Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Katrathu Diamond Kalavu
Katrathu Diamond Kalavu
Katrathu Diamond Kalavu
Ebook105 pages55 minutes

Katrathu Diamond Kalavu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403465
Katrathu Diamond Kalavu

Read more from Rajesh Kumar

Related to Katrathu Diamond Kalavu

Related ebooks

Reviews for Katrathu Diamond Kalavu

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Katrathu Diamond Kalavu - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கற்றது டைமண்ட் களவு

    Katrathu Diamond Kalavu

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    விவேக்கின் யமஹா ஐ.ஜி. ஆபீஸ் வாசலில் தன் உடம்பின் உதறலை நிறுத்திக் கொண்டதும் - விவேக் கீழே இறங்கி ஹெல்மெட்டை தலையினின்றும் உருவிக்கொண்டான். மெட்ராஸின் மத்தியான வெய்யில் பதவி பறிபோன மந்திரியின் பேச்சு மாதிரி சுள்ளென்று இருந்தது.

    விவேக் ஆபீஸுக்குள் நுழைய - என்கொய்ரி கெளண்டரில் உட்கார்ந்திருந்த பாக்கியம் - படித்துக் கொண்டிருந்த எவரெஸ்ட் நாவலை கவிழ்த்து வைத்து விட்டு ஒரு 'குட் ஆப்டர் நூனோடு எழுந்தாள். '

    ஐ.ஜி. உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கார் ஸார்.

    "போய்கிட்டே இருக்கேன். ஆமா பிரசவ லீவ் முடிஞ்சு ட்யூட்டியில என்னிக்கு ஜாய்ன் பண்ணீங்க

    மிஸஸ்பாக்கியம்...?

    ஒரு வாரமாச்சு ஸார்.

    என்ன குழந்தை…

    பையன் ஸார்...

    பிராஃபிட்டா.. குட்.. குட்.. சொல்லிக்கொண்டே வராந்தாவின் மையத்திலிருந்த ஐ.ஜி அறையை நோக்கிப் போனான். ஏர்க்கண்டிஷனரின் உறுமலோடு எதிர்ப்பட்ட அறைக்கதவை சமீபித்து கை முஷ்டியால் 'டொக்'கினான்.

    எஸ். கம் மின்...

    ஐ.ஜி. சக்கரவர்த்தியின் கஞ்சி போட்ட டிரஸ் - மடிப்புக் கலையாமல் கதவைத் தாண்டிவர - விவேக் ஃப்ளஷ் டோரைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

    குட் ஆஃப்டர் நூன் ஸார்

    குட், ஆஃப்டர்நூன்.. விவேக்கின் கையைப் பற்றி குலுக்கி நாற்காலியைக் காட்டினார் சக்கரவர்த்தி. கூடிய சீக்கிரமே பிரிவுபச்சாரம் பெற்றுக் கொள்ளப்போகும் அவர்க்கு செர்ரி பழ நிறம் அகலமான வட இந்திய முகம். மண்டையின் மையம் வரைக்கும் நெற்றி ஏறியிருந்தது. வழுக்கையின் அப்பக்கமும் இப்பக்கமும் - சோன்பப்டி மாதிரி நரைக்கேசம். ரிம்லெஸ் கண்ணாடிக்குள் ஸ்கானர் கூர்மையோடு பழுப்புநிறக் கண்கள்.

    மிஸ்டர் விவேக்! வெய்யில்ல வந்திருக்கீங்க.. குளிர்பானம் எடுத்துக்கறீங்களா?

    நோ.. தாங்க்ஸ் ஸார்.

    விஷயத்துக்கு போயிடலாமா?

    ப்ளீஸ் ஸார்..

    சக்கரவர்த்தி - தன் மேஜை டிராயரைத் திறந்து ஏற்கெனவே உடைப்பட்டிருந்த அந்த அரக்குசீல் கவரை எடுத்தார். காலையில பத்துமணிக்குத் தான் இந்த தபால் ஸ்பீட் போஸ்ட் மூலமா எனக்கு வந்தது. ஹைலி கான்ஃபிடென்ஷியல்.

    - சொல்லிக்கொண்டே அந்த கவரைப் பிரித்து - உள்ளேயிருந்த நான்கைந்து போட்டோக்களை உருவி விவேக்கிடம் நீட்டினார்.  விவேக் வாங்கிப் பார்த்தான்.

    முதல் போட்டோவில் - சிவப்பு வெல்வெட் துணி மடிப்பில் அறுகோணப் பட்டகத்தில் ஒரு வைரம் மஞ்சளாய் டாலடித்தது  கூடவே அதன் உடம்பில் நீலநிறப் புள்ளிகள்.

    விவேக் ஐ.ஜி யை நிமிர்ந்து ஏறிட்டான்.

    ஸார். இது..?

    சக்கரவர்த்தி சுத்தமான பல்வரிசையில் புன்னகைத்தார். "மிஸ்டர் விவேக். இது ஒரு அற்புதமான வைரம். பேர் . 'டைகர் ஐ. இந்த வைரம் பாரசீக வம்சாவழிக்கு சொந்தமானது. மொத்த எடை ஐம்பது கிராம். க்ளைமேட்டுக்குத் தகுந்தபடி நிறம் மாறக்கூடிய வைரம். இந்திய ரூபாய் மதிப்புப்படி கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய். நாளைக்கு மத்தியானம் இரண்டு மணிக்கு சிங்கப்பூர் ஃபிளைட்டில் எட்போர்ட் மிராண்டா என்பவர் இந்த டைகர் ஐ' வைரத்தை இண்டியன் ஆர்க்கியாலஜி

    டிபார்ட் மெண்டில் சேர்ப்பிப்பதற்காக கொண்டு வருகிறார். அவர்க்கு வேண்டிய செக்யூரிடி தரப்பட வேண்டும் ‘என்பது டெல்லி கட்டளை. டெல்லி செக்யூரிடி ஃபோர்ஸிலிருந்து மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் வருகிறார்கள். நீங்களும் இந்த பாதுகாப்பு குழுவில் இடம் பெறுகிறீர்கள். '

    தாங்யூ ஸார் என்று சொன்ன விவேக் கையிலிருந்த போட்டோக்களை புரட்டினான். ஐ.ஜி. எட்டிப் பார்த்துவிட்டு சொன்னார். இவர்தான் வைரத்தை கொண்டு வரப்போகிற ஆசாமி எட்போர்ட் மிராண்டா..

    விவேக் போட்டோவை உற்றுப் பார்த்தான். மேல்வரிசை பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த எட்போர்ட் மிராண்டாவுக்கு நாற்பது வயது இருக்கலாம். நாரை மூக்கு. நடிகர் நாசர் தோற்றம் காட்டினார். தோள்பட்டையில் வில்லை வில்லையாய் மெடல்கள் மின்னின.

    அடுத்த போட்டோவை தன் பார்வைக்கு கொண்டு வந்தான் விவேக். ஐ.ஜி சொன்னார். ஹி ஈஸ் முன்ஷி. செக்யூரிடி விங் செகண்ட் க்ரேட் ஆபீஸர், வைரத்திற்கு பாதுகாப்பாய் வரப்போகிற மூன்று பேரில் ஒருவர்.."

    முன்ஷி போட்டோவில் பெண்டாட்டிக்கு பயந்த மாதிரி சிரித்தார். பெரிய காதுகள், பென்சிலால்

    Enjoying the preview?
    Page 1 of 1