Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maha sathi
Maha sathi
Maha sathi
Ebook104 pages51 minutes

Maha sathi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403497
Maha sathi

Read more from Rajesh Kumar

Related to Maha sathi

Related ebooks

Related categories

Reviews for Maha sathi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maha sathi - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    மகா சதி

    Maha Sathi

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு. முன்னிரவு நேரம்.

    எல்லைக்கோடு இதுதான் என்று அறுதியிட்டு கூறும் கம்பிவேலி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வளைந்து வளைந்து போயிருக்க ஆகாயத்தின் நட்சத்திர வெளிச்சத்தில் இந்திய எல்லையின் கிராமமான மால்கானி. ராணுவ முகாம்கள் சாம்பல் நிற அவுட்லைன்களாய் தெரிந்தன. உயரமாய் அமைக்கப்பட்டிருந்த விஜிலென்ஸ் டவர் மேல் இரண்டு ராணுவ வீரர்கள் டார்க் ஃப்ரூப் டெலஸ் கோப்புகளை கண்களில் பொருத்திக் கொண்டு அம்னீஷியன்களை, கர்ப்பம் தாங்கிய எல்.எம்.ஜி. ஜாதி துப்பாக்கிகளை தோளில் தொங்க விட்டபடி உட்கார்ந்திருந்தனர். எதிரே இருந்த கம்ப்யூட்டரின் மானிட்டர் திரை பொதுவான ராணுவக் கட்டளைகளை நிதானமாய் எழுதிக் காட்டிவிட்டு நிதானமாய் அழிந்து கொண்டிருந்தது.

    நேரம் பதினோரு மணியைத் தொட்டிருந்தபோது மானிட்டர் திரை சிவப்பு எழுத்துக்களில் 'ALERT' என்று வார்த்தையை அவசர அவசரமாய் ஒலிக்க வைத்துவிட்டு கீழே அடிக் கோடிட்ட வார்த்தைகளில் 'கம்யூனிகேஷன் டவரைத் தொடர்பு கொள்ளவும்' என்று எழுதிக் காட்டியது.

    இரண்டு வீரர்களில் ஒருவன் மற்றவனை ஏறிட்டான்.

    குருபால் சிங்...

    ம்...

    சி.டி.யை நீ தொடர்பு கொள்...

    தலையாட்டிய அந்த குருபால்சிங் பக்கத்தில் இருந்த வயர்லெஸ் கேபினுக்குள் நுழைந்து ஹெட்போனை தலையில் கவிழ்த்துக் கொண்டு வாய்க்கு முன்னால் நீட்டிக் கொண்டிருந்த சிறிய மைக்கில் பேச ஆரம்பித்தான்.

    ஸார்... திஸ்... ஈஸ் விஜிலன்ஸ் டவர். நான் குருபால் சிங். ஏதாவது தகவல் உண்டா...?

    ஆமாம்...

    சொல்லுங்கள்...

    சரியாய் 11.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஜீப் ஒன்று பவுண்டரி லைன் ரோட்டில் ஐந்தாவது கிலோ மீட்டரில் தட்டுப்படலாம். ஜீப்பின் பதிவு எண் PA-ATB575. டார்க் ஃப்ரூப் டெலஸ்கோப்பில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

    எஸ் ஸார்...

    ஜீப்பில் வருவது பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அஷ்ரப். அவர் ஒரு பிரிகேடியர் ரேங்க் அதிகாரி.

    அவருடைய வருகையின் நோக்கம்...?

    தெரியவில்லை. நம்முடைய மேஜர் ஜெனரலைச் சந்தித்து முக்கியமான விஷயம் ஒன்றை பேசப் போகிறாராம். அந்த ஜீப்பை நுழைவு வாயிலில் நிறுத்தி வழக்கமான சோதனைகளைச் செய்து உள்ளே அனுமதியுங்கள்...

    எஸ்... ஸார்...

    இன்னொரு விஷயம்...

    சொல்லுங்கள் ஸார்...

    அனுமதி பாகிஸ்தான் பிரிகேடியர்க்கு மட்டும்தான். ஜீப்பில் வேறு யார் வந்தாலும் என்கொய்ரி செல்லில் தங்க வைத்து விடுங்கள்.

    எஸ்... ஸார்...

    விஷயம் அவ்வளவுதான். இனி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யலாம்...

    மறுமுனையில் வயர்லஸ் அணைந்ததும் காபினை விட்டு வெளியே வந்தான் குருபால் சிங்.

    தயாள்...

    ம்...

    செய்தி என்ன தெரியுமா?

    சொல்...

    பாகிஸ்தான் பிரிகேடியர் அஷ்ரப் சரியாய் 11.30 மணிக்கு நம் ராணுவ பாரக்ஸுக்கு வந்து நம்முடைய மேஜர் ஜெனரலைச் சந்தித்து ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசப் போகிறாராம். அவர் வரும் ஜீப்பை சோதனை செய்து அனுப்ப வேண்டியது நம் வேலை...

    தயாள் கோபப்பட்டான்.

    எதுக்கு வருகிறான் அந்தப் பாகிஸ்தானியன்...?

    பண்ணிய தப்புகளுக்கு ஏதாவது விளக்கம் சொல்ல வரலாம்...

    அப்படி எனக்குத் தோன்றவில்லை.

    எதுவாகவோ இருந்துவிட்டு போகட்டும். கம்யூனிகேஷன் டவர் நமக்கு இட்ட வேலையைச் செய்து முடிப்போம். நீ டவரின் மேலேயே இரு. நான் நுழைவு வாயிலுக்குப் போகிறேன் சொன்ன குருபால்சிங் எல். எம்.ஜி. துப்பாக்கியை தோளில் தொங்கவிட்டுக் கொண்டு டவரின் படிகளில் இறங்கினான்.

    உலோகப்படிகள் அவனுடைய பூட்ஸ் கால்கள் பட்டு கிறீச் சிட்டன. கீழே வந்தான்.

    நூறு மீட்டர் தொலைவில் நுழைவு வாயில் பெரிய இரும்புக் கிராதியோடு தெரிந்தது.

    காவல் காத்துக் கொண்டிருந்த செண்ட்ரீஸ் இரண்டு பேர் குருபால் சிங்கை பார்வையில்

    Enjoying the preview?
    Page 1 of 1