Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Priyaathe Priya
Priyaathe Priya
Priyaathe Priya
Ebook156 pages36 minutes

Priyaathe Priya

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Priyaathe Priya

Read more from Rajeshkumar

Related to Priyaathe Priya

Related ebooks

Related categories

Reviews for Priyaathe Priya

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Priyaathe Priya - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஹோட்டலுக்குள் கார் நுழைந்து - போர்டிகோவில் அடைக்கலமாகி அணைந்ததும் - பிரியா கீழே இறங்கினாள். அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின், மத்தியான நேரம் சோம்பலாயிருந்தது. பக்கவாட்டில் தெரிந்த ராபின் ப்ளு நீச்சல் குளத்தில் மட்டும் லேசாய் ஆரவாரம். ஸ்விம்மிங் சூட்களில் ஆங்கிலோ இந்தியப் பெண்களின் கேரட் நிற உடம்புகளை - பார்வையில் வாங்கிக் கொண்டே வரவேற்பறைக்குள் நுழைந்தாள் பிரியா...

    வெளிர் மஞ்சள் நிற சல்வார் கம்மீஸில் இருந்த பிரியாவுக்கு வயது 240 மாதங்கள். சமீபத்திய நடிகைகளில் லேசாய் கெளதமியை ஒத்துப் போயிருந்தாள். ஈஸ்ட்மென் நிறக் கனவுகளோடு கண்கள். ஸ்டெல்லா மேரீஸில் பி.ஏ. இறுதியாண்டு மாணவி. 'பிரியா டிஸ்பிளேஸ்' அட்வர்டைசிங் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் - வித்யாகரின் ஒரே புத்திரி. இவள் ஒருவனைக் காதலிக்கிறாள். அதன் விவரங்களைப் பின்னால் வரும் பாராக்களில் பார்க்கலாம்.

    பிரியா கெளண்டரை நெருங்கினாள். மானேஜர் என்று சட்டைப் பையில் வில்லைக் குத்தியிருந்த நபர் கழுத்து டையை இறுக்கிக் கொண்டு நிமிர்ந்தார்.

    எஸ்...

    ஒரு மேரேஜ் ரிசப்ஷனுக்கு ஹால் வேண்டும்.

    என்றைக்கு?

    இன்று இரவு ஏழுமணிக்கு.

    அக்காமடேஷன் கெப்பாஸிடி...?

    நூறு பேர்...

    அப்படியானால் ஃபர்ஸ்ட் ப்ளோரில் இருக்கிற கங்கா ஹாலையே நீங்க எடுத்துக்கலாம்...

    அதற்கு நான் எவ்வளவு 'பே' பண்ண வேண்டும்?

    ரிசப்ஷன் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம் நடக்கும்...?

    இரண்டு மணி நேரம்...

    ஒரு மணி நேரத்திற்கு வாடகை இரண்டாயிரம் ரூபாய்... போர்டிங் அயிட்டம்ஸ் பர் ஹெட் ஃபிப்டி ரூப்ஸ் ஆகும்...

    பிரியா - தன் ஹேண்ட்பேக்கின் ஜிப்பைப் பிரித்து - ஐம்பது ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை எடுத்து - மேஜையின் மேல் வைத்தாள். இந்த ஐயாயிரத்தை அட்வான்ஸாக வைத்துக்கொள்ளுங்கள். மீதியை பில் செட்டில் பண்ணும் போது குடுத்துவிடுகிறேன்."

    சரியாய் ஏழுமணிக்கு பங்க்ஷனை ஆரம்பித்து ஒன்பது மணிக்கு முடித்துவிட வேண்டும். ரிசப்ஷனுக்கு ஹாட் ட்ரிங்க்ஸ் வேண்டுமா...?

    வேண்டாம்...

    ஹோட்டலின் மானேஜர் - ரசீது புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே கேட்டார். "உங்க நெம்...?

    பிரியா...

    அட்ரஸ்

    நெம்பர் செவன் வித்யாகர் பவன் க்ரீன்வேஸ் ரோட்

    மானேஜர் வியப்பாய் நிமிர்ந்தார்.

    நீங்க மிஸ்டர் வித்யாகரோட டாட்டரா...?

    ஆமாம்...

    வீட்ல யார்க்கு கல்யாணம் நடந்தது?

    என்னோட அப்பாவுக்கு...

    சில விநாடிகள் ஸ்தம்பித்துப் போன மானேஜர்க்கு - பிரியாவின் நிதானமான பேச்சும், நடத்தையும் ஆச்சர்யமாக இருந்தது.

    சீக்கிரமா... ரசீதைப் போட்டு தர்றீங்களா...?

    ஸாரி... இதோ...! - மானேஜர் வேகமாய்! ரசீதை நிரப்பி - கையெழுத்தைப் போட்டுக் கொடுக்க - பிரியா வாங்கி ஹேண்ட்பேக்குக்குள் போட்டுக் கொண்டே சொன்னாள்.

    பொண்ணும். மாப்பிள்ளையும்... சரியா ஏழு மணிக்கெல்லாம் வந்துடுவாங்க... வெளியே வெக்கிற அனௌன்ஸ் மெண்ட் போர்டில் 'வித்யாகர் - சசிகலா' மேரேஜ் ரிசப்ஷன் 7.Pm To 9. P.M, என்கிற வாசகங்கள் இருக்கட்டும்.

    மானேஜர் தலையாட்டினார். பின் தயக்கமாய் கேட்டார்.

    ரிசப்ஷன்ல என்னென்ன அயிட்டம் பரிமாறலாம்...?

    ஹெவியா வேண்டாம்... சிம்ப்ளாவே இருக்கட்டும், ரிசப்ஷனுக்கு வர்ற ஆசாமிகளில் பெரும்பாலோர்க்கு பி.பியும் சுகர் கம்ப்ளைய்ண்ட்டும் இருக்கும்...

    ஆர்க்கெஸ்ட்ரா... வேணுமா...?

    வேண்டாம்...

    ரிசப்ஷன் நடக்கப் போகிற ஹாலில் ப்ளவர். டெக்ரேஷன்ஸ் இருக்கட்டுமா?

    வேண்டாம்...

    ஓ.கே. ஏழு மணிக்கு ஹால் ரெடி யாயிடும்...

    தாங்க்யூ... - பிரியா ஹேண்ட்பேக்கை தோளில் சரித்துக் கொண்டு புறப்பட்டாள். அவள் பத்தடி நகர்ந்ததுமே - ஹோட்டல் மானேஜர் - பக்கத்திலிருந்த டெலிபோன் ஆபரேட்டர் பெண்ணிடம் சிரிப்போடு திரும்பினார்.

    நடக்கிற காலம் கலிகாலம்ன்னு சொல்றது உண்மைதான். அப்பாவோட ரெண்டாவது கல்யாணத்துக்கு மகளே ரிசப்ஷன் ஹாலை 'புக்' பண்ண வந்திருக்கா...! வீட்ல ஒரு வயசுப் பொண்ணு இருக்கும் போது... கிழட்டு அப்பன்காரன் பண்ற காரியமா இது... வயசுப் பசங்க கூட ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கறாங்க... ஆனா இந்த கிழடுக இருக்கே...?

    மானேஜர் பேசிக் கொண்டிருக்கும் போதே -

    பிரியா சட்டென்று திரும்பினாள். கண்களில் கோபம் ஜ்வலிக்க கெளண்டரை நோக்கி வந்தாள். ஹேண்ட்பேக்கைத் திறந்து - மடித்து வைத்திருந்த ரசீதை எடுத்து - கௌண்டர் பலகையின் மேலே வைத்தாள்.

    பணத்தை ரீபண்ட் பண்ணிடுங்க... மானேஜர் எச்சில் விழுங்கினார். ஏ...ஏன்...?

    இங்கே எங்கப்பாவோட ரிசப்ஷன் நடக்கிறது எனக்கு பிடிக்கலை... ப்ளீஸ்... பணத்தை ரீபண்ட் பண்ணிடுங்க...

    ஸாரி... நான் பேசினதை நீங்க கேட்டுட்டீங்க போலிருக்கு. ஐயாம் வெரி... வெரி... ஸாரி...

    எங்கப்பாவுக்கு வயசு எவ்வளவு தெரியுமா...? நாற்பத்தியாறு. அவரோட முதல் மனைவி... ஐ மீன் என்னோட அம்மா இறந்த போது அவர்க்கு வயசு முப்பத்தஞ்சு. கடந்த பதினோரு வருஷ காலமா. அவர் தன்னோட ரெண்டாவது கல்யாணத்தை நினைச்சுக் கூட பார்த்ததில்லை... போன ஆறுமாசகாலமா நான் வற்புறுத்தி வந்ததினாலதான் அவர் இந்தக் கல்யாணத்துக்கே ஒத்துகிட்டார்.

    எனக்கு கல்யாணமாகி நான் ஒருத்தர் வீட்டுக்கு போன பின்னாடி - அவரை நல்லபடியா கவனிச்சுக்க ஒரு நம்பகமான துணை வேணும்ங்கிற காரணத்துக்காகத்தான் இந்த கல்யாணம். மற்ற படி நீங்க நினைக்கிற மாதிரி... ஒரு பொண்ணோட சரீர சுகத்துக்காக ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல.

    ஸாரி... மிஸ்...

    இதையும் கேட்டுகிட்டு ஒட்டுமொத்தமா ஸாரி சொல்லிடுங்க. எங்கப்பாவுக்கு வாழ்க்கை பட்டிருக்கிற... அந்த பெண் ஒரு விதவை. வயசு முப்பத்தாறு. என்கூட காலேஜில் படிக்கிற பொண்ணோட அக்கா...

    "எக்ஸ்ட்ரீம்லி ஸாரி... உண்மை

    Enjoying the preview?
    Page 1 of 1