Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inimel Indira
Inimel Indira
Inimel Indira
Ebook126 pages29 minutes

Inimel Indira

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Inimel Indira

Read more from Rajeshkumar

Related to Inimel Indira

Related ebooks

Related categories

Reviews for Inimel Indira

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inimel Indira - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஜெயந்த்...

    ம்

    எனக்குப் பயம்மாயிருக்கு...

    எதுக்குப் பயம்?

    டாக்டர் என்ன சொல்வாரோன்னுதான்...

    இதோ பார் மித்ரா... ரிசல்ட் எப்படியிருந்தாலும் அதை நாம ஸ்போர்ட்டீவா ஏத்துக்கணும்... தைரியமாயிரு...

    இல்லை ஜெயந்த்... எனக்கு கன்ஃபர்மா தெரியுது. இது கர்ப்பம்தான். பதினஞ்சு நாள் தள்ளிப் போயிருக்கு. காலையில் எந்திரிச்சதுமே மார்னிங் சிக்... வாமிட் வருது... தலையைச் சுத்துது. தாளிக்கிற வாசனை லேசா மூக்குக்குள்ளே போனாலே போதும். சிறுகுடலே வெளியே வர்ற மாதிரி வாந்தி. வேலைக்காரி தங்கம்மா என்னோட நாடியைப் பிடிச்சுப் பார்த்துட்டு என்ன சொன்னா தெரியுமா?

    என்ன சொன்னா...?

    எனக்கு ஆண் குழந்தைதான் பிறக்குமாம்...

    பரவாயில்லையே... நம்ம வீட்டு வேலைக்காரி தங்கம்மா 'கைனகாலஜிஸ்ட்'ன்னு ஒரு போர்டை மாட்டிகிட்டு டாக்டர் தொழிலைக்கூடப் பார்க்கலாம்... போலிருக்கே!

    என்னங்க...! உங்களுக்குப் பையன் வேணுமா? பொண்ணு வேணுமா...?

    இதோ பார் மித்ரா...! மொதல்ல டாக்டர் உன்னை செக் பண்ணி கன்ஃபர்மா நீ கன்சீவ் ஆகியிருக்கேன்னு சொல்லட்டும். அப்புறமா பொண்ணா பையனான்னு பேசிக்கலாம்.

    ஏன்... இன்னமும் உங்களுக்குச் சந்தேகமா? எனக்குச் சந்தேகமே கிடையாது. இன்னும் பத்து மாசம் கழிச்சு ஒரு குழந்தைக்கு நான் அம்மா. நீங்க அப்பா... பிறக்கப் போறது ஆண் குழந்தைதான்... நான் பேர்கூட வெச்சுட்டேன்... பேர் என்ன தெரியுமா?

    சொல்லு...

    சம்யுக்ராஜ்.

    பொண்ணாப் பொறந்துட்டா...?

    அது பையன்தான்...

    அதென்ன சம்யுக்ராஜ்? பேர் ஏதோ புராண கால டைப்ல இருக்கு...

    ஜெயந்த் மேற்கொண்டு பேசும் முன்பு நர்ஸ் டாக்டரின் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். குரல் கொடுத்தாள்.

    மிஸஸ் மித்ரா.

    ஜெயந்த், மித்ரா இருவரும் எழுந்தார்கள். நர்ஸ் புன்னகைத்தாள்.

    ஸார்... நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க... உங்க மனைவி மட்டும் வரட்டும்...

    ஜெயந்த் மறுபடியும் பாலிவினைல் நாற்காலிக்குச் சாய, மித்ரா டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள்.

    அவள் உள்ளே போகும்வரை காத்திருந்த ஜெயந்த் தன்னுடைய செல்போனை எடுத்துச் சில எண்களைத் தட்டிவிட்டுக் காதுக்கு ஒற்றினான். மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டு ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

    ஹலோ... சூர்யா நர்ஸிங் ஹோம். டாக்டர் சூர்யநாராயணன் இருக்காரா?

    இருக்கார்... நீங்க?

    நான் ஜெயந்த்... அவரோட நண்பர். அவர்கிட்டே கொஞ்சம் பேசணும்... ஒரு நிமிஷம்... ஜெயந்த் காத்திருக்க, அடுத்த சில விநாடிகளில் டாக்டர் சூர்ய நாராயணனின் குரல் கேட்டது.

    சொல்லுங்க ஜெயந்த்... என்ன விஷயம்?

    டாக்டர்...! நானும் என்னோட மனைவி மித்ராவும் இப்போ ஹெலன் ஹாஸ்பிட்டலில் இருக்கோம்.

    உங்க மனைவி மித்ராவை டாக்டர் ரோகிணி செக் அப் பண்ணிப் பார்த்துட்டாங்களா?

    இல்லை டாக்டர்... இப்பத்தான் டாக்டரின் அறைக்குள்ளே போயிருக்கா... இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசல்ட் தெரிஞ்சுடும்.

    மறுமுனையில் டாக்டர் சிரித்தார்.

    இதோ பாருங்க ஜெயந்த்... நீங்க மனசைப் போட்டுக் குழப்பிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் கிடையாது. உங்களாலே எப்போதைக்குமே உங்க மனைவியைத் தாயாக்க முடியாது. இது ஒரு நூறு சதவீத உண்மை. உங்க மனைவி நிச்சயமா கன்சீவ் ஆகியிருக்க மாட்டாங்க...

    பதினஞ்சு நாள் தள்ளிப் போயிருக்கே, டாக்டர்?

    அது வேறு ஏதாவது பிரச்சனையா இருக்கலாம்

    "டாக்டர் இந்த விசயத்தை மித்ராகிட்ட சொல்ல வேண்டாம்.

    ஜெயந்த்! மனைவிகிட்டே இது மாதிரியான உண்மைகளை மறைக்கிறது பின்னாடி பல பிரச்னைகளை உண்டாக்கிடும்...

    டா... டாக்டர்... வந்து...

    சொல்லுங்க...

    நான் ஒண்ணு சொன்னா நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது...

    இதோ பாருங்க ஜெயந்த்... நீங்க எனக்கு மொதல்ல நண்பர். அப்புறம்தான் பேஷண்ட். டோண்ட் ஹெசிடேட் நீங்க எந்த ஒரு விஷயத்தையும் என்கிட்டே தயக்கம் இல்லாமே சொல்லலாம்.

    டாக்டர்...! நான் ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாத அளவுக்கு என்னோட குறை நிரந்தரமானதுன்னு சொன்னீங்க. இந்தக் குறையை வெளிநாட்டுக்குப் போனா குணப்படுத்திக்க முடியாதா...?

    "வெரி ஸாரி ஜெயந்த்...! அப்படியொரு நிவாரணம் இருந்தா உங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த அன்னிக்கே சொல்லியிருப்பேன். உங்களுடைய குறையைக் குணப்படுத்திக்க எந்த வெளிநாட்டுக்குப் போனாலும் அது வீண் செலவாகவே அமையும். இது என்னோட சஜஷன் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் நம்பிக்கையிருந்தால் தாராளமாய் வெளிநாட்டுக்குப் போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம்... அதுக்கு வேண்டிய மெடிக்கல் அஸிஸ்டன்ஸ் வேணும்னாலும் நானே தர்றேன்...

    "வேண்டாம் டாக்டர்...! நீங்க இவ்வளவு தீர்க்கமா சொன்ன பிறகு இனிமே அதைப் பத்தின

    Enjoying the preview?
    Page 1 of 1