Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthu Yethiri
Puthu Yethiri
Puthu Yethiri
Ebook113 pages52 minutes

Puthu Yethiri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403454
Puthu Yethiri

Read more from Rajesh Kumar

Related to Puthu Yethiri

Related ebooks

Related categories

Reviews for Puthu Yethiri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthu Yethiri - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    புது எதிரி

    Puthu Yethiri

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    பாலச்சந்திரன்! உங்களுக்குப் போன். - அக்கௌண்டன்ட் ஜோதி வேல் குரல் கொடுக்க - இன்வாய்ஸையும், லெட்ஜர் கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த - இருபத்தேழு வயது பாலச்சந்திரன் எழுந்து வேகவேகமாய் வந்து - மேஜையின் மேல் ஒருக்களித்து விழுந்திருந்த ரிஸீவரை எடுத்து - காதுக்குக் கொடுத்தான்.

    ஹலோ...

    யாரு... பாலச்சந்திரனா...?

    ஆமா...

    தம்பி நான் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்ல இருக்கிற ரிடையர்ட் ஹெட்மாஸ்டர் வேதமூர்த்தி பேசறேன்...

    ஓ... நீங்களா...? என்ன விஷயம் ஸார்...?

    தம்பி...! நீங்க உடனே... விஸ்வா நர்சிங் ஹோமுக்கு புறப்பட்டு வாங்க...

    எ... து... க்... கு... ஸார்?

    உங்க ஒய்ப் மணிமேகலை... திடீர்னு மயக்கமா விழுந்துட்டா. மயக்கத்தை தெளிவிக்க முயற்சி பண்ணினோம். முடியலை... பக்கத்துத் தெருவில் இருக்கிற டாக்டரை கூட்டிட்டு வந்து காட்டினோம். அவர் பார்த்துட்டு உடனே ஹாஸ்பிடலைஸ் பண்ணச் சொல்லிட்டார். நானும் என்னோட ஒய்ப்பும்... விஸ்வா நர்சிங் ஹோம்ல கொண்டு வந்து சேர்த்துட்டோம்...

    பாலச்சந்திரனின் உடம்பிலிருந்த எல்லா அவயங்களும் பரபரத்தன. குரல் தொண்டையை அடைத்துக் கொண்டு - கமறலாய்க் கேட்டான்.

    ஸ்... ஸார்... ம... மணிமேகலைக்கு... இ... இப்ப எப்படியிருக்கு?

    தெரியலை தம்பி... அவசர சிகிச்சை வார்டுக்கு கொண்டு போயிருக்காங்க...

    இப்ப வந்துடறேன்...

    மானேஜரிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தான் பாலச்சந்திரன். இரண்டு நிமிஷ தவிப்புக்குப்பின் ஆட்டோ கிடைத்தது. பதினைந்து நிமிஷங்களுக்குப்பின் - சிட்டியின் அவுட்டரில் இருந்த - விஸ்வா நர்ஸிங் ஹோமின் கட்டிட பிரம்மாண்டம் வந்தது. ஆரோக்கியம் கெட்ட பணக்காரர்களுக்கான நர்சிங் ஹோம் அது.

    பாலச்சந்திரன் பத்து ரூபாய் நோட்டொன்றை ஆட்டோ டிரைவரின் கையில் திணித்துவிட்டு உள்ளே ஓட - ரிடையர்ட் ஹெட்மாஸ்டர் வேதமூர்த்தி - தோளில் போட்டிருந்த மேல்துண்டால் முகத்தை ஒற்றிக் கொண்டு அவனை நெருங்கினார்.

    வாங்க தம்பி...

    எந்த வார்டுக்கு கொண்டு போயிருக்காங்க...?

    இன்டென்சிவ் வார்டுக்கு...

    இருவரும் வேகவேகமாய் நடந்தார்கள். முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைக்கக்கூட தோன்றாமல்... குரல் கனக்கக் கேட்டான் பாலச்சந்திரன்.

    மணிமேகலைக்கு திடீர்ன்னு என்னாச்சு...?

    ஒண்ணும் புரியலை தம்பி... நானும் என்னோட ஒய்ஃப்பும் என் மகள் ஊருக்கு புறப்பட்டு போறதுக்காக ரெடி பண்ணிட்டிருந்தோம். ஊருக்குப் போனா திரும்பி வர ஒரு வாரமாகும். மணிமேகலைகிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடலாமேன்னு... உங்க வீட்டுக்குப் போனோம். சந்தோஷமா உட்கார வெச்சு பேசிட்டிருந்த பொண்ணு காபி போட்டு கொண்டு வர்றேன்னு... எந்திரிச்சு... சமையல்கட்டுக்குப் போனா... போகப் போகவே திடீர்ன்னு... மடங்கி உட்கார்ற மாதிரி... ஒரு பக்கமா... சரிஞ்சுட்டா... மூச்சு பேச்சில்லை... முகத்தில தண்ணியடிச்ச பார்த்தோம். கண் விழிக்காம... போகவே... எங்களுக்கு, பயம் வந்து பக்கத்து தெருவில் இருந்த மகாதேவன் டாக்டரை கூட்டிகிட்டு வந்தோம். அவர் வந்து பார்த்துட்டு உடனே ஹாஸ்பிடலைஸ் பண்ணச் சொன்னார். நாங்க உடனே இங்கே கொண்டு வந்துட்டோம்... நம்ம ஏரியாவுக்கு இதுதான் பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிடல்...

    இங்கே இருக்கிற டாக்டர்ஸ் மணிமேகலையைப் பார்த்துட்டு ஏதாவது சொன்னாங்களா ஸார்...?

    ஒண்ணும் சொல்லலை. நிலைமையைப் பார்த்துட்டு - இன்டென்சிவ் வார்டுக்கு கொண்டு போயிட்டாங்க...

    இருவரும் வார்டை நெருங்கினார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்த கதவு வெறுமனே சாத்தியிருந்தது. அங்கு சுவரோரமாய் போடப்பட்டிருந்தது - வண்ண பாலிமர் வினைல் நாற்காலிகளில் - உட்கார்ந்தார்கள்.

    வேதமூர்த்தி சொன்னார்.

    தம்பி! மூஞ்சி வேர்த்து வடியுது... முகத்தை துடைச்சுக்குங்க...

    ஸ... ஸார்! எனக்கு பயம்மாயிருக்கு... மணிமேகலைக்கு ஒண்ணும் ஆயிடாதே...?

    ஏன் தம்பி பயப்படறே...? ஒண்ணும் ஆகாது...

    வெறும் மயக்கமாயிருந்தா கண் முழிச்சிருப்பாளே ஸார்?

    மணிமேகலைக்கு இதுக்கு முந்தி இப்பேர்பட்ட மயக்கம் வந்திருக்கா...?

    இல்ல ஸார்...

    இப்ப ஏதாவது கர்ப்பமா இருக்காங்களா...?

    ஊ... ஹு... ம்... பாலச்சந்திரன் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் போதே - ஐ.ஸி. வார்டின் கதவைத் திறந்து கொண்டு - டாக்டர் ஒருவர் வெளியே வந்தார். வேதமூர்த்தியை பார்த்துவிட்டு கேட்டார்.

    இவர்தான் அந்தப் பொண்ணோட ஹஸ்பெண்டா...?

    "ஆமா

    Enjoying the preview?
    Page 1 of 1