள தொளவென்று - ஒரு க்ரே நிற அங்கியைத் தரித்திருந்தார். கால்களில் மிருதுவான ஷூக்களை... மாட்டியிருந்தார்.

    சோலை எலக்ட்ரானிக் கதவை - ஒரு சின்ன சங்கீத சத்தத்தோடு திறந்து கொண்டு உள்ளே வந்தாள். மிக அழகாக இருந்தாள். தாமிர நிற பனியனும் - நீளமான கால்சராயும் தரித்திருந்தாள். உடையில்லாத உடம்பின் பாகங்கள் ஒரு அசாதாரணமான மினுமினுப்போடு இருந்தது. அணிந்திருந்த பனியன் இறுக்கமான மார்புகளைக் காட்ட - தலைக்கேசம் அழகான ஒரு கொண்டையாக மாறியிருந்தது. உடம்பின் சகல இடங்களிலும் இளமைக் கொடி பறந்தது.

    வா... சோலை...

    சாப்பிட்டீங்களா தலைவரே...?

    இல்லை... இனிமேல்தான்...

    ஏன் இவ்வளவு நேரம்...?

    மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டரில் ஒரு மகத்தான சிக்கல். அரை மணி நேரமாய் தேடுகிறேன்... தட்டுப்படவில்லை...

    நான் பார்க்கட்டுமா...?

    வேண்டாம். சர்க்யூட்கள் மகா சிக்கல்... குழம்பி விடுவாய்... எனக்கு ரோஸ்ட் செய்த இரண்டு இறைச்சித் துண்டும். பால் கலக்காத டீயும் வேண்டும். தயாரித்துக் கொடு... சோலை...

    இதோ உடனே... - சொன்ன சோலை சுவரோரமாய் இருந்த எலக்ட்ரோ ஓவனுக்குப் பக்கத்தில் போனாள். பரிதி மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டரில் அந்தச் சிக்கலைத் தேடிக் கொண்டிருந்தபோது - டெலிபோன் மறுபடியும் முணு முணுத்தது. இரண்டே எட்டில் போய் ரிஸீவரை எடுத்தார். மானிட்டர் திரையில் - காசியின் முகம் ஊதா நிற வரிகளில் சிறிது கலவரமாய் தெரிந்தது.

    தலைவரே!

    என்ன காசி...?

    "அரசாங்க காவலாளிகளில் இருவர் என்னை பின் தொடர்ந்து வருகிறார்கள்...

    உளவுத்துறையைச் சேர்ந்தவர்களா...? பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களா...?

    "உளவுத்துறை ,,

    ஆபத்தான விஷயம்...! இப்போது நீ எங்கிருந்து பேசுகிறாய்...

    பாதாள ரயில் பாதையில் நூற்றி பதினாலாவது செக்டார் ஸ்டேஷனிலிருந்து...

    பொது டெலிபோனிலிருந்தா பேசுகிறாய்?

    ஆமாம்...

    இப்போது அந்த உளவுத்துறை காவலாளிகள் எங்கே இருக்கிறார்கள்...?

    என்னை ஜனத்திரளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்... அடுத்த சில நிமிஷங்களில் என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள். நிலைமை மிகவும் மோசம். என்ன செய்வது தலைவரே...?

    ஸ்டேஷனில் ஜனத்திரள் இருக்கிறதா...?

    இருக்கிறது...

    அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஓடி - அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாதா?

    முடியும் என்று தோன்றவில்லை. லேசர் துப்பாக்கிகளோடு அலைகிறார்கள்... தப்பித்து ஓடினால் நான் பஸ்பம்தான்...

    சரி... ஒரு காரியம் செய்...

    சொல்லுங்கள்...

    ஸ்டேஷன் கடிகாரத்தில் இப்போது நேரமென்ன...?

    ஐந்து முப்பத்தி மூன்று...

    சரியாய்... ஐந்து முப்பத்தைந்துக்கு... ‘செக்டார் ஐந்து' ஸ்டேஷனுக்குப் போகும் ரயில் ஒன்று வரும். அதில் எப்படியாவது தொற்றிக் கொள்...

    அதற்குள் அவர்கள் கண்டுபிடித்து விட்டால்...?

    கண்டு பிடிக்காதபடிக்கு மறைந்து கொள்வது உன் சாமர்த்தியம். நம் லட்சியம் நிறைவேற வேண்டும் என்கிற தாகம் உனக்கு இருக்கிறதல்லவா...?

    அதுதானே என் உயிர் மூச்சு...

    அப்படியென்றால் நீ தப்பித்துத்தான் ஆக வேண்டும்... இன்னும் இருபது நிமிட நேரத்திற்குள் நீ என் முன்னால் - முழுதாய் நிற்க வேண்டும்

    ரிஸீவரை பரிதி வைத்துவிட்டு திரும்ப - பேப்பர் பிளேட்டில் இறைச்சித் துண்டுகளோடு சோலை நின்றிருந்தாள்.

    தலைவரே!

    காசி ஆபத்தில் இருக்கிறான்...

    மானிட்டர் திரையில் அவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். காசியின் மேல் உளவுத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி சந்தேகம் ஏற்பட்டிருக்கும்...?

    ஏரோடைனமிக் நிர்வாகத்தில் உள்ள - ஒரு அரசு கம்ப்யூட்டரின் மெகாஃப்ளாப் வேகத்தை தெரிந்து வரச் சொன்னேன். அப்படியே காற்றுச் சுரங்கங்களின் பிரமாண்டத்தையும் யாருக்கும் தெரியாமல் பார்த்து வரச் சொன்னேன். முட்டாள் காசி... அங்கே ஏடாகூடமாய் ஏதாவது செய்து வைத்திருப்பான். அங்குள்ள உளவுப் படைக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கும். தொடர ஆரம்பித்து விட்டிருப்பார்கள்.

    காசி ஜாக்கிரதையாய் செயல்படுபவர் ஆயிற்றே...?

    கடந்த இரண்டு நாட்களாய் அவனிடம் தடுமாற்றம் அதிகம்...

    எப்படியும் தப்பித்து விடுவார்...

    பார்ப்போம்... இந்நேரம் 'செக்டார் ஐந்து' - ரயிலில் அவன் தொற்றியிருந்தால் - ஆறுமணிக்கெல்லாம் என் முன்னால் இருப்பான்.

    சரி... நீங்கள் இதைச் சாப்பிடுங்கள்... டீ தயாரித்து வருகிறேன்... சோலை நகர்ந்து போய் - கறுப்பு டீ தயாரித்து வந்தாள். பரிதி இறைச்சித் துண்டுகளை மென்று - வயிற்றுக்கு அனுப்பிவிட்டு - டீயை குடித்து முடிப்பதற்கும் - எலக்ட்ரானிக் கதவு வேகமாய் தள்ளப்படுவதற்கும் சரியாய்

    Enjoying the preview?
    Page 1 of 1