Uyirin Niram Ootha
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Uyirin Niram Ootha
Related ebooks
Thevai Oru Devathai... Rating: 4 out of 5 stars4/5Oru Januaryin Gnayitrukilamai Rating: 0 out of 5 stars0 ratingsAthiradi Aattam! Rating: 4 out of 5 stars4/5Neruppu Nimishangal Rating: 4 out of 5 stars4/5Vida Maattan Vivek Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Ithu Thadai Seiyapatta Paguthi Rating: 4 out of 5 stars4/5En Desiya Geetham Rating: 2 out of 5 stars2/5Nadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5Karuppu Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsUlagai Vilai Kel Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Poruthathu Pothum Vivek! Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Karuppu Malligai Rating: 4 out of 5 stars4/5Iravu Thamarai Rating: 3 out of 5 stars3/5Vivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsBombaykku Pathavathu Mileil... Rating: 1 out of 5 stars1/5Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Kaatru Urangum Neram... Rating: 5 out of 5 stars5/5Silent Killers Rating: 0 out of 5 stars0 ratingsNandhini 440 Volts Rating: 4 out of 5 stars4/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Minnalaai vaa vivek Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Evan Avan and Poovil Seitha Aayutham! Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for Uyirin Niram Ootha
4 ratings0 reviews
Book preview
Uyirin Niram Ootha - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
டிஸ்கவரர் -5 ராக்கெட் தன் வாலில் ஆரஞ்சு வர்ணப் பிழம்போடு வானவெளியின் அந்தகார இருட்டை அறுத்தபடி பீறிட்டுக்கொண்டிருந்தது.
ராக்கெட்டின் முன்புறத்தளமான காப்ஸ்யூலில் - சிவப்பு நிறம் பரவியிருக்க - அந்த ஊதா நிறத்தின் மையத்தில் - ஸ்பேஸ் சூட்டோடு அந்த மூன்று பேரும் மல்லாந்து மிதந்து கொண்டே கண்ட்ரோல் பேனலின் பச்சைத் திரையைப் பார்த்தார்கள்.
பச்சைத்திரையின் பின்னணியில் - எலக்ட்ரானிக் சிஸ்டம் உயிர்ப்பித்துக் கொடுத்த விண்வெளிப்பாதை, வைரக்கோடு மாதிரித் தெரிந்தது. கம்யூனிகேஷன் சிஸ்டத்தில் சிவப்பும் மஞ்சளும் மாறி மாறி ஒளிர்ந்து கொண்டிருந்தன.
கீழே பூமியிலிருந்து - கண்ட்ரோல் டவரிலிருந்து - பிசிறடிக்காத குரலில் மைக்ரோ போன் கரகரத்தது.
மூன்று பேரும் எப்படி உணர்கிறீர்கள்?
அற்புதம்...
ரிமோட் கண்ட்ரோல் யூனிட்டில் சென்ற ஏழாவது நொடி ஒரு சின்ன தவறு ஏற்பட்டுக் கண்ட்ரோல் சிஸ்டத்தால் சரி செய்யப்பட்டது... ரோஜர்...
கவனித்தோம்...
தெர்மல் கண்ட்ரோல் சிஸ்டம்...?
ஆரோக்கியமாய் இருக்கிறது...
டெலிமெட்ரி யூனிட்?
பிரமாதம்...
ப்யூவல் டாங்க்...?
திருப்திகரம்.
நீங்கள் மூன்று பேரும் பதினோரு நிமிஷம் முப்பத்தி மூன்று விநாடிகள் கழித்து இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கப் போகலாம்...
நன்றி...
பேனலின் வீடியோ திரையில் நட்சத்திரங்களும், கிரகங்களும் சின்னச் சின்ன வெளிச்ச மூட்டைகளாய்த் தெரிய - அதை மல்லாந்தபடியே பார்த்துக் கொண்டிருந்த விஷால், கண்களை அகல விரித்து அற்புதம்
என்றான்.
அவன்தான் அந்த விண்கலத்துக்குத் தலைமையாளன். இருபத்தெட்டு வயதில் விஷால் என்ற பெயர்க்குப் பின்னால் நிறைய பல்கலைப் பட்டங்கள். அஸ்ட்ரானமியில் அபார ஞானம். விண்வெளி இயல் தந்தை கான்ஸ்தாந்தின் வெற்றிகரமான சீடன். பிறந்த மண் பம்பாய். டிஸ்கவரர் ஸ்பேஸ் சென்டரின் அவுட் ஸ்டாண்டிங் என்ஜீனியர்... டிஸ்கவரர்-3ல் ஏற்கனவே பத்து நாள் விண்வெளியில் வாசம் செய்திருக்கிறான். கல்யாணத்தைப் பற்றி அவனுக்கு நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை...
விஷாலுக்கு அடுத்தபடியாய் - மிதந்து கொண்டிருப்பவன் ஆகாஷ்.
விஷாலுக்கு மூன்று மாதங்கள் இளையவன். ஸ்பேஸ் சென்டர் கல்லூரியில் உச்சபட்ச பட்டம். ராக்கெட்டில் ஏற்படுகிற தவறுகளை - கம்ப்யூட்டர்கள் சிவப்பாய் எரிந்து காண்பிப்பதற்குள் - அந்த தவறுகளை மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்து விடுபவன். பிறந்த மண் டெல்லி. ஆனால், பெரும்பாலான வாசம் பம்பாயில்தான். இவன் டிஸ்கவரர்-4ல் எட்டு நாள் பறந்திருக்கிறான். பூமியில் அவனுக்கு ஒரு காதலி உண்டு. பெயர் முகிலா. பம்பாய் தாராவியில் புகழ்பெற்ற அட்வகேட் அத்வாணியின் ஒரே புத்திரி.
ஆகாஷுக்கு நிரம்பவும் கிட்டத்திலேயே - மிதந்து கொண்டு பாராமீட்டர்களை சரிபார்த்துக்கொண்டிருந்தவள், முகிலா. இந்தியாவின் ஒரே விண்வெளி வீராங்கனை... வயது இருபத்தைந்து. தூக்கமற்ற பல இரவுகள், ஆயிரக்கணக்கான மணி நேர உழைப்பு, திட்டமான கணிப்பீடுகளின் காரணமாய் டிஸ்கவரர் ஸ்பேஸ் சென்டரில் சுலபமாய் நுழைந்தவள். கடுமையான பயிற்சியின் காரணமாக அவளுடைய பெண்மை உணர்வுகள் லேசாய்க் கூர் மழுங்கிப் போயிருந்தன. வானவெளியில் முதன் முதலாய்ப் பறக்கிறாள்.
முகிலா
என்றான் விஷால்.
என்ன விஷால்...?
கேப்ஸ்யூலின் டெம்பரேச்சர் சார்ட் என்ன சொல்லுகிறது...?
அழுத்தம் ஒன்று விஷால்... ஈரப்பதம் அறுபத்தைந்து சதவீதம். வெப்பநிலை இருபது டிகிரி சென்டிகிரோடு... 'ஜி' சக்தி பூஜ்யம் எட்டு.
அதை அடிக்கடி சரி பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு...
முகிலா...!
ஆகாஷ் கூப்பிட்டான்.
அவளுடைய தலை மல்லாந்த வாக்கில் ஸ்லோ மோஷனில் திரும்பியது. கண்கள் 'என்ன?' என்று கேட்டன. ஆகாஷ் சொன்னான்:
தரைக் கட்டுப்பாடு நிலையத்திலிருந்து ஸ்பேஸ் பத்திரிகை நிருபர் ஒருவர் உன்னிடம் பேட்டி காண விரும்புகிறார்.
கொடுத்துவிட்டால் போயிற்று
சொன்ன முகிலா, ஒரு உலோகத்தகட்டில் தொங்கிக்கொண்டிருந்த கம்யூனிகேஷன்ஸ் ஷாப்ட் ஹேட்டை எடுத்துத் தன் தலையில் கவிழ்த்துக்கொண்டாள். ப்ரொடெக்டிவ் வைஸரைக் கண்களுக்கு முன்னால் சரித்து - தன் உதட்டருகே தெரிந்த மைக்ரோபோனில் பேசினாள்.
நான், முகிலா...
வந்தனம் மிஸ் முகிலா... நான் ஸ்பேஸ் மாகஸீன் ரிப்போர்ட்டர். உங்களுடைய முதல் விண்வெளிப் பயணத்திற்கு எங்கள் பத்திரிகையின் சார்பாகவும், எங்கள் மானேஜிங் டைரக்டர் ஜீயே சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி... பேட்டியை சீக்கிரமாக முடித்துக்கொள்ளுங்கள். நான் சில நிமிஷங்களில் இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்கச் செல்ல வேண்டும்...
பூமியில், பத்திரிகை ரிப்போர்ட்டர் சிரித்தார்.
உங்களை நிறைய கேள்விகள் கேட்டுத் தொந்தரவுபடுத்தப் போவதில்லை. ஒரேயொரு கேள்வி மட்டும்தான் கேட்கப் போகிறேன்... விண்கலம் புறப்பட்டபோது உங்கள் உடல்நிலையும், மனநிலையும் எப்படி இருந்தது...? நீங்கள் உணர்ந்ததை அப்படியே சொல்ல முடியுமா...?
முகிலா சொன்னாள்.
"இது ஒரு பயம் கலந்த இனிய அனுபவம். கவுண்ட் டவுன் முடிந்ததும் நான் ஒரு நீளமான சைரன் சத்தத்தையும் - அது மேன்மேலும் அதிகரித்து வரும் இரைச்சலையும் கேட்டேன். பிரம்மாண்டமான ராக்கெட் ஏராளமாய் நடுங்குவதையும் - அது ஏவுகலத்திலிருந்து மெதுவாக, மிக மெதுவாகப் பிரிவதையும் உணர்ந்தேன். அந்த இரைச்சல் ஒரு ஜெட் விமானத்தின் காக் -பிட்டுக்குள் கேட்கும்