Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dial For Kill
Dial For Kill
Dial For Kill
Ebook107 pages43 minutes

Dial For Kill

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Dial For Kill

Read more from Rajeshkumar

Related to Dial For Kill

Related ebooks

Related categories

Reviews for Dial For Kill

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dial For Kill - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அந்த டெலிபோன் கால் வந்தபோது இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் - ஸ்டேஷனில் வைத்து ராத் தொழில் செய்த ஒரு பலான பெண்ணைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். நேரம் ராத்திரி பதினோரு மணி பத்து நிமிஷம். எதிர் பிளாட்பாரத்தில் ஒரு இன்ஸ்டன்ட் புரோட்டா கடை முளைத்து பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தோடு வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

    பைலில் ஏதோ ஒரு பேப்பரை தேடிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வேகமாய் போய் ரிஸீவரை எடுத்தார். சொன்னார்.

    ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்...

    மறுமுனையில் பதட்டமாய் ஒரு குரல்.

    இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் இருக்காரா...?

    இருக்கார்... நீங்க யார் பேசறது...

    நான் புரபசர் ராஜரத்னம் பேசறேன்...

    என்ன விஷயம் ஸார்...?

    ஸாரி... அது கொஞ்சம் பிரைவசி... நான் கோகுல்நாத் கிட்டே கொஞ்சம் பேசணும்... அவர் என்னோட ப்ரென்ட்...

    ஒன் மினிட் ஸார்...

    ரிஸீவரைக் கையால் பொத்திக் கொண்டு கோகுல்நாத் பக்கமாய் திரும்பினார் நவநீத கிருஷ்ணன்.

    ஸார்... உங்களுக்கு போன்... மிஸ்டர் ராஜரத்னம் வெயிட்டிங் ஃபார் யூ...

    மிஸ்டர் ராஜரத்னம்? கோகுல்நாத் வியப்பாய் கேட்டார்.

    ஆமா... ஸார்...

    ஆர்க்கியாலஜி... புரபசர்...?

    புரபசர்ன்னுதான் சொன்னார் ஸார்...

    முன்பக்க வழுக்கையைக் கீறிக்கொண்டே கோகுல்நாத் வேகவேகமாய் வந்து ரிஸீவரை வாங்கினார்.

    ஹலோ... ஐயாம் கோகுல்நாத்...

    கோகுல்நாத்... நான் ராஜரத்னம் பேசறேன்...

    என்ன... ராஜீ... இந்த நேரத்துல போன்...? என்ன விஷயம்...?

    ஒரு முக்கியமான விஷயம்.

    சொல்லு...

    எனக்கு போன்ல ஒரு மிரட்டல் கால்.

    மிரட்டல் காலா...? யார் பண்ணினாங்க...?

    "தெரியலை கோகுல்நாத்... பத்து நிமிஷத்துக்கு முன்னாடி யாரோ ஒருத்தன் எனக்கு போன் பண்ணி ஹிட்டன் ட்ரஷர்ஸ் ரிசர்ச் ரிப்போர்ட் உங்ககிட்ட இருக்கான்னு கேட்டான். நான் இல்லேன்னு சொன்னேன். ஆனா அவன் நம்பலை. எனக்குத் தெரியும் உங்ககிட்டே அந்த ரிப்போர்ட் இருக்கு... சண்டித்தனம் பண்ணாமே குடுத்துடுங்கன்னு சொன்னான். மறுபடியும் அந்த ரிப்போர்ட் என்கிட்டே இல்லேன்னு சொன்னேன். அவன் கோபமா பேச ஆரம்பிச்சுட்டான்... இன்னிக்கு ராத்திரி சரியா 12 மணிக்கு ஹோட்டல் ட்ராகன் அண்டர் பார்க்கு ரிசர்ச் ரிப்போர்ட்டோட வந்து ஏழாம் நெம்பர் டேபிள்ல உட்கார்ந்திருக்கணும். நான் அனுப்பற ஆள் உன்கிட்ட வருவான். ஒயிட் பேண்ட்... கையில தோல்பை வெச்சிருப்பான். அவன் உங்க டேபிளுக்கு வந்து - உங்க முன்னாடி உட்கார்ந்ததும் - அவன் கிட்டே அந்த ரிப்போர்ட்டைத் தந்துடணும்... நான் சொன்னபடி நீங்க ஹோட்டலுக்கு வரலைன்னா விடிஞ்சதும் நாளைக்கு உங்களுக்கு தகனக்கிரியை நடத்த வேண்டியிருக்கும்ன்னு சொல்லிட்டு உடனே ரிஸீவரையும் வெச்சுட்டான். கோகுல்நாத் விருட்டென்று நிமிர்ந்தார்.

    போன் எத்தனை மணிக்கு வந்தது ராஜீ...?

    இப்பதான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி...

    நிஜமாகவே உன்கிட்ட அந்த ரிசர்ச் ரிப்போர்ட் இருக்கா...?

    இருக்கு... அது ஹைலி கான்பிடேன்ஷியல் ரிப்போர்ட்...

    அவன்கிட்டயிருந்து மறுபடியும் போன் வந்ததா...?

    வரலை...

    உன்னோட வீட்ல இப்போ யார் யார் இருக்காங்க...?

    நானும் என்னோட ஒய்ப் மட்டும்தான்...

    கோகுல்நாத் சொன்னார்.

    சரி... நீ வீட்லேயே இரு. ரெண்டு காப்ஸோட நான் இப்போ உன்னோட வீட்டுக்கு வர்றேன்... வந்து என்ன செய்யறதுன்னு பேசிக்கலாம்...

    மறுமுனையில் ராஜரத்னம் மறுத்தார்.

    நீ வீட்டுக்கு வராதே கோகுல்நாத்... போன் பண்ணின எதிரிங்க என்னோட வீட்டை வாட்ச் பண்ணிட்டிருப்பாங்க... நீ நேரா ஹோட்டல் ட்ராகனுக்கு வந்துடு... யூனிபார்ம் வேண்டாம். சாதாரண வேஷ்டி சர்ட்ல வந்து ஏதாவது ஒரு டேபிள்ல - உட்கார்ந்து எதையாவது வாங்கி சாப்பிட்டுகிட்டே என்னோட டேபிளை வாட்ச் பண்ணு... ஒயிட் சர்ட், ஒயிட் பாடி பேண்ட் தோல்பை விகிதம் எவனாவது வந்தான்னா அமுக்கிடு

    "பரவாயில்லை ராஜீ... உனக்கும் போலீஸ்காரனோடதுணிச்சல் இருக்கு... வேறொருத்தரா இருந்தா இந்நேரம் கதிகலங்கிப் போயிருப்பாங்க... ஆமா ஹோட்டல் ட்ராகன்

    Enjoying the preview?
    Page 1 of 1