Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakku Mattume Therintha Hema
Enakku Mattume Therintha Hema
Enakku Mattume Therintha Hema
Ebook123 pages41 minutes

Enakku Mattume Therintha Hema

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465544
Enakku Mattume Therintha Hema

Read more from Rajeshkumar

Related to Enakku Mattume Therintha Hema

Related ebooks

Reviews for Enakku Mattume Therintha Hema

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakku Mattume Therintha Hema - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அன்பே! நீ வானத்தைப் பார்.

    சூரியன் குளிரட்டும்.

    பூமியைப் பார்.

    பாலைவனங்கள் குளிர்படும்.

    நீ என்னையும் பார்.

    என் நெஞ்சமும் கொஞ்சம் குளிரட்டுமே!

    பாண்டிச்சேரி ஸ்லோமோஷனில் கனகாம்பர நிறத்தில் - விடிந்து கொண்டிருந்தது. ஆரோவில் போகும் ரோட்டில் ஐந்தாறு பங்களா. மாடி அறை ஜன்னல் ஒரு டேபிளின் மேல் உட்கார்ந்திருந்த அலாரம் டைம்பீஸ் 5.45-ல் தன் மொரமொரப்பான தொண்டையைத் திறந்து கத்தியது.

    சுபாகர் போர்வையினின்றும் வெளிப்பட்டான்.

    நல்ல சிவப்பு. கட்டிலினின்றும் இறங்கினான். நல்ல உயரம்.

    டைம்பீஸின் தலையைத் தட்டி சாந்தப் படுத்திவிட்டு - வாஷ்பேசினுக்கு போய் - கண்ணாடி முன் நின்றான். அடர்ந்த கேசம். கொஞ்சம் பெண்மைத்தனமான முகத்தில் ரோஸ் நிற உதடுகளுக்கு மேலே புஷ்டியான மீசை. கெட்டியான மோவாயில் ஒரு செல்வக் குழி.

    வாஷ்பேசின் குழாயைத் திருகி - ஜில்லென்ற நீரை இரண்டு கைகளாலும் பிடித்து முகத்தில் அறைந்து - சுறுசுறுப்பைக் கொஞ்சம் சார்ஜ் செய்து கொண்டு கண்ணாடியினின்றும் அகன்று - டர்க்கி டவலால் முகத்தை ஒற்றியபடி - அறையினின்றும் வெளியே வந்தான்.

    குட்மார்னிங் மை டியர் சன்...

    குரல் கொடுத்துக் கொண்டே மாடிப் படிகளில் ஜாக்கிங் சூட்டோடு ஏறிவரும் அவனுடைய அப்பா கண்ணபிரான் கண்ணில் பட, முகம் மலர்ந்தான் சுபாகர்.

    குட்மார்னிங் டாட்...

    நான் ரெடி... வெளியே புறப்பட...

    மூச்சு வாங்கிக் கொண்டே மாடிப்படியின் உச்சிக்கு வந்த கண்ணபிரானுக்கு ஐம்பத்தைந்து வயது. தளர்ந்து போகாத எக்சர்சைஸ் உடம்பு. முடி கொட்டிப்போன வழுக்கை மண்டை மட்டும் - அப்பட்டமாய் அவருடைய வயதைக் காட்டிக் கொடுத்தது.

    நானும் ரெடி டாட்... காப்பியை மட்டும் உள்ளே தள்ளிக்கிட்டு வந்துடறேன் சொல்லிக் கொண்டே படியிறங்க முயன்றவன் - காப்பி டம்ளரோடு மாடிப்படி ஏறிவரும் அவனுடைய தங்கை சொர்க்கா தெரிந்தாள். இருபது வயது. தோற்றத்தில் இனிப்பு காட்டினாள்.

    அண்ணா! உனக்கு அட்டகாசமான குட்மார்னிங்

    உனக்கும் அதே...

    காப்பியை உள்ளே தள்ளு... ஹாஸ்பிடலில் இருந்து போன் வர்றதுக்கு முந்தி அப்பாவோடு வெளியே புறப்பட்டுடு...

    இதோ... இதோ...

    காப்பி டம்ளரை வாங்கி உதட்டுக்குக் கொண்டுபோக முயன்றவன் - பக்கத்து அறையில் டெலிபோன் மணி அடிக்கும் சத்தம் கேட்டு - டம்ளரை சொர்க்காவிடம் நீட்டிவிட்டு - அறைக்குள் ஓடினான்.

    மேஜை மேலிருந்த பிரியதர்சனியை அள்ளினான்.

    ஹலோ...!

    டாக்டர் சுபாகர் இருக்காரா...?

    எஸ்... ஹோல்டிங்...

    டாக்டர்! நாங்க இங்கே அரவிந்தன் ஸ்ட்ரீட்ல இருந்து பேசறோம். ஒரு பேஷண்ட்டை அட்டெண்ட் பண்ண நீங்க உடனடியா இங்கே வரமுடியுமா...?

    பேஷண்ட் ஆணா... பெண்ணா...?

    பெண்...

    உடம்புக்கு என்ன...?

    படுக்கையிலிருந்து இப்பத்தான் எந்திரிச்சா... உடனே கிட்டினஸ் மாதிரி ஏற்பட்டு கீழே விழுந்துட்டா. மயக்கத்தை தெளிவிக்கறதுக்காக என்னென்னமோ பண்ணிப்பார்த்தோம். இன்னமும் மயக்கம் தெளியலை.

    என்னோட நர்ஸிங் ஹோமுக்குக் கொண்டு வந்துடுங்களேன்.

    ஸாரி... டாக்டர்... எங்க கார் ரிப்பேர். இந்த நேரத்துல டாக்ஸியோ ஆட்டோவோ கிடைக்கிறது கஷ்டம். ஸோ கொஞ்சம் சிரமம் பார்க்காமே நீங்களே பங்களாவுக்கு வந்துடுங்க டாக்டர்... கேட்கிற ஃபீஸைத் தர்றோம்.

    சரியா அட்ரஸை சொல்லுங்க.

    நெம்பர் நாற்பத்தி ஒண்ணு, அரவிந்தா ஸ்ட்ரீட், நேரு பாலமந்திர் கட்டிடத்துக்கு கொஞ்சம் தள்ளி... ஒரு ப்ளு டிஸ்டெம்பர் பங்களா வரும். அதுதான். காம்பௌண்ட் கேட்டோட ரெண்டு பக்கமும் 'ஹேமாலயா'ன்னு எழுதி இருக்கும்...

    இப்ப வர்றேன்...

    சுபாகர் ரிஸீவரை வைத்துவிட்டு நிமிர - எதிரே கண்ணபிரானும், சொர்க்காவும் நின்றிருந்தார்கள். சொர்க்கா கோபமாய்க் கேட்டாள்.

    என்னண்ணா கேஸா...?

    ஆமா...

    வாரத்தில் பாதி நாள் ஜாக்கிங் போற நேரத்துல உனக்கு கேஸ் வந்துடும். ம்... காப்பியைக் குடிச்சுட்டு புறப்படு...! அப்பா...!

    என்னம்மா...?

    நீங்க ஜாக்கிங் போய்ட்டு சீக்கிரமா வாங்க... டிபன் பண்ணிக் குடுத்துட்டு நான் காலேஜுக்கு கிளம்பணும்.

    கண்ணபிரான் கிளம்பினார்.

    சுபாகர் காப்பியை வேகவேகமாய் தொண்டைக்கு வார்த்துக் கொண்டு ஹேங்கரில் தொங்கிய ஒரு பேண்ட் சர்ட்டுக்குள் நுழைந்து - மெடிக்கல் கிட்டோடு - போர்டிகோவில் நின்றிருந்த காருக்கு வந்தான்.

    பின்னாலேயே ஓடி வந்த சொர்க்கா கேட்டாள்.

    அண்ணா! கேஸை அட்டெண்ட் பண்ணிட்டு எத்தனை மணிக்கு வருவே?

    இப்பவே எப்படி சொல்ல முடியும்? கேஸை அட்டெண்ட் பண்ணிப் பார்த்த பிறகு தானே சொல்ல முடியும்...? லேட்டாகிற பட்சத்துல போன் பண்றேன்.

    சொல்லிக் கொண்டே காரைக் கிளப்பினான் சுபாகர். கார் காம்பௌண்ட் கேட்டைத்தாண்டி-

    Enjoying the preview?
    Page 1 of 1