Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pagal Nera Alligal
Pagal Nera Alligal
Pagal Nera Alligal
Ebook160 pages55 minutes

Pagal Nera Alligal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Pagal Nera Alligal

Read more from Rajeshkumar

Related to Pagal Nera Alligal

Related ebooks

Related categories

Reviews for Pagal Nera Alligal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pagal Nera Alligal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    பனியின் நிறத்திலிருந்த 'மாருதி 1000' கார் பங்களாவின் முகப்புப் படிகளின் ஓரமாய் வந்து நின்றது. என்ஜின் தன் சன்னமான உறுமலை நிறுத்திக் கொள்ள காருக்குள்ளிருந்து இறங்கினார் தேவநாதன். ஆறடி உயரத்துடன் கம்பீரமான தோற்றம். இலவம் பஞ்சு வெள்ளையில் மடிப்புக் கலையாத வேட்டி, சட்டை. தங்க பிரேமிட்ட கண்ணாடி.

    வெள்ளை சீருடை அணிந்த டிரைவர் பைல்கள் அடங்கிய சிறிய பெட்டியை உள்ளே கொண்டு செல்ல - தொடர்ந்து தேவநாதன். ஹாலுக்குள் நுழைந்தார்.

    ஹாலில் சில உறவினர்களுக்கு மத்தியில் அவருடைய மனைவி காந்தாமணி தெரிந்தாள். காதுகளில் வைரம் டாலடித்தது. ஜரிகை நிறைந்த பார்டரோடு மயில் கழுத்து நிறத்தில் பட்டுச்சேலை. கணவரை பார்வையில் வாங்கியதும் வேகவேகமாய் அவரை நோக்கி வந்தாள்.

    முகத்தில் மே மாத சென்னை வெய்யிலின் வெப்பம்.

    காலைல பதினோரு மணிக்கு உங்களுக்கு போன் பண்ணினேன். இப்போ வர்றிங்களே சாவகாசமா...

    நீ போன் பண்ணி சொன்னதுமே புறப்பட நினைச்சேன்... காந்தா! ஆனால் ஆதம்பாக்கத்தில் நான் தொடங்கியிருக்கிற புதுத் தொழிற்சாலையைப் பார்க்கறதுக்காக டெல்லியிலிருந்து திடீர்ன்னு இன்னிக்கு விசிட்டர்ஸ் வந்துட்டாங்க. அவங்க மூலமா சில கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் கிடைக்கிற வாய்ப்பு இருந்தது. அதனால் தொழிற்சாலையைக் காட்டவும், வியாபாரம் பேசி முடிக்கவும், நானே அவங்க கூட போக வேண்டியதா ஆயிடுச்சு.

    அடுத்த மாசம் சரியா இதே தேதியில் நம்ம பொண்ணு தாரிகாவுக்கு முகூர்த்தம். அன்னிக்கு மும்பையிலிருந்து யாராவது விசிட்டர்ஸ் வந்துடப் போறாங்க. பொண்ணோட அப்பாங்கற முறையில் நீங்க அன்னிக்கு கூட இருந்தே ஆகணும்... ஆபீஸ்... தொழிற்சாலைன்னு போக முடியாது.

    காந்தாமணியைப் பார்த்துப் புன்னகைத்தார் தேவநாதன்.

    என்மேல ரொம்ப கோபமா இருக்கேன்னு நினைக்கறேன்...

    பின்னே என்னங்க... வியாபாரத்தை எப்பவும்தான் கவனிக்கறீங்க... கொஞ்சம் கல்யான காரியங்களையும் பார்க்க வேண்டாமா...?

    நம்ம அந்தஸ்த்துக்கும், வசதிக்கும் தகுந்த - மாதிரி ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து சம்பந்தம் பேசிக் கொடுத்துட்டேன். அதோட என் வேலை முடிஞ்சது... மத்த காரியங்களையெல்லாம் கவனிச்சிக்கத்தான் நீ இருக்கியே...! அது சரி இன்னிக்கு என்ன விசேஷம்...! வீட்ல சொந்தக்காரங்க கூட்டம்...!

    ஹால் கார்ப்பெட்டின் மேல் நைலான் பாயை விரித்து அதில் குவித்துப் போட்டிருந்த பட்டுச்சேலையைக் காட்டினாள். நிறங்கள் கண்ணைப் பறித்தன.

    கல்யாணச்சேலை எடுக்கப்போறோம்ன்னு நேத்திக்கே சொன்னேனே...

    எனக்கு சேலையைப் பத்தி என்ன தெரியும்... அதெல்லாம் உன் சமாச்சாரம்.

    மாப்பிள்ளையோட அப்பா வந்திருந்தார்... தெரியுமோ...!

    அவர் துணி வியாபாரம் பண்ணிட்டிருக்கார். அதனால் அவருக்குச் சேலையைப் பத்தி தெரிஞ்சிருக்கும். அதனால வந்திருப்பார்...

    எதைக் கேட்டாலும் ஒரு பதில்

    சேலையைக் கட்டப் போறது தாரிகா... அவளுக்குப் பிடிச்சிருந்தா சரி... எங்கே தாரிகா...!

    மாடியில் இருக்கிறாள்...

    அவளைக் கூப்பிடு...

    காந்தாமணி படிகளில் உயர்ந்து "தாரிகா' என்று குரல்கொடுக்க தாரிகா பிரசன்னமானாள்.

    சினிமா டைரக்டர்கள் தேடும் காமிராவுக்கு பிடித்த முகம். அளவுகள் பிசகாத உடம்பு. ரோஜா நிற சல்வார் கமீஸ் அவள் உடலை மொத்தமாய் விழுங்கியிருந்தது. தேவநாதனை பார்வையில் வாங்கியதும்... பற்பசை விளம்பரச் சிரிப்போடு கேட்டாள்.

    கூப்பிட்டீங்களாப்பா...!

    அவள் வலது கையில் ஸ்கெட்ச் பேனா. இடது கையில் சில திருமணப் பத்திரிகைகள்.

    ஆமாம்மா...

    என்ன விசயம்...!

    கல்யாணச்சேலை உனக்குப் பிடிச்சதா...?

    நைஸ்... வெரி நைஸ்... மூணு மணி நேரம் போராடி நான் செலக்ட் பண்ணினேன். எனக்கு ரொம்பப் பிடிச்சது...

    உங்கம்மாவுக்கு நான் வரலைன்னு கோபம்... நீ மூணு மணி நேரம் செலவழிச்சி இதை செலக்ட் பண்ணற வரைக்கும் என்னால் பொறுமையா காத்திருக்க முடியுமா...? நீயே சொல்லும்மா...

    அம்மாவோட பேச்சை கணக்கில் எடுத்துக்காதிங்கப்பா...

    பார்த்தியா என் பொண்ணை...!

    காந்தாமணி இருவரையும் மாறி மாறி முறைத்தாள்.

    அப்பப்ப அப்பாவும் மகளும் கூட்டணி சேர்ந்துகிட்டு என் காலை வாரிடுங்க...

    அம்மா...! அப்பா எவ்வளவு பிசியா இருக்கார். சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் அவரை எதிர்பார்க்காதே...

    நாளைக்கு உன் வீட்டுக்காரர் பிசியா இருக்கறப்பதான் உனக்கு இதெல்லாம் புரியும்...

    சரி... உங்க பிரச்சினைக்குள்ளே நான் மூக்கை நுழைக்கலை... இப்போதைக்கு நான் பிசி. கையிலிருக்கிற இந்தத் திருமணப் பத்திரிகைகளை எல்லாம் இன்னிக்குக் குடுத்து முடிச்சாகணும்...

    தாரிகா சொல்லிக்கொண்டிருக்கும்போதே -

    கீ...

    கீ...

    கீ...

    அருகிலிருந்து டெலிபோன் மிதமான சுருதியில் கூப்பிட ஆரம்பித்தது.

    ரிசீவரை எடுத்த காந்தாமணி வாயெல்லாம் புன்னகையாகி, மாப்பிள்ளை பேசறார்ங்க... என்றாள்.

    தேவநாதன் பரபரப்பாகி, ரிசீவரைக் கொடு... என்றார்.

    அவர் தாரிகாவைக் கேக்கறார்... உங்களை இல்லை...

    தாரிகா லேசான வெட்கத்தோடு ரிசீவரை வாங்கினாள். தேவராஜனும், காந்தாமணியும் நாகரிகம் கருதி விலகிக் கொள்ள - சன்னமான குரலில், அலோ... என்றாள்.

    நான் சுந்தர் பேசறேன்.

    சொல்லுங்க...

    சொல்றதுக்காக போன் பண்ணலை... கேக்கறதுக்காக போன் பண்ணினேன்...

    என்ன கேக்கணும்...?

    உன் குரலைக் கேக்கணும்...

    கேட்டூட்டிங்களா...!

    ம்...

    அப்போ போனை வைக்கட்டுமா...!

    என்ன அவசரம்...?

    அடுத்த மாசத்திலிருந்து என் குரலை கேட்டுகிட்டே இருக்கலாம்... இப்ப போனை வைச்சுடுங்க...

    ஏன் ஒரு மாதிரி படபடப்பா பேசறே...! அன்னிக்கு உன்கிட்டே ஒரு ஜோக் சொல்ல ஆரம்பிச்சேனே... அதோட தொடர்ச்சியை இப்போ சொல்லட்டுமா...?

    இப்போ ஹால்ல நின்னு பேசிட்டிருக்கேன்... ஹால் பூராவும் சொந்தக்காரங்க இருக்காங்க. என்னால் சாதாரணமா பேச முடியாது. நீங்க ஜோக் சொன்னாலும் சிரிக்க முடியாது... இராத்திரி ஒன்பது மணிக்கு போன் பண்ணுங்க... என் அறையில் உங்க போனுக்காக காத்திருக்கேன்."

    அதென்ன இராத்திரி ஒன்பது மணி... இப்பவே உன் அறைக்கு போயிடு... பத்து நிமிடம் கழிச்சு கூப்பிடறேன்...

    "இப்போ

    Enjoying the preview?
    Page 1 of 1